தாவரவியல் – 3
செல்லியல்
1. செல் என்ற சொல்லை
முதலில் பயன்படுத்தியவர் - இராபர்ட் ஹூக்
2. உயிரினங்களின் அடிப்படை அலகு அல்லது செயல் அலகு – செல் ஆகும்
3. நுண்ணோக்கியை முதன்முதலில் பயன்படுத்தியவர் - ஆன்டன் வான் லூவன் ஹாக்
4. நியூக்ளியசை முதன்முதலில் இராபர்ட் ப்ரௌன் கண்டறிந்த இடம் -- ஆர்க்கிடு வேர்
5. செல் கொள்கையினை உருவாக்கியவர்கள் - ஹூலைடன் & ஸ்வான்
6. செல் பகுக்கும் தன்மையுடையவை. ஒரு செல்லிலிருந்து புதிய செல்கள் உருவாகும்” – எனக் கூறியவர் ரெடால்ப் விர்ச் சௌ
7. புரோட்டோபிளாசத்தைக் கண்டறிந்தவர் - பர்கின்ஜி
8. தாவர செல்களில் மிகப்பெரியது – சைக்கஸ் தாவரத்தின் சூல்
9. ஒரு மைக்ரான் = 1/1000 மி. மீ அல்லது 10-3
மி.மீ
10. ஒரு ஆங்க்ஸ்டராம் = 1 x 10-10
மி.மீ
11. ஒரு நானோமீட்டர் = 1 x 10-9 மி.மீ
12. எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்கு திறன் 2000 – 4000 மடங்கு
13. மின்னணு நுண்ணோக்கியின் உருப்பெருக்கு திறன் -- 2,00,000 – 3,00,000 மடங்கு
14. பரவல், மின்னணு நுண்ணோக்கி (TEM) மூலம் ஒரு பொருளின் இருபரிமாணம் (2D) மட்டுமே காண முடியும்.
15. ஒரு பொருளின் முப்பரிமாணம் காண உதவும் நுண்ணோக்கி – ஸ்கேனிங் மின்னணு நுண்ணோக்கி
16. தாவர செல்லின் முதல்நிலை செல்சுவர் - செல்லுலோஸ் மற்றும் பெக்டினால் ஆனது
புரோட்டோபிளாசம்:
17. உயிரின் அடிப்படைப் பொருள் -- புரோட்டோபிளாசம் ஆகும்
18. புரோட்டோபிளாசம் என்பது – சைட்டோபிளாசம் மற்றும் உட்கருவை உள்ளடக்கியதாகும்
19. விலங்கு செல்களில் காணப்படும் மேலுறையின் பெயர் - செல்சவ்வு ஆகும்
20. செல்சவ்வு இரண்டு அடுக்குகளாலான பாஸ்போலிப்பிடு மற்றும் புரதத்தினால் ஆனது. இது ஒரு தேர்வு கடத்தி சவ்வு ஆகும்
21. சைட்டோபிளாசத்தில் ஆர்.என்.ஏ. காணப்படும். இதில் 75 – 90% நீர் உள்ளது.
22. வாக்குவோலைச் சுற்றியுள்ள அரைக்கடத்தி சவ்வு – டோனோபிளாஸ்ட் ஆகும்
23. பசுங்கணிகத்தில் உட்பகுதியில் ஸ்ட்ரோமா (மாட்ரிக்ஸ்) என்னும் இடையீட்டு பொருள் நிரம்பியிருக்கும்.
24. ஸ்ட்ரோமாவில் பரவிக்கிடக்கும் குழல்கள் (தட்டையான கைபள்) போன்ற அமைப்பிற்கு “தைலாக்காய்டுகள்” என்று பெயர். இது ஸ்ட்ரோமா லேமெல்லா என்றும் அழைக்கப்படும்.
25. தைலக்காய்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட நாணயங்கள் போல் அமைந்து உருவாக்கும் அமைப்பின் பெயர் - கிரானா லேமெல்லா எனப்படும்
கணிகங்களிலுள்ளவை செய்யும் பணிகள்:
26. லியுகோபிளாஸ்ட் - சேமித்தல்
27. குரோமோபிளாஸ்ட் -- மலர், கனி. போன்றவற்றிற்கு நிறமளித்தல்
28. குளோரோபிளாஸ்ட் - ஒளிச்சேர்க்கை
பசுங்கணிகத்தில் காணப்படும் நிறமிகள்:
29. பச்சையம் a & b
30. கரோட்டின் (ஆரஞ்சு)
31. சேந்தோபில் (மஞ்சள்)
மைட்டோகாண்டிரியா:
32. கண்டுபிடித்தவர் - கொல்லிக்கர்
33. இதில் 2 உறை உள்ளது
34. உள் உறை பல மடிப்புகளையுடைய “கிரிஸ்டே” எனப்படும்
35. மைட்டோகாண்டிரியா செல்லின் ஆற்றல் நிலையங்கள் எனப்படும். இதில் சக்தியானது ATPமூலக்கூறுகளாக சேமிக்கப்படுகிறது
36. ATP– அடினோசின் டிரை பாஸ்பேட்
எண்டோபிளாசவலை:
37. கண்டுபிடித்தவர் - போர்ட்டர்
38. இது உட்கருவையும், பிளாஸ்மா சவ்வையும் இணைக்கிறது
39. செல்லுக்கிடையே கடத்தல் பணியைச் செய்கிறது
ரைபோசோம்:
40. கண்டுபிடித்தவர் - பாலட்
41. எண்டோபிளாச வலையில் ஒட்டியுள்ளது. தனித்தும் உள்ளது
42. இதன் வேலை – புரத உற்பத்தி
43. தோன்றுமிடம் - எண்டோபிளாசவலை
கோல்கை உறுப்புகள் அல்லது டிக்டியோசோம்கள்:
44. கண்டுபிடித்தவர் - காமில்லோ கோல்கை
45. சுரத்தல் செல்லில் மட்டும் காணப்படும்
46. செல் சுரத்தலிலும், சேமித்தலிலும், பங்கு கொள்கிறது
47. இதன் மையத்திலுள்ள சுரப்பு பை – சிஸ்டர்னே எனப்படும்
48. பாக்டீரியாவில் கோல்கை உறுப்புகள் காணப்படுவதில்லை
சென்ட்ரசோம்:
49. கண்டுபிடித்தவர் - இ.வான் பெனிடன்
50. விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுகிறது
51. உட்கரு அருகே உள்ளது
52. செல் பகுப்பில் பங்கேற்கிறது
53. இதில் இரு சென்ட்ரியோல்கள் உள்ளன
54. இதற்கு டிப்ளோசோம்கள் என வேறு பெயர் உண்டு
நுண்குமிழ்கள்:
55. செல்லின் உள் அழுத்தத்தை நிர்ணயிக்கின்றன
பிளாஸ்டிடுகள்:
56. உணவை சேமிக்க உதவுகிறது
லைசோசோம்கள்:
57. கண்டுபிடித்தவர் - கிறிஸ்டியன் டுவெ
58. தற்கொலைப் பை எனப்படுவது – லைசோசோம்
59. இதனுள் ஹைட்ரோலேஸ்கள் எனும் செரிப்பு நொதிகள் உள்ளன. இந்நொதிகள் புற்றுநோய் தோன்றுவதற்கும், செல் மூப்பு அடைதலுக்கும் காரணமாகின்றன
உட்கருமணி (நியூக்ளியோலஸ்):
60. கண்டுபிடித்தவர் - பாண் டானா
61. டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.இ - வை உள்ளடக்கியது
62. செல் சவ்வு இல்லை
உட்கரு (நியூக்ளியஸ்)
63. உட்கரு உடைய செல் – யூகேரியாட் எனப்படும்
64. உட்கரு செல்லின் மையத்தில் உள்ளது
65. இது செல்லின் செயலைக் கண்காணிக்கிறது
66. குரோமோசோம்கள் இதனுள் உள்ளது
67. இது டி.என்.ஏ. ஆல் ஆனது
68. மரபுபண்புகளைக் கடத்துகிறது
69. தாவர செல்: செல் சுவர் உண்டு, பசுங்கணிகம் உண்டு, பசுங்கணிகம் உண்டு, சென்ட்ரோசோம் இல்லை, சேமிப்பு பொருள் - ஸ்டார்ச்
70. விலங்கு செல்: செல் சவ்வு உண்டு, பசுங்கணிகம் இல்லை, பசுங்கணிகம் இல்லை, சென்ட்ரோசோம் உண்டு, சேமிப்பு பொருள் - கிளைகோஜன்
71. மிகப்பெரிய விலங்கு செல் - நெருப்புக்கோழி முட்டை
72. மிகப்பெரிய ஒரு செல் தாவரம் - அஸிட்டாகுலேரியா
73. ஒத்த அமைப்பையும், ஒத்தப் பணியையும், மேற்கொள்ளும் செல்களின் தொகுப்பு திசு எனப்படும்
செல் பிரிதல்:
74. சைட்டோகைனஸிஸ் - சைட்டோபிளாச பிரிவு
75. கேரியோகைனஸிஸ் - உட்கரு பிரிதல்
76. ஏ மைட்டாஸிஸ் - நேர்முக செல் பிரிவு
77. மைட்டாஸிஸ் - மறைமுகை செல் பிரிவு
78. குன்றல் பிரிவு - மியாஸிஸ்
மைட்டாஸிஸ்:
79. கண்டுபிடித்தவர் - பிளம்மிங்
80. உடல்செல்கள் அல்லது சொமாட்டிக் செல்கள் இம்முறையில் பகுப்படைகின்றன
81. இதற்கு சமன்பாட்டுச் செல்பிரிதல் என வேறு பெயருண்டு
82. ஆட்டோசோம்கள் இம்முறையில் உருவாகின்றன.
83. இதில் நான்கு நிலைகள் உண்டு. அவை:
முதல்நிலை அல்லது புரோப்பேஸ்:
84. உட்கருவிலுள்ள குரோமோசோம்கள் சுருக்கமடைகின்றன
85. சென்டிரியோல் எதிரெதிர் துருவங்களுக்கு நகரும்
86. சென்டிரியோலிருந்து ஸ்பிண்டில் கதிரிழைகள் தோன்றுகின்றன
87. உட்கருமணி, உட்கருபடலம் மறையத் துவங்குகிறது
மையநிலை அல்லது மெட்டாபேஸ்
88. உட்கருமணி, உட்கருபடலம் முற்றிலும் மறைகிறது
89. குரோமோசோம் மையப்பகுதிக்கு வருகிறது
90. ஸ்பிண்டில் இழைகள் தெளிவாக தோன்றுகின்றன
பிரிநிலை அல்லது அனாபேஸ்
91. ஸ்பிண்டில் இழைகள் மறைந்து உட்கரு உறை தோன்ற துவங்குகிறது
92. ஏதிரெதிர் துருவம் நோக்கி குரோமோசோம்கள் நகரும்.
93. இதனால் ஒவ்வொரு சேய் நியூக்ளியஸிலும், இரு மய எண்ணிக்கை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
முடிவுநிலை அல்லது டீலோபேஸ்:
94. உட்கரு முழுமையாக தோன்றுகிறது
95. இந்நிலையில் ஒரே செல்லில் இரு உட்கருக்கள் காணப்படும்
96. இதன் பின் சைட்டோபிளாச பகுப்பு (சைட்டோகைனஸிஸ்) ஏற்பட்டு புதிய செல் வாய் உண்டாகி இரு செல்களாக பிரிகிறது
ஏமைட்டாசிஸிஸ்
97. இது புரோகேரியாட்களில் (ஒரு செல் உயிரி) நடைபெறுகிறது
98. இதில் செல்லின் மையத்தில் குறுக்கம் ஏற்பட்டு, இறுகி செல் உட்பொருள்களும், நியூக்ளியசம், இரண்டாப பகுக்கப்படுகின்றன
மியாசிஸ்
99. பால் இனப்பெருக்கத்திற்கான செல் பிரிதல் ஆகும்
100. இச்செல் பிரிதலில் குரோமோசோம்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்
திசுக்கள்
101. உடலில் ஒரே வித பணியினை மேற்கொள்ளும் செல்களின் தொகுப்பு – திசு எனப்படும்
102. தாவர உடல் திசு இரு வகைப்படும். அசை 1) ஆக்குதிசு, 2) நிலைத்த திசு
103. ஆக்குதிசு மீண்டும் மீண்டும் பகுப்படையக்கூடியது
104. எளிய திசுக்கள்:
105. எளிய திசுக்களுக்கு எ.கா. 1. பாரன்கைமா 2. கோலன்கைமா 3. ஸ்கிளிரென்கைமா
பாரன்கைமா:
106. இவை உயிருள்ள செல்கள் ஆகும்
107. இவற்றின் செல்களுக்கடையே இடைவெளி காணப்படுகிறது
108. இத்திசு உடலின் எல்லா பாகங்களிலும் காணப்படுகிறது
109. இதன் பணி – சேமித்தல் ஆகும்
110. இத்திசுக்களின் செல்சுவர் செல்லுலோசால் ஆனது
111. பசுங்கணிகம் உடைய பாரன்கைமா திசுக்கள் -- குளோரென்கைமா எனப்படும்
112. நீர்வாழ் தாவரங்களின் பாரன்கைமா – ஏரென்கைமாக்களாக காணப்படுகிறது. ஏரென்கைமா திசுக்களில் உள்ள செல்களுக்கிடையே காற்று நிரப்பப்பட்டு தாவரங்கள் நீரில் மிதக்க உதவுகிறது
கோலன்கைமா:
113. இவை உயிருள்ள செல்கள் ஆகும்
114. இவற்றின் செல்களுக்கிடையே இடைவெளி காணப்படாது
115. இத்திசுக்களின் செல்சுவர் செல்லுலோஸ் மற்றும் பெக்டினால் ஆனது
116. இளம் தண்டு, அலைக்காம்பின் புறப்பகுதியில் இத்திசு காணப்படுகிறது
117. இத்திசுவின் பணி – தாங்குதல், தாவரத்திற்கு வலிமையை கொடுத்தலாகும்
ஸ்கிளிரென்கைமா:
118. இத்திசுக்களில் புரோட்டோபிளாசம் இல்லாததால் இவை உயிரற்ற செல்களாக காணப்படுகிறது
119. இத்திசுக்களின் செல்சுவர் லிக்னின் என்ற பொருளால் ஆனது
120. இத்திசுக்கள் தாவரங்களுக்கு விறைப்புத் தன்மையையும், உறுதியையும் தருகிறிது.
கூட்டுத்திசு: (அல்லது) வாஸ்குலார் திசுக்கள்
121. கூட்டுத்திசு இருவகைப்படும்: 1) சைலம் 2) புளோயம்
சைலம்:
122. சைலம், நான்கு வகை செல்களால் ஆனது. அவை – சைலம் குழாய்கள், டிரக்கீடுகள், சைலம் நார்கள், சைலம் பாரன்கைமா
123. சைலத்தின் பணி – நீர் மற்றும் கனிம ஊட்டபொருளை வேரிலிருந்து தண்டுக்கு கடத்துதலாகும்
புளோயம்:
124. புளோயம், நான்கு வகை செல்களால் ஆனது. அவை – சல்லடைக்குழாய்கள், துணைசெல்கள், புளோயம் நார்கள், புளோயம் பாரன்கைமா
125. புளோயத்தின் பணி – பசுமையான பகுதியிலிருந்து சேமிப்பு பகுதிக்கு உணவை கடத்துதலாகும்.
126. ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் ட்ரக்கீடுகள், சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.
127. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் ட்ரக்கீடுகள் மட்டும் காணப்படுகின்றன. சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை
128. சல்லடைக்குழாய்களில் ரிபோசோமும், நியூக்ளியசம் காணப்படாததால் இதில் புரத உற்பத்தி நடைபெறுவதில்லை.
129. ஒவ்வொரு சல்லடைக்குழாய் கூறுகளுடன் இணைந்து காணப்படும் பாரன்கைமா செல்கள் “துணை செல்கள்” எனப்படும்
ஸ்டீல்:
130. மையத்தில்
சைலம் பகுதி அமைந்து வெளியேறும் புளோயம் திசுவால் சூழப்பட்ட அமைப்பு “ஸ்டீல்” எனப்படும்
131. ஸ்டீலானது – பெரிசைக்கிள், பித், வாஸ்குலார்கற்றை ஆகியவற்றை உள்ளடக்கியது
132. ஸ்டீலானது வெளிப்புறம் பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா ஆகியவை காணப்படும்.
133. வாஸ்குலார் கற்றையின் பணிகள் - நீர் மற்றும் கனிமப்பொருட்களை கடத்துவதாகும்.
134. தாவரங்கிள்ன வேர்களில் சைலம், புளோயம் தனித்தனி கற்றைகளாக வெவ்வேறு ஆரங்களில் காணப்படும் அமைப்பிற்கு “ஆரப்போக்கு வாஸ்குலார் கற்றைகள்” என்று பெயர்.
135. தண்டில் சைலமும், புளோயமும் ஒரே ஆரத்தில் அமைந்துள்ள அமைப்பிற்கு “ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை” என்று பெயர்
136. கேம்பியம் என்பது – சைலத்திற்கும், புளோயத்திற்கும் இடையே காணப்படும் அமைப்பாகும்
137. சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே கேம்பியம் காணப்படாத நிலை மூடிய வாஸ்குலார் கற்றை எனவும், கேம்பியம் காணப்பட்டால் திறந்த வாஸ்குலார் கற்றை எனவும் அழைக்கப்படுகிறது
138. சைலம் வேரிலிருந்து நீரை தாவரத்தின் பல பாகத்திற்கு கடத்துகிறது என அறிய உதவும் சோதனை -- ஈயோஸின கரைசல் சோதனை.
139. புளோயம் நார்கள் என்பது – புளோயம் திசுவில் காணப்படும் ஸ்கிளிரென்கைமா செல்கள் ஆகும்.