History in Tamil | Part - 19
சீக்கியர்கள்
குருநானக் (1469 – 1539)
1. சீக்கிய சமயத்தை உருவாக்கியவர் - குருநானக்
2. பிறந்த இடம் - தால்வாண்டி – நான் கானா, சாஷிப்
3. இது மேற்கு பஞ்சாப்பில் உள்ளது
4. பிறந்த வருடம் : 1469
5. தந்தை பெயர்: மேத்தாகாலு
6. தாயாரின் பெயர் - திரிப்தா
7. மனைவியின் பெயர் - சுலந்தி
8. மெக்கா மெதீனா சென்றார்
9. ஞான ஒளி பெற்ற இடம் - சுல்தான் பூர்
10. பாயீன் என்ற ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஞான ஒளி கிடைத்தது
11. இறுதியாக வாழ்ந்த இடம் - கார்த்தார் பூர்
குருநானக்கின் கருத்துக்கள்
12. கடவுள் ஒருவரே, உருவ வழிபாடு தேவையில்லை. துறவறம் தேவையில்லை
13. ஆண்டவரின் பெயரை வழிபட வேண்டும்
14. ஆண்டவனை அறிய குரு தேவை
15. குருவை கண்டறிய ஆண்டவனின் ஆசி தேவை
16. சீக்கியர்களின் ஏணி குரு
17. உலகத்தில் பற்று இல்லாமல் வாழ வேண்டும்.
18. நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுக்கின்றோம்
19. சாதி முறையை கண்டித்தார்
20. இல்லத்திலிருந்து வழிகாட்டலை மேற்கொண்டார்
21. மேற்கொண்ட பயணம் - உதாஸிஸ்
22. மேற்கொண்ட பயணம் - 5
23. காலையில் மேற்கொள்ளப்படும் வழிபாடு – ஜப்ஜி
24. பொதுச் சமையலறை – லங்கார்
25. எழுத்து முறை – குருமுகி
26. துறவற வாழ்க்கை – பக்கீர்
27. டாக்டர் ஜி. சி. நராங் - குருநானக் ஒரு சீர்திருத்தவாதி
28. மேகாலிப், கான்சிங், தேஜாசிங் - குருநானக் ஒரு புரட்சியாளர்
29. இவர் கபீர், நாமதேவர் கருத்தினை ஏற்றுக் கொண்டார்.
குரு அங்காட் 1538 - 52
30. சீக்கிய மதத்தின் இரண்டாவது குரு
31. இவரின் பெயர் லேஹனா
32. குருமுகி எழுத்தை அறிமுகப்படுத்தியவர்
33. சீக்கிய மதத்தை தனி மதமாக்கியவர்
34. ஹீமாயூன் இவரது ஆசி பெற்றார்
35. லாங்கர் எனப்படும் பொதுச் சமையலறையை அறிமுகப்படுத்தினார்.
குரு அமர்தாஸ் 1552 – 74
36. குரு அங்காடியின் மகள் பீபி அம்ரோ இவரை மதம் மாற்றினார்
37. இவர் வைணவர்
38. 84 படிகள் கொண்ட கிணறு அமைத்தார்
39. இவர் தம்முடைய ஆன்மிக பேரரசை 22 மாநிலமாக பிரித்தார். இவை மஞ்சிக்ககள் எனப்பட்டது.
40. புதிய பிறப்பு, இறப்பு சடங்குகளை ஏற்படுத்தினார்.
41. சதி என்னும் உடன்கட்டையை தடைச் செய்தார்.
42. மது அருந்துதல் தடை செய்யப்பட்டது
43. இவர் தங்கியிருந்த கோயில்வால் என்னுமிடத்திற்கு அக்பர் வந்து அறக்கொடைகளை வழங்கினார்
44. அக்பர் யாத்திரை வரிகளை சீக்கியருக்கு நீக்கினார்.
குரு இராம்தாஸ் (1575 – 1581)
45. இவர் குரு அமர்தாசின் மருமகன்
46. இவரது மனைவியின் பெயர் - பீபிபாணி
47. அக்பரிடமிருந்து நிலத்தினை பெற்று சக்குரு (அ) இராமதாஸ்புரம் (அ) அமிர்தசரஸ் என்ற நகரத்தை உருவாக்கினார்.
48. சந்தோஷ்கார், அமிர்தசரஸ் என்ற குளத்தை வெட்டினார்
49. மசந்துக்கள் எனப்படும் சீடர்களை உருவாக்கினார்
50. அக்பர் இவரின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாப்பிற்கு ஓராண்டு வரித் தள்ளுபடி அளித்தார்
51. சீக்கிய மதம் வெகுவாக பரவியது.
52. இவருக்கு பிறகு குரு பதவி பரம்பரை வழியாக மாறிவிட்டது
குரு அர்ஜூன் சிங்க (1581 – 1606)
53. ஆதி கிராந்தம் என்ற நூல் தொகுக்கப்பட்டது
54. இதுவே சீக்கியர்களின் வேதம்
55. சீக்கியர்கள் காணிக்கை பெறும் முறை உருவாக்கப்பட்டது
56. இவரது சகோதரர் ப்ரீதியாவிற்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது
57. அரிமாந்திர் ஆலயம் உருவாக்கினார்
58. தாரன்தாரன், கர்தார்பூர் நகரை உருவாக்கினார்
59. மசந்துகள் தமக்கு கீழ் மியோராக்கள் அல்லது மசந்தியாக்களை உருவாக்கினார்கள்.
60. இளவரசர் குருரூவிற்கு உதவியதால் ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார்
61. இவரது கொலை சீக்கியர் ஒற்றுமைக்கு உதவியது.
குரு ஹரிகோவிந்த சிங் (1606 – 1645)
62. இவரது தந்தை கொலை செய்யப்படவோ இவர் தம்முடைய ஆதரவாளர்களை போர் வீரராக மாற்றினார்
63. சாச்சா பாதுஷா என்ற பெயருடன் போர் வீரரைப் போல் உடையணிந்தார்
64. அகல்தத் என்ற கட்டிடம் உருவாக்கப்பட்டது. அதுவே கடவுளின் இருப்பிடம் எனப்பட்டது
65. அமிர்தசரசை சுற்றி சுவர் அமைத்தார். அது ஹோல்கார் எனப்பட்டது
66. இவர் முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் குவாலியரில் சிறை வைக்கப்பட்டார்
67. பின்பு இவர் ஜஹாங்கீரிடம் நட்பு கொண்டார்
68. ஷாஜஹான் காலத்தில் 1628ல் அமிர்தசரஸ் போர் நடந்தது.
69. 1631ல் இரண்டாவது அமிர்தசரஸ் போர் நடந்தது
70. 1634ல் தன்னுடைய தலைநகரை கிராத்பூருக்கு மாற்றிக்கொண்டார்.
குருஹர்ராய் 1645 - 61
71. இவர் ஷாஜஹானின் மூத்த மகன் தாராஷியை ஆதரித்தார். அவுரங்கசீப்பை இவர் மகன் இராம்ராய் ஆதரித்தார்
72. எனவே அடுத்த குருவாக இராம்ராயன் மகன் அரிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்
குரு அரிகிருஷ்ணன் 1661-64
73. மூன்றாண்டுகள் மட்டுமே குருவாக இருந்தார். இளம் வயதிலேயே இவர் இறந்துவிட்டார்
குரு தேஜ்பகதூர் 1664-75
74. சிவாலிக் குன்றுகளிடையே அனந்தபூத் என்ற ஆசிரமத்தில் தங்கினார்
75. இவர் இசுலாமிய மதத்திற்கு மாற மறுத்தமையால் அவுரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்
குரு கோவிந்த சிங் 1675 - 1708
76. சீக்கியர்களின் பத்தாவது குரு
77. கடைசி குரு
78. கல்சா என்ற அமைப்பினை உருவாக்கினார்
79. பாஞ்ச்பியாராக்கள் என்பவர்கள் உருவாக்கப்பட்டனர்
80. சீக்கியர்கள் 5 அடையாளங்களைக் கொண்டு இருக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது
a. கேஷ் - நீண்டமுடி
b. கிர்பான் - கத்தி
c. கச்சா - கால்சராய்
d. கங்கா - சீப்பு
e. கரா - வளையல்
81. ஆனந்தப்பூர் போரில் சீக்கியர்கள் தோல்வி அடைந்தனர்
82. இவரின் 4 மகன்கள் கொல்லப்பட்டனர்
83. சீக்கிய படையை புத்தாதல் (முதியோர் படை) தருந்தல் (இளைஞர்படை ) என் பிரித்தவர் கபூர் சிங் கோவிந்த்சிங் போல இருந்து அதிக முகலாயர்களை கொன்றவன் - பண்டா பகதூர்
இரஞ்சித் சிங்
84. முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தவுடன் பஞ்சாப்பில் சீக்கியர்கள் எழுச்சி தோன்றியது
85. தனித்தனியே இயங்கி வந்த 12 மிசில்களை ஒன்றுபடுத்தி ஐக்கிய பஞ்சாப்பை ஏற்படுத்தியவர் இரஞ்சித் சிங் ஆவார்
86. இவர் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார்
87. 1767ல் ஆப்கானிய மன்னர் அகமது ஷா அப்தாலி இந்தியா மீது படையெடுத்தார்
88. ஆப்கானி மன்னர் சாமன் ஷா 1798ல் ரஞ்சித் சிங்கை லாகூரின் ஆளுநராக நியமித்தார்
89. 1802ல் அமிர்தசரசு கோட்டையைக் கைப்பற்றினார்
90. 1805ல் ஆங்கிலேயருக்கு எதிராக மராத்தியத் தலைவர் ஹோல்கர் உதவி கேட்டபோது மறுத்துவிட்டார்
91. 1806ல் சட்லெஜ் ஆற்றைக் கடந்து லூதியானாவைக் கைப்பற்றினார்.
92. 1809ல் மின்டோ பிரபு சார்பில் சார்லஸ் மெட்காப்வுடன் இரஞ்சித்சிங் உடன்படிக்கை செய்து கொண்டார். இதுவே அமிர்தசரசு உடன்படிக்கை ஆகும்.
93. 1811ல் காங்கராவை கூர்க்கர்களிடமிருந்து கைப்பற்றினார்
94. 1813ல் அட்டாக் பகுதியை ஆப்கானியர்களிடமிருந்து கைப்பற்றினார்.
95. 1818ல் மூல்தானைக் கைப்பற்றினார்
96. 1819ல் காஷ்மீரை கைப்பற்றினார்
97. 1823ல் பெஷாவரை கைப்பற்றினார்
98. 1836ல் லாடாக்கைக் கைப்பற்றினார்
99. 1837ல் ஜாம்ராத் கோட்டையை கைப்பற்றினார்
100. நாவாய் உடன்படிக்கை: இரஞ்சி சிங் சிந்துவைக் கைப்பற்ற முயற்சி செய்தபோது ஆங்கிலேயர்கள் சிந்துவை ஆண்ட அமீர்களுக்கு சலுகைகள் வழங்கி நாவாய் உடன்பாடு செய்துகொண்டனர்.