Type Here to Get Search Results !

தாவரவியல் – 1 | 168 Questions

 தாவரவியல் – 1

விட்டேக்கரின் ஐந்துலக வாய்ப்பாடு:

1.  ஐந்துலக வாய்ப்பாடுகளை கண்டறிந்தவர் - விக்டேக்கர்

2.  மொனிராதெளிவான உட்கரு இல்லாத ஒரு செல் உயிரிகள். .கா. பாக்டீரியா, வைரஸ்

3.  புரோட்டிஸ்டாதெளிவான உட்கரு உள்ள ஒரு செல் உயிரிகள். . கா.

4.  கிளாமிடோமோனாஸ்

5.  பூஞ்சைபச்சையமற்ற ஒரு செல் அல்லது பல செல் தாவர அமைப்பு

6.   பிளாண்டேபச்சையமுடைய பல செல் தாவரம்

7.   அனிமாலியாபல செல் விலங்கு

பாக்டீரியா:

8.  சிறு குச்சி எனப்பொருள்

9.  கண்டறிந்தவர் - ஆண்டன்வான் லூவான்ஹாக் (பாக்டீரியாலஜியின் தந்தை)

10.  பாக்டீரியாவை பற்றி படிப்பதுபாக்டீலியாலஜி

11.  உலகில் தோன்றிய முதல் உயிரினம் - பாக்டீரியா

12.  ஒரு செல் உயிரி (புரோகேரியாட்டிக்) சாறுண்ணி & ஒட்டுண்ணி

13.  கூட்டு நுண்ணோக்கி மூலமே காண முடியும்

14.  தெளிவான உட்கரு, உட்கரு சவ்வு இல்லை

15.  டி.என்.. & ஆர்.என். உள்ளது

16.  செல்சுவரை சுற்றிய தடித்த உறைகேப்சூல் காணப்படும்

17.  கேப்சூல் பாலிசாக்கரைடு () பாலிபெப்டைடால் ஆனது.

18.  செல்சுவரில் காணப்படும் பொருள் - பொதுவாக மூரின் () பெப்டிடோகிளைகோன்

19.  கிராம் நெகடிவ் பாக்டீரியாவின் செல்சுவரில் -- லைப்போ புரதமும், கிராம் பாசிடிவ் பாக்டீரியாவின் செல் சுவரில் டெக்கோயிக் அமிலமும் உள்ளன.

20.  மரபுப்பொருள் - நியுக்ளியாய்டு () குரோமேட்டின் உடலம். இது ஒற்றை இழையால் ஆனது.

21.  சைட்டோப்பிளாசத்தில் 70S  வகை ரைசோபோம் உள்ளது

22.  சைட்டோப்பிளாசத்தில் காணப்படும் பிளாஸ்மிடு -- ஈரிழை டி.என்.. வினால் ஆனது.

23.  சைட்டோப்பிளாசத்தில் உள்நோக்கி குழிந்து காணப்படும் அமைப்புமீசோசோம் எனப்படும்.

24.  உணவூட்ட முறை - இரண்டு வகை:

25.  தன் உணவூட்டம்

a.  ஒளிச்சேர்க்கை மூலம் (-டு) பசும் கந்தக பாக்டீரியா

b.  வேதிச்சேர்க்கை மூலம் (-டு) நைட்ரோசோமோனஸ்

26.  சார்பு ஊட்டமுறை (இறந்த பொருள் மூலம்) (-டு) எஸ்ஸெரிசியா கோலை

வடிவங்கள்:

27.  1. காக்கஸ்: கோள வடிவம் -டு செக்கோ நாஸ்டாக்

28.  மைக்ரோ காக்கஸ் - தனி வடிவம்

29.  டிப்ளோகாக்கஸ் - இரு கோளம் வடிவம்

30.  ஸ்ட்ரெப்டோகாக்கஸ் - சங்கிலி வடிவம்

31.  ஸ்டைபைலோகாக்கஸ் - திராட்சை கொத்து வடிவம்

32.  பேசில்லஸ் - கோல் () குச்சி வடிவம் (-டு) லேக்டோ பேசில்லஸ்

33.  ஸ்பைரில்லம் - சுருள் வடிவம் (-டு) லெப்டோஸ்பைரா

34.  விப்ரியோகமா வடிவம் (-டு) விப்ரியோ காலரே

35.  காம்புடைய பாக்டீரியா (-டு) கேலியோ நெல்லி பெருஜீனோலா

36.  மோட்டுவிடும் பாக்டீரியா (-டு) ரோடோ மைக்ரோபியம்

37.  மைசீலிய இழை பாக்டீரியா (-டு) ஸ்ட்ரெப்டோமைசீஸ் கிரிசியஸ்

38.  இழை வடிவ சயனோ பாக்டீரியா (-டு) நீலப் பசும் பாசிகள்

39.  பாக்டீரியாக்களின் இயக்கத்திற்கு உதவுவதுகசையிழை

40.  கிராம் பாக்டீரியாவில் காணப்படும் எண்ணற்ற ரோமம் போன்ற அமைப்புபைலி () பிம்பிரியே

கசையிழை அடிப்படையில் பாக்டீரியாவின் வகைகள்:

41.  ஒற்றைக் கசையிழை - மோனோ டிரைகஸ்

42.  இருமுறை கசையிழை - ஆம்பிடிரைகஸ்

43.  ஒரு கற்றை கசையிழை - லோபோடிரைகஸ்

44.  கசையிழையற்றவை - ஏடிரைகஸ்

45.  செல்லை சுற்றி கசையிழை - பெரிடிரைகஸ்

46.  சாதகமற்ற சூழ்நிலையில் பேசில்லஸ், கிளாஸ்டிரிடியம் ஆகிய பாக்டீரியங்கள் தன்னைச்சுற்றி அமைத்து தன்னைச்சுற்றி அமைத்துக்கொள்ளும் உறை - எண்டோஸ்போர்கள் எனப்படும்

47.  எண்டோஸ்போரில் உள்ள அமிலம் -- டிபிகிளோனிக் அமிலம்

48.  பாக்டீரியாவின் இனப்பெருக்கம் - இரு சம பிளவு முறை

நன்மை தரும் பாக்டீரியங்கள்

49.  சூடோமோனாஸ் வகை பாக்டீரியங்கள் பெட்ரோலிய பொருட்களை சிதைக்கின்றன

50.  பாக்டீரியாவின் காற்றில்லா சுவாசம் மூலம் புரதங்கள் சிதைந்து ஒவ்வாத மண்முடைய பொருட்களாக (ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா, அமீன்ஸ்) மாற்றுவதுஅழுகுதல் எனப்படும்.

51.  பாலை சுவையூட்டுவதாக மாற்றும் பாக்டீரியங்கள் -- லேக்டோ பேசில்லஸ், லூக்கோநாஸ்டாக் கிரிமோனே

52.  பாலை புளிக்கச் செய்யும் பாக்டீரியாலேக்டோபேசில்லர்ஸ். இது லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது.

53.  பாலில் உள்ள புரதம் - கேசின்

54.  மாவை புளிக்கச் செய்யும் பாக்டீரியாலூக்கோநாஸ்டாக் மீசன்டிராய்டிஸ்

55.  நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாசையனோ பாக்டீரிய வகை (-டு) அசிட்டோபாக்டர் அசிட்டை, அனபினா, அசோலா, நாஸ்டாக்

56.  அவரை குடும்ப வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாரைசோபியம்.

57.  புகையிலை, தேயிலை மணக்கவும், தோல் பதனிடவும் பயன்படும் பாக்டீரியா - கிளாஸ்டிரிடியம்

58.  கொசுவை ஒழிக்கப் பயன்படும் பாக்டீரியாபேசில்லஸ்  துரிஞ்செனிஸிஸ்

தீமை தரும் பாக்டீரியங்கள்

பாக்டீரியாக்களால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்:

59.  எலுமிச்சை கேன்சர் - சாந்தோமோனஸ் சிட்ரி (பேசில்லஸ் கிராம் நெகட்டிவ் வகை)

60.  காரட் - மென்அழுகல் நோய்

61.  நெல் - பிளைட் நோய், வெப்பு நோய் (சாந்தோமோனஸ் சிட்ரி)

பாக்டீரியாக்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்:

62.  நோய்கள் பாக்டீரியங்கள்

63.  உணவு நஞ்சாதல்:  கிளாஸ்டிரிடியம்

64.  டைபாய்டு:  சால்மோனெல்லா டைபி

65.  லேப்டோஸ்பைரோசிஸ் (எலி சிறுநீர் மூலம்):  லெப்டோஸ்பைரோ இண்டோ ரோகன்ஸ்

66.  காசநோய்:  மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

67.  தொழுநோய் (சமூக நோய் () ஹேன்சனின் நோய்): மைக்கோபாக்டீரியம் லெப்ரே

68.  காலரா:  விப்ரியோ காலரே

விலங்கு நோய்கள்:

69.  ஆந்த்ராக்ஸ் - பேசில்லஸ் ஆந்த்ராக்ஸிஸ் (இது மனிதனையும் பாதிக்கும்)

70.  நுரையீரல் காசநோய்: டியூபர்குலின் தோல்நோய் சோதனை மூலம் உறுதி செய்யலாம்

எஸ்ஸெரியா கோலை பாக்டீரியா:

71.  கோல்வடிவம், கிராம் நெகட்டிவ் வகை. மனிதன் மற்றும் விலங்கு குடலில் வசிக்கிறது.

72.  நியூக்ளியஸ் பகுதியில் ஈரிழை டி.என். (ஜீனோமிக் டி.என்.) உண்டு

73.  சைட்டோப்பிளாசத்தில் உள்ள வட்டவடிவ ஜீனோம் அல்லாத டி.என்.. பிளாஸ்மிட் எனப்படும். இவ்வகை பாக்டீரியாவில் பிம்பிரியே காணப்படுகிறது.

74.  இனப்பெருக்கம்: இருசமப்பிளவு முறை, இணைவு முறை

வைரஸ்

75.  ஒரு முழுமையான வைரஸ் - விரியான் எனப்படும்

76.  கேப்சிட் () கேப்சோமியர் என்ற புரத உறையில் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை(நியுக்ளியாய்டு) உடையது.

77.  சில வைரஸ்கள் கொழுப்பு உறையால் ஆனது

78.  டி.என். () ஆர்.என்.. உள்ளது

79.  பாக்டீரியங்களைத் தாக்கும் வைரஸ்கள் பாக்டீரியாபேஜ்கள் (T4 வைரஸ்கள்) எனப்படும்.

80.  முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் -- புகையிலை மொசைக் வைரஸ் (TMV வைரஸ்).

81.  இதனைக் கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி

82.  வைரஸை படிகமாக்கியவர் - ஸ்டான்லி

83.  பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர் - எட்வர்டு ஜென்னர்.

84.  தாவ வைரஸ்கள் ஆர்.என்.ஏக்களால் ஆனது. விலங்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாபேஜ்கள் டி.என்.ஏக்களால் ஆனது.

85.  வைரஸ்களை எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காண முடியும்.

86.  மில்லி மைக்ரான் () நானோமீட்டரால் அளக்கப்படுகிறது.

87.  மிகச்சிறிய வைரஸ் -- சாட்டிலைட் வைரஸ்

88.  மிகப்பெரிய வைரஸ் -- உருளைக்கிழங்கு வைரஸ்

89.  கோளவடிவ வைரஸ் - இன்புளுயன்ஸா

90.  நீள் உருளை வடிவ வைரஸ் (TMV)

91.  தலைப்பிரட்டை வடிவ வைரஸ் - பாக்டீரியாபேஜ்

92.  செங்கல் வடிவ வைரஸ் - அம்மை வைரஸ்

93.  மனிதனுக்கு உண்டாகும் வைரஸ் நோய்கள்: வெறிநாய்க்கடி (ரேபிஸ்), தடுமன், சின்னம்மை, பெரியம்மை, புட்டாளம்மை, மஞ்சள்சாமாலை, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம் (போலியோ), எய்ட்ஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

94.  கால்நடைகளுகு;கு உண்டாகும் வைரஸ் நோய்கள்: வாய்க்காலடி நோய், பசு அம்மை, கோழி அம்மை, கோமாரி.

தாவரங்களுக்கு உண்டாகும் வைரஸ் நோய்கள்:

95.   புகையிலைமொசைக் நோய், பல்வண்ண நோய்

96.  வாழைஉச்சி கொத்துநோய்

97.  உருளை - இலைச்சுருள் நோய்

98.  பீட்ரூட் - மஞ்சள் நோய்

99.  வேறிநாய்க்கடிக்கு (ரேபிஸ் () ஹைட்ரோபோபியா) மருந்து கண்டறிந்தவர் லூயி பாயிஸ்டியர்

100.  தடுமன் -- ரைனோ வைரஸ் (RNA வகை)

101.  ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - டீ ஆர்போ வைரஸ் - கியூலக்ஸ் கொசு மூலம் பரவுகிறது

எய்ட்ஸ் (Acquired Immuno Deficiency Syndrome)

102.  உண்டாக்குவது: HIV (Human Immuno Deficiency Virus)

103.  HIV வைரஸ் - கொழுப்பு உறை கொண்ட RNA வைரஸ்

104.  எய்ட்ஸ் பரவும் முறை: உடலுறவு, ரத்தம், தாய் வழ சேய்

105.  எய்ட்ஸை கண்டறியும் சோதனைஎலீசா (ELISA) சோதனை

106.  எய்ட்ஸை உறுதிப்படுத்தும் சோதனைவெஸ்டர்ன் பிளாட் சோதனை

107.  வாழ்நாளை நீட்டிக்கும் மருந்து AZT (அசிட்டோதைமிடின்)

பூஞ்சைகள்:

108.  பச்சையமற்ற தாலோபைட் வகை தாவரம் - பூஞ்சை

109.  பூஞ்வை பற்றி படிக்கும் படிப்புமைக்காலஜி

110.  பூஞ்சைபல செல்கலாளான யுகேரியாடிக் வகை

111.  வேர்க்கடலையிலுள்ள பூஞ்சைசெக்கோஸ்போரா (ஒட்டுண்ணி)

112.  ரைசோபஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் (நாய்குடை) – சாறுண்ணி

113.  பூஞ்சையின் உடலம் மைசீலியம் எனப்படும்

114.  பூஞ்சையின் மைசீலியத்திலுள்ள மெல்லிய இழைஹைப்பாக்கள் எனப்படும்

115.  பூஞ்சையின் செல்சுவரின் கைட்டின் மற்றும் செல்லுலோஸால் ஆனது

116.  பூஞ்சையின் வெஜிடேட்டிவ் நிலைதாலஸ் எனப்படும்

117.  மரக்கட்டை பூஞ்சையின் பெயர்:  சைலோ பில்லஸ்

118.  முடி அல்லது மாட்டுக்கொம்பின் மீது வளர்வதுகெரட்டினோபில்லஸ்

119.  உயர்நிலைத் தாவரங்களில் கூட்டுயிரியாக வளர்பவை: மைக்கோரைசா

120.  பாசிகளுடன் வளர்பவைலைக்கன்கள்

121.  ஒரு செல் பூஞ்சை -டு ஈஸ்ட் (நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது)

122.  உண்ணக்கூடிய காளான்கள் -- அகாரிகஸ் பைஸ்போரஸ் (நாய்குடை காளான்), வல்வேரியல்லா வல்வேசியே (சிப்பிக்காளான்)

123.  ஈஸ்ட்டில் -- வைட்டமின் , மற்றும் பி காம்ளெக்ஸ் உள்ளது

இனப்பெருக்கம்:

124.  உடல், பாலிலா, பாலின இனப்பெருக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

125.  உடல் இனப்பெருக்கம்:  1) ஹைப்பாக்கள் மூலம் துண்டாதல் முறையில் நடைபெறுகிறது 2) தசைவழி இனப்பெருக்கம் - மொட்டுவிடுதல், ஸ்கிளிரோசியம் சைசோமார்கள் மூலம் நடைபெறுகிறது

126.  பாலிலா இனப்பெருக்கம் - சூஸ்போர், ஸ்போரஞ்சியோஸ்போர், கொனிடியோஸபோர், எண்டோஸ்போர்கள் மூலம் நடைபெறுகிறது

127.  நகரும் திறனற்ற ஸ்போர் - ஸ்போரன்சியோஸ்போர்

பால் இனப்பெருக்கம்:

128.  ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே தாலஸில் காணப்பட்டால் அது ஹோமோதாலிக் அல்லது மோனோஸியஸ் எனப்படும்.

129.  ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பு வெவ்வேறு தாலஸில் காணப்பட்டால் ஹெட்டிரோதாலிக் அல்லது டையோசிஸ் எனப்படும்

130.  தாலசின் உடல் முழுவரும் இனப்பெருக்க உறுப்பாக மாறும் நிலை = ஹோலோகார்பிக்

131.  ஒரு சில பகுதி மட்டும் இனப்பெருக்க உறுப்பாக மாறும் நிலையூகார்பிக்

132.  கேமிட்டாஞ்சியத்திலிருந்து தோன்றும் ஒத்த கேமீட்டுகள் - ஐசோகேமி எனப்படும்.

133.  கேமிட்டாஞ்சியத்திலிருந்து தோன்றும் வேறுபட்ட கேமீட்டுகள் - அனைசோகேமி எனப்படும்

134.  ஆண் கேமிட்டுகள் - ஆந்திரோசோவாய்டு அல்லது ஸ்பெர்மட்டிட்டுகள் உருவாகுமிடம் - ஆந்திரிடியம்

135.  பெண் கேமிட்டுகள் உருவாகுமிடம் - ஊகோனியம்

136.  கேமிட்டுகளின் இணைவுகருவுறுதல் எனப்படும்

137.  பூஞ்சையின் வேர்ப்பகுதிரைசாய்டு அல்து ஹாஸ்டோரியங்கள் எனப்படும்.

138.  முள்ளங்கி மற்றும் கடுகு குடும்ப தாவரங்களில் வெண்துரு நோயை உருவாக்கும்.

139.  ஒட்டுண்ணி காளான் - அல்புகோ காண்டிடா. இவை  கொனிடியோஸ்போர் மூலம் இனப்பெருக்கம் அடைகின்றன.

140.  கொனிடியோஸ்போர் ஒன்றுடன் ஒன்று பச்சைத்தட்டுகளால் ஆன திசுக்களால் இணைக்கப்பட்டுள்ள பகுதி - இஸ்த்மஸ் மற்றும் பிரிவு செல்கள்

தாவரத்தின் பெயர் &  பூஞ்சையால் ஏற்படும் நோய்கள்:

141.  கடுகு, முள்ளங்கி:  வெண் துரு நோய்

142.  கோதுமை:  கரு துரு நோய்

143.  கரும்பு:  செவ்வழுகல் நோய்

144.  உருளைக்கிழங்கு:  பின்தோன்று வெப்பு நோய்

145.  முள்ளங்கி:  வெண்துருநோய் (அல்புகோ காண்டிடா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது)

அகாரிகஸ் (நாய்க்குடை காளான்)

146.  அகாரிகஸ் காளானில் உள்ள குடை போன்ற அமைப்புபைலியஸ் எனப்படும்

147.  அகாரிகஸ் காளானில் உள்ள தண்டு போன்ற அமைப்பு - ஸ்டைப் எனப்படும்

148.  அகாரிகஸ் காளானில் பைலியஸீக்கும் ஸ்டைப்புக்கும் இடையே உள்ள வளையம் போன்ற அமைப்புஆனலஸ் எனப்படும்

149.  அகாரிகஸ் காளானில் பைலியஸின் அடிப்பகுதியில் நுண்தட்டுக்கள் உள்ளன.

150.  நெருக்கமான ஹைப்பாக்களாலான நுண்தட்டின் மையப்பகுதிட்ராமா எனப்படும்

151.  ட்ராமாவின் இருபக்கங்களிலும் காணப்படுபவைதுணை ஹைமீனியங்கள். இது சிறிய உருண்ட செல்களால் அமைந்த அடுக்கு ஆகும்

152.  துணை ஹமீனியத்தின் இருபக்கங்களிலும் காணப்படுபவைஹைமீனியம். இப்பகுதியில் வளமிக்க பெஸிடியம்கள் மற்றும் வளமற்ற பாராபைசிஸ்கள் ஆகிய செல்கள் காண்படுகிறன்றன.

153.  காளான் வித்துக்கள் எனப்படுவது - ஸ்போர்கள் அல்லது சிறிய மைசீலிய துண்டுகள்.

154.  காளான் வித்துக்களை வளரவேண்டிய வளர்தளத்தில் இட்டு கலக்கும் முறை  - ஸ்பான்னிங் எனப்படும்.

155.  காளான் வளர்த்தலில் வளர்தளத்தில் மைசீலியம் வளர்ந்த பிறகு, களிமண் அல்லது சாண உரத்தினை கலக்கும் முறைகேஸிங் எனப்படும்

பெனிசிலியம்: (பெனிசிலியம் நொட்டேட்டம்)

156.  வகுப்பு : ஆஸ்கோமைசீட்ஸ்

157.  சாறுண்ணி வகை பூஞ்சை

158.  கண்டறிந்தவர் - அலெக்சாண்டர் பிளமிங்

159.  வரிசை: அஸ்பெர்ஜில்லஸ்

160.  இவை பச்சை அல்லது நீலப்பூஞ்சை என அழைக்கப்படுகிறது

161.  ரொட்டி மற்றும் வெண்ணெய் ஆகிய உணவுப்பொருட்களை பாழாக்குகிறது

162.  ஒவ்வொரு செல்லிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியஸ் உள்ளது

163.  இதன் சேமிப்புப் பொருள் - எண்ணெய்துளிகள்

164.  இனப்பெருக்கம் 1) தழைவழி இனப்பெருக்கம் - ஸ்கிளிரோசியம் மூலம்

165.  2) பாலிலா இனப்பெருக்கம் - கொனிடியோஸ்போர் அல்லது ஆய்டியங்கள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் (சக்கரை வளர்தளத்தில்) நடைபெறுகிறது.

166.  பேனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலியம், கிரைகோஜினம் ஆகிய பூஞ்சைகள் நுண்ணுயிர் எதிர்பபொருள்களாகும்.

167.  பெனிசிலியம் கிரியோபில்லம் - தேமல், படை, மற்றும் சேத்துப்புண்ணுக்கு மருந்து

168.  பெனிசிலியம் ராக்கிபோர்டி, பெனிசிலியம் காமம்பெர்டிபாலாடைக்கட்டி தயாரிக்க பயன்படுகிறது.