Type Here to Get Search Results !

தாவரவியல் – 2 | 149 Questions

தாவரவியல் – 2

உயிரின அமைப்பு நிலை

உணவூட்டம் உயிரினம்

1.  சாறுண்ணி முறை (தாவர முறை): யூக்ளினா

2.  விலங்குமுறை: அமீபா

3.  ஒட்டுண்ணி முறை: பிளாஸ்மோடியம்.

4.  குளோரல்லா ஒரு பச்சைப்பரிச இனத் தாவரமாகும்.

5.  பிளவு முறை () இணைவு முறை இனப்பெருக்கம் நடைபெறுதல்எண்டமீபா ஹிஸ்டாலிகா

6.  எண்டமீபா ஹிஸ்டாலிகா என்ற ஒட்டுண்ணி மூலம் ஏற்படும் நோய் - அமீபிக் சீதபேதி

கிளாமிடோ மோனஸ்:

7.  வகுப்பு: குளோரோபைசி

8.  தாலோபைட்டா வகையைச் சேர்ந்தது.

9.  “Green Yeast” என்றழைக்கப்படுகிறது.

10.  ஒரு செல் உயிரி. பச்சையம் உண்டு.

11.  நன்னீர் வாழ் ஆல்கா.

12.  இரு கசையிழையுடைய ஒரு செல் ஆல்கா

13.  இதன் செல்சுவர் - செல்லுலோஸால் ஆனது

14.  இதிலுள்ள பசுங்கணிகம் கிண்ணம் வடிவமுடையது

15.  இதிலுள்ள பைரினாய்டு - ஸ்டார்ச் உற்பத்தி செய்கிறது

16.  கிளாமிடோமோனஸின் செல்லின் இயக்கத்துக்கு உதவும் கண் போன்ற அமைப்பின் பெயர் - ஸ்டிக்மா

17.  இதன் வாழ்க்கை சுழற்சியில் ஒற்றைமய நிலையே மேலேரங்கி காணப்படுகிறது

இனப்பெருக்கம்:

பாலிலா முறை:

18.  சூஸ்போர்: நீர் மிகுந்த சூழல்

19.  எபிளோனோஸ்பியர்: வறண்ட காலத்தில் நடைபெறுகிறது

20.  ஹிப்ளோனோஸ்போர்: மிக வறண்ட காலத்தில் நடைபெறுகிறது

21.  பாமெல்லா நிலை: சாதகமில்லாத சூழ்நிலையில் நடைபெறுகிறது

22.  பாலினப்பெருக்கம்: ஐசோகேமி முறையில் நடைபெறுகிறது.

23.  மரபியல் ஆய்வுக்கு முக்கிய காரணியாக பயன்படும் ஆல்காகிளாமிடோமோனஸ்

24.  ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் ஆல்காகிளாமிடோமோனஸ்

யூக்ளினா:

25.  தொகுதி: புரோட்டோசோவா

26.  வகுப்பு: மாஸ்டிகோபோரா

27.  பச்சையம் உண்டு

28.  இதன் உடலை சுற்றியுள்ள பெரிக்கிள் உறையே இதன் நிலையான தன்மைக்கு காரணம்

29.  சிவப்பு நிற கண்புள்ளி - ஸ்டிக்மா எனப்படும்

30.  உடல் மையத்தில் உட்கரு உள்ளது

31.  பைரினாய்டு ஸ்டார்சை உற்பத்தி செய்கிறது

யூக்ளினா இடப்பெயர்ச்சி செய்யும் முறை:

32.  கசையிழை உதவியால் a) முறுக்கு அசைவு மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. b) துடுப்பு வகை அசைவு மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது c) யூக்ளினாய்டு மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது

33.  உணவூட்டம்: 1) பச்சையம் மூலம் (தாவர வகை) 2) நீரில் மட்கிய பொருளின் சாற்றை உறிஞ்சுதல் மூலம் நடைபெறுகிறது.

34.  சுவாசித்தல்: பரவல் முறை மூலம் நடைபெறுகிறது

35.  கழிவு நீக்கம்: நுண்குமிழிகள் மூலம் (அம்மோனியா கழிவு) நடைபெறுகிறது

இனப்பெருக்கம்:

36.  1) இரு சம பிளவு மூலம் - சாதகமான நீர்நிறைந்த சூழ்நிலையில் செங்குத்தாக நடைபெறுகிறது. ஏமைட்டாஸிஸ் மூலம் உட்கரு பிரிந்து யூக்ளினா இரு புதிய உயிரிகளாக பிளவுருகிறது

37.  2) பலவகை பிளத்தல் - சாதகமற்ற சூழ்நிலையில் பெலிக்கிளைச் சுற்றிசிஸ்ட்உறை உருவாகி பல உயிரிகளாக பிளவுறுகிறது.

பாரமீசியம் காட்டேட்டம்:

38.  தொகுதி: புரோட்டோசோவா

39.  வகுப்பு: சீலியேட்டா

40.  இது செருப்புயிரி எனப்படும்

41.  வாய்ப்பள்ளம் பெயர் - பெரிஸ்டோமியல்

42.  உடல் முழுவதும் உள்ள குறு இழைகள் இடபெயர்ச்சிக்கும், உணவு சேகரிக்கவும், உணர்ச்சி உறுப்பாகவும் பயன்படுகிறது

43.  உடலை மூடியுள்ள சவ்வுபெலிக்கிள் எனப்படும்

44.  பெலிக்கிளின் கீழ்ப்புறம் காணப்படும் சிறிய கதிர் வடிவ பைகளுக்கு டிரைகோசிஸ்டுகள் என்று பெயர். இது நச்சுத்தன்மையுள்ள திரவத்தால் சூழப்பட்டு பாதுகாப்பு உறுப்பாக செயல்படும்

45.  இரண்டு உட்கரு உடையது 1) மேக்ரோ உட்கரு 2) மைக்ரோ உட்கரு

46.  மேக்ரோ உட்கருவளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும்

47.  மைக்ரோ உட்கரு - இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும்

48.  கழிவுநீக்கம் - நுண்குமிழ் மூலம் நடைபெறுகிறது

49.  பாரமீசியம் இடப்பெயர்ச்சி செய்யும்முறை:

50.  உடல் சுருக்க இயக்கம் () மெட்டாபோலி (புரோட்டோபிளாசத்தில் உள்ளமையோநிம்என்ற நுண் தசை நார் சுருங்கும் போது எற்படும் நிகழ்வு 2) குறு இழை இயக்கம்

உணவூட்ட முறை:

51.  சைக்ளோசிஸ் முறையில் () நுண்குமிழ் சுற்சி மூலம் நடைபெறுகிறது

இனப்பெருக்கம்:

52.  பாலிலா முறை (சாதகசூழ்நிலை) 2) பால் சுழற்சி முறை (காஞ்சுசேஷன்) உள்ளது

அமிபா:

53.  ஒரு செல் உயிரி

54.  பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது

55.  குறிப்பிட்ட வடிவம் கிடையாது

56.  இரு சமபிளவு முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது

ஸ்பைரோகைரா:

57.  குளோரோபைசியே வகையைச் சார்ந்தது

58.  பச்சைப்பாசியாகும்

59.  நீர்ப்பட்டு என்று அழைப்பர்

60.  பல செல் கொண்ட நீண்ட வடிவுடையது

61.  இதன் அடிசெல்லானது தளத்தைப் பற்றிக் கொள்வதால் பற்றுசெல் எனப்படும்

62.  இதன் செல்சுவர் இரண்டு அடுக்கு கொண்டது

63.  வெளியடுக்குபெக்டினால் ஆனது

64.  உள் அடுக்குசெல்லுலோஸால் ஆனது

65.  பசுங்கணிகங்கள் - நாடா போன்ற சுருள் வடிவம். இதில் காணப்படும் கோள வடிவ அமைப்புபைரினாய்டுகள் எனப்படும்

66.  ஸ்பைரோகைராவின் இனப்பெருக்க முறை:

67.  உடல் இனப்பெருக்கம் - தூண்டல் முறை

68.  பாலிலா இனப்பெருக்கம் - ஏபிளோனோஸ்போர்கள், ஏகைனேட்டுகள், பார்த்தனோஸ்போர்கள் மூலம் நடைபெறுகிறது

69.  பாலின பெருக்கம் - இணைவுமுறை மூலம் நடைபெறுகிறது. a) ஏணி இணைவு - இரு வெவ்வேறு இழைகளுக்கு இடையில் நடைபெறுகிறது. b) பக்க இணைவுஒரு இழையின் இரு அடுத்தடுத்த செல்களுக்கிடையே நடைபெறுகிறது

70.  பாலினப்பெருக்க முறையில் ஏபிளனோகேமிட் உருவாகியபின் நகரும் ஆண்கேமிட், நகரா பெண்கேமிட் இணைந்து சைகோட்ஸ்போரை தோற்றுவித்து புதிய இழை தோன்றும்.

71.  அகார் - அகார் என்ற பொருள் ஜெல்லிடியம் மற்றும் கிராஸிலேரியா போன்ற சிவப்பு ஆல்கஹாளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

72.  டையாட்டமைட் என்பது டயாட்டம் எனும் பாசியிலிருந்து உருவாகும் பொருளாகும். இதன் பயன் சர்க்சரை ஆலைகளில் திரவங்களை வடிகட்டவும் பெயிண்ட் தயாரிக்கவும் பயன்படுகிறது.

73.  ஜப்பானியர் உண்ணக் கூடிய பாசிகள் - கொம்பு, அராமி, மிரு

74.  புரதச்சத்திற்காக வளர்க்கப்படும் பாசிகளுக்கு .கா. குளொரெல்லா, ஸ்பைருலினா.

75.  ஹைடிரா, ஈஸ்ட் - “மொட்டு விடுதல்முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.

76.  குளோரெல்லா, கிளாமிடோமோனாஸ் - ஒரு செல் பாசிகள்

77.  வால்வாக்ஸ் - காலனி அமைவு கொண்டவை.

பிரையோபைட்டுகள்

78.  நீர் மற்றும் நிலத்தில் வாழ்வதால் இவை தாவர உலகின் இருவாழ்விகள் எனப்படும்.

79.  வாஸ்குலார் திசு இல்லை

80.  தாவர உடலம் - தாலஸ் அல்லது கேமிட்டோபைட் எனப்படும்

81.  வாழ்க்கை சுழற்சி – 2 வகைப்படும். 1. கேமிட்டோபைட் - தனித்து வாழும். ஒருமய நிலை அல்லது ஹாப்ளாய்டு நிலை. 2. ஸ்போரோபைட் - கேமிட்டோபைட்டை சார்ந்து வாழும். இருமய நிலை அல்லது டிப்ளாய்டு நிலை

82.  ஸ்போரோபைட் சந்ததியின் முதல் செல் - சைகோட்

83.  கேமிட்டோபைட் சந்ததியின் முதல் செல் - ஒரு மய ஸ்போர்

84.  இனப்பெருக்கம்: பாலினப்பெருக்கம் - கேமிட்டுகள் மூலம் நடைபெறுகிறது

ரிக்ஸியா:

85.  பிரையோபைட் வகை தாவரம் ஆகும்

86.  தாவர உலகம் -- கேமிட்டோபைட் வகையைச் சார்ந்தது

87.  பசுங்கணிகம் மூலம் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது

88.  பாரன்கைமா செல்கள் மூலம் ஸ்டார்ச்சு மற்றும் நீரை சேமிக்கிறது

இனப்பெருக்கம்:

89.  இனப்பெருக்கம் இரு வகைப்படும் அவை:

90.  தழை வழி இனப்பெருக்கம் (1. துண்டாதல் மற்றும் வேற்றிட கிளைகள் மூலம் நடைபெறுகிறது 2) பால் இனப்பெருக்கம் (நீரில் நடைபெறுகிறது).

91.  ஆண் இனப்பெருக்க உறுப்புஆந்திரிடியம் எனப்படும்.

92.  பெண் இனப்பெருக்க உறுப்புஆர்க்கிகோனியம் எனப்படும்.

93.  ஆந்திரிடியத்திலிருந்து ஆந்த்ரோசெட் தாய் செல்லிலிருந்து (ஆந்த்ரோ சூவாய்டுகள்) இரு கசைபிழை கொண்ட ஆண் கேமிட் உருவாகிறது.

94.  சந்ததி மாற்றம் என்பது கேமிட்டோபைட் மற்றும் ஸ்போரோபைட் சந்ததி மாறிமாறி காணப்படுவதாகும்.

டெரிடோபைட்டுகள்:

95.  இத்தாவரங்கள் ஸ்போரோபைட் சந்ததி ஆகும்

96.  தாவரத்தின் தண்டுசைசோம் வகையை சார்ந்தவை

97.  சைசோமில் இருந்து தோன்றும் பக்கவாட்டு கிளைகளின் பெயர் - ஸ்டோலன் எனப்படும்.

98.  ஸ்டோலனிலிருந்து தோன்றும் சிறு கிளைகள்:   ஸ்டோக் எனப்படும்

99.  இத்தாவரத்திலுள்ள இலைகள் -- ஃபிராண்டுகள் எனப்படும். இதிலிருந்து ஸ்போர்களை தோற்றுவிக்கும் ஸ்போரோகோனியற்கள் உருவாகிறது.

100.  டெரிடோபைட்டாவில் கேமிட்டோபைட்டானது -- இதய வடிவில் அமைந்த புரோதாலஸ் ஆகும்.

101.  இனப்பெருக்க உறுப்புகள் -- ஆந்திரிடியம், ஆர்க்கிகோனியம்.

102.  இனப்பெருக்கம் நடைபெற நீர் இன்றியமையாதது.

103.  இனப்பெருக்க ஸ்போர்கள் மற்றும் கேமிட்டோபைட்டுகள் மூலம் நடைபெறுகிறது

நெப்ரோலிப்பிஸ்:

104.  டெரிட்டோபைட் வகை தாவரம் ஆகும்

105.  வாள் பெரணி அல்லது பாஸ்டன் பெரணி என அழைக்கப்படும்

106.  தண்டு ரைசோம் வகையை சார்ந்தது

107.  ஒற்றை சிறகு கூட்டிலை உடையது. இது ப்ராண்டுகள் எனப்படும்

108.  இலையமைப்புசர்சினேட் (கடிகார வில்) வகையைச் சார்ந்தது

109.  தண்டு மற்றும் இலைக்காம்புகளை மூடியிருக்கும் செதில்கள் -- ரேமண்டா எனப்படும்

110.  இலைகளில் காணப்படும் நீர்த்துளைகளின் பெயர் - ஹைடத்தோடுகள் எனப்படும்

இனப்பெருக்கம்:

111.  உடல் இனப்பெருக்கம் - வேற்றிட மொட்டுகள் மூலம் நடைபெறுகிறது

112.  பாலிலா இனப்பெருக்கம் - ஸ்போர்கள் மூலம் நடைபெறுகிறது

113.  பால் இனப்பெருக்கம் - கேமிட் மூலம் நடைபெறுகிறது

ஸ்போர் வழி இனப்பெருக்கம்:

114.  ஸ்போர்கள் - ஹோமோஸ்போரஸ் வகை

115.  ஸ்போரகங்களின் தொகுப்புசோரஸ் எனப்படும்

116.  சோரஸ்களையுடைய இலை -- ஸ்போரக இலை எனப்படும்

117.  சோரஸ்களை மூடியுள்ள சிறுநீரக வடிவ வளரியின் பெயர் -- இண்டூசியம்

118.  ஸ்போரகம் -- நீண்ட காம்பு மற்றும் காப்சூயூல் கொண்டது

119.  கேப்சூலின் விளிம்பு பகுதிஆனலஸ் எனப்படும்

120.  ஆனுலசிற்கும் காம்பிற்குமிடையே உள்ள பகுதி - ஸ்டோமியம் எனப்படும்

121.  ஸ்டோமியம் - தட்டையான மெல்லிய சுவர் உடையது

122.  ஸ்போர்கள் ஒற்றை மயமானவை, இது காற்றின் மூலம் பரவும்

கேமிட்டோபைட் (புரோதாலஸ்)

123.  கேமிட்டோபைட் சந்ததியின் முதல் செல் -- ஸ்போர்

124.  இளம் கேமிட்டோபைட் -- புரோதாலஸ் எனப்படும்

125.  ஆண் இனப்பெருக்க உறுப்புஆந்த்ரிடியம் ஆகும்

126.  ஆந்த்ரிடியம் தோன்றும் இடம் - தாவர அடிப்புற வேர்களுக்கடையில்

127.  ஆந்த்ரிடியம் மூன்று செல்களானது. ஒவ்வொன்னும் பல கசையிழை உடைய ஆந்த்ரோ சூவாய்டுகளை உண்டாக்குகிறது.

128.  பெண் இனப்பெருக்க உறுப்புஆர்க்கிகோனியம் ஆகும்

129.  ஆர்க்கிகோனியத்தின் கழுத்துப்பகுதியிலுள்ள வழவழப்பான திரவத்தின் பெயர் - மியூசிலேஜ் எனப்படும். இத்திரவத்தில் மேலிக் அமிலம் உள்ளது.

130.  ஸ்போரோபைட் சந்ததியின் முதல் செல் - சைகோட்

131.  கைகோட்டை சுற்றியுள்ள தொப்பி போன்ற அமைப்புகேலிப்ட்ரா எனப்படும்

132.  நெப்ரோலிப்பிஸின் வாழ்க்கையில் ஸ்போரோபைட், கேமிட்டோபைட் சந்ததிகள் மாறிமாறிக் காணப்படுகின்றன

 

மரபியல்

133.  ஜீன் நூற்றாண்டு எனப்படுவது – 21ம் நூற்றாண்டு

134.  நவீன மரபியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் - கிரிகர் மென்டல்

135.  மரபியல் தந்தை - கிரிகர் மென்டல

136.  மென்டல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய தாவரம் - பட்டாணி தாவரம்

137.  மென்டலின் கோட்பாடுமென்டலிசம் எனப்படும்

138.  பட்டாணி தாவரத்தை மென்டல் தேர்வு செய்யக் காரணம்: இயற்கையில் தன் மகரந்தச்சேர்க்கை கொண்டவை, கண்ணுக்கு புலனாகும் பல்வேறு புறத்தோற்ற பண்புகள், அயல் மகரந்த சேர்க்கை செய்வது எளிது.

139.  மென்டலின் கருத்துக்களை உலகறிய செய்தவர் - ஹியுகோ டிவ்ரிஸ், கார்ல் காரன்ஸ், செர்மர்க்

140.  மென்டல் பட்டாணிச் செடியில் 7 இணைப் புறத்தோற்ற பண்புகளை தேர்வு செய்தார்.

141.  மென்டல் தேர்ந்தெடுக்கப்படாத தாவர பண்புதண்டின் நீளம்

142.  ஒரு கலப்புயிரி தாவரத்தை ஏதேனும் ஒரு கலப்பற்ற தூய பெற்றோர் தாவரத்துடன் கலப்பதுபின் கலப்பு முறை எனப்படும்

143.  ஒரு கலப்புயிரையே ஏதேனும் ஒரு ஒடுங்குபண்பு பெற்றோருடன் கலப்பது சோதனை கலப்பு எனப்படும்

144.  ஒரு பண்பு கலப்பு ஆய்வின் அடிப்படையில் மென்டல் உருவாக்கிய முதல் விதி தனித்துப்பிரிதல் விதி

145.  இருபண்பு கலப்பில் மென்டல் பயன்படுத்திய இரண்டாவது விதிசார்பின்ற ஒதுங்குதல் விதி

146.  ஒரு பண்பு கலப்பு சோதனையில் புறத்தோற்ற விகிதம் 3:1

147.  ஒரு பண்பு கலப்பு சோதனையில் ஜீனாக்க விகிதம் 1:2:1

148.  சோதனைக் கலப்பில் புறத்தோற்ற விகிதம் 1:1

149.  இரு பண்பு கலப்பு சோதனையில் புறத்தோற்ற விகிதம், ஜீனாக்க விகிதம் 9:3:3:1