இயற்பியல் - 1
அளவீட்டியல்
1. அளவீட்டில் FPS முறையில் பயன்படுவது - அடி, பவுண்டு, வினாடி
2. அளவீட்டில் CGS முறையில் பயன்படுவது - செ. மீ., கிராம், வினாடி
3. அளவீட்டில் MKS முறையில் பயன்படுவது - மீட்டர், கி.கி, வினாடி
4. உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை – பன்னாட்டு
அலகு முறை (S. I Unit / System International)
5. பன்னாட்டு அலகு முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு – 1971
6. பன்னாட்டு அலகு முறையில் காணப்படும் அடிப்படை அலகுகள், துணை அலகுகளின்
எண்ணிக்கை – 7 மற்றும் 2
7. அடிப்படை அலகுகள் -- மீ, கி.கி, வினாடி, ஆம்பியர், கெல்வின், மோல், கேண்டிலா. துணை அலகுகள் -- ரேடியன், ஸ்டிரேயன்
8. விசையின் அலகு – நியூட்டன்
9. வேலையின் அலகு – ஜூல்
10. ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவு அதன் நிறை எனப்படும்.
11. அப்பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு வினை அதன் எடை எனப்படும்
12. எடை மற்றும் நிறையின் அலகு – கி.கி
13. ஈராக் நாட்டில் வாழ்ந்த சுமேரியர்கள் பயன்படுத்திய நிழற்கடிகாரம்தான் முதன் முதலில்
பயன்படுத்தப்பட்ட நிழற்கடிகாரம் ஆகும்.
14. ஊசல் கடிகாரத்தை கண்டுபிடித்தவர் - கலிலியோ
15. நேரத்தை துல்லியமாக கண்டறிய உதவுவது – அணு கடிகாரம், இதில் சீசியம் – 133 அணுவில் நிகழும் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளியின் அடிப்படையில் வினாடி
வரையறுக்கப்படும்
16. ஒரு பொருளின் துல்லியமான நிறையைக் காண உதவுவது -- இயற்பியல் தராசு
17. இயற்பியல் தராசில் ஒரு பொருளின் நிறையை 1 மில்லிகிராம் அளவிற்கு துல்லியமாக
காணலாம்.
18. இயற்பியல் தராசில் காணப்படும் குறைந்த பட்ச எடைக்கல் 10 மி.கி. கொண்டது. அதிக
பட்ச எடைக்கல் 500 மி.கி. கொண்டது.
19. வெர்னியர் அளவியின் மீச்சுற்றளவு 0.01 செ. மீ. அல்லது 0.1 மி.மீ
20. திருகளவியின் மீச்சுற்றளவு = 0.01 மி. மீ
21. ஒழுங்கற்ற பொருள்களின் கனஅளவு காண பயன்படும் கருவிகள் - அளவீட்டு முகவை,
மேல்வழியும் ஜாடி
22. அடர்த்தி = நிறை / கன அளவு D = m/v.
23. அடர்த்தியின் அலகு கி.கி / மீட்டர்3
24. ஒழுங்கற்ற பொருள்களின் அடர்த்தியைக் காண உதவும் முறை - இடப்பெயர்ச்சி முறை
25. எண். பொருள் அடர்த்தி (கி.கி / மீட்டர்3)
a. 1 நீர் 1000 (4°Vல்)
b. 2 கடல் நீர் 1026
c. 3 பாதரசம் 13600
d. 4 இரும்பு 7900
e. 5 அலுமினியம் 2700
f. 6 காரீயம் 11300
26. ஊசல் கடிகாரங்களின் அலைவு நேரம் மாறாது (2 வினாடி)
27. குவார்ட்ஸ் கடிகாரங்களில், குவார்ட்ஸ் படிக வளையங்களின் அதிர்வுகள் காலத்தை
அளக்க பயன்படுகிறது.
28. வெப்பநிலையின் அலகு – கெல்வின் (K)
29. பனிக்கட்டி, நீர், நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலை 1/273.15 பகுதியாகும்.
30. பொருள் அளவின் அலகு – மோல்
31. ஒளிச்செறிவின் அலகு – கேண்டிலா
32. தளக்கோணத்தின் அலகு – ரேடியன்
33. திண்மக் கோணத்தின் அலகு - ஸ்ரேடியன்
பொருளின் தன்மை, அமைப்பு, நிலைமாற்றம்
34. ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் நீரில் கரைவதில்லை.
35. ஒரு திண்மப் பொருளை சூடேற்றும்போது திரவ நிலைக்கு செல்லாமல் நேரடியாக
வாயுநிலைக்கு செல்லுதல் “பதங்கமாதல்” எனப்படும். எ-டு. அயோடின், நாப்தலீன், பென்சோயிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு
36. கவர்ச்சிவிசை – திண்மம் , திவரம் , வாயு.
37. இரும்பை தங்கமாக மாற்றும் கலை – அல்கெமி (ரசவாதம்) எனப்படும்.
38. எலும்பில் கால்சியமானது கால்சியம் பாஸ்பேட்டாக உள்ளது.
39. பசுமையான இலைகளில் காணப்படும் உலோகம் - மெக்னீசியம் (பச்சையம் தயாரித்தலில்
பங்கு பெறும் உலோகம் ஆகும்).
40. ஹைட்ரஜன் என்பது ஒரு எரியும் வாயு, ஆக்ஸிஜன் என்பது எரிவதற்கு துணை புரியும்
வாயு.
41. கலவைக்கு எ.கா – பால், புகை மற்றும் கடல்நீர், காற்று.
42. NPK உரக்கலவையில் உள்ளவை – அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு.
43. பாறை உப்பு என்பது சாதாரண உப்பும் மணலும் சேர்ந்த கலவையாகும்.
44. சமையல் வாயுவில் காணப்படுவது – பியூட்டேன் மற்றும் பென்டேன்.
45. நொதித்தல் ஒரு வேதிவினை நிகழ்ச்சியாகும்.
46. கார்பன்-டை-ஆக்சைடு வாயு தெளிந்த சுண்ணாம்பு நீரை பால்போல் மாற்றும்.
47. பொருளை தூய்மைப்படுத்தும் முறை – காய்ச்சி வடித்தல், பின்ன காய்ச்சி வடித்தல், பதங்கமாதல், வடிகட்டுதல்.
48. எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்மங்களை தூய்மைப்படுத்தும் முறை
--- காய்ச்சி வடித்தல்
49. தூய நீரை பெறுவதற்கு கையாளும் முறை --- காய்ச்சி வடித்தல்
50. வெவ்வேறு கொதிநிலைகளை உடைய நீர்மங்கள் கலந்துள்ள கலவையை
பிரித்தெடுக்கும் முறை --- பின்னக் காய்ச்சி வடித்தல்.
51. பின்ன காய்ச்சி வடித்தலுக்கு (எ.கா) ஆல்கஹால், நீர் கலந்த கலவை
52. பொருள் - உருகுநிலை
a. பாரபின் மெழுகு 54°C
b. நாப்தலின் 80°C
c. சாதாரண உப்பு 801°C
d. எத்தில் ஆல்கஹால் 78°C
e. மெர்க்குரி 357°C
f. யூரியா 135°C
53. மாசு கலந்த பொருளின் கொதிநிலை தூய பொருளின் கொதிநிலையை விட அதிகம்.
54. அமிலம் + காரம் = உப்பு, நீர் (நடுநிலையாக்கல் வினை).
55. ஒரு பொருளுடன் ஆக்சிஜனை சேர்க்கும் வினை (அ) ஹைட்ரஜன் நீக்கும் வினை – ஆக்சிஜனேற்ற வினை
56. ஒரு பொருளுடன் ஹைட்ரஜனை சேர்க்கும் வினை (அ) ஆக்சிஜனை நீக்கும் வினை – ஹைட்ரஜனேற்ற வினை
57. ஆக்சிஜனேற்ற வினைக்கு உதாரணம் -- இரும்பு துருப்பிடித்தல், சல்பர் காற்றில் எரிதல்.
பருப்பொருளின் தன்மைகள்
58. எடை = நிறை X புவியீர்ப்பு முடுக்கம் (W = mg)
59. காற்றுதட தடையின் எதிர்ப்பு விசையும், கீழே விழும் பொருளின் எடையும், சமமாக
இருக்கும்போது பொருள் சீரான வேகத்துடன் விழத் தொடங்கும் நிலை – முற்றுத்
திசைவேகம் எனப்படும்.
60. பாராசூட் திறக்காத நிலையில் வானத்திலிருந்து குதிக்கும் ஒருவரின் முற்றுத்திசை வேகம்
மணிக்கு 200 கி. மீ.
61. பொருள் மேல்நோக்கி எறியப்பட்டால் அப்பொருள் பெரும உயரத்தை அடையும்போது
அதன் திசைவேகம் -- சுழியாகும்.
62. பொருளின் இயக்கச் சமன்பாடுகள்:
63. V = u + at V – நேரம்
64. S = ut + ½ at2 u – தொடக்க திசைவேகம்
65. V2 = u2 + 2as t – நேரம்
66. ஒரு பொருள் மேல்நோக்கி எறியும் போது அடையும் பெரும உயரம் (h) = u2/2g
67. மேல் நோக்கி எறியப்படும் ஒரு பொருள் அடையும் பெரும் உயரம் அதன் தொடக்க
திசைவேகத்தின் இருமடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.
68. பறக்கும் காலத்திற்கான சமன்பாடு (tf) = 2u / g
69. எறிபொருளின் பாதை – பரவளையம் ஆகும்
70. ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஊர்தியிலிருந்து வெளியே எறியப்படும் ஒரு பொருள்
பரவளையப் பாதையை மேற்கொள்ளும்.
71. வட்ட இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் நேர்கோட்டுத்
திசைவேகத்திற்கும், கோணத்
திசைவேகத்திற்கும் இடையேயுள்ள தொடர்புக்கான சமன்பாடு V = r𝜔.
72. கோளுக்கும் புவிக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசை – மையநோக்கு விசை.
73. வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ள காரணம் - மையநோக்கு விசை
74. மோட்டார் சைக்கிள் வட்டப்பாதையில் இயங்கத் தேவையான மையநோக்கு விசையானது, அவ்வாகனத்தின் திசைவேகத்தையும், வளைவு பாதை ஆரத்தையும் பொறுத்தது.
75. புவிதட்டையாக இருக்கக் காரணம் -- துருவப் பகுதியில் மைய விலக்கு விசை
குறைவாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் மையவிலக்கு விசை அதிகமாகவும்
இருப்பதால்.
76. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டத்திற்கும், துருவப் பகுதியில் புவியின்
விட்டத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு – 48 கி.மீ
77. துணி துவைக்கும் எந்திரத்தின் சுழலும் கலன் செயல்படும் விதம் -- மைய விலக்கு
விசைக்கு உதாரணம் ஆகும்.
78. மைய விலக்கு விசையின் அடிப்படையில் செயல்படும் கருவி – வாட்கவர்னர்.
79. பாலிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதும், பிளாஸ்மாவிலிருந்து இரத்த செல்கள்
பிரித்தெடுக்கப்படுவதும், தேனடையிலிருந்து தேன் பிரித்தெடுக்கப்படுவதும் மைய விலக்கு
விசைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
80. வளைவு பாதையில் மிகுந்த வேகத்தில் வாகனங்கள் செல்லும்போது கவிழக்காரணம் - பாதைக்கும், டயருக்கும் இடையேயுள்ள உராய்வு விசையை விட வாகனங்களின் மீது
மையவிலக்கு விசை அதிகமாக செயல்படுவதே ஆகும். இதனைத் தவிர்ப்பதற்காக
வளைவான பாதைகள் சற்று உயர்த்தப்படுகிறது.
81. சர்க்கஸ் மரணக்கூண்டு ஓட்டுநர் தலைகீழாக அந்த கூண்டிற்குள் சுழன்றாலும் கீழே
விழாமல் இருக்கக் காரணம் - ஓட்டுநர் மீது செயல்படும் மையவிலக்கு விசை.
82. புவி மையக் கொள்கையை வெளியிட்டவர் - தாலமி
83. சூரிய மையக்கொள்கையை வெளியிட்டவர் - கோபர்நிகஸ்
84. தற்கால வானியலுக்கு அடிகோலியவர் - கெப்ளர்
கெப்ளரின் விதிகள்:
85. முதல் விதி (சுற்றுப்பாதை விதி): கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி
வருகின்றன.
86. இரண்டாம் விதி (பரப்பு விதி): ஒரு கோள் அதன் நீள்வட்டப் பாதையில் இயங்கும்போது
சூரியனுக்கும் அக்கோளுக்கும் இடையே வரையப்படும் கோடு சமகால அளவுகளில் சம பரப்பைக் கடக்கும்.
87. மூன்றாம் விதி (சுற்றுக் கால விதி): கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள்
சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவுகளின் மும்மடிகளுக்கு நேர் விகிதத்தில்
அமைந்திருக்கும்.
88. 𝑇2/ 𝑅3 = ஒரு மாறிலி
89. நியூட்டனின் பொது ஈர்ப்பு விதிக்கான சமன்பாடு F =𝐺𝑚 1𝑚2
/ 𝑟2
90. G என்பது பொது ஈர்ப்பு மாறிலி G = 6.67 x 10-11 Nm2 /
Kg2
91. பரப்பு இழுவிசையின் அலகு – நியூட்டன் / மீட்டர்
92. மூலக்கூறு எல்லையின் வீச்சு 108 செ.மீ.
93. பரப்பு இழுவிசையை விளக்கியவர் - லாப்ஸ்
94. நீரில் ஆணி மிதக்கவும், நீருக்குள் அமிழ்த்தப்பட்ட தூரிகையின் முனையிலுள்ள
இழைகள் விரிந்து காணப்படுவதன் காரணம் -- பரப்பு இழுவிசையே.
95. பரப்பு இழுவிசை எப்போதும் திரவப் பரப்பை சிறும அளவில் குறைத்துக் கொள்ளவே
முயலுகிறது.
96. நுண்புழை ஏற்றத்திற்கான சமன்பாடு h = 2𝑇 cos 𝜃/
𝑟𝑝𝑔
97. தூய நீருக்கும், தூய கண்ணாடிக்கும் இடையேயுள்ள தொடுகோணம் - 00
98. நுண்புழையேற்றத்திற்கு எ.கா. – 1. தூவரங்கள் நீரை உறிஞ்சுதல் 2. திரியின் வழியே,
எண்ணெய் மேலேறுதல் 3. மை உறிஞ்சும் தாள் மையை உறிஞ்சுதல்.
99. மணலை விட களிமண் ஈரமான நிலையில் இருக்கக் காரணம் -- களிமண்ணில் உள்ள
நெருக்கமான துகள்கள் மிக நுண்ணிய குழாய்களாக செயல்பட்டு நுண்புழையேற்றத்தின்
காரணமாக நீர் களிமண்ணின் மேற்பரப்பிற்கு வருவதால் ஈரமாக இருக்கிறது.
100. கழிவு நீர்ப்பரப்பின் மீது சிறிது எண்ணெயை ஊற்றினால் கொசுக்கள் மூழ்க காரணம் -- எண்ணெய் நீரின் பரப்பு இழுவிசையை குறைப்பதால்.
101. கடல் கொந்தளிக்கும் போது மாலுமிகள் கப்பலைச் சுற்றி எண்ணெயை கடலில்
கொட்டுவதற்கு காரணம் -- எண்ணெயானது கடல் நீரின் பரப்பு இழுவிசையை குறைத்து
அலைகளின் வேகத்தைத் தணிப்பதற்காக.
102. எழுதும் பேனாவின் முனைப் பகுதி மிகக் குறைந்த இடைவெளி கொண்டு பிளந்த
அமைப்பாக உருவாக்கப்படுவதன் காரணம் -- பிளந்த அமைப்பு நுண்புழை குழாயாக
செயல்பட்டு பேனாவின் முனைக்கு மை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக.
103. மழைத்துளி கோள வடிவம் பெறக் காரணம் - பரப்பு இழுவிசை
104. மழைத்துளி மெதுவாக விழக் காரணம் - காற்று ஏற்படுத்தும் பாகுநிலை விசையினால்
105. பாகியல் எண்ணின் அலகு – நியூட்டன், வினாடி, மீ2
106. பாய்பொருள் and 𝜼(பாய்ஸ்)
a. கிளிசரின் - 13.4 𝜼(பாய்ஸ்)
b. நீர் - 0.018 𝜼(பாய்ஸ்)
c. பாதரசம் - 0.0015 𝜼(பாய்ஸ்)
d. தேன் 0.20 - 𝜼(பாய்ஸ்)
e. இரத்தம் 0.0027- 𝜼(பாய்ஸ்)
f. காற்று 0.019 x 10-3 𝜼(பாய்ஸ்)
107. கார், கப்பல், ஆகியவற்றின் முகப்புகள் கூர்மையாக வடிவமைக்கப்பட காரணம் -அவைகளின் இயக்கத்தை காற்று அல்லது நீரின் பாகுநிலை விசை தடை செய்யாமல்
இருப்பதற்காக.
108. கனமான, அதிவேகமாக இயங்கும் எந்திரங்களில் அதிக பாகுநிலையும், அதிக
அடர்த்தியும் கொண்ட உயவுப்பொருள் (கீரீஸ்) பயன்படுத்துவன் காரணம் – எந்திரங்களில்
உராய்வு மூலம் ஏற்படும் உயர்ந்த வெப்பநிலையிலும் கூட உயவுப் பொருளின்
பாகுநிலை எண் மாறாமல் இருப்பதால்.
109. வரிச்சீர் ஓட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயற்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி – பெர்னௌலியின் தத்துவம்.
110. பெர்னௌலி தேற்றம் (அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல + நிலை ஆற்றல் = மாறிலி
111. P/p + 1/2v2 + gh = மாறிலி
112. பெர்னௌலியின் தத்துவத்தில் செயல்படும் பொருட்கள் -- வெஞ்சுரி மீட்டர், பிட்டட்
குழாய், இருசக்கர வாகன கார்போரேட்டர், எண்ணெய் தூவி, வடிகட்டும் பம்பு, விமானத்தின் கூர்மையான இறகு.
113. நியூட்டனின் இரண்டாம் விதி: உந்தம் மாறுபட்டு வீதம் விசைக்கு நேர்தகவில்
அமைவதோடு விசையின் திசையிலேயே அமையும். F = ma. (m = நிறை = முடுக்கம்)
114. ஒரு கிலோகிராம் எடை = 9.8 நியூட்டன்
115. ஒரு பொருளின் நிலைமத்தின் அளவே அதன் நிறையாகும்
116. எடை(w) = mg (m = epiw: g = KLf;fk;)
117. புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு = 9.8 மீட்டர் : வினாடி
118. பொருளின் எடையை அளக்க பயன்படுவது – சுரள்வில் தராசு
119. பொருளின் நிறையை அளக்க பயன்படுவது – தராசுக் கோல்
120. நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்
திசையில் உள்ள ஒரு எதிர் வினை உண்டு (எ.கா) துப்பாக்கியிலிருந்து வெளிபடும்
குண்டு, நீரில் நீந்துபவர், காற்று நிரப்பிய பலூனை விடுவித்தல், நீரில் மிதக்கும்
படகிலிருந்து குதிக்கும் மனிதன், ராக்கெட்டின் இயக்கம்.
121. வினையும், எதிர் வினையும் வெவ்வேறு பொருள் மீது செயல்படுவதால் அவை ஒன்றையொன்று சமன் செய்வதில்லை.
தனிஊசல்:
122. கண்டறிந்தவர் கலிலியோ
123. தனிஊசலில் இயக்கம் -- அதிர்வுறு அல்லது சீரிசை இயக்கம் அல்லது அலை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
124. தனிஊசலின் அலைவு நேரத்திற்கான வாய்ப்பாடு T = 2𝜋 1/𝑔
125. மையப்புள்ளியிலிருந்து தனிஊசலின் ஊசல் குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி
வீச்சு எனப்படும்.
126. தனி ஊசலின் அலைவு நேரம் பின்வருவனவற்றை பொறுத்ததல்ல. அவை: 1. ஊசல்
குண்டு செய்யப்பட்ட பொருள் 2. குண்டின் நிறை 3. குண்டின் உருவம் 4. ஊசலின் வீச்சு
127. அலைவு நேரம் தனிஊசலின் நீளத்தின் இருமடி மூலத்திற்கு நேர்தகவில் உள்ளது.
128. (𝑇 𝛼 1)
129. அலைவு நேரம் புவியீர்ப்பு முடுக்கத்தின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் உள்ளது.
130. (𝑇 𝛼 1/𝑔)
வினாடி ஊசல்:
131. வினாடி ஊசலின் நீளம் -- 0.995 மீட்டர் (ஏறத்தாழ ஒரு மீட்டர்)
132. வினாடி ஊசலின் அலைவு நேரம் 2 வினாடி
133. சமமாகவும், எதிர்திசையிலும் இரு இணைவிசைகள் வெவ்வேறு புள்ளியில்செயல்படும்போது ஒரு இரட்டை உருவாகிறது.
134. இரட்டையின் தொகுபயன் -- பூஜ்ஜியம்
135. இரட்டையின் சுழற்சி விளைவு -- இரட்டையின் திருப்புத்திறன் எனப்படும்
136. திருப்புத்திறனின் அலகு – நியூட்டன் மீட்டர்
137. இரட்டையின் செயல்பாட்டிற்கு உதாரணம் -- 1. குழாயின் அடைப்பானை திறத்தல் 2. பேனா, பாட்டில் மூடியை திறத்தல் 3. திருகாணியை திருகுதல் 4. காரில் திசைமாற்று
வளையத்தை திருப்புதல் 5. கடிகாரத்தின் சாவியை சுழற்றுதல்.
138. பொருள் ஒன்றின் மீது விசை செயல்படும் போது அதன் அச்சை பற்றிக் கொண்டு சுழலக்
கூடிய கூழல் விளைவு – விசையின் திருப்புத்திறன் ஆகும்.
139. திருப்புத்திறன் = F X d (F = விசை, d = பொருள்களின் தொலைவு)
140. திருப்புத்திறனின் தத்துவப்படி இடஞ்சுழி, வலஞ்சுழி திருப்புத்திறன்களின் கூட்டுத்தொகை
ஒன்றுக்கொன்று சமம்.
141. “அ” மற்றும் “ஆ” என்ற இரு பொருள்களின் நிறை முறையே 6 கி.கி, 34 கி.கி எனில்,
“அ” – வை விட “ஆ” என்ற பொருளின் நிலைமம் அதிகம் (பொருளின் நிறை
அதிகரிக்கும் போது நிலைமம் அதிகரிக்கும்).
142. பொருளின் நிலைம பண்பு – பொருளின் நிறையை பொறுத்தது.
வேலை, ஆற்றல் மற்றும் ஆற்றல் ஆதாரம்:
143. ஒரு பொருளின் மீது விசை ஒன்று செயல்பட்டு அதனால் அப்பெருள் நகர்ந்தால் வேலை
செய்யப்பட்டது எனப் பொருள்.
144. வேலை செய்யப்படும் திறன் - ஆற்றல் எனப்படும்
145. வேலையின் அலகு – ஜூல்
146. ஓளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் வெப்ப ஆற்றலை வேதி
ஆற்றலாக சேமிக்கிறது.
147. டார்ச் விளக்கில் பல்பு ஒளி – மின்னாற்றல் மூலம் ஒளியாற்றலைக் கொடுக்கிறது.
148. எரியும் மெழுகுவர்த்தியில் -- வேதி ஆற்றல் ஒளியாற்றலாகவும், வெப்ப ஆற்றலாகவும்
மாற்றப்படுகிறது.
149. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். – ஆற்றல் அழிவின்மை விதி.
150. தமிழ்நாட்டின் நீர்மின்நிலையங்கள் - மேட்டூர், பாபநாசம், கீழ்பவானி, வைகை, பைகாரா
151. தமிழ்நாட்டின் அனல் மின்நிலையங்கள் - நெய்வேலி, தூத்துக்குடி, எண்ணூர், மேட்டூர், வடசென்னை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் புதிய அனல் மின்
நிலையம் அமைக்கப்படவுள்ளது.
152. அணுமின் நிலையங்கள் - கல்பாக்கம், கூடங்குளம், தாராப்பூர் (மகாராஷ்டிரா), ராணாபிரதாப்சாகர் (ராஜஸ்தான்)
153. தமிழ்நாட்டின் காற்றாலை மின்நிலையங்கள் -- ஆரால்வாய்மொழி (கன்னியாகுமரி), கயத்தாறு (திருநெல்வேலி)
154. தமிழ்நாட்டில் நீர் ஏற்று சேமிப்பு மின் நிலையம் உள்ள இடம் – காடம்பாறை.
155. சூரியனிடமிருந்து வெளியிடப்படும் மொத்த ஆற்றல் 3.28 x 1026 ஜூல் / வினாடி
156. வெப்ப ஆற்றலின் முக்கிய ஆதாரம் – சூரியன்.
157. ஒளிமின்கலத்தில் சூரிய ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது.
158. துணைக்கோள்களுக்கு மின் உற்பத்தி செய்ய பயன்படும் சாதனம் – ஒளிமின்கலம்.
159. காற்று வீசுதல் என்பது – வெப்ப சலனத்திற்கு எடுத்துக்காட்டாகும்
160. காற்றாலை உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மாநிலங்கள் - குஜராத், தமிழ்நாடு.
161. குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - நீர்மின் திட்டம்
162. மிதிவண்டியில் உள்ள மின்னியற்றியில் மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில்
இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது.
163. ஒரு அணுவின் நிறையின் பெரும்பங்கு அணுக்கருவைச் சார்ந்ததாகும்.
164. ஒரு கிலோகிராம் யுரேனியத்தை பிளக்கும் போது வெளியிடப்படும் அணுக்கரு ஆற்றல்
2.26 x 107 கிலோவாட் மணி
165. ஒரு கிலோவாட் மணி என்பது – 3.6 x 106 ஜூல்
166. அணுகுண்டு வேலை செய்யும் தத்துவம் -- அணுக்கரு பிளவு
167. ஹைட்ரஜன் குண்டு வேலை செய்யும் தத்துவம் -- அணுக்கரு இணைவு
168. விண்மீன் மற்றும் சூரியனின் வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு காரணம் – அணுக்கரு
இணைவு.
169. பாபா அணுமின் நிலையத்தில் காணப்படும் அணுக்கரு உலைகள் - அப்சரா, சிரஸ், ஜெரிலினா, பூர்ணிமா, துருவா
நெம்புகோல்
170. நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
171. நெம்புகோலின் தத்துவம்: பளு x பளுபுயம் = திறன் x திறன்புயம்
172. நெம்புகோல் மூன்று வகைப்படும். அவை
173. முதல் வகை நெம்புகோல் எ.கா: இடுக்கி, கத்தரிக்கோல், ஏற்றம், சீசாபலகை, கடப்பாறை
174. இரண்டாம் வகை நெம்புகோல் எ.கா: ஒற்றைச் சக்கர வண்டி, பாக்குவெட்டி, திறப்பான், காகிதம் வெட்டும் கருவி
175. மூன்றாம் வகை நெம்புகோல் எ.கா: அப்பள இடுக்கி, மீன்தூண்டில், மண்வாரி, மனிதனின் முன்னங்கை
176. முதல் வகை நெம்புகோல்:
பளு, ஆதாரப்புள்ளி,
திறன்
177. இரண்டாம் வகை நெம்புகோல்:
ஆதாரப்புள்ளி, பளு,
திறன்
178. மூன்றாம் வகை நெம்புகோல்:
ஆதாரப்புள்ளி, திறன், பளு
எளிய இயந்திரங்கள்:
179. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் ஒரு விசையை அதன்
மதிப்பையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமே
மாற்றி வேறொறு புள்ளியில் கிடைக்க செய்யும் அமைப்பு எளிய இயந்திரம் எனப்படும்.
180. எளிய இயந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு:
கப்பி, கடப்பாரை, கத்தரிக்கோல், சாய்தளம், கோடரி, நெம்புகோல், சக்கரமும் அச்சும், திருகு
181. கூட்டு இயந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு:
மின்உயர்த்தி, மிதிவண்டி, (இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட எளிய இயந்திரங்கள் சேர்ந்து உருவாவது)
182. ஒரு எளிய இயந்திரத்தின் எந்திரலாபம் = பளு / திறன்
183. பயனுறுதிறன் பொதுவாக %ல் குறிக்கப்படுகிறது. பயனுறுதிறன் = எந்திரத்தால் செய்யப்படும் வேலை / எந்திரத்தின் மீது செய்யப்படும் வேலை
184. பயனுறு திறன் = எந்திரலாபம் / திசைவேகவிகிதம்
185. ஒற்றை நிலைக் கப்பியின் எந்திரலாப மதிப்பு 1
186. ஒற்றை இயங்கு கப்பியின் எந்திரலாப மதிப்பு 2
187. கப்பித் தொகுதியில் அதன் சட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்திரலாபம்
பெறப்படுகிறது. (சட்டங்களின் எண்ணிக்கை 6 எனில் அதன் எந்திரலாபம் 6)
188. படிக்கட்டு, மேம்பாலம், மலைப்பகுதி, ஆகியவை சாய்தள தத்துவத்தின் அடிப்படையில்
அமைக்கப்பட்டுள்ளன.
189. சாய்தளத்தின் எந்திரலாபம் = சாய்தள நீளம் / சாய்தள உயரம்
190. நமது பாதத்திற்கும், தரைக்கும் இடையே உராய்பு இருப்பதினால்
தான் விரைந்து நடக்க
முடிகிறது.
191. கப்பல், கார், ஆகியவற்றின் முன்பகுதியை கூர்மையாக வடிவமைக்க காரணம் - உராய்வைக் குறைக்க.
192. ஒரு பொருளின் ஈர்ப்பு மையமானது அதன் நிலைப்புத்தன்மையை தீர்மானிக்கிறது.
193. ஒரு பொருள் நிலைப்புத்தன்மையை பெற – பொருளின் அடிப்பாகம் அகன்று இருக்க
வேண்டும். ஈர்ப்பு மையம் முடிந்தளவு தாழ்ந்திருக்க வேண்டும். ஈர்ப்பு மையத்திலிருந்து
வரையப்படும் செங்குத்துக்கோடு அடிப்பரப்பின் வழியாக செல்ல வேண்டும்
194. நிலைப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டு: தஞ்சாவூர் பொம்மை, பைசா நகரத்து சாய்ய்த
கோபுரம், பந்தயக் கார்
195. தஞ்சாவூர் பொம்மையை அதிக கோணத்தில் சாய்ந்து விட்டாலும், மீண்டும் பழைய
நிலையை பெற காரணம் -- ஈர்ப்பு மையம் தாழ்ந்து இருப்பதாலும், ஈர்ப்பு
மையத்திலிருந்து வரையப்படும் செங்குத்துக்கோடு எப்போதும் இதன் அடிப்பரப்பில்
செல்வதாலும்.
196. பைசா நகரக் கோபுரம் சாய்வாக இருந்தபோதும் சாய்ந்து
விடாமலிருக்கக் காரணம் - அதன் ஈர்ப்பு மையத்திலிருந்து வரையப்படும் செங்குத்துக்கோடு எப்போதும் அதன்
அடிப்பரப்பிற்குள் செல்வதால்.
197. ஓட்டப் பந்தயக் கார்கள் அகன்ற விதமாகவும், தாழ்வாகவும் வடிவமைக்கப்பட காரணம்
- நிலைப்புத்தன்மையை அதிகரிக்க.
198. படகில் பயணிகள் நிற்க அனுமதிக்கப்படாததற்கும், இரட்டை பேருந்துகளில் மேல்தள
பயணிகள் நிற்க அனுமதிக்கப்படாததற்கும் காரணம் -- ஈர்ப்பு மையம் அதிகரித்து
நிலைப்புத்தன்மை குறைந்து, பேருந்து கவிழாமல் இருப்பதற்காக.