தாவரவியல் - 4
தாவர வேர்த்தொகுப்பின் அமைப்பும் செயல்பாடும்
1. வேர்த்தொகுப்பு இரண்டு வகைப்படும்
2. ஆணி வேர்த்தொகுப்பு (எ.கா. இருவித்திலைத் தாவரம்) அவரை, சூரியகாந்தி
3. சல்லிவேர்த்தொகுப்பு (எ.கா. ஒரு வித்திலைத் தாவரம்) நெல், சோளம், கம்பு, மூங்கில்)
4. வேரின் பணிகள்: ஊன்றுதல், உறிஞ்சுதல், கடத்தல்
வேரின் மாற்றுருக்கள்:
ஆணி வேரின் மாற்றங்கள்:
5. கூம்பு வடிவம் -- கேரட்
6. கதிர்கோல் வடிவம் -- முள்ளங்கி
7. நேஃ:பிபார்ம் - பீட்ரூட்
8. வெற்றிட வேர்களின் மாற்றுருக்கள்: முளைவேரைத் தவிர தாவரத்தின் பிற பகுதியில் வளரும் வேர்கள் வெற்றிட வேர்கள் எனப்படும்
9. தூண் வேர்கள் - ஆலமரம்
10. தொற்றுவேர்கள் - வாண்டா
11. வாண்டா தாவரத்தில் வேர்த்தூவியில் காணப்படும் வெலாமன் திசு வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிட பயன்படுகிறது.
12. சதுப்பு நிலத்தில் காணப்படும் தாவரங்களில் வேர்கள் சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டோ வேர்கள் எனப்படும். எ.கா அவினிசியா மற்றும் ரைசோ:போரா
இலை வேர்கள்:
13. இலைக்காம்பிலிருந்து வேர்கள் தோன்றுபவை (எ.கா) பேபி போஸ்டிமான்
14. இலை விளிம்பிலிருந்து வேர்கள் தோன்றுபவை (எ.கா) பிரியோபில்லம்
15. கிளை அடியிலிருந்து வேர்கள் தோன்றுபவை (எ.கா) கோலியஸ்
16. வேர்கள் சேமித்தல் பணிகளை செய்யும் தாவரங்களுக்கு (எ.கா) சக்கரை வள்ளிக் கிழங்கு, மா. இஞ்சி
17. பற்று வேர்கள் - (எ.கா) வெற்றிலை, போத்தஸ்
18. பட்ரஸ் வேர்கள் - இளவம்பஞ்சு
19. தாவர தண்டு தொகுப்பு மற்றும் செயல்பாடுகள்
20. தண்டின் பணிகள்: தாங்குதல், உணவு தயாரித்தல், சேமித்தல்
தண்டின் மாற்றங்கள்:
21. பின்னுக்கொடி – எ.கா. அவரை
22. தரையொட்டிய தண்டு: 4 வகைப்படும் அவை:
i. ஓடு தண்டு – வல்லாரை
ii. குட்டையான ஓடு தண்டு – ஐகோர்னியா (ஆகாய தாமரை)
iii. தலைகீழ் ஒடு தண்டு – கிரைஸாந்திமம்
iv. ஸ்டோலன் - சேம்பு
23. தரைகீழ் தண்டு: 4 வகைப்படும் (சேமித்தல் பணியைச் செய்யும்) அவை:
i. மட்டநில தண்டு -
இஞ்சி
ii. கந்தம் -- சேனை
iii. தண்டு கிழங்கு
– உருளை
iv. குமிழ் தண்டு –
வெங்காயம்
24. இலை தொழில் தண்டு உணவு தயாரிக்கவும், புல்பில்கள் -
இனப்பெருக்கத்திற்கும்
பயன்படுகிறது
தண்டின் மாற்றுருக்கள்:
a. பற்று கம்பி தண்டுகள் - பாசிபுளோரா, ஆண்டிகோணன், முடக்கற்றான்
b. முள் - டியூரண்டா, எலுமிச்சை
c. இலைத்தொழில் தண்டு – சப்பாத்திக்கள்ளி, யுபோர்பியா
d. புல்பில் - கற்றாழை, வெங்காயம்
இருவித்திலை தாவர தண்டின் உள்ளமைப்பு:
25. இதில் புறத்தோல், புறணி, வாஸ்குலார் தொகுப்பு காணப்படும்
26. புறத்தோலில் காணப்படும் பொருள் -- கியூட்டிகிள் எனப்படும்
27. புறத்தோலுக்கு கீழே ஸ்டீலுக்கு மேலே அமைந்த தளத்திசு – புறணி ஆகும்
28. புறணியின் உள்ளமைந்த பீப்பாய் வடிவ செல்களால் ஆன அடுக்கு - ஸ்டார்ச் அடுக்கு எனப்படும்
29. இருவித்திலை தாவர தண்டின் வாஸ்குலார் கற்றைகள் - திறந்த அமைப்பை கொண்டுள்ளன.
30. சைலமும், புளோயமும் ஒருங்கிமைந்தவையாக (சைலம் தண்டின் மையம் நோக்கியும், புளோயம் வெளிநோக்கியும் ஒரே ஆரத்தில்) காணப்படுகின்றன.
31. புளோயத்திற்கு வெளியே ஸ்கிரென்கைமாவினால் ஆன திட்டுக்களுக்கு – கற்றைத் தொப்பிகள் எனப்பெயர்
32. வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும், புளோயத்திற்கும் நடுவே காணப்படும் மெல்லிய சுவரையுடைய செல் - கேம்பியம் எனப்படும். இது கற்றைக் கேம்பியமாக காணப்படும்
33. இரண்டாம் நிலை வளர்ச்சியில் பங்கு பெறுவது – கேம்பியம் ஆகும்
34. சைலத்தில் சைலக்குழாய்கள், சைலம் நார்கள், சைலம் பாரன்கைமா, ஆகியவை காணப்படுகின்றன. ட்ரக்கீடுகள் காணப்படுவதில்லை
35. தண்டின் மையப்பகுதியின் பெயர் - பித்
36. இருவித்திலை தாவர வேரின் உள்ளமைப்பு:
37. இதில் ரைசோடெர்மிஸ், புறணி, ஸ்டீல் ஆகிய மூன்று பகுதிகள் காணப்படுகிறது.
38. இருவித்திலை தாவர வேரில் காணப்படும் சைசோடெர்மிஸின் பெயர் – எபிபிளம்மா.
39. புறணியின் கடைசி உள்ளடுக்கான அகத்தோலில் காணப்படும் இடைவெளிகளற்ற பீட்பாய்
வடிவ செல்களிலான சுவர்களின் பெயர் - காஸ்பாரியன் பட்டைகள்.
40. புரோட்டோபிளாசத்திற்கு எதிராக உள்ள அகத்தோல் செல்களின் பெயர் – வழிசெல்கள் எனப்படும்
41. இருவித்திலை தாவர வேரில் ஸ்டீலானது பெரிசைக்கிள், வாஸ்குலார் தொகுப்பு என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.
42. அகத்தோலுக்கு உட்புறமாக மெல்லிய சுவர்களால் ஆன பாரன்கைமா செல்களின் பெயர் பெரிசைக்கிள்.
43. பொதுவாக தாவரங்களில் பக்கவேர்கள் தோன்றுமிடம் - பெரிசைக்கிள்
44. வாஸ்குலார் தொகுப்பு – ஆரப்போக்கு அமைவு கொண்டது (சைலம், புளோயம் வெவ்வெறு ஆரங்களில் அமைந்துள்ள நிலை)
45. இருவித்திலை தாவர வேர்களில் சைலம், நான்கு முனை சைலமாக காணப்படுகிறது.
46. இருவித்திலை தாவர வேர்களின் மையப்பகுதியில் பித் காணப்படுகிறது.
இலை
47. பணிகள்: ஒளிச்சேர்க்கை, நீராவிக்போக்கு, சுவாசித்தல்
48. தாவரங்கள் இலைகளின் மூலம் சுவாசிக்கும் போது ஆக்சிஜனை ஏற்று கார்பன்டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது.
49. இலை மூன்று பாகங்களாலானது. அவை மேற்புறத்தோல், இலையிடைதிசு (மீசோபில்), கீழ்புறத்தோல் ஆகியனவாகும்.
50. இலையிடைத்திசுவில் வாஸ்குலார் கற்றை காணப்படுகிறது.
51. இலையின் மேற்புறம் உள்ள வழவழப்பான பூச்சு – கியூட்டிகிள் எனப்படும், இதன் பணி நீராவிப் போக்கை கட்டுப்படுத்துவதாகும்.
52. இலையின் அடிப்புறம் உள்ள துளைகளை சூழ்ந்துள்ள அவரை விதை வடிவ செல்களின் பெயர் - “காப்பு செல்கள்” எனப்படும். இச்செல்கள் மூலம் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
53. இலையிடைத்திசுவின் மேற்புறம் இடைவெளியற்ற பாலிசேடு பாரன்கைமா திசுவும், கீழ்ப்பகுதியில் இடைவெளியுடைய ஸ்பாஞ்சி பாரன்கைமா திசுவும் காணப்படுகிறது.
54. பாலிசேட் பாரன்கைமாவில் வாஸ்குலார் கற்றைகளை சுற்றி அமைந்துள்ள நெருக்கமான செல்கள் -- எல்லை பாரன்கைமா (அ) கற்றை உறை எனப்படும்.
55. நீராவிப்போக்கின் மூலம் தாவரத்தின் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது.
56. லென்டிசெல் என்பது – பெருமரங்களின் பட்டையிலும், தண்டிலும் காணப்படும் சிறு துளைகள் ஆகும். இதன் மூலம் லென்டிகுலார் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
57. இலைத்துளையின் மூலம் நீராவிப்போக்கு நடைபெறுவதை கண்டறியும் சோதனையின் பெயர் - மணிசாடி சோதனை
58. ஒளிச்சேர்க்கை என்பது – ஒரு உயிர்வேதி வினைக்கு உதாரணம் ஆகும்
59. ஒளிச்சேர்க்கைக்கு கூரிய ஒளி அவசியம் என நிரூபிக்கும் சோதனையின் பெயர் - “கோனாங்கின் போட்டோமீட்டர்” சோதனை.
60. ஒளிச்சேர்க்கைக்கு கார்பன்டை ஆக்சைடு அவசியம் என்பதை அறிய உதவும் சோதனை மோலின் அரை இலை சோதனை
61. ஒளிச்சேர்க்கை
62. ஒளிச்சேர்க்கை என்பது நீர், சூரிய ஒளி, கார்பன்டைஆக்சைடு, பச்சையம் ஆகியவற்றை பயன்படுத்தி தாவரம் ஸ்டார்ச் தயாரிக்கும் நிகழ்ச்சி
63. ஒளிச்சேர்க்கை இரு கட்டமாக நடைபெறும்: 1. ஒளிச்செயல் 2. இருள்செயல்
ஒளிச்செயல்:
64. ஒளிச்சேர்க்கையின் முதல் நிலை – ஒளிச்செயல் ஆகும்
65. ஒளிச்செயல் நடைபெறும் இடம் - பசுங்கணிகத்திலுள்ள கிரானா பகுதி
66. ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமிகள் - பச்சையம், கரோட்டினாய்டுகள், ஒளிச்செயலின் போது ஒளியாற்றலானது இந்நிறமிகள் மூலமாக ATP, NADPH2ஆக மாற்றமடைகிறது.
67. ஒளிவழி நீர்ப்பிளப்பு என்பது ஒளிச்சேர்க்கையின் நீர் மூலக்கூறுகள் பிளவுப்பட்டு
ஆக்சிஸன் வெளியேறும் நிலை.
இருட்செயல்:
68. ஒளிச்சேர்க்கையின் இரண்டாம் நிலை - இருட்செயல் ஆகும்
69. இருட்செயல் நடைபெறும் இடம் - பசுங்கணிகத்திலுள்ள ஸ்ட்ரோமா பகுதி
70. இருட்செயிலன் வேறு பெயர் - கால்வின் சுழற்சி அல்லது C3 வழித்திட்டம் எனப்படும்.
சுவாசித்தல்
71. சுவாசித்தலில் பங்கு பெறும் பொருட்கள் சுவாச தள பொருட்கள் எனப்படும்.
72. கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியன சுவாசதளப் பொருட்கள் ஆகும்
73. எளிய சுவாச தளப் பொருள் - குளுகோஸ் ஆகும்
74. சுவாசம் இரு வகைப்படும். 1. காற்று சுவாசம் 2. காற்றில்லா சுவாசம்
75. காற்று சுவாசத்திற்கு பயன்படும் வாயு – ஆக்சிஜன்
காற்று சுவாசம்:
76. மூன்று கட்டமாக நடைபெறுகிறது. ஆவை: கிளைக்காலிசிஸ், கிரெப்ஸ் சுழற்சி, எலெக்ட்ரான் கடத்தல்
கிளைக்காலிசிஸ்
77. இது சுவாசித்திலின் முதல் நிலை ஆகும்
78. இந்நிகழ்ச்சி சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
79. இந்நிகழ்ச்சியின் இறுதியில் உருவாவது – பைருவிக் அமிலம் + 2 ATP கூலக்கூறு
கிரப்ஸ் சுழற்சி:
80. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் -- மைட்டோகாண்டிரியா
81. இது சுழற்சி அல்லது சிட்ரஸ் அமில சுழற்சி என்று அழைக்கப்படுகிறது
எலெக்ட்ரான் கடத்தும் சங்கிலி:
82. இந்நிகழ்சியில் தான் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.
83. காற்று சுவாசத்தின் போது – 36 ATP மூலக்கூறு சக்தியாக வெளியிடப்படுகிறது.
காற்றில்லா சுவாசம்:
84. இச்சுவாசத்தில் கிளைக்காலிசிஸ் மட்டுமே நடைபெறுகிறது
85. இச்சுவாசத்தில் 2 ATP மூலக்கூறு மட்டுமே சக்தியாக வெளியிடப்படுகிறது
86. காற்றில்லா சுவாசத்தில் கீழ்க்கண்ட வினைகள் நடைபெறுகின்றன
87. குளுகோஸ் - பைரூவிக் அமிலம் - எத்தில் ஆல்கஹால்
88. லேக்டோஸ் - வைரூவிக் அமிலம் - லாக்டிக் அமிலம்
89. காற்றில்லா சுவாசத்தின் பெயர் – நொதித்தல் எனப்படும்
இனப்பெருக்க உயிரியல்
90. மறுதோன்றல் அல்லது இழப்பு மீட்டல் என்பது இழந்த உறுப்பை மீண்டும் பெறுவதாகும்
91. இழப்பு மீட்டல் பண்புடைய உயிரிக்கு எ-டு: பிளோனேரியா (தட்டைப்புழு)
மலரின் பாகங்கள்:
92. பொதுவாக் மலர்களில் 4 வட்டங்கள் காணப்படும்
93. முதல் வட்டம் - புல்லி வட்டம்
94. 2வது வட்டம் - அல்லி வட்டம்
95. 3வது வட்டம் - மகரந்தத்தூள் வட்டம் (ஆண் பாகம்)
96. 4வது வட்டம் - சூலக வட்டம் (பெண் பாகம்)
97. புல்லி வட்டம் மற்றும் அல்லிவட்டம் ஆகியவை இனப்பெருக்கத்தில் பங்குபெறாததால்
துணை வட்டங்கள் என அழைக்கப்படுகின்றன
98. மகரந்தத்தூள் வட்டம் மற்றும் சூலக வட்டம் ஆகியவை இனப்பெருக்கத்தில் பங்கேற்பதால் இன்றியமையாத வட்டம்.
99. ஒரு மலரில் மகரந்தத்தூள் வட்டம், சூலக வட்டம் இணைந்து காணப்பட்டால் அம்மலர் -- இரு பால் மலர் எனப்படும்
100. ஆரசமச்சீர் மலருக்கு எ.கா. செம்பருத்தி
101. இருபக்க சமச்சீர் மலருக்கு எ.கா. குரோட்டலேரியா
102. சூலக கீழ் மலர் (அல்லது) மேல் மட்ட சூல்பை கொண்ட மலருக்கு எ.கா. பூவரசு
103. சூலக மேல் மலர் (அல்லது) கீழ் மட்ட சூல்பை கொண்ட மலருக்கு எ.கா. கொய்யா
104. அல்லி இதழை ஒத்த புல்லி இதழ் காணப்படும் தாவரம் - மூசாண்டா
105. ரோம வளரிகள் புல்லி இதழ்களில் காணப்படும் தாவர குடும்பம் - ஆஸ்ட்டரேஸியே
106. மலர்களில் பகட்டான நறுமணத்தையம், வண்ணத்தையும் கொண்டிருக்கும் பகுதி – அல்லி வட்டம்
107. ஒழுங்கற்ற இணையாத அல்லி வட்டத்திற்கு உதாரணம் – பேபிலியோனேசியஸ் (வண்ணத்துப்பூச்சி அமைப்பு) (எ-டு குரோட்டலேரியா)
108. வேறுபாடு அடையாத அல்லி, புல்லி அடுக்குகளை கொண்ட புவிதழ்வட்டம் காணப்படும் தாவரங்களுக்கு எ.கா. ஒரு வித்திலைத் தாவரங்கள்
இதழமைவு:
109. தொடு இதழமைவு கொண்ட தாவரத்திற்கு எ.கா. மனோரஞ்சிதம்
110. திருகு இதழமைவு கொண்ட தாவரத்திற்கு எ.கா. செம்பருத்தி
111. அடுக்கு இதழமைவு கொண்ட தாவர குடும்பத்திற்கு எ.கா. பேபேஸியே
112. ஏறு தழுவு இதழமைவு கொண்ட தாவரத்திற்கு எ.கா. கொன்றை பூ
113. ஒரு கற்றை மகரந்தத்தூள் கொண்ட தாவர குடும்பத்திற்கு எ.கா. – மால்வேஸியே
114. இரு கற்றை மகரந்தத்தூள் கொண்ட தாவர குடும்பத்திற்கு எ.கா. – பேபேஸியே
115. ஸின்ஜெனிஸியஸ் மகரந்தத்தாள் கொண்ட தாவர குடும்பத்திற்கு எ.கா – ஆஸ்ட்ரேஸியே.
116. இவ்வமைப்பில் மகரந்த பைகள் இணைந்தும், மகரந்தத்தாள் தனித்தும் காணப்படுகிறது.
117. சூலக வட்டமானது, சூற்கை, சூல்தண்டு, சூல்முடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
118. சூலக பைக்குள்ளாக சூல்கள் இணைந்திருக்கும் திசு சூல் ஒட்டு திசு எனப்படும். சூல் பையில் சூல் ஒட்டுத்திசு அமைந்திருக்கும் முறையின் பெயர் -- சூல் ஒட்டுமுறை எனப்படும்
119. விளிம்பு சூல் ஒட்டுமுறை தாவரத்திற்கு எ.கா – குரோட்டலேரியா
120. அச்சு சூல் ஒட்டுமுறை தாவரத்திற்கு எ.கா. – ஹைபிஸ்கஸ்
121. சுவர் சூல் ஒட்டுமுறை தாவரத்திற்கு எ.கா – வெள்ளரி
122. அடி சூல் ஒட்டுமுறை தாவரத்திற்கு எ.கா - சூரியகாந்தி
123. பூ அச்சின் நுனி – பூதளம் எனப்படும்
124. மூசாண்டாவில் அல்லி வட்டமானது புல்லிவட்டம் போன்று காட்சியளிக்கும்
கனிகளும் விதைகளும்:
125. விதை இரு உறை கொண்டது. விதை வெளியுறை டெஸ்டா எனப்படும். விதை உள்உறை – டெக்மன் எனப்படும்
126. கனியானது கருவுற்ற முதிர்ந்த சூற்பை எனப்படும்
127. கனிஉறை பெரிகார்ப் எனப்படும். இது மூன்று வகைப்படும். அவை: 1. எபிகார்ப் 2. மீசோகார்ப் 3. எண்டோகார்ப்
128. கருவுறாக்கனியாதல்: மகரந்தச் சேர்க்கையோ அல்லது எவ்வித தூண்டுதலுமின்றி கனி உருவாவது கருவுறாக் கனியாதல் (பார்த்தினோகிரேபி) எனப்படும்.
129. கருவுறாக்கனியாதல் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் - நால்
130. நிட்ச் என்பவரின் கூற்றுப்படி கருவுறாக் கனியாதல் மூன்று வகைப்படும்
131. 1. மரபியல் முறை 2. சூழ்நிலைக் காரணிகள் மூலம் 3. வேதிப்பொருள்கள்
தூண்டுதல் மூலம்
132. சிட்ரஸ் வகை பழங்களில் விதையில்லா கனி உருவாக்க தேவையான ஹார்மோன் - ஆக்ஸிஜன்கள் ஆகும்
133. தக்காளியில் கருவுறாக் கனியாதலை தூண்டுவதற்கான காரணிகள் – குறைந்த வெப்பநிலை, அதிக ஒளிச்செறிவு
வளர்ச்சி ஹார்மோன்கள்:
134. தாவர வளர்ச்சி பொருட்கள் - பைட்டோ ஹார்மோன்கள் எனப்படும். இவை நான்கு வகைப்படும்
ஆக்ஸிஜன்கள்:
135. தாவர வளர் நுனியில் உள்ள இயற்கை ஹார்மோன்கள் எ.கா (இண்டால் அசிட்டிக் அமிலம்)
136. விதையில்லா கனியை உண்டாக்க பயன்படுகிறது
ஜிப்ரிலின்கள்:
137. முதன்முதலில் பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வளர்ச்சி ஹார்மோன்கள் - ஜிப்ரிலின்
138. இவை இனப்பெருக்க பகுதியில் அதிகம் காணப்படும்
139. கருவுறுதல் இல்லாகனியை உண்டாக்கப் பயன்படுகிறது
சைட்டோகைனின்கள்:
140. இவை வேரில் உண்டாகி தண்டு மற்றும் இலைக்கு கடத்தப்படுகின்றன
141. செல் பகுப்படைதலை துரிதப்படுத்தவும், விதை உறக்கம் நீக்கடவும் பயன்படுகிறது.
எத்திலீன்:
142. பெனிசிலியம் டிஜிடேட்டம் என்ற பூஞ்சையில் உள்ள வளர்ச்சி ஹார்மோன் - எத்திலீன்
143. கனி பழுப்பதற்கும் மலரின் வண்ணம் மங்காமலிருப்பதற்கும் பயன்படுகிறது
செயற்கை ஆக்ஸிஜன்கள்:
144. இண்டோ – 3 – புரொப்பயானிக் அமிலம், இண்டோல் - பூயூட்டீரிக் அமிலம், இண்டோல் பய்ருவிக் அமிலம், 2, 4 – டைக்குளோரோ பினாக்சி அசிட்டிக் அமிலம், நாப்தாலிக் அசிட்டிக் அமிலம்
செயற்கை ஆக்ஸிஜன்களின் பயன்கள்:
145. விதையில்லா கனி உண்டாக்கவும், களைக்கொல்லியாகவும், கனி பிஞ்சில் உதிர்வதை தடை செய்யவும், தழைவழி இனப்பெருக்கத்திற்கும் பயன்படுகின்றன.
மகரந்த சேர்க்கை:
146. மகரந்ததூள்கள் (ஸ்போர்கள்) சூலக முடியை அடையும் நிகழ்வு மகரந்தச் சேர்க்கை எனப்படும். இது இருவகைப்படும்
147. 1. தன் மகரந்தச் சேர்க்கை (ஆட்டோகேமி)
148. 2. அயல் மகரந்தச்சேர்க்கை (அல்லோகேமி) இது கீழ்க்கண்ட முறைகளில் நடைபெறுகிறது.
a. விலங்கு வகை மகரந்தச் சேர்க்கை – (சூபில்லி)
b. பூச்சி மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை – எண்டோமோபில்லி
c. பறவை மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை – ஆர்னித்தோபில்லி
d. வெளவால் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை – செரட்டோபில்லி
e. காற்றின் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை – அனிமோபில்லி
f. நீரின் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை – ஹைட்ரோபில்லி
149. தேனீக்களை நீலநிற மலர்களும், வண்ணத்துப்பூச்சிகளை சிவப்பு நிற மலர்களும், பூச்சிகளை வெண்மை நில மலர்களும் கவர்கின்றன.
150. சால்வியா தாவரத்தில் மகரந்தசேர்க்கை நடைபெறும் முறை – நெம்புகோல் முறை. இத்தாவரத்தில் தேனீக்கள் மூலமாக மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது
151. பைனஸ் தாவரத்தில் மகரந்ததூள்கள் இறகுகளைக் கொண்டுள்ளது.
152. அகாஃ:லிபா தாவரத்தில்
மலர்கள் தொங்கிய நிலையில் இருக்கும்
153. ஒரு பால் தன்மை தாவரத்திற்கு எ.கா. பப்பாளி, பனை, பூசணி, குரோட்டன்ஸ், சூரியகாந்தி
154. புரோட்டேனரி என்பது – மகரந்த முன் முதிர்வு ஆகும். எ.கா. சோளம், நெல், பைகஸ், கோதுமை
155. புரோட்டோகைனி என்பது - சூலக முன் முதிர்வு ஆகும்
156. அயல் மகரந்தச்சேர்க்கையை தூண்டும் காரணிகள் -- ஒரு பால் தன்மை, இருகால முதிர்வு, தன் வளமின்மை, அயல் மகரந்த வீரியம், பாலுறுப்பு தடை, வேர்மட்ட சூலகத் தண்டு
157. தன்மகரந்த சேர்க்கையின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் -- பருத்தி, பட்டாணி, நிலக்கடலை, அரிசி, கோதுமை
158. அயல்மகரந்த சேர்க்கையின் மூலம் இனப்பெருக்கும் செய்யும் தாவரங்கள் -- சோளம், வெங்காயம், பூசணி, உருணை, சூரியகாந்தி, வெள்ளரி
159. தன்மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பயிர்களின் பெருக்க முறைகள் -- கூட்டுத் தேர்வு முறை, மரபு வழி தேர்வு முறை, பிற்கலப்பு முறை
160. மகரந்தப்பை என்பது மைக்ரோஸ்போராஞ்சியம் ஆகும். இது நான்கு அறைகளைக் கொண்டது.
161. சூல் என்பது மொகாஸ்போராஞ்சியம் ஆகும்
162. இரண்டு ஆண்
கேமிட்டுகளில் ஒன்று கருமுட்டையுடனும், மற்றொன்று இரண்டாம் நிலை நியூக்ளியஹூடன் இணைவது “இரட்டைக் கருவுறுதல்” எனப்படும். இதனைக் கண்டறிந்தவர் நவாசின்
163. இரண்டாம் நிலை நியூக்ளியஸ் இருமய நிலை கொண்டது. இது ஆண் கேமிட்டுடன் இணையும் போது ஏற்படும் மூவிணைவின் மூலமாக “எண்டோஸ்பேர்ம்” – ஐ உருவாக்குகிறது.
164. கருவுற்ற பின் சூலானது விதையாகவும், சூலுறை விதையுறையாகவும் மாறுகிறது.
165. கோமாஸ் (பாரசூட் விதை) விதைகள் என்பது – விதைகளின் மேல் ரோமங்கள் கொண்டிருப்பது – எ.கா. காலோட்ராபிஸ் (எருக்கு), பாலை
166. விதை பரவுதல்:
167. காற்றினால் விதைகள் பரவுதல்: - பூவரசு, முருங்கை, பருத்தி, எருக்கு, விலங்குகளினால் விதை பரவும் முறைக்கு எ.கா – நாயுருவி, நெருஞ்சி
168. விலங்குகளின் கழிவு மூலமாக பரவுதல் முறைக்கு எ.கா. கருவேல், நாயுருவி, மார்டீனியா, நெருஞ்சி.
169. வெடித்துப் பரவுதல் முறைக்கு எ.கா. ஆமணக்கு, எருக்கு, அவரை, பருத்தி,
170. தென்னையில் நீர் மூலம் விதை பரவுகிறது
171. காரன்கிள் என்பது – விதைமுண்டு ஆகும்
172. தரைமேல் விதைமுளைத்தல் தாவரத்திற்கு எ.கா. ஆமணக்கு
173. பெரிகார்ப் என்பது – கனியுறை ஆகும்
174. மகரந்த சேர்க்கைக்குப் பின் உருவாகும் கருவின் பெயர் - ஸ்கூட்டில்லம் எனப்படும்
175. முறை வேர் என்பது – கோலிடோரைசா எனப்படும்
176. முளைக்குருத்து என்பது – கோலியோடைல் எனப்படும்
177. தரைக்கீழ் விதை முளைத்தலுக்கு எ.கா. – ஒருவிதையிலைத் தாவரம்
178. தரைமேல் விதை முளைத்தலுக்கு எ.கா - இருவதையிலைத் தாவரம்
179. விதை முளைக்க தேவையானவை – ஆக்சிஜன், வெப்பம், நீர்
180. விதை முளைக்க உகந்த வெப்பம் - 25 முதல் 30 டிகிரி
181. விதையில் காணப்படும் ஹார்மோன் - “ஆக்ஸின்” ஆகும்