புவியியல் - 4
முக்கிய ஆறுகள்
1. காவிரி
2. கிருஷ்ணா
3. கோதாவரி
4. தென் இந்தியாவின் நீண்ட ஆறு கோதாவரி
5. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு சயாத்திரி என்ற பெயர் உண்டு
6. மேற்கு தொடர்ச்சி மலைகள் “Ecological
hot spot” என்று கூறுவர்.
7. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்று சேருமிடம் நீலகிரி ஆகும். நீலகிரியில் ஷோலா காடுகள் காணப்படுகின்றன.
8. தொட்டபெட்டா சிகரம் இங்கு உள்ளது.
9. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மகாத்மா காந்தி நீர்வீழ்ச்சி ஆகியவை இம்மலைத் தொடரில் காணப்படுகிறது.
10. பாபுதான் குன்றுகள் தக்காண பீடபூமி பகுதிகளில் உள்ளது
11. இம்மலையின் மகேந்திரகிரி இரண்டாவது உயரமான சிகரம்
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
12. மாகநதி உடன் தொடங்கி நீலகிரி மலை வரை பரவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி செல்கின்றது.
13. இவை தனிக் குன்றுகளாக காணப்படும்
14. 1. நகரி குன்றுகள் 2. திருப்பதி மலைகள் 3. ஜவ்வாது குன்றுகள் 4. சேர்வராயன் மலை 5. கொல்லி மலை 6. பச்சை மலை
சிந்து – கங்கைச் சமவெளிகள்
15. இச்சமவெளிகள் இமயமலைத் தொடர்களுக்கும் விந்திய மலைகளுக்குமிடையில் அமைந்துள்ளன.
16. அரபிக் கடலுக்கும் வங்காள விரிகுடாக் கடலுக்கும் இடையில் அமைந்தள்ளன.
17. இப்பரந்த சமவெளி பிறைச்சந்திர வடிவில் வடக்கு நோக்கி வளைந்து அமைந்தள்ளது.
18. இச்சமவெளியின் நீளம் சுமார் 2,400 கி. மீ, அகலம் 300 கி. மீ
19. இச்சமவெளியின் பரப்புச் சுமார் 4,00,000 ச.கி.மீ.
20. இது உலகிலேயே மிக பெரிய சமவெளியாகும்
21. மேட்டு நிலங்களில் பழைய வண்டல் பாங்கர் காணப்படுகிறது
22. தாழ்நிலப்பகுதிகளில் புதிய வண்டல் காதர் காணப்படுகிறது
கடற்கரைச் சமவெளிகள்
23. தீபகற்ப இந்தியாவின் மேற்கு கிழக்குப் பகுதிகளில் கடற்கரைச் சமவெளிகள் உள்ளன
24. கடற்கரைகள் உடை படாமல் நேராக இருக்கின்றன.
25. கடலின் ஆழம் குறைவு, எனவே இயற்கைத் துறைமுகங்கள் அதிகமாக இல்லை.
மேற்குக் கடற்கரைச் சமவெளி
26. இது அரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குமிடையில் காம்பேயிலிருந்து கன்னியாகுமரி வரையில் அமைந்துள்ளது.
27. மேற்கு கடற்கரைச் சமவெளிகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்
a. வடக்கிலுள்ள கொங்கன் பகுதி
b. மத்தியிலுள்ள கனரா பகுதி
c. தெற்கிலுள்ள கேரளப் (மலபார்) பகுதிகள்
28. கடற்கரையோரமாகப் பல உப்பங்கழிகள் உள்ளன. அவை காயல்கள் எனப்படும். இவை கேரளாவில் காணப்படுகின்றன.
29. மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் உற்பத்தியாகும் ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன. அவற்றின் நீளம் குறைவு. ஆனால் வேகம் மிகுதி. எனவே பல இடங்களில் நீர்மின் சக்தி நிலையங்கள் உள்ளது.
கிழக்கு கடற்கரைச் சமவெளி
30. இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், வங்காள விரிகுடாக் கடலுக்குமிடையில் கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. இது மேற்குக் கடற்கரைச் சமவெளியை விட அகலமானது.
31. கிழக்கு கடற்கரைச் சமவெளியை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்
32. தமிழ்நாட்டுக் கடற்கரைச் சமவெளி காவிரி டெல்டா
33. ஆந்திரக் கடற்கரைச் சமவெளி கிருஷ்ணா கோதாவரி
34. உத்கல் கடற்கரைச் சமவெளி மகாநதி டெல்டா
35. சென்னை முதல் ஆந்திரப் பிரதேசம் வரை உள்ள கடற்கரையை Pyan Gnat என்பர். தெற்குப் பகுதி சோழமண்டல கடற்கரை
36. இந்தியாவின் பெரிய நீளமுள்ள கடற்கரை – சென்னை கடற்கரை
இந்தியாவின் முக்கிய கடற்கரைகள்:
37.
Lawsons Bay Beach – ஆந்திரப்பிரதேசம்
38.
Rishikonda Beach – ஆந்திரப்பிரதேசம்
39.
Anjuna Beach – கோவா
40.
Calangute Beach – கோவா
41. Colva
Beach – கோவா
42. Dona
Paula Beach – கோவா
43.
Miramar Beach – கோவா
44.
Palolem beach – கோவா
45.
Sinquerim Beach – கோவா
46.
Vagator Beach – கோவா
47.
Arambol Beanch – கோவா
48.
Agonda Beach – கோவா
49.
Mandri Beach – குஜராத்
50.
Gopnath Beanch – குஜராத்
51.
Devbath Beach – குஜராத்
52.
Kanwar Beach – குஜராத்
53.
Marwanthe Beach – கர்நாடகம்
54. Malpe
Beach – கர்நாடகம்
55.
Kapped Beach – கேரளா
56.
Kovalam Beach – கேரளா
57. Jhu
Beach – மகாராஷ்டிரா
58. Puri
Beach – ஒரிசா
59.
Marine Beach – தமிழ்நாடு
60.
Elliot Beach – தமிழ்நாடு
61. Digha
Beach – மேற்கு வங்காளம்
62.
Shankarput Beach – மேற்கு வங்காளம்
63.
Junpet Beach – மேற்கு வங்காளம்
64.
Bakkhali Beach – மேற்கு வங்காளம்
65. Sagardwip Beach –
மேற்கு வங்காளம்
தார் பாலைவனம்
66. பஞ்சாப்பிற்கு தென்பகுதியிலும் சிந்து - கங்கை சமவெளிக்கு மேற்குப் பகுதியிலும் ஏறக்குறைய ராஜஸ்தானின் முழு பகுதியிலும் பரவி ஆரவல்லி மலைக் குன்றுகள் வரை பரவியுள்ளது.
பீடபூமிகள்
67. இந்தியாவில் உள்ள முக்கிய பீடபூமிகள்
68. மால்வா பீடபூமி 2. சோடாநாக்பூர் பீடபூமி 3. தக்காண பீடபூமி 4. மைசூர் பீடபூமி
இந்தியத் தீவுகள்
69. இந்தியாவில் மொத்தம் 247 தீவுகள் காணப்படுகிறது
70. 209 தீவுகள் வங்காள விரிகுடாவில் உள்ளது
71. எஞ்சிய தீவுகள் அரபிக் கடலில் உள்ளது
72. வங்காள விரிகுடாவில் உள்ள தீவுகள்
73. அந்தமான் நிகோபார் தீவுகள் வங்காள விரிகுடாவில் அமைந்தள்ளது
74. பத்து டிகிரி கணவாய் அந்தமான் நிக்கோபார் தீவுகளை பிரிக்கின்றது.
75. இந்தியா இலங்கைக்கு நடுவே பாம்பன் தீவுகள் உள்ளது.
76. இந்தியாவின் தென் முனையான இந்திரா முனை பெரிய நிகோபாரில் உள்ளது.
77. செயின்ட் ஜார்ஜ் கணவாய் சிறிய நிகோபரையும் பெரிய நிகோபரையும் பிரிக்கின்றது.
78. தனுஷ்கோடியையும், தலை மன்னாரையும் ஆடம் பாலம் பிரிக்கின்றது
79. யானைக் கணவாய் இலங்கையில் உள்ளது
80. Sombreto கணவாய் விட்டில் நிகோபாரையும் கச்சத்தீவையும் பிரிக்கின்றது
81. பாம்பன் தீவு இந்தியா - இலங்கை (இராமநாதபுரம்) நடுவில் உள்ளது.
82. பாம்பன் தீவுகளில் கிழக்கு பகுதியில் தனுஷ்கோடி உள்ளது
83. போர்ட் பிளேயர் - தெற்கு அந்தமானில் உள்ளது
84. அந்தமான் தீவின் பெரிய தீவு: நடு அந்தமான்
85. அந்தமானின் சிறிய தீவு: ரோஸ் தீவு
86. நிகோபார் தீவின் பெரிய தீவு: பெரிய நிகோபார்
87. நிகோபார் தீவின் சிறிய தீவு: பிலோமிலோ தீவு
பாரன் தீவு:
88. பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் (Barren and Narcodam) எரிமலை உண்டு
89. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள உயர்ந்த சிகரம் - Saddle Peak
(732 மீட்டர்) நிகோபரில் மிக உயர்ந்த சிகரம் துலியர் மலை (672 மீட்டர்)
அரபிக் கடலில் உள்ள தீவுகள்
90. அரபிக் கடலில் இலட்சத்தீவுகள், மினிகாய், கண்ணூர் என 27 பவழத் தீவுகள் உள்ளது
91. இலட்சத்தீவின் பரப்பு 32 கி. மீ
92. எட்டு டிகிரி கணவாய் மினிக்காய் தீவில் உள்ளது
93. அரபிக் கடலில்; காணப்படும் தீவில் பவழப் பாறைகள் காணப்படுகிறது
94. கட்ச் வளைகுடாவில் உள்ள மக்கிய தீவுகள்: 1.காதீர் 2. பாச்சம் 3. பீலா
ஆறுகள்
95. இந்திய ஆறுகளை மூன்று வடிகால்களாக பிரிக்கலாம் அவை
a. வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள்
b. அரபிக் கடலில் கலக்கும் ஆறுகள்
c. உள் நாட்டு ஆறுகள்
வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள்
96. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகள்
97. கங்கை மற்றும் அதன் துணை ஆறுகள்
98. மேற்கு வங்காள ஆறுகள்
99. மகாநதி ஆறுகள்
100. கோதாவரி ஆறுகள்
101. கிருஷ்ணா ஆறுகள்
102. ஆந்திரப் பிரதேச ஆறுகள்
103. பென்னார் ஆறுகள்
104. காவேரி ஆறுகள்
105. தமிழ்நாடு கடற்கரை ஆறுகள்
பிரம்மபுத்திரா
106. இது கைலாய மலை – மானசரோவர் என்ற இடத்தில் Chemayungdung என்ற பனி ஆற்றில் உற்பத்தியாகின்றது. இத்ன துணை நதிகள் - திசாய்போ, திசாங், டிஸ்டா, தோசா
107. இது திசாங்கொ என்ற பெயருடன் திபெத் வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து பின் பிரம்மபுத்திரா என்ற பெயருடன் அசாம் மாநிலத்தில் பாய்ந்து பின் கங்கை நதியின் கிளை நதியான பத்மாவுடன் சேர்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
கங்கை
108. இது இமயமலையின் கங்கோத்திரி (Alaknanda) என்ற இடத்தில் தோன்றுகிறது. இதனை இரண்டாக பிரிக்கலாம். 1.பாகீரதி 2. பைரவி
109. அலக்நந்தாவும் பாகீரதியும் சேருமிடம் தேவபிரயாக் எனப்படும்
110. பாகீரதியின் துணை நதிகள்: யமுனை, கோமதி, ராம், கங்கா, சாரதா, கோகிரா, கண்டகி, கோசி சம்பல் சோன்
111. பைரவியின் துணை நதிகள்: கம்லா, தாமோதர்
112. இது உத்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
யமுனை
113. யமுனோத்திரி என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. அலகாபாத் சங்கமத்தில் கங்கையுடன் இணைகின்றது.
114. கோமதி – பிளிபிட் அருகில் உற்பத்தியாகிறது இதன் கிளை நதி – சாய் சரயு, பர்மா
115. ராம் - கங்கா – நைனிடால் அருகில் உற்பத்தியாகின்றது. இதன் கிளை நதிகள் - தியோகா, கோஸ், கங்கன்
116. காங்ரா - இதன் கிளை நதி – சாரதா மற்றும் ராப்தி
117. கண்டகி – திபெத் அருகில் உற்பத்தியாகின்றது. இதரனை நாராயணி என்று அழைப்பர்.
118. தாமோதர் - சோடாநாகபுரி அருகில் - தோரி என்ற இடத்தில் தோன்றுகிறது. இது ஹீக்ளி நதியுடன் கலக்கிறது.
119. கங்கை நதி சமவெளியில் முதலில் சிவாலிக் மலையின் அடிவாரத்தில் ஹரித்துவாரில் நுழைகின்றது.
120. சுவர்ண ரேகா: இதன் துணை ஆறு காரகை. இது ஜார்கண்ட மாநிலத்தில் சோட்டா நாகபுரி பீடபூமியில் உற்பத்தியாகிறது. மேற்கு வங்காளம் வழியாக பாய்ந்து ஒரிசா மாநிலத்தில் உள்ள தால்சாரி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. இதில் உள்ள நீர்வீழ்ச்சி Hudru falls எனப்படும்.
மகாநதி
121. கிழக்கிந்திய நதிகளில் ஒன்றான இது மத்தியப் பிரதேசத்தில் சாத்பூரா மலைத் தொடரில் பஸ்தார் குன்றுகளில் உற்பத்தியாகின்றது. ஒரிசாவில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. சட்டிஸ்கர் சமவெளி இந்த ஆறு பாய்வதால் ஏற்படும் சமவெளி ஆகும்.
122. இந்நதி பாயும் மாநிலங்கள் சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகும்
123. இந்நதியின் மீது ஹிராகுட் அணை கட்டப்பட்டுள்ளது
கோதாவரி
124. இது விருத்த (பழைய) கங்கா அல்லது தட்சிண (தெற்கு) கங்கா என்று அழைக்கப்படுகிறது
125. இந்தியாவின் இரண்டாவது பெரிய நதி என்று கூறுவர்
126. தக்காண பீடபூமி - நாசிக் அருகில் - திரியம்பக் என்ற இடத்தில் தோன்றுகிறது. ஆனால் தென் கிழக்காக மத்தியப் பிரதேசம்,. கர்நாடகா, ஒரிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவற்றின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
127. துணை ஆறுகள் - பெண் கங்கா, வெயின் கங்காவர்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி, வர்தா மற்றும் பிந்து சாரா ஆகியவை ஆகும்
128. இந்நதியின் கரையில் நாசிக், திரியம்பக், பத்ராசலம் ஆகிய புனித நகரங்கள் காணப்படுகின்றன.
129. நாசிக், அவுரங்காபாத், நாக்பூர், நிசாம்பாத், ராஜாமுந்திரி மற்றும் பாலகாட் ஆகியவை உள்ளது.
130. தென் இந்திய நதிகளில் அதிக மாநிலங்கள் இந்த நதி நீரை பயன்படுத்துகின்றன
131. தென் இந்திய நதிகளில் மிகவும் நீளமானது. இதன் நீளம் - 1560 கிமீ
132. மாகி: – உதய்பூர் மாவட்டத்தில் தோன்றுகிறது
கிருஷ்ணா
133. பாயும் மாநிலங்கள் - மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
134. மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஸ்வரத்திற்கு அருகில் தோன்றுகிறது
135. துணை ஆறுகள் - துங்கபத்திரா, பீமா வேணி, கட்டபிரபா, மலப்பிரபா, கொய்னா, தண்டி மற்றும் மூசி
136. நீளம் - 1300 கி.மீ
137. ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது
துங்கபத்திரா:
138. கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் துங்க மற்றும் பத்திரா என இரு நதிகளாக தோன்றும் இந்நதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் வழியாக பாய்ந்து கிருஷ்ணா நதியுடன் கலக்கின்றது. இந்நதிக்கரையின் மீது விஸய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்டது.
பெண்ணாறு:
139. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகிறது. ஆந்திர பிரதேசத்தில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
காவேரி
140. மேற்கு தொடர்ச்சி மலை பிரம்ம கிர் மலை வரிசையில் குடகு மலை – மெர்க்காரா – தலைக் காவிரியில் தோன்றுகிறது
141. துணை ஆறுகள் - பவானி, நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு, கபினி, ஹேமாவதி, சிம்சா, லோகபாணி மற்றும் இலட்சுமணன் தீர்த்தம் ஆகியவை ஆகும்.
142. பாயும் மாநிலங்கள் - கர்நாடகம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இது வங்காள விரிகுடாவில் கலக்கின்றது
143. இதன் நீளம் - 800 கி. மீ
144. தென் மேற்குப் பருவகாலமான ஜீன் முதல் செப்டம்பர் வரை காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலத்தில் கண்ணம்பாடி என்னுமிடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும், சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டான்லி கட்டப்பட்டுள்ளன. இதில் சிவசமுத்திரம் மற்றும் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உள்ளன
145. பவானி, நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு ஆகியன காவிரியின் துணை ஆறுகள் ஆகும். பவானி என்னும் இடத்தில் பவானி நதி காவிரியுடன் கலக்கிறது. திருச்சிக்கு சிறிது மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து அவை கொள்ளிடம், காவிரி என்ற பெயருடன் பாய்கின்றன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேலணை கட்டப்பட்டுள்ளது. இவ்விரு ஆறுகளும் திருச்சிக்கு கிழக்கே இணைந்து ஸ்ரீரங்கத்தீவைத் தோற்றுவிக்கின்றன. காவிரியின் குறுக்கே கரிகால் சோழனால் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த கல்லணை உள்ளது. இங்குக் காவிரி ஆறு கொள்ளிடம் காவிரி, வென்னாறு என மூன்று கிளைகளாகப் பிரிகின்றது. தஞ்சாவூர் மாவட்டமாக மாற்றியுள்ளது. காவிரியாறு சரித்திரப் புகழ் பெற்ற பூம்புகர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
மேட்டூர்
146. சேலம் மாவட்டம் காவேரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்ட அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது
147. வைகை – ஏலக்காய் மலையில் தோன்றி மன்னார் வளைகுடாவில் பாய்கின்றது. இதன் குறுக்கே கம்பன் அணை கட்டப்பட்டுள்ளது.
தாமிரபரணி
148. அகத்திய மலையில் தோன்றி மன்னார் வளைகுடாவில் கலக்கிறது
149. மணிமுத்தாறு மற்றும் சிற்றாறு இதன் துணை ஆறுகள் ஆகும்
150. இதற்கு முற்காலத்தில் பொருநை நதி என்று பெயர்
151. பாபநாசம், சிற்றாறு மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களில் நீர்வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
152. மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபிக் கடலில் கலக்கும் சில முக்கிய ஆறுகள் - பெரியாறு, ஷராவதி, நேத்திராவதி, பொன்னானி, ஆளியாறு
பாலாறு
153. கர்நாடாக மாநிலத்தில் உள்ள நந்தி மலையில் தோன்றி கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் வழியாகப் பாய்ந்து சதுரங்கப்பட்டினத்திற்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. செய்யாறு, வேகவதி என்பன இதன் துணையாறுகள் ஆகும்
வைகை
154. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரியார் பீடபூமியில் வைகை நதி உற்பத்தியாகின்றது. வைகை நதிக் கரையின் மேல் மதுரை நகரம் உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு வளமடைந்துள்ளது. இதன் துணையாறுகள் சுருளியாறு, மஞ்சளாறு, முல்லையாறு மற்றும் வராக நதியாகும். கேரளா அரசு முல்லை பெரியாறு பிரச்சினையால் வைகை நதியில் நீர் இருப்பதில்லை. வைகை அணைக்கட்டு தேனீ மாவட்டத்தில் உள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள பாக்சலசந்தியில் வங்காள விரிகுடாவில் வைகை கலக்கின்றது. முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக் மற்றும் பிரதானி முத்திருப்ப பிள்ளை ஆவார்
தென்பெண்ணை
155. கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னகேசவ மலையில் தோன்றி தமிழ்நாட்டிற்குள் பாய்கிறது. கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி என்னுமிடத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் என்னுமிடத்திலும் இந்த ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டப்படடிருக்கின்றன.
156. கிழக்கு நோக்கி – வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள்: 1.சபரி 2. துங்கபத்திரா 3. வடபெண்ணை.
அரபிக் கடலில் கலக்கும் ஆறுகள்
157. கேரள கடற்கரை ஆறுகள்
158. கர்நாடக கடற்கரை ஆறுகள்
159. கோவா கடற்கரை ஆறுகள்
160. மகாராஷ்டிரா கடற்கரை ஆறுகள்
161. தபதி ஆறுகள்
162. நர்மதா ஆறுகள்
163. மாகி ஆறுகள்
164. சபர்மதி ஆறுகள்
165. சிந்து ஆறுகள்
கேரள கடற்கரை ஆறுகள்
166. பெரியாறு கேரளாவின் உயிர் நாடி ஆறு ஆகும். கேரளாவின் மிகப் பெரிய ஆறு இதுவே ஆகும். இவ்வாற்றின் குறுக்கே இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது
கர்நாடக கடற்கரை ஆறுகள்
167. நேத்ராவதி ஆறு சிக்;மங்களுர் மாவட்டம் கங்கமூலா என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. மங்களுர் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறு இதுவே ஆகும்
168. ஷராவதி ஆறு ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அம்புதீர்த்தம் என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. இராமர் சீதையை மணக்க அம்பினை உடைத்த இடம் எனப்படுகிறது. புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி இவ்வாற்றில் உருவாகியுள்ளது.
கோவா கடற்கரை ஆறுகள்
169. ஜீகாரி ஆறு கோவாவின் மிகப் பரிய ஆறாகும். இதன் முகத்துவாரத்தில் வாஸ்கோடா காமா துறைமுக நகரம் உள்ளது.
170. மண்டோவி ஆறு
மகாராஷ்டிரா கடற்கரை ஆறுகள்
தபதி ஆறுகள்
171. மத்திய இந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளில் தபதியும் ஒன்றாகும். மத்திய பிரதேசத்தின் தெற்கு பகுதியில் சாத்பூரா மகாதேவ் குன்றுகளில் தோன்றி சாத்பூரா மலைகளுக்குத் தெற்கில் மேற்கு நோக்கிப் பாய்ந்து (மத்திய பிரதேசம் - மகாராஸ்டிரா – குஜராத்) வழியாக காம்பே வளைகுடாவில் கலக்கின்றது.
172. இந்நதியின் தெற்கு பகுதியில் குஜராத் மற்றும் மகராஷ்டிரா எல்லைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அல்லது சயாத்திரித் தொடர் தொடங்குகிறது
173. மகாராஷ்டிராவின் விதார்பா மாவட்டம் இந்நதியால் பெரிதும் பயன்பெறுகின்றது.
174. இந்நதியின் முகத்துவாரத்தில் சூரத் நகரம் அமைந்துள்ளது
175. லூனி – ஆரவல்லிமலைத் தொடரில் அஜ்மீர் அருகே தோன்றுகிறது
நர்மதா ஆறுகள்
176. மத்தியப் பிரதேசத்தில் மைக்கால் மலைத் தொடரில் அமர்கண்டக் என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கின்றது.
177. நர்மதா நதிக் கொப்பரை 98,796 சதுர கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பில் 3 சதவீதம் ஆகும். இப்பகுதி மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது
மாகி ஆறுகள்
178. மாகி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராஜஸ்தான் வழியாக குஜராத் மாநிலத்தில் காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கின்றது
179. கோமதி ஆறு இராஜஸ்தான் மாநிலத்தில் உதயபூர் மாவட்டத்தில் உற்பத்தியாகின்றது.
சபர்மதி ஆறுகள்
180. சபர்மதி ஆறு இராஜஸ்தான் மாநிலத்தில் உதயபூர் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகின்றது. குஜராத் மாநிலத்தில் காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கின்றது. அகமதாபாத் மற்றும் காந்திநகர் இதன் கரையில் அமைந்துள்து. காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் இதன் கரையில் உள்ளது
சிந்து ஆறுகள்
181. இது கைலாய மலையில் மானசரோவர் என்னுமிடத்தில் உற்பத்தியாகின்றது. இதன் வலதுபுற துணை நதிகள் - கில்கிட், காபூல், ஸ்வாட், பஞ்ச்கோரா, குணார், குர்ரம். இதன் இடதுபுற துணை நதிகள் - சீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ்
182. பிற துணை ஆறுகள் - சிகார், அஸ்டார், ஜான்ஜ்கர், திராஸ், ஷையோக், ஸ்கார்டு ஆகியவை ஆகும்
183. இது காஷ்மீர் மாநிலத்தில் பாய்கின்றது
184. இது கராச்சி அருகே அரபிக் கடலில் கலக்கின்றது
185. இது இந்தியாவின் பெரிய நதி
186. இதன் நீளம் - 2900 கி.மீ
187. இதில் 709 கி. மீ. இந்தியாவில் உள்ளது.
சீலம்
188. காஷ்மீர் பள்ளத்தாக்கில் Verinag என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது
189. இந்தியா பாகிஸ்தானின் எல்லைகயாகும்
190. சீனாப் - லாகூல் என்னுமிடத்தில் தோன்றுகிறது. சீனாப் வலது புறத்தில் சீலத்தையும் இடது புறத்தில் ராவியையும் இணைத்துக் கொள்கிறது.
191. ராவி - இமாச்சலப் பிரதேசம் குலுவில் உற்பத்தியாகின்றது. இது சட்லெஜ் உடன் இணைகின்றது. சீனாப் மற்றம் சட்லெஜ் பாஞ்நாட் (Panjnad) என்ற பெயரில் இணைகிறது. பின் அவை பாகிஸ்தானில் உள்ள மிதான்கோட் என்ற இடத்தில் சிந்துவில் இணைகிறது. இவ்வாறு 5 நதிகள் பாயும் பிரதேசம் என்பதால் பஞ்சாப் என பெயர் பெற்றது (சுதந்திரத்திற்கு முன்).
மேற்கு நோக்கி பாயும் நதிகள்
192. நதிகள் துணை நதிகள்
193. நர்மதை: தாவா, ஒர்சாங், புஷ்நேர், பாங்தர், ஹிரா, தியோ – கங்கா
194. தபதி – பாரி: லாகூர், பூர்ணா, பாஞ்சரா
195. சபர்மதி வாட்ராக்: ஹாதிமதி, ஹார்நவ், செய், வாகுல்
196. இந்நதிகள் மேற்கு நோக்கி பாய புவியின் Fault Line அமைப்பே காரணம் ஆகும்.
ஷராவதி
197. கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் ஷராவதி ஆற்றின் குறுக்கே இது அமைந்துள்ளது. இது மகாத்மா காந்தி நீர் மின்சக்தி திட்டம் என்று அழைக்கப்படும்
தமிழகத்தின் முக்கிய ஆறுகள்
198. நொய்யல் காவிரியின் துணையாறு – கோவையின் பல்லடம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம் ஆகியவை பயன் பெறுகிறது
199. செய்யாறு கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. இது காவிரியின் துணையாறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இது செங்கம் வழியாக செல்கிறது
200. காவிரியின் துணையாறு அமராவதி கேராளிவல் உள்ள அஜந்தா பள்ளத்தாக்கில் உற்பத்தியாகின்றது. கரூர் அருகே காவிரியில் கலக்கின்றது. உடுமலைப்பேட்டை இதன் கரையில் அமைந்துள்ளது
201. சென்னையில் உள்ள அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே உற்பத்தியாகின்றது.
202. பவானி ஆறு கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகின்றது. மோயாறுவுடன் கலந்து சத்தியமங்கலத்தின் வழியாக பவானி என்னுமிடத்தில் காவேரியுடன் கலக்கின்றது. இவ்வாறுகள் கலக்குமிடத்தில் சங்கமேஸ்வரி கோவில் உள்ளது. இதன் துணையாறுகள் சிறுவாணி மற்றும் குந்தா ஆகும்.