Type Here to Get Search Results !

தாவரவியல் - 6 | 116 Questions

 தாவரவியல் - 6

சூழ்நிலையியல்

1. தட்பவெப்ப நிலை வகைகள்:

2. ஆர்டிக் துரவ பகுதியில் காணப்படும் உயிரினங்கள் - பாசிகள், லைக்கன்கள், துருவமான், கரிபோ, காட்டெருமை

3. வடக்கு மித வெப்ப மண்டலம் (30 டிகிரி – 60 டிகிரி அட்சம்) பகுதியில் காணப்படும் உயிரினங்கள் - ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள், ஓக், மேப்பிள், செஸ்நெட், ரேட்டில் பாம்பு, கனடா வாத்து

வெப்பமண்டல பகுதி:

4. ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசியாவின் ஒரு பகுதி, தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் அடங்கும்

5. காணப்படும் தாவரங்கள் - பைக்கஸ், பாம்பாக்ஸ் (மூங்கில்)

6. காணப்படும் விலங்குகள் - நெருப்புக்கோழி, யானை, எறும்புதின்னி, மலைப்பாம்பு

தெற்கு மிதவெப்ப மண்டல பகுதி:

7. ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இதில் அடங்கும்

8. காணப்படும் தாவரங்கள் - சவுக்கு, யூகலிப்டஸ், பனை

9. காணப்படும் விலங்குகள் - கிவி, கங்காரு, பென்குவின்

இந்திய தட்பவெப்ப மண்டல பகுதிகள்:

10. ஈரப்பகுதி (மழை) (200 செமீ மேல்)

11. .கா. மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவு, மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், அஸ்ஸாம்:

12. இப்பகுதியில் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன

மிதவெப்ப மண்டல பகுதி (100 – 200 செ.மீ)

13. .கா. இமயமலை அடிவாரம், உபியின் கிழக்குப்பகுதி, ஜம்மு, கிழக்கு தமிழகம், தக்காணபீடபூமி

14. இப்பகுதியில் இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன

வறண்டப்பகுதி (50 – 100 செமீ)

15. கர்நாடகா, தமிழ்நாடு, . பி., .பியின் மேற்குப்பகுதி

உயர் வறண்டப் பகுதி: (50 செமீக்கு கீழ்)

16. ராஜஸ்தான், பஞ்சாப்பின் தென் மேற்குப் பகுதி, வடமேற்கு குஜராத்

இந்தியாவில் காணப்படும் புல்வெளிகள்:

17. ஜீரோபிலஸ் (வறண்ட புல்வெளிகள்)

18. மீசோபிலஸ் (நடுத்தர புல்வெளிகள்)

19. ஹைக்ரோபிலஸ் (ஈரமான சவானா புல்வெளிகள்)

சதுப்புநிலத் தாவரங்கள்:

20. இவை ஹாலோபைட்டுகள், மாங்குரோவ் காடுகள் எனப்படுகிறது

21. சிதம்பரம் அருகே பிச்சாவரம், ராமேஸ்வர கடல்பகுதி, மேற்கு வங்காளத்தில் சுந்தரவனக்காடுகள், அந்தமான் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

22. இக்காடுகளில் காணப்படும் தாவரங்கள்: அவினீசியா, ரைசோபோரா. இதில் சுவாச வேர்கள்(நெமட்டோபோர்கள்) காணப்படுகின்றன

பூச்சி உண்ணும் தாவரங்கள்:

23. நைட்ரஜன் சத்து குறைவாக உள்ள தாவரங்கள் பூச்சிகளை உண்ணுகிறது.

24. பூச்சி உண்ணும் தாரவங்களுக்கு .காநெப்பந்தஸ், டுரோசிரா, அட்ரிகுலேரியா.

25. நெப்பந்தஸ்: குடுவைத்தாவரம் எனப்படுகிறது. இலைத்தாள் மாற்றுருவாகி குடுவையாக மாறியுள்ளது. இத்தாவரம் அசாமில் காணப்படுகிறது.

26. டுரோசிரா: சன்-டியூ தாவரம் எனப்படுகிறது.  சூரிய ஒளியில் பனித்துளி போல மின்னுவதால் இப்பெயர் பெற்றது. காஷ்மீரில் காணப்படுகிறது. இலைத்தாளில் காணப்படும் விரல்நீட்சிகள் மூலம் இத்தாவரம் பூச்சிகளை உண்ணுகிறது.

27. அட்ரிகுலேரியா: பிளாடர்வோர்ட் என அழைக்கப்படுகிறது. இதில் காணப்படும் பிளக்கப்பட்ட இலை பையுருப்பாக மாறி பூச்சிகளை உண்ண பயன்படுகிறது.

நீர்வாழ் தாவரங்கள் மற்றும் தகவமைப்புகள்:

28. நீர்வாழ் தாவரங்கள் - ஹைட்ரோபைட்டுகள் எனப்படும்

29. ஹைட்ரோபைட்டுகள் -டு வாலிஸ்நீரியா, ஹைட்ரில்லா, பிஸ்டியா, மார்சீனியா, ஐகோர்னியா (வெங்காய தாமரை), நிம்மையா (அல்லி).

30. நீரில் மிதப்பவை: ஐகோர்னியா, பெஸ்டியா, இதில் வேர்த்தூவிகளுக்கு பதில் வேர்பைகள் காணப்படுகிறது.

31. நீரில் மூழ்குபவை: வாலிஸ்நீரியா, ஹைட்ரில்லா

32. வேரூன்றி மிதப்பவை: நிம்மையா (அல்லி)

33. நீர்நில வாழ்வன : லிம்னோபைலா ஹெட்டிரோபில்லா

34. இடைநிலை தாவரம் மீசோபைட் எனப்படும் -டு மா, பலா

35. வறண்ட நில தாவரம் ஜீரோபைட் எனப்படும். -டு சப்பாத்தி கள்ளி, சவுக்கு, திருக்கள்ளி, அரளி, யூபோர்பியா, எருக்கு

36. சப்பாத்தி கள்ளியின் தண்டு - இலைத்தொழில் தண்டு எனப்படும்.

37. நீர்வாழ் விலங்குகள்ஹைட்ரோசீல்எனப்படும்

38. பிற தாவரத்தை தொற்றி வாழும் தாவரம் எபிடைட் () தொற்றுத் தாவரம் எனப்படும். -டு வாண்டா, ஆர்கிட். இவை தனது தொற்றுவேர் மூலம் வளிமண்டலத்திலுள்ள நீரை உறிஞ்சி தாமே உணவு தயாரித்து கொள்கின்றன.

39. தாவர ஒளிச்சேர்க்கையில் வெளிவரும் வாயுஆக்சிஜன்

40. மிதவை உயிரிக்கு எ-டு ரோடியோஃபர்கள்

காற்று மாசுபடுதல்:

41. புகையில் காணப்படும் புற்றுநோய் விளைவிக்கும் வேதிப்பொருள் - பென்சோபைரின்

42. பிளாஸ்டிக் பொருளை எரிக்கும் போதுடையாக்சின்என்ற வாயு உருவாகிறது.

43. அச்சு காகித்தில் காணப்படும் காரீயம் நுரையீரலை பாதிக்கின்றன. மேலும் மைய நரம்பு மண்டலம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பாதிக்கிறது.

44. சிகரெட் புகையிலுள்ள கதிரியக்க தனிமம் -- பொலோனியம் 210

45. மனித நடவடிக்கையால் ஏற்படும் மாசு பொருள் - ஆர்த்ரோ ஜெனின் எனப்படும்.

46. புதை படிவ எரிபொருள் (நிலக்கரி, பெட்ரோல்) எரிக்கும்போது கிடைக்கும் வாயுநைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு.

47. பூமியிலிருந்து 15 – 60 கி. மீ வரை ஸ்ட்ரேடோஸ்பியர் 3mm  தடிமனில் உள்ளது.

48. ஓசோன் அடுக்கு காணப்படும் இடம்ஸ்ட்ரேடோஸ்பியர்.

49. ஓசோன் அடுக்கு புவியின் மேற்பரப்பில் 15 – 30 கி.மீ வரை காணப்படுகிறது.

50. •ஓசோனை சிதைக்கும் பொருள்கள் - குளோரோ புளோரோ கார்பன் (CFC) நெரோசால், மீத்தைல் புரோமைடு, DDT, எண்டோசல்பான், பிரியான், நைட்ரஜன் ஆக்சைடுகள்.

51. ஓசோன் அடுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள புவியின் பகுதிஅண்டார்டிகா ஆகும்.

52. மரங்களை வளர்ப்பதன் மூலம் ஓசோன் அடுக்கை பாதுகாக்கலாம்

53. பசுமை இல்ல வாயுக்கள்: கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், ஹைட்ரோ புளோரோ கார்பன், SF6 (பெர் குளோரோ கார்பன்)

54. பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பநிலையை அதிகரிக்கிறது

55. 2050ல் பசுமை இல்லா வாயு விளைவினால் புவியின் வெப்பநிலை சராசரி 35 டிகிரி ஆக அதிகரிக்கும்.

56. வாகன புகையில் டெட்ரா ஈத்தைல் ஈயம், டெட்ராமீத்தைல் ஈயம், போன்ற மாசுக்கள் உள்ளன.

57. •வளிமண்டலத்தில் சமீப ஆய்வின் படி கார்பன்டை ஆக்ஸைடு அளவு 290 ppm அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

58. கழிவு பொருட்களை அழப்பதில் சிறந்த முறைஎரித்தல்

59. உயிர் எரிவாயுவில் (BIO-GAS) மீத்தேன் – 70%, CO2 30% உள்ளது.

60. உற்பத்தி வாயுCO2 + N2

61. நீர் வாயுCO2 + H2

62. தொழிற்சாலையில் நச்சுத்தன்மையுள்ள வாயு வெளிப்படுவதை நீர்க்கோபுரங்கள் அமைத்து தடுக்கலாம்.

63. தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகையிலுள்ள துகள்களை வடிகட்ட மின்வடிகட்டி பயன்படுகிறது..

நீர் மாசுறுதல்:

64. அமில மழை ஏற்படக் காரணம் - சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள்

65. நீர் நிலையில் நீர்த்தாவரங்கள் அதிகம் வளர்ந்து அதிக ஆக்சிஜனை உட்கொள்வதால்.

66. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நீர் மாசுபடும் நிலை யூட்ரோபிக்கேஷன் எனப்படும்.

67. யூட்ரோபிக்கேஷன் நிகழக்கூடிய இடம் - ஏரி, குளம், குட்டை

68. யூட்ரோபிக்கேஷனை உண்டாக்கும் காரணிகள் - ஐக்கோர்னியா, ஆல்காக்கள்

69. நீர்மலர்ச்சி என்பதுநீர்நிலையில் மிதமிஞ்சிய ஆல்காக்களின் பெருக்கமாகும்.

70. கழிவு நீரை சுத்திகரிக்க உதவும் தாவரங்களுக்கு .கா. குளோரல்லா, ஆகாய தாமரை. இவ்வகை தாவரங்களுக்கு மாசுகாட்டிகள் என்று பெயர்.

71. காட்மியம் கலந்த நீரினால் ஏற்படும் நோய்:  இட்டாய்

72. மனித உடலில் ஏற்று கொள்ளக் கூடிய அதிக பட்ச புளோரினின் அளவு 1.5 மில்லிகிராம் : லிட்டர்

73. புளோரினின் அளவு அதிகரிப்பால் ஏற்படும் ஒழுங்கற்ற பல் வரிசையின் பெயர் - “புளுரசிஸ்

74. மழைநீரின் Ph மதிப்பு 5.6 – 6.5 ஆகும்

75. உலகிலுள்ள கடல்நீரின் அளவு 97%

76. உலகிலுள்ள நன்னீரின் அளவு – 3%

77. உயிருள்ள செல்களில் 70 – 80% நீர் உள்ளது

சவ்வூடு பரவல் மற்றும் வேரின் அழுத்தம்

78. நீர் மூலக்கூறுகள் அடர்த்தி குறைந்த கரைசலிலிருந்து அடர்த்தி அதிகமான கரைசலுக்கு பரிமாற்றம் அடைவதுசவ்வூடுபரவல் எனப்படும்.

79. சவ்வூடு பரவலை கண்டறிய உதவும் சோதனைதிசில் புனல் சோதனை.

80. உயிருள்ள செல் ஒன்றை ஒரு நீர்த்த கரைசலில் வைக்கும்போது நீரானது சவ்வூடு பரவல் மூலம் செல்லுக்குள் செல்லும் நிகழ்வுஎண்டாமாசிஸ் எனப்படும்.

81. ஒரு செல்லை அடர் கரைசலில் வைக்கும்போது செல்லில் உள்ள நீரானது சவ்வூடு பரவல் மூலம் செல்லிலிருந்து வெளியேறும் நிலைஎக்சாஸ்மாசிஸ் எனப்படும்.

82. செல்களில் நீரின் உள்ளாந்த ஆற்றல் (𝜑) என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

83. வேரின் அழுத்தத்தை அளக்க உதவும் உபகரணம் - மெர்க்குரி மோனோமீட்டர்.

தாவரங்களில் காணப்படும் கனிமங்களும் அதன் குறைபாடுகளும்:

84. நைட்ரஜன்:  பச்சைய சோகை (குளோரோஸிஸ்)

85. பாஸ்பரஸ்:  விதை முளைத்தல் தாமதம், மொட்டு முதிர்ச்சி பெறாமல், உதிர்தல், இலை முதிரும் முன் உதிருதல்

86. கால்சியம்(அமிலமண்ணில் குறைந்து காணப்படும்): இலை விளிம்பு பச்சைய சோகை, ஆக்குத்திசு இறத்தல்.

87. பொட்டாசியம்: பச்சைய சோகை, இலை பழுப்பு நிறமாதல்

88. மெக்னீசியம்: இலைநரம்பு பச்சையசோகை, இலை மஞ்சள் நிறமாதல்

89. மாங்கனீசு: இலைநரம்பு பச்சையசோகை

90. துத்தநாகம்: முதிர்ந்த இலை பச்சையசோகை, கொத்திலை நோய்

91. போரான்:  துண்டுநுனி இறத்தல், இலைகள் கருஞ் சிவப்பாதல், இலை தடித்தல், வேர்ப்பகுதி சிதைவடைதல்

92. நெக்ரோசிஸ் என்பது தாவரங்களில் உள்ள திசுக்களின் இறத்தலாகும்

93. தாவரங்களில் காணப்படும் பொட்டாசியத்தின் பணிகள்: அமிலகார நடுநிலையாக்கல், நீராவிப்போக்கை கட்டுப்படுத்த இலைத்துளைகளை மூடுதல்

உரங்கள்:

94. NPK உரங்களில் உள்ள சத்துக்கள் - நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

95. உயிரி உரங்களுக்கு உதாரணம் -- நீலப்பசும்பாசி, அஸோலா, ரைசோபியம், தயோபேசில்லஸ், சூடாமோனாஸ் பாக்டீரியா

96. பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியங்கள் - தையோபேசில்லஸ்

97. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்த உதவுவதுஅஸிட்டோபாக்டர், ரைசோபியம், கிளாஸ்டிரிடியம்.

98. நைட்ரஜனை நிலைப்படுத்தும் நீலப்பசும்பாசிஅனோபினா, நாஸ்டாக்

99. வேர் முண்டில் உள்ளலெக்ஹீமோகுளோபின்எனும் பொருள் நைட்ரஜனை நிலைப்படுத்துமிடத்திற்கு ஆக்சிஜனை வரவிடாமல் தடுக்கிறது.

100. நைட்ரிபையிங் பாக்டீரியாவளிமண்டல நைட்ரஜனை, நைட்ரஜன் கூட்டுப்பொருளாக்குகிறது.

101. டி-நைட்ரிபையிங் பாக்டீரியா - இறந்த உடலை மட்கச் செய்து நைட்ரஜன் கூட்டுப்பொருளை நைட்ரஜனாக நிலைநிறுத்துகிறது.

ஒளிக்காலத்துவம்:

102. ஒளி மற்றும் இருள் காலங்களில் தாவரங்களில் ஏற்படும் மாற்றம்ஒளிக்காலத்துவம் எனப்படுகிறது.

103. ஒளிக்காலத்துவத்தைக் கண்டறிந்தவர் - கார்னர் மற்றும் அலர்ட்

104. குறுகிய நாள் தாவரங்களுக்கு .கா. – நிக்கோட்டின், கிளைன்மாக்ஸ்

105. நீண்டநாள் தாவரங்களுக்கு .கா. – பீட்டா வல்கரிஸ், ஸ்பைனாச் ஒலிரேசியா

106. பூத்தலில் பங்குபெறும் நிறமிபைட்டோகுரோம் எனப்படும்.

107. பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - புளோரிஜன் எனப்படும்

108. தாவரங்களில் புறத்தோலில் வளரும் புறவளரிகள் - தூவிகள் அல்லது டிரைகோம்கள் எனப்படும்.

109. பல செல்களால் ஆன தூவி ஒரே தளத்தில் கிளைத்து காணப்படும் அமைப்பின் பெயர் ஸ்டெல்லேட்.

110. சுரக்கும் தூவிகள் காணப்படும் தாவரம் - ஜெட்ரோபா (காட்டு ஆமணக்கு) பயோடீசல் தயாரிக்கப் பயன்படுகிறது.

111. கொட்டும் தூவிகள் காணப்படும் தாவரம் - நெட்டில்ஸ்

112. தொட்டால்சிணுங்கி செடி நாடு உணர்வு இயக்கத்தின் மூலம் அதன் இலைகளை சுருக்கிக்கொள்ளும்.

113. உயிரினங்களின் உறுப்புகள் சூரிய ஒளியை நோக்கி நகரும் இயக்கம்ஒளிநாட்டம் எனப்படும்.

114. உயிரிகளின் உறுப்புகள் நீரிநிலையை நோக்கி நகருவதுநீர்நாட்டம் எனப்படும்

115. உயிரிகளின் உறுப்புகள் புவிஈர்ப்பு விசையை நோக்கி நகருவதுபுவிநாட்டம் எனப்படும்.

116. ஆக்சிஜனை சுமந்து செல்ல முடியாத ஹீமோகுளோபின் - மெட் ஹீமோகுளோபின் எனப்படும்.