இயற்பியல் - 3
ஒளியியல்
1. ஓளியின் இயக்கம் - நேர்கோட்டு இயக்கம் ஆகும்.
2. காற்று (அ) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் = 3 x 108 மீ/வி (அ) 3,00,000 கி.மீ./வி
3. ஒளி நேர்க்கோட்டில் செல்வதை அறிய உதவும் சாதனம் --- ஊசித்துளை கேமரா
4. ஊசித்துறை கேமராவில் துளை அதிகமானால் தோன்றும் பிம்பம் -- மங்கலானது
5. சூரியனிடமிருந்து புவிக்கு ஒளி வந்தடையும் காலம் -- 500 நொடி
எதிரொலித்தலின் விதிகள்:
a. படுகதிர், மீள்கதிர் மற்றும் படுபுள்ளியின் வழியாக வரையப்படும் செங்குத்துக்
கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையம்
b. படுகோணமும், மீள்கோணமும்
சமம்
6. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் - நேரான மாயபிம்பமாகும்.
7. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தில் இடவலமாற்றம் காணப்படுகிறது
8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் தொலைவும்
சமமாக இருக்கும்
சமதள ஆடியின் பயன்கள்:
9. முகம் பார்க்கும் கண்ணாடியாகவும், கடைகளில் பொருட்கள் அலங்கரிக்கவும், பெரிஸ்கோப் மற்றும் கலைடாஸ்கோப் போன்ற கருவிகளிலும், அச்சகங்களில் அச்சு
கோர்க்கும் போது ஏற்படும் பிழைகளை சரிசெய்யவும் பயன்படுகிறது.
10. நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுவது – பெரிஸ்கோப்
11. பெரிஸ்கோப்பில் சமதள ஆடி பொருத்தப்பட்டுள்ள கோணம் 45°.
12. குவி, குழி லென்சுகளில் தோன்றும் பிம்பங்களுக்கான விதிகள்:
குவிலென்சு
13. முக்கிய அச்சுக்கு இணையாக
வரும் படுகதிர் விலகலுக்குப் பின்
லென்சின் மறுபக்கத்தில் முக்கிய
குவியம் வழியாக செல்லும்
14. முக்கிய குவியம் வழியாக
செல்லும் படுகதிர் விலகலுக்குப்
பின் முக்கிய அச்சுக்கு
இணையாக செல்லும்
15. ஓளி மையத்தின் வழியே செல்லும்
படுகதிர் விலகலின்றி அதே திசையில் நேர்கோட்டுப்
பாதைகளில் செல்லும்
குழிலென்சு
16. முக்கிய அச்சுக்கு இணையாக வரும்
படுகதிர் விலகலுக்குப் பின் லென்சின்
அதே பக்கத்தில் முக்கிய
குவியத்திலிருந்து விரிந்து செல்லும்
17. முக்கிய குவியத்தை நோக்கிச்
செல்லும் படுகதிர் விலகலுக்குப் பின்
18. முக்கிய அச்சுக்கு இணையாக
செல்லும்
19. ஓளி மையத்தின் வழியே செல்லும்
படுகதிர் விலகலின்றி அதே திசையில்
நேர்கோட்டுப் பாதைகளில் செல்லும்
20. குவி ஆடியின் பயன்கள்: வாகன ஓட்டுநருக்கு அருகே, பின்புறமுள்ள பரந்த காட்சிகளை
காணவும், பல்பொருள் அங்காடியில் வாங்குவோரை கண்காணிக்கவும், கடிகாரத்தின்
நுண்ணிய பாகங்களைக் காணவும், கை ரேகைகளை தெளிவாக காணவும், உருப்பெருக்கியாகவும், ஒளிப்பட வீழ்த்தியாகவும், புவியியல் தொலைநோக்கியில்
தோற்றுவிக்கப்படும் தலைகீழான பிம்பத்தை நேராக காணவும், பயன்படுகிறது.
21. தூரப்பார்வை குறைபாடுகளை சரிசெய்ய பயன்படும் லென்சு – குவிலென்சு
22. கிட்டப்பார்வை (மயோபியா) குறைபாடுகளை சரிசெய்ய பயன்படும் லென்சு – குழிலென்சு
23. குழி ஆடியின் பயன்கள்: முகச்சவரக்கண்ணாடியாகவும், மருத்துவத்துறையில்
உருப்பெருக்கி கண்ணாடியாகவும், வாகனங்கிளல் முகப்பு விளக்குகளிலும், டார்ச்சு
விளக்குகளிலும், கண் ஆய்வு கருவிகளிலும், சூரிய அடுப்புகளிலும், கலிலியோ
தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகவும் பயன்படுகின்றன.
24. கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர் அருகில் உள்ள பொருட்களை மட்டும் காணமுடியும்.
25. தூரப்பார்வை குறைபாடு உள்ளவர் தூரத்தில் உள்ள பொருட்களை மட்டும் காணமுடியும்.
26. கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு விழிக்கோளம் நீண்டும், தூரப்பார்வை
குறைபாடு உள்ளவர்களுக்கு விழிக்கோளம் சுருங்கியும் காணப்படும்
27. இருபுறக்குவிய கண்ணாடியை கண்டறிந்தவர் - பெஞ்சமின் பிராங்களின்
28. ஒரு அகன்ற ஒளி மூலம் மட்டுமே புற நிழலை ஏற்படுத்துகிறது.
29. ஒரு சமதள ஆடியில் படுகோணம் 30° இருப்பின், மீள்கோணத்தின் மதிப்பு 30° ஆகும்.(ஒளி விலகல் விதிப்படி, படுகோணமும் மீள்கோணமும் சமம்)
30. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன்
பாதையில் ஏற்படும் விளக்கம் - ஒளிவிலகல் எனப்படும்.
31. ஓளி விலகலுக்கான விதியை கண்டறிந்தவர் - ஸ்நெல்
32. ஓளி விலகல் விதி -- ஸ்நெல் விதி என்றும் அழைக்கப்படுகிறது
33. ஸ்நெல் விதி M =sin 𝑖 /sin 𝑟
34. ஓளி விலகலுக்கான விதிகள்: படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியின் செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
35. படுகோணத்தின் Sin மதிப்பிற்கும், விலகுகோணத்தின் Sin மதிப்பிற்கும் இடையேயுள்ள
வேறுபாடு ஒரு மாறிலி ஆகும்.
36. ஊடகத்தின் ஒளி விலகல் எண் = வெற்றிடம் (அ) காற்றில் ஒளியின் திசைவேகம் /ஊடகத்தின் ஒளியின் திசைவேகம்
37. நீரில் ஒளியின் திசைவேகம் - 2.25 x 108 மீ /வி
38. கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் - 1.96 x 108 மீ / வி.
39. வைரத்தில் ஒளியின் திசைவேகம் - 1.24 x 108 மீ / வி.
40. முப்பட்டகம் ஒன்றின் வழியாக வெள்ளொளியானது செல்லும்போது பல வண்ணங்களாக
பிரிக்கப்படும் நிகழ்ச்சி – நிறப்பிரிகை எனப்படும்.
41. நிறமாலையில் காணும் ஏழு நிறங்கள் - “VIBGYOR”
42. நிறப்பிரிகையின் போது முதலில் வெளியேறக்கூடிய நிறம் - சிவப்பு (அலை நீளம்
அதிகம், குறைந்த அளவு விலக்கமடைகிறது)
43. வானவில் தோன்றக் காரணம் -- நிறப்பிரிகை
44. வானம் நீல நிறமாகத் தோன்றக் காரணம் -- ஒளிச்சிதறல்
45. எளிய நுண்ணோக்கியில் காணப்படும் லென்சு – குவிலென்சு
46. கூட்டு நுண்ணோக்கியல் குறைந்த குவியதூரம் கொண்ட லென்சு பொருளருகு
லென்சாகவும், அதிக குவியதூரம் கொண்ட லென்சு கண்ணருகு லென்சாகவும்
பயன்படுகிறது.
47. தொலைநோக்கியில் அதிக குவியதூரம் கொண்ட லென்சு பொருளருகு லென்சாகவும், குறைந்த குவியதூரம் கொண்ட லென்சு கண்ணருகு லென்சாகவும் பயன்படுகிறது.
48. எளிய நுண்ணோக்கியில் ஒரே ஒரு குவிலென்சும், தொலைநோக்கி மற்றும் கூட்டு
நுண்ணோக்கியில் இரண்டு குவிலென்சுகளும் காணப்படுகின்றன.
49. பொருளின் குவியதூரம் காண உதவும் ஆடிச் சமன்பாடு: 1/𝐹= 1/𝑈 + 1/ 𝑉 𝑜𝑟 𝐹
= 𝑈𝑉/𝑈 + V
(F – குவியதூரம், U – லென்சுக்கும் பொருளுக்கும் இடையேயுள்ள தொலைவு, V – லென்சுக்கும் பிம்பத்திற்கும் இடையேயுள்ள தொலைவு)
50. குவிலென்சு (அ) குழிலென்சு ஆகியவற்றின் குவியதூரம் காண பயன்படும் முறை U-V முறை (அ) தொலைபொருள் முறை
51. லென்சின் உருப்பெருக்கம் = பிம்பத்தின் அளவு / பொருளின் அளவு (அ) (V/U)
52. ஒரு லென்சின் குவிய தொலைவின் தலைகீழ்மதிப்பு லென்சின் திறன் எனப்படும்.
53. லென்சின் திறன் (P) = 1/f
54. லென்சின் திறனின் அலகு – டயாப்டர் (D)
55. மாறுநிலைக் கோணத்திற்கும், ஒளிவிலகல் எண்ணுக்குமிடையே உள்ள தொடர்பு காண உதவும் சமன்பாடு 𝜇 = 1/ sin 𝐶
μ - ஒளிவிலகல் எண், C – மாறுநிலைக்கோணம்
56. அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்தை நோக்கி, செல்லும் ஒரு ஒளிக்கதிர் மாறுநிலைக் கோணத்தைவிட அதிக படுகோணத்தில் விழும் போது அதே ஊடகத்தில் முழுமையாக எதிரொலிக்கப்படும் நிகழ்ச்சி முழு அக எதிரொளிப்பு எனப்படும்.
முழு அக எதிரொளிப்பதற்கான நிபந்தனைகள்:
57. அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்தை நோக்கி செல்ல
வேண்டும்.
58. படுகோணத்தின் மதிப்பு, மாறுநிலைக்கோணத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
59. கண்ணாடி ஒளியிழையின் தத்துவம் - முழு அக எதிரொளிப்பை அடிப்படையாகக்
கொண்டது.
60. கண்ணாடி ஒளியிழையானது, எண்டோஸ்கோப் கருவிகளிலும், தொலை தொடர்பு
சாதனங்களிலும் பயன்படுகிறது.
61. விண்மீன்கள் மின்னக் காரணம் - விண்மீன்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களின் பாதை
ஒளிவிலகலால் மாறிக்கொண்டே இருப்பதால்.
62. பாலைவனங்களிலும், வெப்பமான சாலைகளிலும் காணப்படும் ஒளியியல் மாயத்தோற்றம் - கானல் நீர் எனப்படும்.
63. கானல்நீரின் தத்துவம் -- முழு அக எதிரொளிப்பு.
64. குளிர்காலங்களில் கடலின் மட்டத்தில் காணப்படும் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு மேல்
தோன்றுவது போல மாயத்தோற்றம் ஏற்படக் காரணம் -- முழு அக எதிரொளிப்பு.
65. முப்பட்டகம் ஒன்றில் படுகதிருக்கும், விடுகதிருக்கும் இடையேயுள்ள கோணம் - திசைமாற்றக் கோணம் எனப்படும்
66. கோளக ஆடியின் குவியதூரம் அதன் வளைவு ஆரத்தின் பாதி மடங்காகும் F=R/2
67. ஒரு குவிலென்சின் முன் பொருள் F- க்குள் வைக்கப்பட்டால், அளவில் பெரிய
மாயபிம்பத்தை உருவாக்கும் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு உளிய நுண்ணோக்கி
செயல்படுகிறது.
68. ஒரு எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்திறன் = [(25/f)+1]
69. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்திறன் M = [(25/fe) + 1] X (V/U)
70. வானவியல் தொலைநோக்கியில் உருப்பெருக்கத்திறன்
M = (f0 / fe) (1 + f3 / D) ; fe = கண்ணருகு லென்சின் குவியதூரம், f0 = பொருளருகு லென்சின் குவியதூரம்
71. வெண்மை நிறப்பொருட்கள் எல்லா நிறங்களையும் எதிரொலிக்கும்
72. கருமை நிறப்பொருட்கள் எல்லா நிறங்களையும் உட்கவரும்
73. சிவப்பு நிறத்தின் அலைநீளம் = 620 – 720 நானோ மீட்டர்
74. ஊதா நிறத்தின் அலைநீளம் = 400 – 440 நானோ மீட்டர்
75. முதன்மை நிறங்கள் எனப்படுவது – சிவப்பு, பச்சை, நீலம்
76. இரண்டு முதன்மை நிறங்கள் இணையும் போது கிடைப்பது -- இரண்டாம் நிலை நிறங்கள்
எனப்படும்.
77. முதன்மை நிறங்கள் மூன்றும் சேரும் போது தோன்றும் நிறம் - வெண்மை
78. மஞ்சள், மெஜன்டா, சியான் ஆகிய நிறங்கள் இரண்டாம் நிலை நிறங்கள் எனப்படும்.
79. சிவப்பு + மஞ்சை = மஞ்சள்
80. சிவப்பு + நீலம் = மெஜன்டா
81. நீலம் + பச்சை = சியான்
82. சிவப்பு + பச்சை + நீலம் = வெள்ளை
83. மஞ்சள்+ நீலம் = வெள்ளை
84. மெஜன்டா + பச்சை = வெள்ளை
85. சியான் + சிவப்பு = வெள்ளை
86. ஒரு சிவப்பு நிற ஆடை எல்லா நிறங்களையும் உட்கவர்ந்து சிவப்பு நிறத்தை மட்டும்
எதிரொளிப்பதால் அந்த ஆடை சிவப்பு நிறமாக தோன்றுகிறது. இந்த நிபந்தனைக்கு
அனைத்து நிறங்களும் உட்படும்.
87. சூரியன் உச்சியிலிருக்கும் போது விமானத்திலிருந்து பார்த்தால் வானவில்லின்
முழுவட்டத்தையும் காணலாம்.
88. முதன்மை வானவில்லில் சிவப்பு நிறம் வெளிப்பக்கத்திலும், ஊதா நிறம் உட்பக்கத்திலும்
காணப்படும்
89. முதன்மை வானவில்லில் ஊதாநிறம் 40.80 கோணத்திலும், சிவப்பு நிறம் 42.80 கோணத்திலும் காணப்படும்.
90. சூரியனின் ஏற்றக்கோணம் 420க்கு மேல் இருப்பின் தலையிலுள்ள ஒருவர் முதன்மை
வானவில்லைக் காணமுடியாது.
91. சூரியனிடமிருந்து வரும் ஒளி ஒரு முறை அக எதிரொளிப்புக்கும், இரு முறை ஒளி விலகலுக்கும் உட்படும்போது முதன்மை வானவில் தோன்றும்.
92. சூரியனிடமிருந்து வரும் ஒளி இரு முறை அக எதிரொளிப்புக்கும், இரு முறை ஒளி விலகலுக்கும் உட்படும் போது இரண்டாம் நிலை வானவில் தோன்றும்.
93. இரண்டாம்
நிலை வானவில்லில் ஊதா நிறம் வெளிப்பக்கமும், சிவப்பு நிறம் உட்பக்கமும் அமையும்
94. இரண்டாம் நிலை வானவில்லில் சிவப்பு நிறம் 50.80 கோணத்திலும் ஊதா நிறம் 54.420 கோணத்திலும் காணப்படும்.
95. சூரியனின் ஏற்றக்கோணம் 540 க்கு மேல் இருப்பின் தலையிலுள்ள ஒருவர் இரண்டாம்
நிலை வானவில்லைக் காணமுடியாது.
96. இரு வானவில்லுக்கு இடைப்பட்ட பகுதியின் நிறம் – கருமை.
புகைப்படக்கருவி (காமிரா)
97. காமிராவில் உருவாகும் பிம்பம் -- சிறிய, தலைகீழான மெய்பிம்பம்
98. காமிராவில் நிலையான பொருட்களுக்கான ஒளித்தடுப்பானின் வேகம் 1 / 60 வினாடி
99. காமிராவில் வேகமாகச் செல்லும் பொருட்களுக்கான ஒளித்தடுப்பானின் வேம் 1/: 500 வினாடி
100. காமிராவில் படச்சுருளின் மீது விழும் ஒளியின் செறிவு
I ∞ 1 / f (f எண்.)2
101. அதிவேகப்படச்சுருளுக்கு ஒளி விடுப்புக் காலம் குறைவதாகவும், குறை வேகப்படு
சுருளுக்கு ஒளி விடுப்புக் காலம் அதிகமாகவும் தேவைப்படுகிறது.
102. பார்வை நீட்டிப்பு நேரம் - 1 / 16 வினாடி
103. திரைப்பட வீழ்த்தி – பார்வை நீட்டிப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது
104. முப்பரிமாண திரைப்படத்தில் (3D) இரு படங்கள் திட்பக் காட்சிக் காமிரா மூலம் படம்
எடுக்கப்பட்டு, திரையில் ஒரே நேரத்தில் வீழ்த்தப்படுகிறது
105. வைரத்தின் மாறுநிலைக்கோணம் 24.40
106. எல்லா நிறத்தையும் உட்கவரும் ஒரு பொருளின் நிறம் - கருமையாகத் தோன்றும்.
ஒலியியல்
107. அதிர்வெண்ணின் அலகு – ஹெர்ட்ஸ்
108. அலைவு காலத்தின் அலகு – செகண்டு
109. வீச்சின் அலகு – மீட்டர்
110. அலைவு காலம் (வ) = 1 / n (n = அதிர்வெண்)
111. மனிதனின் செவி கேட்டு உணரக்கூடிய ஒலியின் அளவு 20 – 20,000 ஹெர்ட்ஸ். இவ்வெண்ணின் செவியுணர்வு அதிர்வெண் நெடுக்கம் எனப்படும்
112. அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான ஒலி – குற்றொலி
113. அதிர்வெண் 20000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமான ஒலி – மீயொலி
114. நிலநடுக்கத்தின் போது தோன்றும் புவியின் அதிர்வுகள் -- குற்றொலி
115. மீயொலியை கேட்கும் திறன் பெற்றுள்ளவை – வெளவால், நாய்
116. வெளவால்கள் எழுப்பக்கூடிய ஒலியின் அளவு – 70,000 ஹெர்டஸ்க்கு மேல்
117. ஆண்களின் குரல் நாண்கள் பெரியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண் குறைவாக
இருக்கும். பெண்களின் குரல்நாண்கள் சிறியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண்
அதிகமாக இருக்கும்.
118. குழந்தையின் அழுகுரல் ஏற்படுத்தும் ஒலியலையின் அதிர்வெண் 3000 – 4000 ஹெர்டஸ்.
119. ஓலி பரவுவதற்கு ஊடகம் தேவை, வெற்றிடத்தில் ஒலி பராவது.
120. சந்திரனில் ஒலியை கேட்க முடியாது. ஏனெனில் அதில் வளிமண்டலம் இல்லை.
121. சந்திரனில் இறங்கிய விண்வெளி வீரர்கள் கம்பியில்லா கருவி மூலம் ரேடியோ
அலைகளை பயன்படுத்தி செய்தி பரிமாற்றம் செய்து கொள்ளக் காரணம் யாதெனில் - அதில் வளிமண்டலம் இல்லை.
122. ஒலிஅலைகள் நெட்டலைகள் ஆகும்.
123. ஒலியானது – திட, திரவ, வாயுப்பொருட்களில் பரவும்.
124. ஒலியின் திசைவேகம் - திடப்பொருள் , திரவப்பொருள் , வாயுப்பொருள்
125. காற்றில் 00 செல்ஷியஸில் ஒலியின் திசைவேகம் 331 மீ / வினாடி (200 செல்ஷியஸில்
340 மீ / நொடி)
126. நீரில் 200 செல்ஷியஸில் ஒலியின் திசைவேகம் 1482 மீ / நொடி
127. இரும்பில் ஒலியின் திசைவேகம் 5000 மீ / நொடி
128. கிரானைட்டில் ஒலியின் திசைவேகம் 6000 மீ / நொடி
129. ஒலி சமதளப்பரப்பில் எதிரொலிக்கப்படும்போது படுகோணமும், மீள்கோணமும், சமம்.
130. ஓலியலைகள் நம்மை அடைய 1/10 நொடிக்குமேல் எடுத்துக்கொண்டால் அந்த
அலைகள் எதிரொலிக்கும்.
131. எதிரொலிக்க தேவையான தொலைவு – 17 மீட்டர்
132. அல்ட்ராசானிக் ஸ்கேனில் மீயொலிகளைப் பயன்படுத்தி மனித உடலில் உட்பகுதிகளின்
செயல்பாட்டினை கண்டறியலாம்.
133. Sound Navigation And Ranging கருவியில் பயன்படும் தத்துவம் - எதிரொலிப்பு
134. கடலின் ஆழத்தை அளக்க பயன்படும் கருவி – சோனார்
135. திசைவேகம் = தொலைவு / காலம்
136. வெளவால்கள், திமிங்கலங்கள், ஆகியவை எதிரொலிப்பு தத்துவத்தின் மூலம்
மீயொலிகளை உண்டாக்கி, தங்களின் இரையைத் தேடவும், இயங்கவும் முடிகிறது.
137. கப்பலின் அபாயசங்கு ஒலியின் எதிரொலிப்பு தத்துவத்தை பயன்படுத்தி பாறைகள்
முதலியவற்றின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
138.
உலோக வார்ப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களை கண்டறியவும், கண்ணாடி, எஃகு போன்றவற்றினை துளையிடவும்
மீயொலி பயன்படுகிறது.
139. கடிகாரம், மருத்துவக்கருவி, போன்றவற்றின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க
மீயொலி பயன்படுகிறது
140. ஒன்றுக்கொன்று கலவாத திரவங்களை (பெயின்ட்) கலக்கச் செய்ய மீயொலி
பயன்படுகிறது
141. முப்பரிமாண பிம்பங்கள், நிழல் படங்கள், தோற்றுவிக்க மீயொலியை பயன்படுத்தலாம்.
142. கருவில் வரும் குழந்தைகள் வளர்ச்சியை கண்டறியவும், எக்ஸ்ரே கதிர்கள் மூலம்
கண்டறிய இயலாத உடல் உள் உறுப்புகளை கண்டறியவும் மீயொலி பயன்படுகிறது.
143. சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றவும், புற்றுநோயை குணப்படுத்தவும், தசைப்பிடிப்பு, மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் மீயொலி உதவுகிறது.
144. ஒலிமூலத்திற்கும், கேட்போருக்கும் இடையே ஒரு ஒப்புமை இயக்கம் இருப்பின், ஒலியின்
அதிர்வெண் மாறுவதாக தோன்றும் நிகழ்வு – டாப்ளர் விளைவு.
145. ரோடார் (RADIO DEDUCTION AND RANGING) கருவியில் பயன்படும் தத்துவம் - டாப்ளர் விளைவு
146. நீர்மூழ்கி கப்பல், விமானத்தின் திசைவேகத்தையும், இயக்கத்தையும், கண்டறிய
பயன்படுவது – ரேடார் கருவி
147. மின்னலும், இடியம் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், மின்னலை முதலில் பார்த்த பின்னரே
இடிஓசையை கேட்க முடிகிறது. ஏனெனில், ஒளியின் திசைவேகம் (3 x 108 மீ / வினாடி), ஒலியின் திசைவேகத்தை (331 மீ / வினாடி) விட அதிகம்.
148. மின்னல் ஏற்படக் காரணம் - மின் இறக்கம்
149. மின்னல் ஏற்படும் போது உண்டாகும் வெப்பநிலை – 10,000 K
150. இசை ஒலி மூன்று பண்புகளை கொண்டது. அவை: 1. சுருதி 2. செறிவு 3. சுரப்பண்பு.
151. சுருதி என்பது ஒலியின் அதிர்வெண்ணைச் சார்ந்தது. சுருதியானது அதிர்வெண்ணுக்கு
நேர்தகவில் இருக்கும்.
152. ஓலிச்செறிவானது அதிர்வெண்களின் வீச்சையும் அதிர்வடையும் பொருளின் பரப்பையும்
சார்ந்தது.
153. ஓலிச்செறிவானது வீச்சின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
154. அதிர்வுகளின் வீச்சு அதிகமானால் ஒலிச்செறிவு அதிகமாகும்
155. ஒரே ஒலிச்செறிவும், ஒரே சுருதியுமுள்ள, அதிர்வுகள் வெவ்வேறு இசைக்கருவிகளால் ஒலி எழுப்பப்படும் போது ஒலிகளை வேறுபடுத்தி அறியும் பண்பு – சுரப்பண்பு.
156. சுண்டுதல் வகை கம்பிக்கருவிகள் - வீணை, கிதார்
157. தட்டுதல் வகை கம்பிக்கருவி – பியானோ
158. மீட்டுதல் வகை கம்பிக்கருவி – வயலின்
159. காற்றுக் கருவிகள் - ஷெனாய், கிளாரினெட்
160. அலைகள் இருவகைப்படும்: 1. எந்திர அலை 2. மின்காந்த அலை
161. எந்திர அலைகளுக்கு எ.கா. ஒலி அலைகள், நீர்ப்பரப்பு அலைகள், நிலநடுக்க அலைகள்
(இம்மூன்றும் நியூட்டனின் இயக்க விதிகளுக்கு உட்பட்டது)
162. மின்காந்த அலைகளுக்கு எ.கா. ஒளி அலைகள், ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகசிவப்பு கதிர்கள், புறஊதா கதிர்கள், X-கதிர்கள் ஆகியவை.
163. எந்திர அலைகள் பரவ ஊடகம் (திட, திரவ, வாயு) தேவை. மின்காந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை.
164. மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் பரவ எடுத்துக்கொள்ளும் திசைவேகம் 3 x 108 மீ / வினாடி
165. எந்திர அலைகள் குறுக்கலைகள், நெட்டலைகள் என இருவகைப்படும்.
166. ஊடகத்தின் துகள்கள் அலைபரவும் திசைக்கு செங்குத்தாக அதிரிவுறும் அலைகள் - குறுக்கலைகள்.
167. குறுக்கலைகளுக்கு எ.கா நீர்ப்பரப்பு அலைகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பி இசைக்கருவி
அலைகள், மின்காந்த அலைகள்
168. நெட்டலைகளுக்கு எ.க. ஒலியலைகள்.
169. குறுக்கலையில், அதிர்வுறும் நிலையிலிருந்து மேற்புறத்தில் ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
முகடு எனப்படும்.
170. குறுக்கலையில், அதிர்வுறும் நிலையிலிருந்து கீழ்ப்புறத்தில் ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
அகு எனப்படும்.
171. குறுக்கலையில் முகடும், அகடும், தோன்றும்
172. நெட்டலையில் நெருக்கமும், நெகிழ்ச்சியும் தோன்றும்
173. குறுக்கலையில் இரு அடுத்தடுத்த அகடு அல்லது இரு அடுத்தடுத்த முகடுகளுக்கிடையே
உள்ள தொலைவு - அலைநீளம் எனப்படும்.
174. நெட்டலையில் இரு அடுத்தடுத்த நெருக்கம் அல்லது இரு அடுத்தடுத்த நெகிழ்வுகளுக்கு
இடையே உள்ள தொலைவு அலைநீளம் எனப்படும்.
175. அதிர்வெண், அலைநீளம், அலையின் திசைவேகம், இவற்றிற்கிடையே ஆன தொடர்பு
𝑣 = 𝑛𝜆 (திசைவேகம் = அதிர்வெண் x அலைநீளம்)
176. இசைக்கவை அதிரும்போது காற்றில் உருவாகும் அலைகள் – நெட்டலைகள்.
177. இயல்பு அதிர்வுகளுக்கு உதாரணம் - இழுத்துக்கட்டப்பட்ட அதிர்வுகள், இசைக்கலவை
அதிர்வுகள், அலைவுறும் தனிஊசல்.
178. திணிப்பு அதிர்வுகளுக்கு உதாரணம் -- வீணை, வயலின்
179. அதிர்வுறும் பொருளின் இயல்பு அதிர்வெண்ணும், பொருளின் மேற்பரப்பில் செயல்படும்
சீரான புறவிசையின் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், பெரும வீச்சுடன் அதிர்வுகள்
ஏற்படும் நிகழ்வு – ஒத்ததிர்வுகள் எனப்படும்
180. பாலங்களில் படைவீரர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை – ஏனெனில் பாலத்தில்
ஒத்ததிர்வுகள் ஏற்பட்டு பாலம் உடையும் நிலை ஏற்படுகிறது.
181. ஒரே அதிர்வெண்ணும், வீச்சும் கொண்ட இரு அலைகள் எதிரெதிரே பரவும்போது
உருவாகும் அலைகள் - நிலை அலைகள்.
182. நிலை அலையின் சில புள்ளிகளில் வீச்சு சுழியாகும். இப்புள்ளிகள் கணுக்கள் எனப்படும்.
183. சில புள்ளிகள் பெரும வீச்சினைக் கொண்டு அதிர்வுறும் அவை எதிர்கணுக்கள் எனப்படும்.
184. அடுத்தடுத்த கணுக்கள் அல்லது எதிர்கணுக்களுக்கிடையே உள்ள தொடர்பு = Y/2
185. ஒரு கணுவிற்கும், எதிர்கணுவிற்கும் இடையே உள்ள தொடர்பு = Y/4.
186. குறுக்கலைகளை ஏற்படுத்தும் கருவிகள் - வயலின், சிதார், வீணை, கிதார்.
187. நெட்டலைகளை ஏற்படுத்தும் கருவிகள் -- புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினெட்.
188. இருமுறை திறந்த ஆர்கன் குழாயில் சுரங்கள் இயல் எண் வரிசையில் இருக்கும்.
189. (n = 1:2:3) n = அதிர்வெண் i = சுரம் i = 1, 2, 3
190. ஒருமுனை மூடிய ஆர்கன் குழாயில் சுரங்கள் ஒற்றை சீhசை வரிசையில் மட்டுமே
தோன்றும் n = 1:3:5
191. இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வு விதிகளுக்கான சூத்திரம் n = 1/2L. 𝑇/𝑚 (𝑛 = அதிர்வெண், T = இழுவிசை, L = கம்பியின் அதிர்வுறு நீளம், m = கம்பியின் நீள்
அடர்த்தி).
192. இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் குறுக்கதிர்வுகளின் அதிர்வெண், இழுவினை, கம்பியின்
அதிர்வுறு நீளம், கம்பியின் நீள் அடர்த்தி ஆகியவற்றை அறிய பயன்படும் கருவி – சுரமானி ஆகும்.
193. சுரமானி என்பது – ஓர் ஒலிப்பெட்டி ஆகும்.
194. காற்றில் ஒலியின் திசைவேகத்தில் நகரும் பொருட்களின் திசைவேகம் – மேக்.
195. காற்றில் ஒலிமூலம் ஒரு மேக்கை விட குறைவான திசைவேகத்தில் வலப்புறம், நகரும்போது இடப்புறத்தில் நிலையாக உள்ள கேட்பவர் குறைந்த அதிர்வெண் கொண்ட
ஒலியையும், வலப்புறத்தில் நிலையாக உள்ள கேட்பவர் அதிக அதிர்வெண் கொண்ட
ஒலியையும், கேட்க முடியும் (vs < v)
196. VS = ஒலிமூலத்தின் திசைவேகம், V = ஒலியின் திசைவேகம்
197. (vs = v) எனில் ஒலிமூலம், நிலையாக உள்ள ஒருவரை நெருங்கும் வரை ஒலியை
உணர முடியாது. ஒலிமூலம் அவரைத் தாண்டிச் செல்லும்போது திடீர் முழக்கத்தை
மட்டும் கேட்க முடியும்.
198. (vs > v) ஒலிமூலம் கடந்து சென்றபின்னர் மட்டும் ஒலியை கேட்கமுடியும்
199. ஓலிமூலம், ஒலியின் திசைவேகத்தை விட மிக அதிகமாக செல்லும்போது – மேக் கூம்பு
ஏற்படும். இந்நிகழ்வில் சன்னல், கதவு கூட அதிரும்.
200. ஓலிப்பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர் - எடிசன்
201. ஓலிநாடாவில் பூசப்பட்டுள்ள பொருள் -- இரும்பு ஆக்சைடு அல்லது குரோமியம் ஆக்சைடு.
202. ஓலிநாடாவில் மாறும் காந்தபுலங்களாக ஒலியை பதிவு செய்யலாம்.
203. ஒர்
ஒலிநாடாவில் அதிகபட்சமாக பதிவு செய்யக்கூடிய ஒலிதடங்களின் எண்ணிக்கை - 24