Type Here to Get Search Results !

புவியியல் | Part - 1 | 160 Questions

புவியியல் - 1

அண்டங்கள்

1. மில்லியன் கணக்கில் கூட்டம் கூட்டமாக காணப்படும் சூரியனைப் போன்ற நட்சத்திரத் தொகுதிகள் அண்டங்கள் எனப்படும்.

2. சூரியக் குடும்பம் உள்ள அண்டம் பால்வழி அண்டம். இதனை ஆகாஷ் கங்கா என்று கூறுவர்

3. நமது பால்வழி அண்டத்திற்கு மிக அருகில் உள்ளது Andromeda என்ற அண்டம் ஆகும்.

4. பால்வழி அண்டமானது சுருள் போன்ற அமைப்பை கொண்டது.

5. பால்வழியின் வெளிச் சுற்றில் சூரியக் குடும்பம் அமைந்துள்ளது

பேரண்டம்

6. பால்வழி அண்டம் போன்ற மில்லியன் மில்லியன் அண்டங்களைக் கொண்டது பேரண்டம் .கா. ஆண்டரமேடா

வால் நட்சத்திரங்கள்:

7. பேரண்டத்தில் வலம் வரும் உடைந்து சிதறிய பாறைத் துண்டுகளே வால் நட்சத்திரங்கள்.

8. இவற்றின் தலைப்பகுதி பெருத்தும் உடல்பகுதி வால் போன்று நீண்டும் காணப்படும்.

9. வால் நட்சத்திரங்களுக்கு நட்சத்திரங்கள் போன்று தானாகப் பிரகாசிக்கும் தன்மை கிடையாது

10. வால் நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்திற்கு அருகில் வரும்போது சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றது.

11. ஷீ மேக்கர் லெவி என்ற நட்சத்திரம் 1994ம் ஆண்டு சூலை 17ஆம் நாள் வியாழன் மீது மோதியது.

எரிநட்சத்திரங்கள்

12. பேரண்டத்தில் வலம் வரும் பாறைத் துண்டுகள் புவிஈர்ப்பு விசையில் ஈர்க்கப்பட்டு புவியின் காற்று மண்டலத்தில் நுழையும்போது உராய்வினால் எரிந்து சாம்பலாகிறது. இதுவே எரி நட்சத்திரங்கள் எனப்படும்.

13. சூரியனை நீள்வட்டப் பாதையில் 9 கோள்கள் சுற்றுகின்றன

14. இவ்வாறு சூரியனை நீள்வட்டப் பாதையில் கோள்கள் சுற்றுகின்றன என்ற கருத்தை வெளியிட்ட அறிஞர்கள் ஆரிய பட்டா, கோபர்நிகஸ் மற்றம் கலீலியோ ஆவார்

1. சூரியனை சுற்றும் 8 கோள்கள்: புதன் 2. சுக்கிரன் 3. பூமி, 4. செவ்வாய் 5. குரு (வியாழன்) 6. சுனி 7. யுரேனஸ் 8. நெப்டியூன்

15. 1930 முதல் 2006 வரை பூளுட்டோ ஒரு கோளாக கருதப்பட்டது. ஆனால் அனைத்துலக வானியல் ஒன்றியம் ஒரு கோளுக்குரிய தகுதியில்லை என்றும் குயிப்பர் பட்டையில் உள்ள ஒரு பொருள் என்றும் தெரிவித்ததின் அடிப்படையில் பூளுட்டோ நீக்கப்பட்டது. தற்போது பூளுட்டோ ஒரு குறுங்கோளாகும்

16. சூரிய மண்டலத்தில் உள்ள குறுங்கோள்கள்: 1. ஏரிஸ் 2. பூளுட்டோ 3. செரஸ்

17. பூமி சூரியனை 107,2000 கிமீ / மணி வேகத்தில் சுற்றுகின்றது.

18. சூரியனின் மேற்புற வெப்பநிலை 6000° செல்சியஸ்

19. மையப்பகுதி வெப்பநிலை 1,00,000° செல்சியஸ்

20. அணுக்களை பிளப்பதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தைவிட பலமடங்கு வெப்பம் இரு அணுக்களை இணைப்பதன் மூலம் கிடைக்கின்றது.

21. சூரியனில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களின் அணுக்களின் பிணைவால் அளவற்ற வெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

22. சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டும் தானாகப் பிரகாசிக்கும் தன்மை உண்டு.

23. கோள்கள் தன்னைத் தானே ஒருமுறைச் சுற்றிக் கொள்ள 25 நாட்கள் ஆகும்.

வலம் வருதல்

24. பால்வழி அண்டத்தில் அமைந்துள்ள சூரியன் தன் குடும்பத்துடன் பால்வழி அண்டத்தின் மையத்தை ஒருமுறை வலம் வர 250 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இதனை அயன ஆண்டு என்பர்.

25. உட்கோள்கள்: வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 4 கோள்களும் வெளிக்கோள்கள்

புதன்

26. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்

வெள்ளி

27. பூமிக்கு அருகில் உள்ள கோள்

28. இதனை விடி வெள்ளி என்பர்

29. இதனை மாலை நட்சத்திரம் என்பர்

30. இதனை அழகின் தேவதை என்பர்

செவ்வாய்:

31. சிவப்பு கோள் எனப்படும்

வியாழன்:

32. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்

33. இதற்கு 63 துணைக் கோள்கள் உண்டு

34. Ganymede என்ற துணைக்கோள் சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய துணைக் கோள் ஆகும்.

சனி

35. சிவப்பு நிற வளையமுள்ள கோள்

துணைக்கோள்கள்

36. பூமியின் துணைக் கோள்கள் சந்திரன்

37. புதன், வெள்ளிக்கு துணைக்கோள் இல்லை

38. சனியின் துணைக்கோள் டைட்டன் ஆகும்.

39. சனியிற்கு 20க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் உண்டு

பூமி

40. புவியின் உள் அமைப்பு (Core of the earth)> NifFe – Nickel (Ni) and Iron (Fe) ஆகிய பொருட்களால் அமைந்துள்ளது.

41. பூமி தன்னைத் தானே சுற்றி வருவதால் கோள வடிவம் பெற்றுள்ளது.

42. பூமி கோள வடிவம் உடையது என்பதற்கான காரணங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரே திசையில் தொடர்ந்து பயணம் செய்தால், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர முடிகிறது.

43. கிரகணத்தின் போது புவியின் நிழல், வட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

44. பிற கோள்கள் கோள உருவில் அமைந்திருப்பதால் புவியும் கோள உருவினைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

45. உலகின் வெவ்வேறு பகுதிகளில் சூரிய உதயம், மறைவு ஆகியன வெவ்வேறு நேரங்களில் ஏற்படுகின்றன. மேற்கில் உள்ள பகுதிகளைவிடக் கிழக்கில் உள்ள பகுதிகள் சூரிய ஒளியை முன்னதாகப் பெறுவதால் புவி ஒரு கோள வடிவமுடையது என்பது தெளிவாகிறது

46. கரையை நெருங்கும் கப்பல்களின் பாய்மரங்கள் முதலிலும், கப்பலின் மற்றப் பகுதிகள் பின்னரும் நம் பார்வையில் விழுகின்றன.

47. உயரச் செல்லச் செல்ல நமது பார்வையின் வரையறை அதிகரிக்கின்றது.

48. புவி நடுக்கோட்டிலிருந்து துருவப் பகுதிக்குச் செல்ல செல்ல நட்சத்திரங்களின் உயரம் அதிகரிக்கின்றது. புவியின் மேற்பகுதி வளைவாக அமைந்துள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.

49. புவி நடுக்கோட்டிலிருந்து துருவப் பகுதிக்குச் செல்ல செல்ல நட்சத்திரங்களின் உயரம் அதிகரிக்கின்றது. புவியின் மேற்பகுதி வளைவாக அமைந்துள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.

50. விண்வெளிப் பயணம் செய்த வீரர்கள் எடுத்தனுப்பிய படங்கள் பூமி கோள வடிவமுடையது என காட்டுகின்றன.

51. பூமி நிலத்தாலும் நீராலுமானது

52. நீர்பரப்பு 71% ஆகும். நிலப்பரப்பு 29% ஆகும்

53. பூமியின் சுற்றளவு 40,067 கி. மீ.

54. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன்.

55. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும்.

56. சூரிய குடும்பத்திற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரம் பிராக்ஸிமா செண்டார்.

57. பூமியின் வெப்பநிலை 15°செ

58. சூரியனுக்கு மிகத் தொலைவில் உள்ள கிரகம்.

நெப்டியூன்

59. துணைக்கோள் இல்லாத கோள்கள் சுக்கிரன், புதன், புளுட்டோ

60. வியாழன் என்ற கொளுக்கு 14 துணைக்கோள்கள் உண்டு

61. நமது சூரிய மண்டலம் பால்வீதி மண்டலத்தில் உள்ளது

62. பூமி சூரியனில் இருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது

63. சூரியனிடத்தில் பூமிக்கு ஒளிவர 8 நிமிடம் 16 வினாடிகள் ஆகின்றது

பூமி சுற்றுதல்

64. பூமியின் வடிவம் ஆரஞ்சு பழ வடிவத்தில் மேல் கீழ் உச்சியில் தட்டையாக காணப்படுகிறது

65. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது

66. பூமி சுமார் 1700 கி. மீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது

67. பூமியின் அச்சு 23½° கோணத்தில் சற்று சாய்ந்து உள்ளது. எனவே பூமத்திய ரேகை பகுதியில் சூரியன் கதிர்கள் செங்குத்தாகவும் துருவப்பகுதியில் சாய்வாகவும் விழுகின்றது.

68. பூமியின் வெப்பம் பகல் 2.00 மணிக்கு அதிகமாகவும், பூமியின் குளிர் விடியற்காலை 3.00 மணிக்கு அதிகமாகவும் இருக்கும்

69. பூமி மேற்கு கிழக்கு திசையில் சுற்றுகிறது. எனவே சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது.

70. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணி நேரம் 56 நிமடம் ஆகிறது

71. பூமி சூரியனைச் சுற்றிவர 365 ½ நாட்கள் ஆகும்.

72. சந்திரன் பூமியை சுற்றிவர 27 நாட்கள் ஆகின்றது

பூமி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படுபவை

73. இரவும் பகலும்

74. காலநேரம்

75. கடலில் அலைகள், ஓதங்கள்

76. கடல் காற்றுகள் மற்றும் கடல் நீரோட்டங்களில் போக்குகள்

பூமி சூரியனை சுற்றுவதால் ஏற்படுபவை

77. பருவ காலங்கள்

78. சம இரவு சம பகல் இல்லாமல் சற்று மாறுபடுகிறது

79. நண்பகல் சூரியன் இடத்திற்கு இடம் மாறுபடுவது

சமநேர இரவு, பகல் நாட்கள்:

80. செப்டம்பர் மாதம் 23ம் தேதியும் மார்ச் 21ம் தேதியும் சமநேர இரவு பகல் நாட்களாகும்.

81. மார்ச் 21ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை 6 மாதம் வடதுருவத்தில் பகல் இருந்து கொண்டே இருக்கும்.

82. செப்டம்பர் 22 முதல் மார்ச் 20ம் தேதி வரை 6 மாதம் தென் துருவத்தில் பகல் இருந்து கொண்டே இருக்கும்.

83. மார்ச் 21ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை 6 மாதம் தென்துருவத்தில் இரவு இருந்து கொண்டே இருக்கும்.

அட்சரேகைகள்(Latitudes)

84. பூமியின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக வரையப்பட்ட வட்டவடிமான கற்பனைக் கோடுகள்

85. துருவத்தை நோக்கி செல்ல செல்ல சுற்றளவில் குறைகின்றன.

86. மிகப்பெரிய அட்சரேகை பூமத்திய ரேகை

87. 0° அட்சரேகை பூமத்திய ரேகை

88. 23 ½° வட அட்சரேகை கடகரேகை

89. 23 ½° தென் அட்சரேகை மகரரேகை

90. 66 ½° வட அட்சரேகை ஆர்டிக் வட்டம்

91. 66 ½° தென் அட்சரேகை வட துருவம்

92. 90 தென் அட்சரேகை தென் துருவம்

93. அட்சரேகைகள் ஒன்றுக்கொன்று இணையாகவும் ஏறக்குறைய சம இடைவெளியுடனும் அமைந்துள்ளமையால் இதனை இணைக்கோடுகள் என்பர்.

94. ஒவ்வோர் அட்சரேகைக்கு இடைப்பட்ட தூரம் 69 மைல் முதல் 110.4 கிலோ மீட்டர் வரை உள்ளது

95. 0° அட்சரேகை 110 கி. மீ

96. 20° அட்சரேகை 104 கி. மீ

97. 40° அட்சரேகை 84.8 கி. மீ

98. 60° அட்சரேகை 6.0 கி. மீ

99. 90° அட்சரேகை 0 கி. மீ

தீர்க்கரேகை (Longitudes)

100. அட்சரேகைகளை வெட்டிக் கொண்டு இரு துருவங்களையும் இணைத்தபடி வரையப்படும் கற்பனைக் கோடுகளுக்கு தீர்க்க ரேகைகள் எனப்படும். இவற்றை மெரிடியன் (நண்பகல்) என்று கூறுவர்

101. லண்டனில் உள்ள கிரின்விச் ராயல் ஆய்வுக் கூடம் வழியாக செல்லும் தீர்க்க ரேகை 0° ஆகும். கிரின்வீச்சிற்கு கிழக்கில் 180° தீர்க்க ரேகையும் மேற்கில் 180° தீர்க்க ரேகையும் உள்ளது.

102. சர்வதேச தேதிக் கோட்டை கடக்கும்போது 1 நாள் ஆகின்றது. எனவே இக்கோட்டினை; கிழக்கிலிருந்து மேற்காக கடந்து சென்றால் 1 நாள் கூடுகிறது.

103. 1884ல் வாஷிங்டன்னில் கூடிய Internation Meridian Conference Greenwhich Universal World time என அறிவித்துள்ளது.

 

International Dateline:

104. இக்கோட்டினை வரைந்தவர் டேவிட்சன் என்பவர். இக்கோடு பசிபிக் பெருங்கடலை மையமாக கொண்டு வரையப்படுகிறது

105. காலங்களை நிர்ணயிக்க பூமி 24 Time Zones களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

106. இந்தியாவின் திட்ட நேரம் 82° 30 அலகாபாத் வழியே செல்லும் தீர்க்க ரேகை வைத்து கணக்கிடப்படுகிறது

107. தீர்க்க ரேகையில் ஒவ்வொரு டிகிரிக்கும் 4 நிமிடங்கள் கிழக்கு நோக்கி அதிகமாக உள்ளது

108. இந்தியாவின் திட்டக்கோடு 82.50 கிழக்கு (82.5 X 4 = 330 நிமிடங்கள்). எனவே கிரின்விச் மணி நேரத்தை விட இந்திய நேரம் 5½ மணி நேரம் (330 நிமிடங்கள்) அதிகம்.

சந்திரன்

109. சூரிய குடும்பத்தின் துணைக் கோள்களில் மிகப்பெரிய துணைக்கோள் சந்திரன்

110. சந்திரன் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்வதற்கு 29½ நாட்கள் ஆகும்.

111. சந்திரன் பூமியை ஓருமுறை வலம் வருவதற்கு 29 ½ நாட்கள் ஆகும்.

112. சந்திரனின் புவிஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 1/6 பங்கு எனவே பூமியின் 60 கிலோ எடை சந்திரனில் காற்று இல்லை. எனவே எந்த ஒலியும் கேட்பதில்லை.

113. சந்திரன் பூமியை வலம் வருவதால் ஏற்படும் மூன்று விதமான விளைவுகள்: சந்திரனின் நிலைகள், ஒளிமறைப்பு, ஓதங்கள்

அமாவாசை

114. அமாவாசையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் காணப்படுகிறது

பௌர்ணமி

115. பௌர்ணமியன்று சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி காணப்படுகிறது.

சூரிய ஒளிமறைப்பு

116. சூரிய ஒளிமறைப்பு ஏற்பட சூரியன், சந்திரன் மற்றும் புவி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

117. இது அமாவாசை பகலில் தான் அமையும்

118. சூரிய ஒளிமறைப்பு 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும்.

சந்திர ஒளிமறைப்பு

119. சந்திர ஒளிமறைப்பு ஏற்பட சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

120. இது பௌர்ணமி இரவுகளில் அமையும்

121. சந்திரன் புவியின் நிழற்பகுதியைக் கடக்க 100 நிமிடங்கள் ஆகும். எனவே சந்திர ஒளி மறைப்பு கடக்க 100 நிமிடங்கள் ஆகும்.

உயர் ஓதம்

122. சந்திரனை நோக்கியும் புவியின் பகுதியில் உள்ள கடல் நீர் சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடல்நீர் மட்டம் உயர்வதால் அப்போது ஏற்படும் சமமற்ற நிலையை ஈடுகட்ட புவியின் மறுபக்கத்திலுள்ள பகுதியிலும் கடல்நீர் மட்டம் உயர்கிறது. இவ்வாறு சந்திரன நோக்கியுள்ள புவியின் பகுதியிலும் அதற்கு மறுபுறம் உள்ள பகுதியிலும் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். எனவே ஒரே சமயத்தில் புவியின் இரு புறத்திலும், உயர் ஓதம் ஏற்படும்.

தாழ் ஓதம்

123. இரு உயர் ஓதங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலுள்ள கடல் நீர் உயர் ஓதப்பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றது. எனவே இரு உயர் ஓதங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்படும்

அதி ஓதம்

124. அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் சூரியன், சந்திரன் மற்றும் புவி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் ஒரே திசையில் செயல்படுவதால் மேலும் அதிகமாக சந்திரனை நோக்கி கடல்நீர் ஈர்க்கப்படுகின்றது. இதனால் தினமும் ஏற்படும் உயர் ஓதத்தை விட சற்று அதிகமாக இந்த இரண்டு நாட்களிலும் கடல் மட்டம் உயர்கிறது. இதுவே அதி ஓதம்.

மித ஓதம்

125. சந்திரன் ஒரு திசையிலும் சூரியன் மற்றொரு திசையிலும் கடல் நீரை ஈர்க்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் நான்கு பக்கங்களிலும் ஈர்க்கப்படுகிறது. ஆகவே தினமும் ஏற்படும் உயர் ஓதத்தைவிடச் சற்றுக் குறைவாகக் கடல் மட்டம் இவ்விரு தினங்களில் உயர்கிறது. இதுவே மித ஓதம்.

ஓதங்களின் விளைவுகள்

126. உள்நாட்டுப் பகுதியில் பெரிய ஆறுகளில் அமைந்துள்ள துறைமுகங்களுக்குக் கடலில் இருந்து கப்பல்கள் செல்ல உயர் ஓதத்தின் போது ஏற்படும் நீர்மட்ட உயர்வு பயன்படுகிறது. ஓதங்கள் மின்சாரம் தயாரிக்கப்பயன்படுகினறன.

127. மீனவர்கள் கடலுக்குள் தங்களுடைய படகுகளைச் செலுத்தவும், திரும்ப கரைக்கு வரவும் உயர் ஓதம் பயன்படுகிறது.

டிரபோஸ் ஸ்பியர்

128. இது பூமியின் மேல் 8 முதல் 18 கி. மீ வரை பரவியுள்ளது

129. பருவ மாற்றங்கள் இங்குதான் நடைபெறுகிறது

130. இந்த பகுதியில் விமானங்கள் பறக்காது

ஸ்ட்ரோடோஸ்பியர்

131. வானிலை மாற்றங்கள் கிடையாது

132. இங்கு மேகங்கள், நீர்திவலைகள் ஏதுமில்லை

133. எனவே ஆகாய விமானங்கள் பறக்கின்றன

134. ஓசோன் இடுக்கு உடையது

135. புறஊதாக் கதிர்களை தடுக்கும்

மீசோஸ்பியர்

136. பூமி வெப்பம் பெறுவதை தடுப்பது அயனோஸ்பியர்

137. இதன் உயரம் 150 கி. மீ

138. மின்சாரத்தை கடத்தும்

139. இது மின் அயனம் கொண்டது

140. ரேடியோ அலை வரிசைகளை திருப்பும் அலையும் தன்மை கொண்டது

எக்ஸோஸ்பியர்

141. வளி மண்டலத்தின் எல்லை

142. அதிக வெப்பமுடன் காணப்படும்

143. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்கள் காணப்படும்

144. வெப்பத்தின் கிடைப்பரவலை பாதிக்கும் காரணிகள்

145. பூமியின் சாய்வு அச்சு

146. சூரிய ஒளியின் கால நீட்சி

147. நிலப்பரப்பின் பண்புகள்

148. பேராழியின் நீரோட்டங்கள்

149. வீசும் காற்றுகள்

உயிர்க்கோளம்

150. புவியின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு

வளிமண்டலம்

151. காற்றும் மழையும் ஏற்படுவதற்குக் காரணமானது

எக்ஸோஸ்பியர்

152. வளிமண்டலத்தின் மேல் எல்லையாகக் கருதப்படுவது

153. உயரே செல்ல செல்ல காற்று மண்டலம் மெல்லியதாகின்றது

வளிக்கோளம்

154. புவிக்கோளத்தைச் சூழ்ந்த போர்வை

உயிர்நிலைச்சூழல்

155. தாவரங்களையும் பிராணிகளையும் உள்ளடக்கியது.

156. பூமியில் வெப்பம் வேறுபாடு காணப்படுவதற்கான காரணங்கள்

1. கடல்மட்டத்திலிருந்து உயரம்

2. கடலிலிருந்து தூரம்

3. வீசும் காற்றுகள்

4. கடல் நீரோட்டங்கள்

157. 50,000 சதுர கிலோ மீட்டர் பசால்ட் லாவாவினால் மூடப்பட்டிருந்தது. இது 65-60 மில்லியன் ஆண்டிற்கு முன் உருவான பகுதி.

வியாபாரக் காற்றுகள்:

158. பூமத்திய ரேகையை நோக்கி 30° வடக்கு மற்றும் 30° தெற்கில் இருந்து வீசும் காற்றுகளே வியாபாரக் காற்றுகள் எனப்படும்.

SODAR: Sonic Detection and Ranging

159. இது காற்றின் வேகத்தை பல்வேறு உயரங்களில் அறிய பயன்படுகிறது

Horse latitudes:

160. பூமத்திய ரேகையை நோக்கி 30° முதல் 35° வடக்கு மற்றும் 30° முதல் 350° தெற்கில் உள்ள பகுதியே Horse latitudes என்று அழைக்கப்படுகிறது.