Type Here to Get Search Results !

தாவரவியல் - 5 | 187 Questions

தாவரவியல் - 5

 

பயன்பாட்டு உயிரியல்:

தாவரத்தின் பெயர் தாவரவியல் பெயர் குடும்பம் மருத்துவப் பயன்

 

1. தாவரத்தின் பெயர்: வெள்ளைப் பூண்டு 

தாவரவியல் பெயர்: அல்லியம் சட்டைவம்

குடும்பம்: லில்லியேஸி

மருத்துவப் பயன்: இருமல், ஆஸ்துமா, மலச்சிக்கல்

 

2. தாவரத்தின் பெயர்: குப்பைமேனி

தாவரவியல் பெயர்: அகாலிபா இண்டிகா

குடும்பம்: யூபோர்பியேஸியே

மருத்துவப் பயன்: இதிலிருந்து பெறப்படும் அகாலியாஎன்ற மருந்து நிமோனியா, ஆஸதுமாவைக் குணப்படுத்தும்.

 

3. தாவரத்தின் பெயர்: கற்றாழை

தாவரவியல் பெயர்: அலோபார்பேடென்ஸ்

குடும்பம்: லில்லியேஸி

மருத்துவப் பயன்:  சரும வியாதி, மலச்சிக்கல், கல்லீரல், மண்ணீரல், தோல் நோய்களை குணப் படுத்தும்.

 

4. தாவரத்தின் பெயர்: வல்லாரை

தாவரவியல் பெயர்: சென்டெல்லா ஆசியாட்டிகா

குடும்பம்: அம்பெல்லிபேரே

மருத்துவப் பயன்: நினைவாற்றல், பெரும் வியாதி, எலும்பு உருக்கி நோய்

 

5. தாவரத்தின் பெயர்:  நெல்லிக்காய்

தாவரவியல் பெயர்: எம்லிகா அபிஸனாலிஸ்

குடும்பம்: யுபோர்பியேஸியே

மருத்துவப் பயன்: மலமிளக்கி, ஸ்கர்வி நோய்

 

6. தாவரத்தின் பெயர்: துளசி

தாவரவியல் பெயர்: ஆசிமம் சாங்டம்

குடும்பம்: லேபியேடே

மருத்துவப் பயன்: இருமல், பிரான்கைடிஸ்

 

7. தாவரத்தின் பெயர்: கீழாநெல்லி

தாவரவியல் பெயர்: பில்லாந்தஸ் அமாரஸ்

குடும்பம்: யூபோர்பியேஸியே

மருத்துவப் பயன்: மஞ்சட்காமாலை, வயிற்றுப்புண்.

 

8. தாவரத்தின் பெயர்: மணத்தக்காளி

தாவரவியல் பெயர்: சொலானம் நைக்ரோம்

குடும்பம்: சொலனேசியே

மருத்துவப் பயன்: வாய்ப்புண், சருமநோய்

 

9. தாவரத்தின் பெயர்: கண்டங்கத்திரி

தாவரவியல் பெயர்: சொலானம் சாந்தோகார்பம்

குடும்பம்: சொலனேசியே

மருத்துவப் பயன்: வலிப்பு, மலச்சிக்கல்.

 

10. தாவரத்தின் பெயர்: இஞ்சி

தாவரவியல் பெயர்: ஸிஞ்சிபர் அபினாலிஸ்

குடும்பம்: ஸிஞ்சிபெரேஸியே

மருத்துவப் பயன்: பசியைத் தூண்டுதல்

 

11. தாவரத்தின் பெயர்: வெங்காயம்

தாவரவியல் பெயர்: அலியம் சீபா

குடும்பம்: லிலியேசியே

மருத்துவப் பயன்: இருமல், மஞ்சட்காமாலை.

 

12. தாவரத்தின் பெயர்: சந்தனம்

தாவரவியல் பெயர்: எபிட்ரா ஜெராட்டியானா

குடும்பம்: சாண்டலேசியே

மருத்துவப் பயன்: எபிட்ரைன் என்ற ஆல்டிஹைடு இதன் தண்டிலிருந்து கிடைக்கிறது. இது ஆஸ்த்துமாவை குணப்படுத்துகிறது.

 

13. தாவரத்தின் பெயர்: கரிசலாங்கண்ணி

தாவரவியல் பெயர்: எக்லிப்டாப்ராஸ்ட் ரேட்டா

குடும்பம்: கம்போஸ்ட்டே

மருத்துவப் பயன்: மஞ்சள்காமாலை

 

14. தாவரத்தின் பெயர்: நன்னாரி

தாவரவியல் பெயர்: ஹெமிடெஸ்மஸ் இண்டிகா

குடும்பம்: ஆஸ்கிலிப்பியடே ஸியே

மருத்துவப் பயன்: உடல் குளிர்ச்சி

 

15. தாவரத்தின் பெயர்: பெருங்காயம்

தாவரவியல் பெயர்: பெருல்லா அஸஃபேர்ட்டிடா

குடும்பம்: அம்பெல்லிஃபெரே

மருத்துவப் பயன்: சீரணக் கோளாறு

 

16. தாவரத்தின் பெயர்: ஆமணக்கு

தாவரவியல் பெயர்: ரெசினல் கம்யூனிஸ்

குடும்பம்: யுபோர்பியேஸியே

மருத்துவப் பயன்: பேதி மருந்து.

 

17. தாவரத்தின் பெயர்: மஞ்சள்

தாவரவியல் பெயர்: கர்க்குபா டொமஸ்டிகா

மருத்துவப் பயன்: புண்களை ஆற்றும், மஞ்சள் காமாலை

 

18. தாவரத்தின் பெயர்: சர்ப்பகாந்தி

தாவரவியல் பெயர்: ராவுல்பியா சர்பன்டைனா

குடும்பம்: அபோசயனேஷியே

மருத்துவப் பயன்: ரத்த அழுத்தம், மனநோய், தோல் வியாதி, பாம்புக்கடி, பூச்சிக்கடி

 

19. உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1948

20. நாம் தினமும் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு 2 முதல் 2.5 லிட்டர்

21. குடிநீரை தூய்மைப்படுத்தும் முறைகுளோரினேசன் எனப்படும்.

22. குளோரினேசன் செய்ய பயன்படும் வேதிப்பொருள்கால்சியம். ஹைப்போ குளோரைடு (1 கலன் நீருக்கு 10 சொட்டு வீதம் கலக்கப்பட வேண்டும்)

23. நிலைமாற்றம் அடையாத கழிவுப்பொருட்களுக்கு -டு. பிளாஸ்டிக் பொருட்கள்.

24. புகையிலையால் தயார் செய்யப்பட்ட பொருள்களில் காணப்படும் நச்சுப் பொருட்களின் எண்ணிக்கை – 18.

25. போதை மருந்துகளின் மறுபெயர் - மனோரீதியான மருந்துகள் எனப்படும். இதற்கு .கா ஒபியம் மாரிஜீவானா, கோகைன், மார்பைன், எல்.எஸ்.டி (லைசர்ஜிக் அமில டை ஈதைல் அமிட்)

26. சித்த வைத்திய முறைஅகத்தியர் முறை என அழைக்கப்படுகிறது

27. உருளைக்கிழங்கின் தாவரவியல் பெயர் -- சொலேனம் டியூபரோசம்

28. வேம்பின் தாவரவியல் பெயர் -- அஸாடிராக்டா இண்டிகா

29. இரப்பரின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்

30. வாழையின் தாவரவியல் பெயர் - மியூஸா பாரடிசியாகா

31. மாம்பழத்தின் தாவரவியல் பெயர் - மாஞ்சிபெரா இண்டிகா

32. கரும்பின் தாவரவியல் பெயர் - சர்க்காரம் அபிசினோம்

33. மிளகு தாவரத்தின் தாவரவியல் பெயர் - பெப்பெர் நைகரம்

34. மிளகாயின் தாவரவியல் பெயர் - காப்சிகம் புரூட்டெசென்ஸ்

35. ஏலக்காயின் தாவரவியல் பெயர் - எலிடேரியா கார்டமோமம்

36. கடுகின் தாவரவியல் பெயர் - பிராசிகா ஹர்டா

37. தேக்கு மரத்தின் தாவரவியல் பெயர் - டெக்டோனா கிராண்டிஸ்

38. எருக்கின் தாவரவியல் பெயர் - கலோட்டிராபிஸ் ஜைஜான்டியா

39. சன்பிளவர் தாவரத்தின் தாவரவியல் பெயர் -- கார்த்தாமஸ் டிங்க்டோரியஸ்

40. கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் - அக்கேஸியா அராபிக்கா, இதிலிருந்து கிடைக்கும் பிசின் - வேலம் பிசின், டேனின் என்ற பொருளும் இதில் உள்ளது.

41. நித்ய கல்யாணியின் (சுடுகாட்டுமல்லி) தாவரவியல் பெயர் - கேதரைன்தஸ் ரோசியஸ். இது புற்றுநோயைக் குணமாக்குகிறது. சிறுநீரில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

42. வேரிலிருந்து பெறப்படும் மருந்து தாவரங்கள் -- சர்ப்பகாந்தி, பெருங்காயம்.

43. மரக்கட்டை தண்டிலிருந்து பெறப்படும் மருந்து தாவரங்கள்சந்தனம்.

44. இலைகளிலிருந்து பெறப்படும் மருந்து தாவரங்கள்கற்றாழை.

45. கனிகள் மற்றும் விதைகளிலிருந்து பெறப்படும் மருந்து தாவரங்கள்நெல்லிக்கனி.

46. தாவர வளர்ச்சிக்கு தேவையான தனிமங்களின் எண்ணிக்கை – 20.

47. பெருங்காய தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும் ஒலியோரெசின் எனும் பிசின் மயக்கமூட்டியாகவும், சிறுநீர் பெருக்கத்திற்கும் பயன்படுகிறது.

48. மட்டநிலத்தண்டு தாவரங்களுக்கு (.கா) மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூண்டு.

49. சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படும் மருந்துகுயினைன். இம்மருந்து மலேரியா, வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது.

50. கிராம்பு (லவங்கம்) என்பது பூமொட்டு ஆகும்

51. இலவங்கப்பட்டை கிடைக்கப்பெறும் தாவரம் -- சின்னமோமம் ஸிலானிக்கம்

52. வின் கிறிஸ்டின் என அழைக்கப்படுவதுசுடுகாட்டுமல்லி (நிதய் கல்யாணி), இது ரத்தப் புற்றுநோயைக் குணமாக்கும்.

53. தேசிய யோகா பயிற்சி கூடம் அமைந்துள்ள இடம் -- பூனா (மாகராஷ்டிரா).

54. ஓத்தவைகளின் விதி பயன்படுத்தப்படும் மருத்துவமுறைஹோமியோபதி.

55. தேசிய ஹோமியோபதி கழகம் துவங்கப்பட்ட ஆண்டு – 1975 டிசம்பர் 10

56. யுனானி மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியவர்கள்அரேபியர்கள்.

57. யுனானி மருத்துவ கழகம் அமைந்துள்ள இடம்பெங்களுர்.

58. தேசிய ஆயுர்வேத கழகம் அமைந்துள்ள இடம்ஜெயப்பூர்.

59. இரப்பரைக் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்.

60. இரப்பர் எனப் பெயரிட்டவர் - ஜோசப் பிரிஸ்ட்லி.

61. இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவம் - லேட்டக்ஸ்

62. இட்லி பூ என அழைக்கப்படுவதுஇக்ஸோரா.

63. தும்பைச் செடியின் மலர்களில் அதிகமாக தேன் சுரக்கிறது.

64. நீர் நிலையில் வாழும் உயிர்களை வளர்க்கும் முறைநீர் வளர்ப்பியல் (அக்குவாகல்சர்).

65. முதன் முதலில் விலங்கு பாதுகாப்புச் சட்டம் (SPCA) இயற்றப்பட்ட ஆண்டு 1890.

66. டாக்டர் வில்லியம் விதரிங் இதய நோய்க்கு டிஜிடாலிஸ் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தைப் பயன்படுத்தினார்.

67. பென்சிலின் என்ற நோய் தடுப்பு மருந்து பூஞ்சையிலிருந்தும், ஸ்ட்ரெப்டோமைசின் என்ற நோய் தடுப்பு மருந்து பாக்டீரியத்திலிருந்தும் பெறப்படுகின்றன.

68. தண்டு நார்களுக்கு (.கா) சணல் (ஹெம்ப்),  மணிலா நார்.

69. இலை நார்களுக்கு (.கா) கற்றாழை நார்

70. மேற்பரப்பு நார்களுக்கு (.கா) பருத்தி

71. எளிதில் ஆவியாகும் எண்ணெய்க்கு (.கா) சோயா எண்ணெய்

72. மிதமாக ஆவியாகும் எண்ணெய்கள்: சூரியகாந்தி (இதய நோயாளிக்கு நல்லது)

73. உலரா எண்ணெய்கள்: ஆமணக்கு (மலமிளக்கி), நிலக்கடலை (வனஸ்பதி தயாரிக்க)

74. பூச்சிக்கொல்லிகளுக்கு .கா.  DDT  டைபீனைல் டைகுளோரோ டிரை குளோரோ ஈத்தேன் மற்றும் BHC – பென்சீன் ஹெக்ஸா குளோரைடு

75. 300 செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவான வெப்பநிலை தானிய சேமிப்பிற்கு உகந்த வெப்பநிலை ஆகும்.

76. சேமிப்பு தானியங்களின் மீது பூச்சிகள், புழுக்கள், நுண்ணுயிரிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை பெருந்திரளான சிதைவு (Infestation) என்பர்.

77. எலியை கொல்ல பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்: துத்தநாக பாஸ்பைடு, வார்ஃபெரின்.

78. உருளையில் இரண்டு சதவீதம் புரதமும், 17 சதவீதம் ஸ்டார்ச்சும் உள்ளன.

79. நெல் தாவரத்தின் இருசொல் பெயர் - ஒரைசா சடைவா, இத்தாவரம் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

80. தேக்கு, சந்தனம், ரோஸ்கட்டை, மகோகனி, வல்நெட் போன்ற கட்டைகள் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன.

81. கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படுவதுவில்லோ மரக்கட்டைகள்.

82. ஹாக்கி மட்டைகள், கிரிக்கெட் ஸ்டம்புகள் தயாரிக்கப் பயன்படும் மரக்கட்டைகள் - மல்பெரி மரம்.

83. காகித உற்பத்தியில் பயன்படும் மரங்கள் அகாத்திஸ், சிர், ஸ்பரூஸ்

84. இலவங்க எண்ணெயியல் உள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு. இது நுண்ணுயிர்களுக்கு எதிர் உயிரியாக பயன்படுகிறது.

85. தமிழ்நாட்டில் கிராம்பு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் - குற்றாலம்

86. ஏல எண்ணெய் மதுபானங்களை மணமூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

87. கடுகு எண்ணெய் பாம்பு கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

88. தாவர எண்ணெய்களில் காணப்படுவதுஒலியிக் அமிலமும், கிளிசராலும்.

89. மல்லிகை எண்ணெய் பெறப்படுவதுமலரிலிருந்து

90. தைல எண்ணெய் பெறப்படுவதுஅதன் இலையிலிருந்து

91. ஆரஞ்சு எண்ணெய் பெறப்படுவதுஅதன் கனித்தோலிலிருந்து

92. சைப்ரஸ் எண்ணெய் பெறப்படுவதுஅதன் கிழங்குகளிலிருந்து

93. சந்தன எண்ணெய் பெறப்படுவதுஅதன் வேர் மற்றும் கடின கட்டையிலிருந்து

94. எள்ளிலிருந்து நல்லண்ணெய் பெறப்படும் முறைகுளிர் அழுத்த முறை.

95. தேங்காய் எண்ணெய் கொப்பரையிலிருந்து பெறப்படும் முறைஹைட்ராலிக் அழுத்த முறை.

96. சூரியகாந்தி விதையிலுள்ள கொழுப்பு சதவீதம் 40 – 50 %  புரதம் 7 – 13 % இதில் காணப்படும் வைட்டமின்கள் A, B, E

97. சோயா எண்ணெயில் கொழுப்பு 19 – 20 %  புரதம் 30 – 40 %

98. சாதாரண புல்ஆல்பா,  ஆல்பா எனப்படும் அவரை வகையைச் சார்ந்தது

99. ஸ்பைருலினாவில் நீரற்ற எடையில் 60 – 70 சதவீதம் புரதம் உள்ளது

100. கடுகு எண்ணெயில் கலப்படம் செய்யப்படும் பொருள் - அர்ஜிமோன் எண்ணெய்.

101. WHO – World Health Organisation.  1948 ஏப்ரல் 7ல் தொடங்கப்பட்டது.

102. மனிதனுக்கு ஒருநாளைக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு 2 – 2.5 லிட்டர்

103. குடிநீரை தூய்மைப்படுத்தும் காரணிகால்சியம் ஆக்ஸி குளோரைடு (பிளிச்சிங் பவுடர்)

104. குடிநீரை தூய்மைப்படுத்தும் முறைகுளோரினேசன்

105. குளோரஜன் என்பது நீரைத் தூய்மைப்படுத்தும் திரவம். இதில் சோடியம் ஹைப்போ குளோரைடு உள்ளது.

106. ஓபியம், கோஹைன், மார்ஜூவனா, கஞ்சா, மார்பின், ஹெராயின், LSD  ஆகியன போதைப்பொருட்கள்.

107. வேளாண்மைக் கல்வியின் சமீபத்திய கிளைஅக்ராநாமி. இது உணவு தீவனம், நார் பொருட்கள் பெருக்கம் பற்றிய கல்வியாகும்

108. பணப்பயிருக்கு உதாரணம் - பருத்தி, கம்பு. சணல், புகையிலை.

 

நெற்பயிரின் பருவகாலங்கள்

109. கார் -  மே முதல் ஜூன் வரை

110. குறுவைஜூன் முதல் ஜூலை வரை

111. காலடி - செப்டம்பர் முதல் அக்டோபர் வரை

112. சம்பாஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை

113. ஆடிப்பட்டம் - ஜூலையில் விதைத்தல் - மானாவாரி பயிர்

114. புரட்டாசி பட்டம் - செப்டம்பரில் விதைத்தல் - மிதமான மழைப் பயிர்

115. ஐப்பசி பட்டம் - அக்டோபரில் விதைத்தல் - மழைக்கால பயிர்

116. கார்த்திகை பட்டம் - நவம்பரில் விதைத்தல் - குளிர்கால பயிர்

117. தைப்பட்டம் - ஜனவரியில் விதைத்தல் - பனிக்கால பயிர்

118. சித்திரைப் பட்டம் - ஏப்ரலில் விதைத்தல் - கோடைக் கால பயிர்

119. பெரும ஊட்டப் பொருட்கள் இருவகைப்படும். 1. முதல் நிலை ஊட்டப்பொருள்கள் .கா. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் 2. இரண்டாம் நிலை ஊட்டப்பொருள்கள் .கா. கால்சியம், மெக்னீசியம், கந்தகம்

120. நுண் ஊட்டப் பொருட்களுக்கு உதாரணங்கள் -- இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின்

121. தொழு உரத்தில் காணப்படுவதுகால்நடைத் தீவனம், சாணம், சிறுநீர்

122. மக்கிய உரம் - கம்போஸ்ட் என அழைக்கப்படுகிறது

123. பசுந்தாள் உரம் என்பதுஒரு பயிரை சாகுபடி செய்து அதை நிலத்திலேயே மடக்கி உழுது விடுதல் ஆகும்.

124. பசுந்தாள் உரப்பயிர்களுக்கு .கா. ஆவாரை, எருக்கு, புங்கம், தக்கைப்பூண்டு, அவுரி, பில்லிப்பயறு

125. உயிர் உரமாக பயன்படுத்தப்படும் நீர்பெரணிஅஸோல்லா பின்னேட்டா

126. நஞ்சைத் தோட்டத்துக்கு ஏற்ற பசுந்தாள் உரப்பயிர் - கொளுஞ்சி

127. இரசாயன உரங்கள் - அனங்க உரங்கள் எனப்படும்

128. தழைச்சத்தில் சிறந்தது யூரியா

129. தழைச்சத்துநைட்ரஜன் உரங்கள்

130. கனிச்சத்துபாஸ்பேட் உரங்கள்

131. சாம்பல் சத்துபொட்டாசியம் உரங்கள்

132. உயிரி உரங்களுக்கு .கா. பாஸ்போ பாக்டீரியர், நீலப்பசும்பாசி, பூஞ்சைகள்

133. பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியாவுக்கு .காபேசில்லஸ் சர்குலன்ட்ஸ்

134. ஊட்டப்பொருளை உறிஞ்ச உதவும் பூஞ்சைகளுக்கு .காகுளோமஸ், ஜிஜைகாஸ்போரா.

135. சொட்டு நீர் பாசனத்தில் எமிட்டர் அல்லது டிரிப்பர்கள் மூலம் பயிரை வேர்ப்பகுதியில் நீர் சொட்ட விடப்படுகிறது.

136. கோதுமை வயலில் களைகளாக கருதப்படும் தாவரங்கள் - பார்லி, கடுகு

137. களைச் செடிகளுக்கு உதாரணம் - கொட்டைப் புல், காட்டுச்சோளம், கீரைகள், டிரையந்தமா, கீனப்போடியம்

138. சப்பாத்திக் கள்ளியை கட்டுப்படுத்தும் முறைகாக்னியஸ் பூச்சிகள் மூலமாக தீங்குயிரிகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் அல்லது பூஞ்சைகளால் தயாரிக்கப்பட்ட கலவைஉயிரி தீங்குயிரி கொல்லிகள் எனப்படும்.

139. ரைனோசரஸ் வண்டுகள் வைரஸ் நோயூக்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது.

140. பாக்டீரிய பூச்சிக் கொல்லிகளுக்கு .கா பேசில்லஸ் எண்ட்ரோபாக்டர், புரோட்டியஸ், சூடோமோனாஸ்.

141. வெட்டுக்கிளி, அபிடு பூச்சி, ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் பூஞ்சைக் கொல்லிகள் வெர்ட்டிசிலியம், பீலேரியா.

142. பூச்சிக்கொல்லி வைரஸ்களுக்கு உதாரணம் - பாலிஹிட்ரோஸ் வைரஸ், பாக்குலோ வைரஸ், என்டமோபாக்ஸ் வைரஸ்.

143. லெப்பிடாப்டெரன் லார்வாக்களை அழிக்கப் பயன்படுவதுபேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் என்ற பாக்டீரியா.

144. பூச்சிக்கொல்லிகள் - எண்டோசல்பான், மாலத்தீயான்

145. எலிக் கொல்லிகள் - துத்தநாக பாஸ்பேட், தேலியம் சல்பேட்

146. பூஞ்சைக் கொல்லிகள் - போர்டாக்ஸ் கலவை

147. உருளைப் புழு கொல்லிகள் -- கார்போஃபியூரான், பாரத்தியான்

148. களைக்கொல்லிகள் - ஃப்ளுகுளோரலின், அட்ரசன்

149. பாக்டீரியா கொல்லிகள் - ஆரியோமைசின், ஸ்ட்ரெப்டோமைசின், நியோமைசின்.

150. கைலோ பாலிகிரைசா தாக்கும் தாவரம்நெல்.

151. தாவரங்களுக்கு பெரும் சேதம் விளைவிப்பவைபூச்சியினங்கள்

152. ஒரே இடத்தில் ஒரே சமயம் இரண்டுக்கு மேற்பட்ட பயிர்களை பயிரிடுவதுஊடபயிரிடுதல், இதற்கு .காமுள்ளங்கியுடன் கீரை பயிரிடுதல், முள்ளங்கியுடன் இனிப்புச் சோளம் பயிரிடுதல்.

153. பசுமைப்புரட்சியுடன் தந்தை எனப்படுபவர் - நார்மன் போர்லாக்

154. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் தந்தை எனப்படுபவர் - எம். எஸ். சுவாமிநாதன்

155. உலகின் உணவுப் பரிசைப் பெற்ற வேளாண்மைத் துறை விஞ்ஞானிஎம். எஸ். சுவாமிநாதன்

156. பசுமைப்புரட்சி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - வில்லியம் எஸ். காட்.

157. பசுமைப்புரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள் -- கோதுமை, உருளை, அரிசி.

158. பசுமைப்புரட்சியால் உருவாக்கப்பட்ட நெல் வகை. ஆர். 8., .ஆர். 24., .ஆர்.50., ஏடி.ட்டி-37

159. பசுமைப்புரட்சியால் உருவாக்கப்பட்ட கோதுமை வகைசோனாரா – 64

160. கலப்பினச் சோர்க்கை முறையின் மூலம் புதிய ரகங்களை உருவாக்கும் முறைகள் - கூட்டுத் தேர்வு முறை, மரபு வழி தேர்வு முறை, பிற்கலப்பு முறை, செயற்கை கூட்டுக் கலப்பு

161. திடீர் மாற்ற முறை மூலம் பன்மய பயிர்களை உருவாக்க பயன்படுவதுகோல்சிசைன்.

162. தூயவழி தேர்வு முறையின் விரிவாக்கம் என அழைக்கப்படுவதுமரபு வழி முறை.

163. தூண்டப்பட்ட திடீர் மாற்ற முறையில் எக்ஸ்ரே, பீட்டா, காமா போன்ற கதிர்களைக் கொண்டு விதைகள் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு புதிய ரகங்கள் உருவாக்கப்படுகின்றன.

164. வேம்பிலிருந்து பெறப்படும்அஸாடிராக்டின்கிரைசாந்திமத்திலிருந்து பெறப்படும்.

165. “பைரித்திரின்போன்ற உயர்நிலை தாவர பூச்சிக்கொல்லிகள் வெட்டுக்கிளி, பூச்சிகள் ஆகியவற்றை அழக்கின்றன.

166. நம்நாட்டில் மொத்த நிலப்பரப்பில் நிலக்கரி பெறப்படுவது 4 சதவீதம் மட்டுமே.

167. தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரை மணிலிலிருந்து இல்மனைட், மோனசைட், ஆகிய தாதுக்கள் பெறப்படுகின்றன.

168. இந்தியாவில் பெருமளவில் எரிவாயு காணப்படும் இடம் - கிருஷ்ணா, கோதாவரி நதிப்படுகை.

169. ஆற்றல் சேமிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 2001.

170. ப்ளோரா எனப்படுவதுதாவரப் பட்டியல் ஆகும்.

171. பன்னா எனப்படுவதுவிலங்குப் பட்டியல் ஆகும்

172. கேழ்வரகு (ராகி) தாவரவியல் பெயர் - எலியுஸின் கொரக்கானா (போயேஸி குடும்பம்).

173. பழங்குடியினர் முக்கிய அடிப்படை உணவுகேழ்வரகு

174. கேழ்வரகின் மேம்பட்ட ரகங்கள் - சாரதா, கோ.1, கோ.2, கோ.7

175. தமிழ்நாட்டில் கோவில்பட்டியில் உருவாக்கப்பட்ட கேழ்வரகின் புது ரகம் - கோ-1.

176. சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் தானியம் கேழ்வரகு.

177. கேழ்வரகில் புரத சத்து அதிகமுள்ளது.

178. தாவரங்களில் ஒளிச்சேர்க்கைக்கும், நியூக்ளிக் அமில தயாரிப்பிற்கும் முக்கிய பங்கு வகிக்கும் தனிமம் -- மெக்னீசியம்

179. உயிரிய நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் கிரியா ஊக்கியாக பயன்படும் தனிமம்மாலிப்டினம்.

180. நெற்பயிருக்கு பாசன கால்வாய்கள் வழியாகவும், கரும்புக்கு நீள்பள்ளங்கள் வழியாகவும் நீர் பாய்ச்சப்படுகிறது.

181. பயிர் சுழற்சி முறை மேற்கொள்ளப்படுவதற்கு காரணம் -- நோயுண்டாக்கும் உயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதற்காக.

182. காப்பிதுரு நோய்

183. தேயிலைகொப்புள நோய்

184. தேன்னைமொட்டு அழுகல் நோய்

185. இம்மூன்று தாவர நோய்களை தாமிர பூஞ்சைக் கொல்லிகள் மூலம் தடுக்கலாம்

186. காப்பித்தூளில் சேர்க்கப்படும் கலப்படப்பொருள் - சிக்கிரி அல்லது புளிக்கொட்டை

187. டீத்தூளில் சேர்க்கப்படும் கலப்படப்பொருள் - மரத்தூள்