இயற்பியல் - 2
திரவ நிலையியல்
1. அழுத்தத்தின் அலகு – நியூட்டன் / மீட்டர்2 அல்லது பாஸ்கல்.
2. திரவத்தில் ஏற்படும் அழுத்தம் காண உதவும் சூத்திரம் Nm-2.
3. ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கும்.
4. அடர்த்தி அதிகம் கொண்ட திரவம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
5. அழுத்தம் = விசை / பரப்பு
6. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் சுமார் 800 கி.மீ. வரை பரவியுள்ளது
7. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுவது – பாரமானி
8. வளிமண்டல அழுத்தத்தை முதலில் அளந்தவர் - டாரிசெல்லி
9. U வடிவ குழாய் அழுத்தமானி கொண்டு – காற்று, திரவம், வாயுவின் அழுத்தத்தை
அளவிடலாம்.
10. நுரையீரல் சுவாச அழுத்தத்தை அளவிட பயன்படுவது – U வடிவ அழுத்தமானி
11. திரவம் இல்லாத பாரமானி – அனிராய்டு பாரமானி
12. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுவது – அனிராய்டு பாரமானி
13. வளிமண்டல காற்றின் அழுத்தத்தை துல்லியமாக அளவிட பயன்படும் பாராமானி - பார்ட்டின் பாரமானி.
14. ஒரு திரவத்தில் ஒரு பொருள் மூழ்கியிருக்கும் போது எடையானது அப்பொருளான
வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம் -- ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.
15. திரவங்கள் மற்றும் திண்மங்களின் ஒப்படர்த்தியை காண பயன்படுவது --- ஆர்க்கிமிடிஸ்
தத்துவம்.
16. நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படும் தத்துவம் -- ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
மிதத்தல் விதிகள்:
17. மிதக்கும் பொருளின் எடையானது அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின்
எடைக்குச் சமம்.
18. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையம் மற்றும் அப்பொருளால் வெளியேற்றப்பட்ட
திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டும் ஒரே செங்குத்துக் கோட்டில் அமையும்.
19. வெவ்வேறு காலநிலைகளில் ஏற்படும் மாறுபட்ட கடல் நீரின் அடர்த்திக்கு ஏற்றவாறு
கப்பலின் சமநிலை மற்றும் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக கப்பலில்
வரையப்படும் கோடுகள் -- பிலிம்சால் கோடுகள் எனப்படும்.
20. அடர்த்தி = நிறை / பருமன் (D = m/v)
21. திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள விகிதம் திரவத்தின்
ஒப்படர்த்தி அல்லது அடர்த்தி எனப்படும்
22. ஒப்படர்த்தி = பொருளின் அடர்த்தி / நீரின் அடர்த்தி
23. ஒப்படர்த்திக்கு அலகு இல்லை
24. திரவத்தின் ஒப்படர்த்தியை காண உதவும் உபகரணம் -- ஹேரின் உபகரணம்.
25. ஹேரின் உபகரண்ததை பயன்படுத்தி திரவத்தின் ஒப்படர்த்தி காண உதவும் சூத்திரம் - d2 / d1 = h1 / h2
26. திரவத்தின் ஒப்படர்த்தி மற்றும் திரவத்தின் அடர்த்தி காண உதவுவது – திரவ
மிதவைமானி
27. திரவ மிதவைமானி 2 வகைப்படும்
அவை 1) மாறா அமிழ்தல் திரவ மிதவைமானி
2) மாறும் அமிழ்தல் திரவ மிதவைமானி.
28. மாறா அமிழ்தல் திரவ மிதவைமானியில் திரவமானியின் மூழ்கும் அளவு நிலையாக
இருக்கும். திரவ மிதவைமானியின் எடையானது திரவத்திற்குத் திரவம் மாற்றப்படும்.
29. மாறும் அமிழ்தல் திரவ மிதவைமானி திரவ மிதவைமானியின் எடை மாறாமல் இருக்கும். ஆனால் திரவத்தினுள் மூழ்கியிருக்கும் ஆழத்தின் அளவு மாறியிருக்கும்.
30. மாறா அமிழ்தல் திரவ மிதவைமானி மூலம் திரவத்தின் அடர்த்தி எண் காண உதவும்
சூத்திரம் = திரவத்தில் மிதவையின் எடை
/ நீரில் மிதவையின் எடை
31. மாறும் அமிழ்தல் திரவ மிதவைமானி மூலம் திரவத்தின் அடர்த்தி எண் காண உதவும்
சூத்திரம் = நீரில் திரவமானி மூழ்கிய ஆழம்
/ திரவத்தில் திரவமானி மூழ்கிய ஆழம்
32. பொது திரவ மிதவைமானி என்பது – மாறும் அமிழ்தல் திரவ மிதவைமானியை குறிக்கும்.
வெப்பவியல்
33. மெழுகுவர்த்தி எரியும்போது உருவாவது – கார்பன்டைஆக்சைடு மற்றும் நீர்
34. ஒரு பொருள் எரியும்போது உருவாகும் வாயு – கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன்
மோனாக்சைடு
35. துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றத்திற்கு எ.கா. ஆகும்
36. ஒரு இயற்பியல் மாற்றத்தின்போது பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை.
37. ஒரு வேதியியல் மாற்றத்தின்போது பொருள்களின் மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழும்.
38. உள்ளங்கையை தேய்க்கும் போது இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றலாக மாறுகிறது
39. சலவைப்பெட்டி, Water
Heater, மின்அடுப்பு, கெய்சர் ஆகியவை – மின் ஆற்றலை
வெப்ப ஆற்றலாக மாற்றுகின்றன.
40. சூரியன், அணுகுண்டு ஆகியன – அணுஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது.
41. வெப்பம் என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலாகும்.
42. வெப்பநிலை என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க
ஆற்றலாகும்.
43. வெப்பத்தின் அலகு – கலோரி அல்லது ஜூல்.
44. வெப்பநிலையின் அலகு – செல்சியஸ் அல்லது கெல்வின்.
45. வெப்பம் என்பது ஒரு பொருளின் உள் ஆற்றலாகும்.
46. வெப்பம் என்பது ஒரு பொருளிலுள்ள மொத்த துகள்களின் வேகத்தையும், வெப்பநிலைஎன்பது ஒரு பொருளிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி வேகத்தைப் பொறுத்தது.
47. வெப்பம் என்பது ஒரு பொருளிலுள்ள துகள்களின் எண்ணிக்கை, அளவு மற்றும்
பொருளின் வகையைப் பொறுத்தது.
48. வெப்பநிலை என்பது துகள்களின் எண்ணிக்கை, அளவு போன்றவற்றை பொறுத்ததல்ல.
49. பொருட்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன.
50. இரட்டை உலோகப்பட்டையின் பயன்கள்: சலவைப்பெட்டி, மின்அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி
ஆகியவற்றில் தெர்மோஸ்டாட் எனும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பயன்படுகிறது.
51. கடிகாரத்தில் நேர இழப்பு கோடைகாலங்களிலும், நேர நீட்டிப்பு குளிர்காலங்களிலும்
ஏற்பட காரணம் - வெப்ப விரிவு (இதனை தவிர்க்க ஈழுலோகத்தகடு பயன்படுகிறது).
52. தண்டவாளங்களுக்கு இடையே சிறிது இடைவெளிவிட்டு இணைப்புத்தகடுகள் கொண்டு
இணைக்கப்பட காரணம் - வெப்பத்தினால் தண்டவாளங்கள் விரிவடையும்போது
வளையாமல் நேராக இருப்பதற்காக.
53. குளிர்பான பாட்டில்கள் தடித்த கண்ணாடியால் செய்யப்பட காரணம் - வாயுகளடங்கிய
குளிர்பாட்டில்கள் வெப்ப விரிவால் வெடிக்காமல் இருப்பதற்காக.
54. பாலங்களை அமைக்கும்போது இரும்பு பலகைகளை கான்கிரிட் தூண்களின் மீது
பொருத்தும்போது சிறிது இடைவெளிவிட்டு அமைக்கப்பட காரணம் – வெப்பத்தினால்
விரிவடையும்போது இரும்புப்பலகை வளையாமல் இருப்பதற்காக.
55. 4°C வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும்,
பருமன் குறையும்.
56. குளிர்காலங்களில் நீர் நிலைகளில் உறைந்திருப்பினும் அவற்றில் வாழும் உயிரினங்கள்
உயிர் வாழக் காரணம் - நீர் நிலைகளின் அடிப்புறம் நீரின் வெப்பநிலை 4°C இருப்பதால்
நீர் உறையாமல் உள்ளது.
57. நீரின் முரண்பாடான பெருக்கத்தை அறிய உதவும் கருவி – ஹோப் கருவி
58. உறைகலவை என்பது சாதாரண உப்பும், பனிக்கட்டியும் 1:3 என்ற விகிதத்தில் உள்ள
கலவையாகும்.
59. உறைகலவையின் வெப்பநிலை (-13°C)
60. உறைகலவையில் பயன்படுத்தப்படும் உப்பு – அம்மோனியம் நைட்ரேட்
61. மனித உடலின் வெப்பநிலை 98.4° F அல்லது 36.9°C அல்லது 310°K
62. வெப்பநிலை அதிகரிப்பதால் நீர்வாழி உயிரினங்கள் இறப்பதற்கு காரணம் – வெப்பநிலை
உயரும்போது நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் வாயு அளவு குறைவதால்.
63. நிலவில் அதிகபட்ச வெப்பநிலை 110°C குறைந்த வெப்பநிலை (-150°C)
64. வெள்ளி கிரகத்தின் அதிக பட்ச வெப்பநிலை 480°c
65. துருவப்பகுதிகளில் காணப்படும் தாவரம் -- லிச்சன்ஸ்
66. வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்தும்போது நமது உடல் குளிர்ச்சியான
இருக்கக் காரணம் – அவை நமது உடலில் உள்ள வெப்பத்தை எடுத்துக்கொண்டு
ஆவியாவதால்.
67. கொதித்தல் நிகழ்ச்சி திரவம் முழுவதும் நடைபெறும் வேகமான நிகழ்ச்சியாகும். குறிப்பிட்ட வெப்பநிலையில் நடைபெறும். வெப்பநிலை வேறுபாடு இருக்காது
68. ஆவியாதல் ஒரு மெதுவான நிகழ்ச்சியாகும். திரவத்தின் மேற்பரப்பில் எல்லா
வெப்பநிலையிலும் நடைபெறும். வெப்பநிலை வேறுபாடு இருக்கும்.
69. வெப்பநிலைமானியை கண்டறிந்தவர் - செல்சியஸ்
70. வெப்பநிலைமானியில் பாதரசம் பயன்படுத்தக் காரணம்:
a. கண்ணாடி குழாய்களின் வழியாக எளிதாக காண முடிகிறது
b. கண்ணாடியில் ஒட்டாது
c. வெப்ப நற்கடத்தி
d. வெப்பத்தினால் சீராக பெருக்கமடையும்
e. அதிக நெடுக்கத்தில் வெப்பநிலையில் அளக்க முடிகிறது
f. பிற திரவங்களைவிட குறைவான வெப்பத்தை எடுத்துக்கொண்டு பொருளின்
வெப்பநிலையை விரைவாக அடைகிறது
g. மருத்துவ வெப்பநிலைமானிகளில் காணப்படும் வெப்பநிலை அளவு 35°C முதல் 44°C வரை
71. கலோரி = 4.2 ஜூல்
72. கிலோ கலோரி = 4200 ஜூல
73. வாயுவில் கலோரி மதிப்பின் அலகு – கிலோ ஜூல் /மீ3
74. திண்மம் மற்றும் நீர்மத்தில் கலோரி மதிப்பின் அலகு – கிலோஜூல் / கிலோகிராம்
75. திரவ பெட்ரோலியத்தின் (LPG) கலோரி மதிப்பு 49400 கிலோ ஜூல் / மீ3
76. வெப்ப ஆற்றலுக்கும் தன்வெப்ப ஏற்புதிறனுக்கும் இடையே உள்ள சமன்பாடு Q = msΔt
77. வெப்ப ஏற்புத்திறனின் அலகு J/K
78. தன்வெப்ப ஏற்புத்திறனின் அலகு J/KG/K
79. பாரபின் மெழுகின் தன்வெப்ப ஏற்புத்திறன் 2900 J/KG/K
80. நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 4180 J/KG/K
81. காரீயம் தன்வெப்ப ஏற்புத்திறன் 128 J/KG/K
82. பாதரசம் தன்வெப்ப ஏற்புத்திறன் 138 J/KG/K
83. ரேடியேட்டர்களில், நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தக் காரணம் -- நீரின் தன்வெப்ப
ஏற்புத்திறன் அதிகமாக உள்ளதால்.
84. வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தக் காரணம் – தன்வெப்பஏற்புத்திறன்
குறைவாக இருப்பதால்.
85. வெப்பம் பரவுதல் மூன்று முறைகளில் ஏற்படுகிறது
86. வெப்பக்கடத்தல்: ஒரு பொருளில், வெப்பம் மிகுந்த பகுதியிலிருந்து வெப்பம்
குறைவான பகுதிக்கு மூலக்கூறின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்ச்சி ஆகும். (திடப்பொருளில் நிகழும்)
87. வெப்பசலனம்: ஒரு பொருளில், வெப்பமிகுந்த பகுதியிலிருந்து வெப்பம் குறைந்த
பகுதிக்கு துகள்களின் சலனத்தால் வெப்பம் பரவும் நிகழ்ச்சி ஆகும் (திரவம் மற்றும்
வாயுக்களால் நிகழும்)
88. வெப்ப கதிர்வீச்சு: வெப்பமானது ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
ஊடகமின்றி பரவும் நிகழ்ச்சி ஆகும்.
89. சூரியனிடமிருந்து வெப்பமானது – வெப்பக் கதிர்வீசல் மூலமாக புவியை அடைகின்றது.
90. கருமை நிறப் பொருட்கள் அதிக அளவு வெப்பக் கதிர்வீச்சை உட்கவரும். வெள்ளை
நிறம் மிகக் குறைந்த
வெப்பக் கதிர்வீச்சை உட்கவரும்.
91. கோடை காலத்தில் வெள்ளை ஆடை உடுத்தக் காரணம் -- வெப்பக் கதிர்வீச்சு மூலமாக
நமது உடல் வெப்பமாகாமல் இருப்பதற்காக.
92. சமையல் பாத்திரங்களின் அடிப்புறம் கருமை நிறம் பூசப்பட்டிருப்பதன் காரணம் – அதிக
கதிர்வீச்சை உட்கொண்டு பாத்திரம் விரைவில் சூடேறுவதற்கு.
93. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளில் வெண்மை
நிறம் பூசப்பட்டிருப்பதன் காரணம் - எரிபொருட்கள் கதிர்வீச்சு முறையில் வெப்பமடைவதை
தவிர்க்க.
94. காப்பர் பாட்டம் கொண்ட சமையல் பாத்திரங்களை தற்காலத்தில் பயன்படுத்தக் காரணம்
- காப்பர் ஒரு சிறந்த வெப்பக்கடத்தி என்பதால்.
95. ஆட்டோமொபைல், வாக ரேடியேட்டர்களில் தாமிரத்தால் செய்யப்பட்ட குழாய்கள்
இணைக்கப்பட காரணம் - இன்ஜின்களிலிருந்து வரும் வெப்பத்தை தாமிரம் விரைவாக
கடத்தி இன்ஜினை குளிர்வடையச் செய்வதால்.
96. குளிர் காலத்தில் கம்பளி ஆடைகள் நம் உடலை வெப்பமாக வைத்திருக்கக் காரணம்
அவற்றிலுள்ள சிறிய துவாரங்களில் காற்று அடைபட்டு, காற்று ஒரு அரிதிற் கடத்தியாக
செயல்பட்டு வெப்பம் கடத்துதலை தவிர்ப்பதால்.
97. குளிர் பிரதேசங்களில் விலங்குகள் அடர்த்தியான ரோமங்களை பெற்றிருக்கக் காரணம்
அவ்விலங்குகளின் ரோமங்களில் காற்று அடைக்கப்பட்டு உடல் வெப்பநிலையை
பாதுகாப்பதால்.
98. வெப்பக்குடுவையை உருவாக்கியவர் - தேம்ஸ் டீவார்
99. வெப்பக்குடுவையின் (வெற்றிடக்குடவை) உள்ளிருக்கும் திரவம் நீண்ட நேரம் வெப்பம்
குறையாமல் இருக்கக் காரணம் -- வெப்பச்சலனம், வெப்பக்கதிர்வீசல் மூலம் வெப்பம்
தவிர்க்கப்படுவதால்.
100. பெரும்பாலும் கடல் காற்று பகல் நேரத்தில் வீசக் காரணம் -- பகல் நேரத்தில் நீரை விட நிலம் வெப்பமடைவதால், கடலிலிருந்து நிலத்தை நோக்கி காற்று வீசுகிறது
101. பெரும்பாலும் நில காற்று இரவு நேரத்தில் வீசக் காரணம் - இரவு நேரத்தில் நிலம், கடல்
நீரை விட விரைவில் குளிர்ச்சி அடைவதால் நிலத்திலிருந்து கடலை நோக்கி காற்று
வீசுகிறது
102. தெர்மோஸ்டேட் பயன்படும் கருவி – சலவைப்பெட்டி
103. வெப்பத்தை அளக்கும் கருவி – கலோரிமானி
104. கலோரிமானியில் நிக்கல் முலாம் பூசப்பட்டிருப்பதன் காரணம் - வெப்பக்கதிர்வீச்சு மூலம்
வெப்ப இழப்பை தடுக்க.
105. கலோரிமானியை மரப்பெட்டியில் வைக்கக் காரணம் - வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம்
மூலம் ஏற்படும் வெப்ப இழப்பை தவிர்க்க.
106. ஜூல் வெப்ப மாறிலி = W / H (W – வேலை, H – வெப்பம்)
107. ஜூல் வெப்ப மாறிலியின் மறுபெயர் - எந்திரவியல் வெப்ப இணைமாற்று
108. வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைதல் : திட, திரவ , வாயு
109. வெப்பவிரிவு 3 வகைப்படும்:
1. நீள் விரிவு 2. பரப்பு விரிவு 3. பரும விரிவு
நீள் விரிவு:
110. 𝛼 = 𝐿2−𝐿1/ 𝐿1 𝑋 Δ𝑡
111. 𝛼 = நீள உயர்வு
/ தொடக்க நீளம் x வெப்பநிலை உயர்வு
112. பைராக்ஸ் கண்ணாடி நீள்விரிவு எண் 3 x 10-6 K-1
113. இரும்பின் நீள்விரிவு எண் 12 X 10-6 K-1
114. தாமிரத்தின் நீள்விரிவு எண் 17 X 10-6 K-1
115. அலுமினியத்தின் நீள்விரிவு எண். 26 X 10-6 K-1
116. வெப்ப நீள்விரிவு அதிகமுள்ள உலோகம் - அலுமினியம்
117. வெப்ப நீள்விரிவு குறைவான உலோகம் - பைரக்ஸ் கண்ணாடி
பரும விரிவு:
118. 𝛾 = 𝑉2−𝑉1 / 𝑉1 𝑋 Δ𝑡
119. 𝛾 = பரும உயர்வு
/ தொடக்க பருமன் X வெப்பநிலை உயர்வு
120. ஒரு திடப்பொருளின் பருமன் -- அதன் நீள் விரிவெண்ணின் மும்மடங்கு ஆகும்.
121. நிலைமாற்றத்தின் போது வெப்பநிலை அதிகரிப்பதில்லை (காரணம் – உள்ளுறை
வெப்பம்) பனிக்கட்டி (0°C), நீர் (0°C)
122. மழை காலங்களில் ஈரத்துணிகள் உலர நீண்ட நேரமாகக் காரணம் --- காற்றில்
ஏற்கனவே உள்ள ஆவியானது, ஆவியாதல் நிகழ்ச்சியை தாமதப்படுத்துவதால்.
123. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் நெற்றியில் நீரில் தேய்க்கப்பட்ட துpண வைக்கக்
காரணம் --- நோயாளியின் உடலில் உள்ள வெப்பத்தை நீர் எடுத்துக்கொண்டு
ஆவியாவதால் உடல் வெப்பத்தை குறைப்பதற்காக.
124. கோடை காலங்களில் நாய்கள் நாக்கை தொங்கவிடக் காரணம் --- நாக்கில் உள்ள நீர்
ஆவியாகி குளிர்ச்சியை ஏற்படுத்துவதால்.
125. கோடை காலங்களில் மண்பானைகளிலுள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் - மண்பானையிலுள்ள நுண்துளைகள் மூலமாக நீர் ஆவியாதல் மூலம் வெளியேறுவதால்,
பானையிலுள்ள நீர் குளிர்சி அடைகிறது.
126. நீர், பனிக்கட்டியாக மாறும் போது அதன் பருமன் அதிகரிக்கிறது. ஆனால் அடர்த்தி
குறைகிறது.
127. மெழுகு திரவநிலையிலிருந்து திடநிலைக்கு செல்லும்போது பருமன் குறையும், அடர்த்தி
அதிகரிக்கும்.
128. குளிர்சாதன பெட்டியில் பயன்படும் திரவம் - பிரியான்.
129. ஓர் அறையிலுள்ள குளிர்சாதன பெட்டியை திறந்து வைக்கும்போது --- அறையின்
வெப்பம் சற்று அதிகரிக்கும்.
130. ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தின் அலகு – JKg-1
131. உள்ளுறை வெப்பத்தின் அலகு – JKg-1
132. பனிக்கட்டி உருகுதலன் உள்ளுறை வெப்பம் = 3.34 ஓ 105 JKg-1
133. வெப்ப ஆற்றலுக்கும் (Q) உள்ளுறை வெப்பத்திற்கும் (L) இடையேயான சமன்பாடு Q – mL. m = பொருளின் நிறை.
134. நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் = 2.26 x 106 JKg-1
135. நீராவியானது கொதி நீரை விட அதிகம் காயம் ஏற்படுத்தக் காரணம் – நீராவியின்
உள்ளுறை வெப்பத்தினால்.
136. அழுத்தத்தினால் பொருளின் உருகுநிலை குறைகிறது. வெப்பத்தினால் பொருளின்
உருகுநிலை அதிகரிக்கிறது.
137. இரு பனிக்கட்டி துண்டுகள் ஒன்றுடன் என்று அழுத்தினால் துண்டுகள் இணைந்து விடக்
காரணம் -- அழுத்தத்தினால் பொருளின் உருகுநிலை குறைவதால்.
138. பொருள் மாசுபடுவதால் அதன் கொதிநிலை உயர்கிறது. அதன் உருகுநிலை குறைகிறது.
139. அழுத்தம் அதிகரிக்கும்போது திரவத்தின் கொதிநிலை அதிகரிக்கும் என்ற தத்துவத்தின்
அடிப்படையில் சமையல் கலன்கள் செய்யப்படுகிறது.
140. அழுத்த சமையற்கலனில் உள்ள நீரின் கொதிநிலை – 120°C
141. அழுத்த சமையற்கலனில் உள்ள நீரின் அழுத்தம் -- 2 வளி அழுத்தம்.
142. மலை பிரதேசங்களில் சமைப்பதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ள காரணம் - வளிமண்டல அழுத்தம் குறைவாக உள்ளதால் நீர் குறைந்த வெப்பநிலையில்
கொதிப்பதால்.
143. ஈரப்பதத்தின் அலகு – கி.கி. மீ3
144. ஓப்புமை ஈரப்பதத்திற்கு அலகு கிடையாது.
145. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும்.
146. காற்றில் உள்ள ஈரப்பதம் 100 சதவீதம் இருக்கும்போது புவியிலுள்ள நீர் ஆவியாக
முடியாது. இதன் காரணமாக குளிர் காலத்தில் ஈரத்துணிகள் எளிதில் உலர்வதில்லை.
147. கடற்கரை ஓரங்களில் ஒப்புமை ஈரப்பதம் 100 %
148. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதம் 100 %
149. தனிச்சுழி வெப்பநிலை 0°K அல்லது (-273°C)
150. ஒரு பொருளை குளிர்விக்கக்கூடிய குறைந்த வெப்பநிலை (-273°C)
151. தனிச்சுழி வெப்பநிலையில் அனைத்து பொருட்களும் வெப்ப ஆற்றலை வெளியிடுகின்றன.
152. நீரின் உறைநிலை 0°K அல்லது 273K
153. வாயுக்களின் இயக்கவியல் கொள்கையை வெளியிட்டவர்கள் - கிளாசியஸ், போல்ட்மேன், மேக்ஸ்வெல்.
154. வாயுக்களின் இயக்கவியல் கொள்கை - வாயுக்களின் அழுத்தம், ஆற்றலை
விளக்குகிறது.
155. ஒரு வாயுவின் மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றல் -- அந்த வாயுவின் வெப்ப நிலைக்கு
நேர் தகவில் இருக்கும்.
156. நல்லியல்பு வாயுக்களில் தனிச்சுழி வெப்பநிலையில் மூலக்கூறுகள் இயங்காமல்
நின்றுவிடும்.
பாயில் விதி:
157. மாறாத வெப்பநிலையில் P = I / V [P- அழுத்தம், V- பருமன்]
158. பாயில் விதியை விளக்கும் முறை – குயில்ஸ் நுண்குழாய் சோதனை முறை.
சார்லஸ் விதி:
159. முதல் விதி: மாறாத அழுத்தத்தில் 𝑉 𝛼 𝑇 (அ) V / T= மாறிலி
160. இரண்டாம் விதி: மாறாத பருமனில் 𝑃 𝛼 𝑇 (அ) P / T = மாறிலி
161. வாயுச் சமன்பாடு : PV = RT (R - வாயு மாறிலி)
162. உலகின் தொழில் புரட்சிக்கு வித்திட்டது – வெப்ப எஞ்சின்கள்
163. தாகம் தீராப் பறவை அமைப்பு – ஒரு வெப்ப எஞ்சினுக்கு உதாரணமாகும்
164. நீராவி எஞ்ஜினை கண்டறிந்தவர் - தாமஸ் நியூ கோமன் - 1705
165. நீராவி எஞ்ஜினை திருத்தி வடிவமைத்தவர் - ஜேம்ஸ்வாட் 1769
166. நீராவி எஞ்ஜினில் எரிபொருள் எஞ்சினுக்கு வெளியேயும், உள்ளெரி எஞ்ஜினில்
உள்ளேயும் எரிக்கப்படுகிறது.
167. உள்ளெரி எஞ்ஜினின் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஊர்திகள் -- கார், மோட்டார் சைக்கிள், லாரி,
பெட்ரோல் எஞ்ஜின், டீசல் எஞ்ஜின் ஆகியவை உள்ளெரி எஞ்ஜினுக்கு
எடுத்துக்காட்டாகும்.
168. உள்ளீடு வீச்சு, அமுக்க வீச்சு, திறன் வீச்சு. வெளியேறு வீச்சு ஆகிய நான்கு நிலைகளில் பெட்ரோல் எஞ்ஜின் செயல்படுகிறது.
169. பெட்ரோல் எஞ்ஜினின் அமுக்க வீச்சில் எரிபொருள் கலவை 1:8 பங்காக குறைக்கப்படுகிறது.
170. பெட்ரோல் எஞ்ஜினின் 3 பங்கு காற்றும், ஒரு பங்கு பெட்ரோலும், எரிக்கப்படும் இடம் - கார்புரேட்டர்
171. டீசல் எஞ்ஜினும் 4 வீச்சுகளில் செயல்படுகிறது. ஆனால் கார்புரேட்டர் மற்றும் மின்பொறி
கிடையாது.
172. டீசல் எஞ்ஜினில் அமுக்க வீச்சில் எரிபொருளின் பருமன் 1:16 மடங்காக
குறைக்கப்படுகிறது.