Type Here to Get Search Results !

புவியியல் | Part - 3 | 206 Questions

 புவியியல் - 3

இந்தியப் புவியியல்

உலகம்

1. உலகத்தின் மொத்த பரப்பளவு 510.072 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்

2. இதில் நிலத்தின் பரப்பளவு 148.94 மில்லியன் .கி. மீ. நீரின் பரப்பளவு 361.132 மில்லியன் .கி.மீ

3. மொத்தத்தில் 70.8 சதவீதம் நீரும் 29.2 சதவீதம் நிலமும் ஆகும்

4. பரப்பளவில் நாடுகளின் வரிசை 1. ரசியா 2. கனடா 3. சீனா 4. அமெரிக்கா 5. பிரேசில் 6. ஆஸ்திரேலியா 7. இந்தியா ஆகும்

5. உலகின் மிகச் சிறிய நாடு: மொனாகோ.

6. ஜீலை 2007 ஆம் ஆண்டு உலகத்தின் மக்கள் தொகை 6,602,224,174 ஆகும்.

7. உலகத்தின் மக்கள் தொகையில் கிருத்துவர்கள் 30.03%, இஸ்லாமியர்கள் 20.12%, இந்துக்கள் 13.34%, புத்த மதத்தினர் 5.89 சதவீதமும் உள்ளனர்.

8. உலக மக்களில் Mandarin Chinese 13.69%, Spanish 5.05%, English 4.84%, Hindi 2.82%, Portuguese 2.77%, Bengali 2.68%, Russian 2.27%, Japanese 1.99%,மொழிகளை பேசுகின்றனர்.

கண்டங்களும் மக்கள் தொகை சதவீதமும்

9. ரசியா 17%, ஆசியா 60%, ஆப்பிரிக்கா 14%, வட அமெரிக்கா 8%, தென் அமெரிக்கா 6%, அண்டார்டிக்கா 0.00002%.

இந்தியாவின் தோற்றம்

நிலவியல் பலகை கோட்பாடு

10. சுமார் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு ஆஸ்திலேலியா கடற்கரைக்கு அப்பால் ஏறக்குறைய 6,400 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெரிய தீவாக இருந்த இந்தியா சுமார் 80 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு நூற்றாண்டிற்கு 9 மீட்டர் என்ற விதத்தில் வடநோக்கி நகரலாயிற்று சுமார் 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பலகை ஆசியா கண்டத்துடன் மோதியது. ஆதன் விளைவாக இந்தியா என்ற நிலப்பரப்பு தோன்றியது.

11. ஒரே மாதிரியான பாறை அடர்த்தி கொண்ட ஒரு நிலப்பலகை மற்றொரு நிலப்பலகையை அதன் கீழே தள்ள இயலவில்லை. அதனால் ஏற்பட்ட மோதல் மற்றும் வேகக் குறைப்பு காரணமாக உயரமான மலை ஏற்பட்டது. மோதலில் ஏற்பட்ட அழுத்தம் இமயமலை உயரமாக எழும்பியதால் குறைந்தது. இதன் விளைவாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7300 மீட்டர் உயரத்திற்கு மேல் 30 சிகரத்திற்கும் மேல் இமயமலை உருவாயிற்று.

12. இந்தியா ஒரு தென்கிழக்கு பருவகாற்று ஆசிய நாடாகும்

13. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 .கி.மீ

14. உலக மொத்த நிலப்பரப்பில் 2.4% பரப்பு இந்தியா ஆகும்

15. உலகில் 7வது பெரிய நாடு இந்தியா

16. அட்ச ரேகை 8°428 வடக்கு முதல் 37°1753 வடக்கு வரை

17. தீர்க்கரேகை 68°753 கிழக்கு முதல் 97°2447 கிழக்கு வரை

18. அந்தமான் நிக்கோபார் தீவுகள் 6°39, வடக்கு அட்சத்தில் இருந்து 13°34 அட்சம் வரை உள்ளது.

19. வடக்கு தெற்கு தூரம் 3,214 கி.மீ

20. கிழக்கு மேற்கு தூரம் 2,933 கி. மீ

21. கடற்கரை நீளம் 7,516 கி.மீ. (5700 கி.மீ அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரை)

22. மொத்த நிலப்பரப்பு 15,200 கி.மீ

23. பெரிய கடற்கரை உடையது: 1.குஜராத் 2. ஆந்திரபிரதேசம்

24. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம்: அ. ஆந்திர பிரதேசம் . கேரளா இ. மகாராஷ்டிரா . தமிழ்நாடு

25. கொடுக்கப்பட்டவகைளில் அதிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் ஆந்திர பிரதேசம்

26. 230½ டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாக பிரிக்கிறது

27. கடகரேகை செல்லும் 8 மாநிலங்கள்: மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், குஜராத் இந்தியாவையும் இலங்கையையும் பாக்சலசந்தி பிரிக்கிறது.

28. மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் பாக் சலசந்தி பிரிக்கிறது

29. தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைப்பது Adam’s Bridge

30. அதிக மாநிலங்களுடன் எல்லை கொண்டு கடற்கரை பிரதேசம் இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம்.

31. மேகங்கள் சூழ்ந்த மாநிலம் மேகாலயா

32. சின்ட்டிரல்லா எனப்படுவது அசாம் மற்றும் எல்லைப்புற மாநிலங்கள்

33. மொத்த நிலப்பரப்பில் 43.3% சமவெளிகள்

34. மொத்த நிலப்பரப்பில் 10.7% மலைகள்

35. மொத்த நிலப்பரப்பில் 18.6% குன்றுகள்

36. மொத்த நிலப்பரப்பில் 27.7% பீடபூமிகள்

37. இந்தியாவின் திட்ட நேரம் 82½° கிழக்கு தீர்க்க ரேகை ஆகும். கிரின்விச் நேரத்தில் இருந்து 5½ மணி நேரம் வேறுபடுகிறது

38. முதன் முதலில் இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலம் - அருணாசல பிரதேசம்

39. சூரியன் கத்தியவாரில் தோன்றும் நேரத்திற்கும் முதன் முதலில் தோன்றும் அருணாச பிரதேசத்திற்கும் இடையில் உள்ள நேரம் சுமார் 1 மணி நேரம் ஆகும்

இந்தியாவின் எல்லைகள்

40. கிழக்கு - வங்காளதேசம், மியான்மார், வங்காள விரிகுடா, பாக் சலசந்தி, மன்னார் வளைகுடா

41. மேற்கு - பாகிஸ்தான், அரபிக்கடல்

42. வடக்கு - இமயமலை

43. தெற்கு - இந்திய பெருங்கடல்

44. வடகிழக்கு - சீனா, நேபாளம், பூட்டான்

45. வடமேற்கு - ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்

46. நேபாளத்துடன் எல்லை உடைய மாநிலங்கள்: பீகார், உத்தராஞ்சல், உத்திரப்பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம்

47. வங்காள தேசத்துடன் எல்லை உடைய மாநிலங்கள்: அசாம், மேற்கு வங்காளம், மிசோராம், மேகலாயா, திரிபுரா

48. பூட்டானுடன் எல்லை உடைய மாநிலங்கள்: சிக்கிம், மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம், அசாம்

49. மியான்மருடன் எல்லை உடைய மாநிலங்கள்: அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்

50. பாகிஸ்தானுடன் எல்லை உடைய மாநிலங்கள்: ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், இராஜஸ்தான், குஜராத்

51. சீனாவுடன் எல்லை உடைய மாநிலங்கள்: ,ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம்

52. ஆப்கானிஸ்தானுடன் எல்லை உடைய மாநிலங்கள்: ஜம்மு மற்றும் காஷ்மீர்

எல்லைக்கோடுகள்

53. இந்தியாவையும் - பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கொடு சர் ராட்கிளிப் எல்லைக்கோடு

54. இந்தியாவையும் - சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு மக்மோகன் எல்லைக்கோடு

55. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது தென் இந்தியா

56. இந்தியாவின் பரப்பு அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்

57. இந்தியாவின் பரப்பு பாகிஸ்தானைவிட 4 மடங்கு அதிகம்

58. இந்தியாவின் நீர் எல்லைப்பரப்பு 12 நாட்டிக்கல் மைல் ஆகும். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 18.52 மீட்டர் ஆகும்

59. இந்தியாவின் அமைவிட சூயஸ் கால்வாய் (1869 ல் திறக்கப்பட்டது) வழியாக கிழக்கு மேற்கு கடல் மார்க்கத்தில் அமைந்திருப்பதால் சிறந்த பன்னாட்டு வணிக தலமாக திகழ்கிறது.

இந்தியாவில் காணப்படும் மலைப்பிரிவுகள்

60. 1. ஆரவல்லி மலைத் தொடர்கள் 2. ஆனை மலைத் தொடர்கள் 3. ஏலக்காய் மலைத்தொடர்கள் 4. காமூர் மலைத்தொடர்கள் 5. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் 6. காரோ குன்றுகள் 7. இமயமலைத் தொடர்கள் 8. காசி குன்றுகள் 9. ஜெனீதா குன்றுகள் 10. முணிப்பூர் குன்றுகள் 11. மீசோ குன்றுகள் 12. நூகா குன்றுகள் 13. நீலகிரி குன்றுகள் 14. புடாக்கி குன்றுகள் 15. பூர்வாஞ்சல் தொடர்கள் 16. சாத்பூரா மலைத்தொடர் 17. சிவாலிக் குன்றுகள் 18. விந்திய மலைத் தொடர்கள் 19. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள்

இந்தியாவின் இயற்கை பிரிவுகள்

61. இமய மலைகள், தீபகற்ப இந்தியா, சிந்து, கங்கை, சமவெளிகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகள்

இமயமலைகள்

62. இமயமலைக்காடுகள் மத்திய ஆசியாவின் உலகத்தின் கூரை எனப்படும் பாமீர் முடிச்சில் இருந்து துவங்குகிறது.

63. இந்து குஷ் மலைத் தொடர் மற்றும் காரகோரா மலைத்தொடர் ஆகியவை சேரும் இடமே Aksai Chin எனப்படும். இந்தியாவிற்கு சொந்தமான இவ்விடம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது (1962 இந்தியா சீனா போர்)

64. இமயமலை மீசொஜோயிக் காலத்தில் பெரிய பள்ளமாக இருந்தது.

65. இங்கு இருந்த கடலுக்கு டெதிஸ் கடல் எனப்பட்டது

66. டெதிஸ்கடலுக்கு வடக்கே அமைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி

67. டெதிஸ் கடலுக்கு தெற்கே அமைந்த பகுதி காண்டுவானா நிலப்பகுதி

68. டெர்ஷியா காலத்தில் இவ்விரு நிலப்பகுதிகள் இரண்டும் ஒன்று சேர்ந்து அழுத்தம் ஏற்பட்டு மடிப்பாக இமயமலை தோன்றியது

69. இமயமலை இளமையான (புவியியல் ரீதியாக கடைசியில் தோன்றிய) படிவுப்பாறைகளால் உருவான மலைகளாகும். இது சுமார் 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.

70. மலையின் நீளம் சுமார் 2400 கி.மீ அகலம் சுமார் 150 முதல் 500 கி.மீ.

71. Syntaxial Bend இமயமலையில் காணப்படுகிறது.

72. இமய மலையை கிழக்கு மேற்காக நீளத்தில் மூன்று வகையாக பிரிக்கலாம்

73. பேரிய இமய மலைத் தொடர்கள்

74. முத்திய இமய மலைத் தொடர்கள்

75. சிவாலிக் குன்றுகள்

76. ஜம்மு& காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளPhalgaon மலைத்தொடரில் அமர்நாத் குகை உள்ளது. இங்கு பனியால் ஆன லிங்கம் அமைந்துள்ளது.

பெரிய இமயமலைத் தொடர்கள்

77. இவற்றின் உயரம் 5000 மீ மேல்

78. இம்மலைத் தொடர் நங்க பர்வதம் முதல் நமச்சபர்வதம் வரை பரவியுள்ளது.

79. இங்கு காணப்படும் சிகரங்கள் எவரெஸ்ட் 8848 மீ. காட்சிவின் ஆஸ்டின் (கே2) 8611 மீ. கன்ஜன்ஜங்கா 8598 மீ

80. எவரெஸ்ட் சிகரத்திற்கு சாகர்மாதா என்றும் பெயர்

81. உலகத்தின் மிக உயராமான சிகரம் எவரெஸ்ட் நேபாளத்தில் உள்ளது.

82. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் காட்சின் ஆஸ்டின் பாகிஸ்தானின் கைப்பற்றுதலில் உள்ளது. இதற்கு இமாத்திரி என்று பெயர்

83. கைபர் மற்றும் போலன் கணவாய்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளது

மத்திய இமயமலைத் தொடர்கள்

84. இவற்றில் காணப்படும் சிகரங்கள் 3500-5000 மீட்டர்கள் உயரமாகும்

இங்கு காணப்படும் கோடை வாசஸ்தலங்கள்

85. சிம்லா தௌலதார் வரிசை - இமாச்சல பிரதேசம்

86. நைனிடால் - உத்திராஞ்சல்

87. முசௌரி

88. டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்

89. டல்ஹெளசி - இமாச்சல பிரதேசம்

90. தர்மசாலா - இமாச்சல பிரதேசம்

91. அல்மோரா உத்திராஞ்சல்

92. இங்கு புகழ் பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளது. இதற்கு இமாச்சல் என்ற பெயர் உண்டு

93. சிறு சமவெளிகளும் Murg, Payar என்ற புல்வெளிகளும் உண்டு

94. அதிக உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் - குல்மார்க்

சிவாலில் குன்றுகள்

95. தாழ்ந்த இமய மலைத் தொடர்கள்

96. 1500 மீட்டர் உயரமுடையவை

97. இதற்கு தெராய் காடுகள் எனப்பெயர்

98. இது இமயமலை ஆறுகள் குறுக்கிடும் பகுதி

99. முத்திய இமயமலை பகுதிக்கும் சிவாலிக் குன்றுகளுக்கும் இடையே பள்ளத்தாக்குகள் காணப்படுகிறது

100. இங்கு மேற்கில் உள்ள பள்ளத்தாக்குகளுக்கு டூன் (Duns) பள்ளத்தாக்குகள் என்று பெயர்

101. இம்மலைத் தொடர் பொடவார் பீடபூமி வரை பரவியுள்ளது

மேற்கு பகுதிகள்

102. பாமீர் முடிச்சிலிருந்து மேற்கில் இந்து குஷ் மலைகள் வரை பரவியுள்ளது

103. இப்பகுதியில் இந்து குஷ், கிதார் மற்றும் சுலைமான் மலைத் தொடர்கள் காணப்படுகிறது.

104. கிதார் மலைத்தொடர்கள் பலுஸ்சிஸ்தான் மற்றும் சிந்து பகுதிகளை பிரிக்கின்றது

105. சுலைமானின் உயரமான சிகரம் தாக்த்--சுலைமான் ஆகும்

இங்கு காணப்படும் முக்கிய கணவாய்கள் மற்றும் ஆறுகள்

கணவாய்கள் ஆறுகள்

106. கைபர் - பெஷாவர் காபூல்

107. குராம் - கோஹாட் குராம்

108. தோச்சி பானு தோச்சி

109. கோமல் - தேரா கோமல்

110. இஸ்மாயில் கான் போலன் - குவெட்டா

111. இங்கு காசிக், காரோ, ஜெயந்தியா, நாகா ஆகிய குன்றுகள் காணப்படுகிறது.

கிழக்குப் பகுதிகள்

112. கிழக்குப் பகுதியில் காணப்படும் முக்கிய குன்றுகள்: பட்கோய், ஜெயந்தியா, லுசாய் காசி, காரோ மற்றும் நாக குன்றுகள்

113. இப்பகுதி அசாமை பர்மாவிடம் இருந்து பிரிக்கின்றது

 

டிரான்ஸ் இமயமலைத் தொடர்கள்

114. இமயமலையை தெற்கு வடக்காக குறுக்கில் 5 வகையாக பிரிக்கலாம்: 1. காஷ்மீர் இமயமலை 2. பஞ்சாப் இமயமலை 3. குமணன் இமயமலை 4. நேபால் 5. அஸ்ஸாம் இமயமலை

115. இப்பகுதியில் இந்து குஷ், காரகோரம் மற்றும் கைலாய மலைகள் அமைந்துள்ளது

116. இந்து குஷ் மலையை (இமயமலையின் மேற்கு தொடர்ச்சி) Slayer of the Hindus என்றும் Indian Caucasus என்றும் அழைப்பர்.

117. ரேசடிய பள்ளத்தாக்கு இங்கு உள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாயும் Shyok நதியின் துணைநதி ரேசடிய நதியினால் உண்டாக்கப்பட்ட பகுதி.

118. சியாச்சின் பனிப்பகுதி இங்கு உள்ளது. உலகத்தின் உச்சமாகிய இவ்விடத்தில் இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெறுகிறது. இது லடாக் மாநிலத்தில் உள்ளது. இதற்கு ரோசா என்ற பெயர் உள்ளது.

119. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் உலகத்தின் இரண்டாவது உயர்ந்த மற்றும் உலகத்தின் இரண்டாவது உயர்ந்த சிகரம் காட்வின் ஆஸ்டின் இவ்விதத்தில் உள்ளது

சிகரம் மலைத்தொடர்

120. எவரெஸ்ட் - ஹிமாத்திரி

121. காட்வின் ஆஸ்டின் (கே2) காரகோரம்

122. தவளகிரி - இமாத்திரி

123. காமத் சாஸ்கார்

முக்கிய இந்திய சிகரங்கள்

124. கே 2 - 8611

125. கஞ்சன் ஜங்கா - 8598

126. நங்க பர்வத் - 8126

127. நந்தா தேவி - 7817

128. காமத் - 7756

129. சவுக்கம்பா (பத்திரிநாத்) - 7138

130. நான்குன் - 7135

131. துனகிரி - 7066

முக்கிய கணவாய்கள்

132. சுலைமான் பகுதி: கைபர் போபலன்

133. சிப்கி கணவாய்: சிம்லா திபெத்

134. காரகோரா கணவாய்: லே திபெத்

135. ஜலப்பா கணவாய்: டார்ஜிலிங் - லாஸா

பஞ்சாப் இமயமலைகள்

136. இண்டாஸ் முதல் சட்லெஜ் வரை சுமார் 917 கிலோ மீட்டர் கிழக்கு மேற்காக பரவியுள்ளது கஸ்ரா பள்ளத்தாக்கு மற்றும் குறு பள்ளத்தாக்கு இங்கு காணப்படுகிறது. இம் மலையின் பெரும் பகுதி இந்தியாவில் அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடம் நங்க பர்வதம்

குமாயூன் இமயமலைகள்:

137. சட்லெஜ் முதல் காளிவரை சுமார் 300 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது. குமாயூன் என்று அழைக்கப்படும் பகுதி உத்ராஞ்சல் ஆகும்.

138. கங்கை, யமுனை தோன்றுமிடங்கள் உள்ளது

139. கங்கோத்திரி, யமுனோத்திரி, முசொரி போன்ற சுற்றுலா இடங்கள்

140. நந்தா தேவி சிகரம் இப்பகுதியில் உள்ளது

நேபாள இமயமலைகள்

141. மேற்கு நேபாள இமயமலைகள், இதில் பெரும்பகுதி நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பகுதி அமைந்துள்ளது. 498 கிலோ மீட்டர் வரை கிழக்கு மேற்காகவும் 617 கிலோ மீட்டர் வடக்கு தெற்காகவும் பரவியுள்ளது. இதில் கஞ்சன்ஜங்கா உயர்ந்த சிகரமாகும். தற்போது இந்திய எல்லையில் உள்ள மிக உயர்ந்த சிகரம் இதுவே ஆகும்.

மத்திய நேபாள இமயமலைகள்

142. இதில் பெரும்பகுதி நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பெரும் பகுதி அமைந்துள்ளது. 466 கிலோ மீட்டர் வரை கிழக்கு மேற்காகவும் 476 கிலோ மீட்டர் வடக்கு தெற்காகவும் பரவியுள்ளது. இதில் உலகத்தின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இதன் பிரிவுகள்

143. அன்னாபூர்ணா இமயமலை (நேபாளம்) உயர்ந்த சிகரம் அன்னபூர்ணா

144. கூர்கா இமய மலை (நேபாளம் மற்றும் சீனா) உயர்ந்த சிகரம் மனஸ்லு

145. கணேஷ் இமயமலை (சீனா மற்றும் நேபாளம்) உயர்ந்த சிகரம் கணேஷ்

146. Xixabangma Feng (சீனா மற்றும் நேபாளம்) உயர்ந்த சிகரம் Xixabangma Feng

147. முரஅடிர இமயமலை (சீனா மற்றும் நேபாளம்) உயர்ந்த சிகரம் மவுண்ட் எவரெஸ்ட்.

148. காட்மண்டு தெராய் (இந்தியா மற்றும் நேபாளம்) இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பரவியுள்ளது. களி முதல் டெஸ்டா வரை தவளகிரி போன்றவை காணப்படுகிறது

அஸ்ஸாம் இமயமலைகள்

149. டெஸ்டா முதல் பிரம்மபுத்திரா வரை சுமார் 460 கிலோ மீட்டர் வரை கிழக்கு மேற்காக பரவியுள்ளது. இம் மலையின் பெரும் பகுதி இந்தியாவில் அமைந்துள்ளது. இங்கு நாதுலா மற்றும் ஜீலிபாலா ஆகிய இரு கணவாய்கள் காணப்படுகிறது. மிக உயர்ந்த இடம் நமச்ச பர்வதம்

கோடை வாசஸ்தலங்கள்

150. அல்மோரா (குமணன் மலை) உத்திரப்பிரதேசம்

151. சிரபூஞ்சி (ஷில்லாங் மலை) மேகாலயா

152. உதக மண்டலம் (நீலகிரி) தமிழ்நாடு

153. கொடைக்கானல் - தமிழ்நாடு

154. டல்ஹெளசி - இமாச்சலப் பிரதேசம்

155. கௌலி (சிம்லா) - இமாச்சலப் பிரதேசம்

156. டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்

157. குல்மார்க் - காஷ்மீர்

158. மகாபலேஸ்வர் - மகாராஷ்டிரா

159. அபுமலை - இராஜஸ்தான்

160. முசோரி உத்தராஞ்சல்

161. ராஞ்சி ஜார்கண்ட்

162. ஷில்லாங் (காசி மலை) - மேகாலயா

சிந்து வடிநிலமும் கங்கை வடிநிலமும்

163. சிந்து வடிநிலத்தில் பஞ்சாப் சமவெளி அமைந்துள்ளது. இப்பகுதியில் கிழக்குப் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

164. கங்கை வடிநிலத்தை மேல்கங்கைச் சமவெளி, மத்திய கங்கைச் சமவெளி, கீழ்கங்கைச் சமவெளி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

165. மேல் கங்கைச் சமவெளியில் பீஹார் மாநிலத்தின் பெரும் பகுதியும் சோட்டாநகபுரிப் பீடபூமியின் சிறுபகுதியும் அடங்கும். கீழ் கங்கைச் சமவெளியில் மேற்கு வங்காளம் அமைந்துள்ளது. கங்கை வடிநிலம் இந்தியாவிலேயே மிகவும் செழிப்பானதாகும்.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

166. இந்தியாவின் வடகிழக்குக் கோயிலுள்ள இமயமலைப் பிரதேசத்திற்கும் அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, ஜெயந்திக்காக குன்றுகளுக்கும் இடையில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இப்பள்ளத்தாக்கு அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் வளமான பகுதியாக அமைந்துள்ளது.

இராஜபுதன மேட்டுநிலமும் மத்திய இந்தியப் பீடபூமியும்

167. இராஜபுதன மேட்டுநிலத்தில் இராஜஸ்தான் மாநிலம் அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் உள்ளது.

தீபகற்ப இந்தியா

168. தீபகற்ப இந்தியா ஒரு பீடபூமியாகும். இதன் மேற்கில் மால்வா பீடபூமியும், தெற்கில் தக்காண பீடபூமியும் கிழக்கில் சோடா நாகபூரியும் உள்ளது.

169. வடபகுதி அகன்றும் தென்பகுதி குறுகியும் முக்கோண வடிவம் கொண்டுள்ளது. பழைய கடினமான உருமாறிய பாறைகளால் ஆனது.

170. மேற்கில் இருந்து கிழக்காக சரிந்துள்ளது. எனவே ஆறுகள் மேற்கே உற்பத்தியாகி கிழக்கே ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

171. இது மழை மறைவு பிரதேசம்

172. நர்மதை நதி தீபகற்ப இந்தியாவை மால்வாய் பீடபூமி மற்றும் தக்காண பீடபூமி என்ற இரு பெரும் பிரிவகா பிரிக்கின்றது

173. மால்வா பீடபூமி: மத்திய இந்தியாவின் மேற்கு பகுதியே மால்வா பீடபூமியாகும். இது மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதி இராஜஸ்தான் மாநிலத்தின் தென் கிழக்கு பகுதி மற்றும் குஜராத் மாநிலத்தின் மேற்குப் பகுதியாக அமைந்துள்ளது. 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப் பீடபூமி வடக்கு நோக்கி சரிந்துள்ளது. இதில் மாகி மற்றும் சாம்பல் நதிகள் பாய்கின்றது. மிக 60 முதல் 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பழைமை வாய்ந்த Cretaceous கலந்து பாறைகள் காணப்படுகின்றன

174. சோடா நாக்பூரி பீடபூமி: இதன் பெரும் பகுதி ஜார்கண்ட் மாநிலமாகும். ஓரிசா, பீகார் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் இப்பீடபூமியில் அமைந்துள்ளது. Precambrian காலத்தைச் சார்ந்த பாறைகள் இப் பீடபூமியில் அமைந்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கு இப்பீடபூமியில் உள்ளது.

தக்காண பீடபூமி

175. இந்திய கங்கைச் சமவெளிக்கு கிழக்கு பகுதியில் அமைந்தது தக்காண பீடபூமியாகும்

176. தென் மேற்கு பருவகாற்றால் பெய்யக்கூடிய மழையை மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து விடுவதால் இங்கு மழை குறைவு.

177. இப்பீடபூமியின் வடக்கு பகுதியில் கோதாவரி மற்றும் அதன் துணை ஆறுகளும் தென் பகுதியில் காவேரி ஆறும் பாய்கின்றது

178. நர்மதை பள்ளத்தாக்கு தென் இந்தியாவை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது.

179. வட பகுதி மால்வா பீடபூமி

180. தென்பகுதி தக்காண பீடபூமி என்று பெயர்

181. தக்காண பீடபூமி மலைகள் பிண்ட மலைகள்

182. நர்மதை, தபதி, நதிகள் பிளவு பள்ளத்தாக்கில் உள்ளது.

183. புவியில் ரீதியாக தக்காண பீடபூமி 9 பெரும் பிரிவாக பிரிக்கலாம்

· ஆரவல்லி மலைத்தொடர்

· மத்திய பீடபூமிகள்

· விந்திய மலைகள்

· சாத்பூரா மலைகள்

· கிழக்கு பீடபூமி

· கத்தியவார் மற்றும் கட்ச் வளைகுடா

· மேற்கு தொடர்ச்சி மலைகள்

· கிழக்கு தொடர்ச்சி மலைகள்

· டெக்கான் டிராப்

184. உலக மலைகள் தினம்: டிசம்பர் 11

185. ஆரவல்லி மலைத்தொடர்கள்: Pre Cambrian காலத்தைச் சார்ந்த இந்தியாவின் மிக பழமையான மடிப்பு மலைத் தொடர்கள் ஆகும்.

186. மேற்கு இந்தியாவில் சுமார் 300 மைல்கள் வட கிழக்கில் இருந்து தென் மேற்கு வரை இராஜஸ்தான் வழியாக பரவியுள்ளது.

187. மவுண்ட் அபு மலையில் உள்ள குருசிகார் இதன் உயர்ந்த சிகரம் ஆகும்.

188. ஆரவல்லி மலைத் தொடரில் மிக உயர்ந்த மலை உச்சி பாந்மேரி

189. இராஜஸ்தானின் தெற்கு சரிவில் ஆஜ்மீர் நகரம் அமைந்துள்ளது

190. லூனி ஆறு உற்பத்திக்கு கட்ச் வளைகுடாவில் வடிகின்றது

191. செம்பு உற்பத்திக்கு புகழ் பெற்ற கேத்திரி நகரம் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டுள்ளது.

192. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளின் கால நிலையை பாதிக்கின்றது.

விந்திய மலைத்தொடர்கள்:

193. விந்திய சாத்பூர மலைகள் இந்தியாவை வடபகுதி தென்பகுதி என பிரிக்கின்றது

194. விந்திய மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காக செல்கின்றது. இம்மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே ஆகும். எனவே இதனை மலையே இல்லை என்று கூறுவர். இம் மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிகின்றது.

சாத்பூரா மலைத் தொடர்கள்:

195. நர்மதை, தபதி நதிகளுக்கிடையே சாத்பூரா மலைத்தொடர் உள்ளது

196. விந்திய மலைக்கு தெற்கில் அவற்றிற்கு இணையாக செல்கின்றது. இம் மலையின் பாறைகள் தக்காண லாவா பீடபூமி பாறை வகையைச் சார்ந்ததாகும்.

197. தக்காண பீடபூமிக்கு வடக்கே விந்தியா சாத்பூரா மலைத்தொடர்.

198. சாத்பூரா மலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரம் தூப்கார்

199. வெயின் கங்கா மற்றும் வார்தா ஆகிய ஆறுகள் சாத்பூரா மலைத் தொடரில் உற்பத்தியாகின்றது.

மேற்கு தொடர்ச்சி மலைகள்

200. தபதி நதி முகத்துவராத்தில் இருந்து தொடங்கி மேற்கு கடற்கரைக்கு இணையாக குமரி முனை வரை தொடர்ச்சியாக வடக்கு தெற்காக மேற்கு தொடர்ச்சி மலைகள் பரவியுள்ளது.

முக்கிய மலைகள்

201. 1. ஆனை மலை 2. ஏலக்காய் மலை 3. பழனி மலை 4. கொடைக்கானல் மலை 5. குற்றால மலை

ஆனை மலை:

202. மேற்கு தொடர்ச்சியின் முக்கியமான பிரிவான இதில் தென் இந்தியாவின் உயர்ந்த சிகரமான ஆனை முடி உள்ளது. இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இப் பகுதியில் metamorphic gneiss இன கற்கள் கிடைக்கின்றது. அவற்றில் feldspar and quartz, porphyrite போன்ற வகைகள் காணப்படுகின்றன. ஆழியாறு அணை, அமராவதி அணை, காடம்பாடி அணை, சோலையாறு அணை, இந்தியாவின் கொள்ளளவு அதிகம் கொண்ட பரம்பிக்குளம் அணை ஆகியவை இம் மலைத் தொடரில் உள்ளது. ஆணை மலை, ஏலக்காய் மலை மற்றும் பழனி மலை ஆகியவை சேருமிடத்தில் இரவிக்குளம் தேசிய பூங்கா அமைந்துள்ளது. வைகை நதி ஆணை மலையில் தொடங்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பழனி மலை:

203. பழனி மலையில் கோடை வாசஸ்தலமாகிய கொடைக்கானல் உள்ளது.

முக்கிய கணவாய்கள்

204. வடக்கில் தால்காட்

205. வடக்கில் போர்காட்

206. தெற்கில் பாலக்காடு கணவாய் - மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் இக்கணவாய் இது மதுரையையும் கொல்கத்தாவையும் இணைக்கிறது. பாலக்காடு மாவட்டத்தையும் கோவை மாவட்டத்தையும் இணைக்கிறது. தென் மேற்கு பருவ காற்றினை இக் கணவாய் தடுத்து நிறுத்தாததால் கோவை மாவட்டம் மழை பெறுகின்றது.