Type Here to Get Search Results !

வேதியியல் – 4 | 129 Questions

 வேதியியல் – 4

வேதிச் சேர்மங்கள்

1. சலவைசோடா (Na2CO3.10H2O)

2. சலவை சோடா என்பதுசோடியம் கார்பனேட் டெக்கா ஹைட்ரேட் ஆகும்.

3. பூக்கும் மண் என்று அழைக்கப்படுவதுசலவைசோடா ஆகும்

4. சலவை சோடா தயாரிக்கப்படும் முறைசால்வே முறை

5. பயன்கள்: கடின நீலை மென்னீராக மாற்றவும், அமிலத் தன்மையை கட்டுப்படுத்தவும், காகிதம், சோப்பு, துணி, வண்ணப்பூச்சுகள் தயாரிக்கவும், துணி துவைக்கும் போது தூய்மையாக்கியாகவும் பயன்படுகிறது.

6. நீரின் கடினத்தன்மைக்கு காரணம் - நீரில் கரைந்துள்ள கால்சியம், மெக்னீசியம் உப்புகளே ஆகும்

சமையல் சோடா: NaHCO3

7. சமையல் சோடா என்பதுசோடியம் பை கார்பனேட் ஆகும்

8. சமையல் சோடா தயாரிக்கப்படும் முறைசால்வே முறை

9. ரொட்டி சோடா (பேக்கிங் சோடா) என்பது சோடியம் பை கார்பனேட் மற்றும் டார்டாரிக் அமிலம் கலந்த கலவை ஆகும்.

10. பயன்கள்: தீயணைக்கும் சாதனங்களிலும், குளிர்பானங்களில் காற்றூட்டம் செய்யவும், ரொட்டி சோடா தயாரிக்கவும், வயிற்றில் ஏற்படும் அமிலத் தன்மையை குறைக்கவும், தோல் பதனிடவும் பயன்படுகிறது.

11. தீயின் எதிரி என அழைக்கப்படுவதுகார்பன்டை ஆக்ஸைடு

12. சலவைத்தூள் - கால்சியம் ஆக்சி குளோரைடு (CaOCl2)

13. சலவைத்தூள் பெருமளவில் தயாரிக்கும் முறைபெக்மேன் முறை

14. சலவைத்தூள் மிகக்குறைந்த அளவு நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் பிறவி நிலை ஆக்ஸிஜனைத் தருகிறது

15. சலவைத்தூளில் அதிக அளவு நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து குளோரின் வாயுவைத் தருகிறது. இக்குளோரின் வாயுபெறக்கூடிய குளோரின்என்று அழைக்கப்படுகிறது. இதுவே சலவைத்தூளின் வெளுக்கும் செயலுக்குக் காரணம்.

16. சலவைத்தூளில் உள்ள பெறக்கூடிய குளோரினின் எடை விகிதம் 35-38%

17. சலவைத்தூளின் வலிமைபெறக்கூடிய குளோரின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

18. பயன்கள்: துணிகளை வெளுக்கும் காரணியாகவும், கிருமிநாசினியாகவும், பூச்சிகொல்லியாகவும், நீரை தூய்மையாக்கவும், வேதித் தொழிற்சாலையில் ஆக்ஸிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.

பாரிஸ் சாந்து:

19. பாரிஸ் சாந்துவின் மூலக்கூறு வாய்ப்பாடுCaSO4l/2H2O (or) 2CaSO4.H2O

20. ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடுCaSO4.2H2O

21. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுவதுஜிப்சம்

22. பாரிஸ் சாந்து இறுகும் போது விரிவடையும் பருமனளவு 1:5

23. பாரிஸ் சாந்துக்கு இறுகும் பண்பைக் கொடுக்கும் வினைவேகமாற்றி - NaCl

24. பயன்கள்: எழுது பொருள் தயாரிக்கவும், பொம்மைகள் செய்யவும், சுவரில் வண்ணம் தீட்டவும், போலிக்கூரைகள் அமைக்கவும், சிலைகள் வார்க்கவும், எலும்பு முறிவுகளை சரி செய்யவும், பல் மருத்துவத்திலும் பயன்படுகிறது

சிமெண்ட்:

25. சிமெண்டை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் - எகிப்தியர்கள்

26. முதன்முதலில் சிமெண்டை கண்டறிந்தவர் - ஜோசப் அஸ்பிடின்

27. சிமெண்டை போர்ட்லாண்ட் சிமெண்ட என அழைத்தவர் - ஜோசப் அஸ்பிடின்

28. சிமெண்ட் தயாரிக்க தேவையான கச்சாப் பொருள் - மூன்று பங்கு சுண்ணாம்புக்கல்லும், ஒரு பங்கு களிமண்ணும் (3:1)

29. சிமெண்ட் கட்டிகள் () சிமெண்ட் திரள்களில் உள்ளவைடை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் அலுமினேட்.

30. சிமெண்ட் கட்டிப்படும் நேரத்தை தாமதப்படுத்துவதற்கு சிமெண்டுடன் சேர்க்கப்படும் பொருள் - ஜிப்சம் (2-5%)

31. சிமெண்ட் நீருடன் சேரும்போது சிறிது நேரத்தில் கடினமாவத்ன பெயர்சிமெண்டின் இறுகும் தன்மை எனப்படும்.

32. காரை என்பதுதேவையான நீருடன் சிமெண்டும் மணலும் 3:1 விகிதத்தில் கலந்த கலவையாகும்.

33. கற்காரையில் காணப்படும் பொருட்கள் - சிமெண்ட், மணல், நொறுக்கப்பட்ட கல், நீர்

34. இரும்புத்துண்டுகள் () எஃகு வலைகளை கற்காரையினுள் புதைத்து பெறப்படுவதுவலுவூட்டப்பட்ட காரை (RCC)

கண்ணாடி:

35. சாதாரண கண்ணாடியின் வாய்ப்பாடுNa2O.CaO.6SiO2

36. கண்ணாடியின் இளகு தன்மையை அதிகரிக்க கண்ணாடி தயாரிக்கும் போது சேர்க்கப்படும் பொருள் - உடைந்த கண்ணாடி துண்டுகள்.

37. கட்டுப்படுத்தி ஆற்றல் என்பது கண்ணாடியை மெதுவாகவும், ஒரே சீராகவும் குளிர்விப்பதாகும்.

38. கண்ணாடி தயாரித்தலின் போது உருகிய கண்ணாடிகட்டுப்படுத்தி ஆற்றல் முறையில் குளிர்விக்கப்படுகிறது.

39. அதிக குளிர்விக்கப்பட்ட நீர்மத்துக்கு எடுத்துக்காட்டுகண்ணாடி

40. கண்ணாடிக்கு குறிப்பிட்ட உருகுநிலையில்லை

41. கண்ணாடியில் பூவேலைப்பாடு செய்ய பயன்படும் வேதிப்பொருள் - ஹைட்ரோ புளுரிக் அமிலம்

42. கண்ணாடியை அரிக்கும் அமிலம் - ஹைட்ரோ புளுரிக் அமிலம்.

கண்ணாடியின் வகைகள்

43. கண்ணாடியின் வகைகள்: சோடாக் கண்ணாடி(மென் கண்ணாடி)

44. ணப்படும் பொருள்கள்:  சோடியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட், சிலிகா

45. யன்கள்: ஜன்னல், மின்விளக்கு. சோதனைக் குழாய்கள், டம்ளர்கள்

 

 

46. கண்ணாடியின் வகைகள்: கடினக் கண்ணாடி

47. ணப்படும் பொருள்கள்: பொட்டாசியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட், சிலிகா

48. யன்கள்: வெப்பம் தாங்கவல்ல உபகரணங்கள்

 

49. கண்ணாடியின் வகைகள்: ஓளி ஊடுருவும் கண்ணாடி

காணப்படும் பொருள்கள்: பொட்டாசியம் கார்பனேட், சிவப்பு லெட், சிலிகா

பயன்கள்: மூக்கு கண்ணாடி, புகைப்பட கருவி, தொலைநோக்கி, நுண்ணோக்கி

 

50. கண்ணாடியின் வகைகள்: பைரக்ஸ் கண்ணாடி

காணப்படும் பொருள்கள்: சோடியம் கார்பனேட், பொட்டாசியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட், சிலிகா

பயன்கள்: சிறிய மருத்துவ குப்பிகள்

 

51. கண்ணாடியின் வகைகள்: பிளிண்ட் கண்ணாடி (அதிக ஒளி விலகல் எண் கொண்டது)

காணப்படும் பொருள்கள்: பொட்டாசியம் கார்பனேட், லெட் ஆக்சைடு, சிலிகா

பயன்கள்: உயர் தரக உபகரணஙகள், அலங்கார பொருட்கள்

 

52. குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிக்க பயன்படுவதுபாதுகாப்பு கண்ணாடி.

53. பாதுகாப்பு கண்ணாடியில் இரு கண்ணாடி அடுக்குகளுக்கிடையே ஒளி ஊடுருவக்கூடிய மெல்லிய பிளாஸ்டிக் பொருள் ஒட்டப்பட்டிருக்கும்.

54. ஆகாய விமானங்கள், இரயில் வண்டிகள் ஆகியவற்றிறல் காற்றுத் திரையாக பயன்படும் கண்ணாடிபாதுகாப்பு கண்ணாடி.

55. நெருப்பு பற்றாத ஆடைகள் தயாரிக்க பயன்படுவதுகண்ணாடி இழைகள்.

56. எண்டோஸ்கோப் கருவிகளில் பயன்படுவதுகண்ணாடி இழைகள்

கண்ணாடியில் நிறமூட்டும் பொருள் கிடைக்கும் நிறம்

57. குரோமிக் ஆக்ஸைடு:  பச்சை

58. கோபால்ட் ஆக்ஸைடு:  நீலம்

59. மாங்கனீசு ஆக்ஸைடு:  ஊதா

60. பேரிக் ஆக்ஸைடு:  பழுப்பு

61. காட்மியம் ஆக்ஸைடு மஞ்சள்

62. சேலினியம் ஆக்ஸைடு:  ரூபி சிவப்பு

கார்பன்

63. கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும், வளையங்களையும் தோற்றுவிக்கும் பண்பிற்கு – “கேட்டினேசன்என்று பெயர்.

64. புவி ஓட்டில் உள்ள கார்பனின் அளவு – 0.03 %

65. புவி ஓட்டில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடின் அளவு – 0.03 %

66. ஒரு தனிமம் ஒத்த இயற்பியல் பண்புகளையும், மாறுபட்ட வேதியியல் பண்புகளையும் கொண்டிருக்கும் நிலைபுறவேற்றுமை வடிவங்கள் எனப்படும்.

கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்:

67. படிகமுள்ளவை -டு. கிராபைட், வைரம்

68. படிகமற்றவை -டு. நிலக்கரி, அடுப்புக்கரி மற்றும் விளக்கு கரி

69. இயற்கையில் காணப்படும் பொருட்களில் கடினமானதுவைரம்

70. கிராபைட்டில் கார்பன் அடுக்குகள் அறுங்கோண வளையங்களுடன் கூடிய தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளது.

71. கிராபைட்டில் பல்வேறு அடுக்குகளிடையே உள்ள பிணைப்புவலுவிழந்த வாண்டர்வால் விசையாகும். இப்பண்பே எந்திரங்களில் கிராபைட் உயவுப் பொருளாக பயன்பட உதவுகிறது.

72. வைரத்தில் கார்பன் அணுக்கள் முப்பரிமாணத்துட்ன கூடிய வலுவான விசையால் பிணைக்கப்பட்டுள்ளதால் வைரம் கடினமான பொருளாக உள்ளது.

73. மின்சாரத்தை கடத்தும் அலோகம் - கிராபைட்

74. கிராபைடின் உருகுநிலை – 3700°C

75. மின்கலங்களில் மின்வாயாகவும், எந்திரங்களில் உயவுப் பொருளாகவும், லெட் பென்சில் செய்யவும், அணுக்கரு உலையில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator), பூச்சுகள் தயாரிக்கவும் கிராபைட் பயன்படுகிறது.

76. வைரத்தின் பளபளப்புக்கு காரணம் - முழு அக எதிரொலிப்பு

77. வைரத்தின் அடர்த்தி – 3.5 கி : செ.மீ3

78. பாறைகளைத் துளையிடவும், பளிங்குக்க கற்களை அறுக்கவும், கண்ணாடியை வெட்டவும் கருப்பு வைரம் பயன்படுகிறது.

79. கார்பனின் புறவேற்றுமை வடிவமான புல்லரீன்களில் கார்பன் அணுக்கள் கோள வடிவமுடைய மூலக்கூறுகளாக ஒன்றோடொன்று இணைநது காணப்படுகின்றன.

80. புல்லரீனை தயாரித்தவர் - பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன்

81. பக்கிபால் என அழைக்கப்படுவதுC60  ஃபுல்லரீன்

82. புல்லரீன் வகைகள்: C32, C50, C60, C70. C90. C120

கார்பன் டை ஆக்ஸைடு

83. கால்சியம் கார்பனேட் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் போது கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது.

84. உலர் பனிக்கட்டி என்பதுதிண்ம கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்

85. கார்பன்டை ஆக்ஸைடை (-78°C) அளவிற்கு, குளிர்விக்கும் போது திண்ம கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது.

86. கார்பன் டை ஆக்ஸைடு ஒரு அமிலத்தன்மை கொண்ட வாயுவாகும்

கார்பன் டை ஆக்ஸைடின் பயன்கள்:

87. தீயணைக்கும் பொருளாகவும், காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், குளிர் சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகவும், சக்கரைத் தொழிற்சாலையில் நீர்ம கார்பன்டை ஆக்சைடாகவும், சலவைச்சோடா மற்றும் ரொட்டிச் சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது.

மீத்தேன்:

88. மிக எளிய ஹைட்ரோ கார்பனுக்கு உதாரணம் - மீத்தேன்

89. கொல்லி வாயு () சதுப்பு நில வாயு என அழைக்கப்படுவதுமீத்தேன்

90. நிலக்கரி வாயுவில் காணப்படும் மீத்தேன் அளவு 30%

91. இயற்கை வாயுவில் காணப்படும் மீத்தேன் அளவு 80%

92. ஆய்வகத் தயாரிப்பில் மீத்தேன் நீரில் கரையாது என்பதால் நீரின் கீழ்முகப் பெயர்ச்சியினால் சேகரிக்கப்படுகிறது

மீத்தேனின் பயன்கள்:

93. கார்பன் - பிளாக் தயாரிக்கவும், தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகவும், வீடுகளில் எரிபொருளாகவும் பயன்படுகிறது.

94. சாண எரி வாயுவில் அடங்கியுள்ள வாயுமீத்தேன்

கரிமச் சேர்மங்கள்

95. PET என்பது பாலி எத்திலின் டெரிப்தேலேட் ஆகும்

96. ஆல்கஹால் தொகுதி R – OH

97. ஆல்டிஹைடு தொகுதி R – CHO

எத்தில் ஆல்கஹால்(C2H5OH)

98. பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக என்சைம்களின் உதவிகொண்டு மாற்றும் நிகழ்ச்சிநொதித்தல் () பொங்குதல் எனப்படும்

99. தொழிற்சாலைகளில் நொதித்தல் முறையில் கருப்பஞ்சாற்றிலுள்ள (சர்க்கரை கழிவுப்பாகு) சர்க்கரையிலிருந்து எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது.

100. கருப்பஞ்சாற்றிலுள்ள சுக்ரோஸன் அளவு 30%

101. எத்தில் ஆல்கஹால் தயாரித்தலில் உரமூட்டியாக பயன்படுவதுஅம்மோனியம் சல்பேட் () அம்மோனியம் பாஸ்பேட்

102. நொதித்தல் முறையில் எத்தில் ஆல்கஹால் தயாரிக்கும் போது கிடைக்கும் நொதித்த நீர்மம் - வாஷ் (கழிவு நீர்மம்) (15% - 18% ஆல்கஹால்)

103. எரி சாராயத்தில் 95.6%  எத்தனாலும் 44%  நீரும் உள்ளது

104. தூய ஆல்கஹால் () தனி ஆல்கஹால் என்பது – 100% எத்தில் ஆல்கஹால் ஆகும்

பார்மால்டிஹைடு(HCHO)

105. பார்மால்டிஹைடு ஆக்ஸிஜனேற்றம் அடைவதன் மூலம் பார்மிக் அமிலமும், அசிடால்டிஸைடு ஆக்ஸிஜனேற்றம் அடைவதன் மூலம் அசிட்டிக் அமிலமும் உண்டாகிறது.

106. ஆல்டிஹைடு வரிசையில் முதல் உறுப்புபார்மால்டிஹைடு

107. காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் - பேயர் காரணி எனப்படும்

108. அம்மோனியம் கலந்த சில்வர் நைட்ரேட் - டாலன் காரணி எனப்படும்

109. பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம்யூரோட்ரோபின் () ஹெக்சா மெத்திலீன் டெட்ராமீன் [(CH2)6N4] இது சிறுநீரக புரைத்தடுப்பானாக பயன்படுகிறது.

110. 40% பார்மால்டிஹைடு கொண்ட நீர்க்கரைசல் - பார்மலீன் எனப்படும். இது இறந்த சடலங்களையும், உயிரியல் மாதிரிகளையும் பாதுகாக்க உதவுகிறது.

111. பேக்லைட் என்பதுபினால் பார்மால்டிஹைடு ஆகும். இது மின்விசை தொடர்புடைய பொருட்கள் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் பொருளாகும்.

அசிட்டோன் (CH3COOH)

112. கார்பாக்சிலிக் அமில வரிசையில் 2வது உறுப்பு ஆகும்.

113. 6% - 10% அசிட்டிக் அமிலம் - வினிகர் (புளிக்காடி) எனப்படும்.

114. மைகோடெர்மா அசிட்டி என்ற பாக்டீரியா முன்னிலையில் எத்தனால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கிடைக்கும் பொருள்வினிகர்.

115. பனிக்கட்டி போன்ற அசிடிக் அமிலம் – 100% அசிட்டிக் அமிலம் ஆகும்.

116. அசிடிக் அமிலத்தை அசிடிக் நீரிலயாக மாற்ற உதவும் நீர் நீக்கும் காரணிபாஸ்பரஸ் பென்டாக்ஸைடு.

117. செல்லுலோஸ் அசிடேட் என்ற செயற்கை பொருள் தயாரிப்பில் பயன்படுவதுஅசிட்டிக் அமிலம்

சோப்பு:

118. சோப்பு என்பதுநீள சங்கிலி அமைப்புடைய கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் () பொட்டாசியம் உப்புக்கள் ஆகும்.

119. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புக்கள் - கடின சோப்புக்கள் எனப்படும்.

120. கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்புக்கள் - மென் சோப்புக்கள் எனப்படும்.

121. கொழுப்பு அமிலங்களை சோடியம் ஹைட்ராக்ஸைடு கொண்டு நீராற் பகுக்கும் போது கிடைக்கும் பொருள் - சோப்பு (இம்முறை சப்பானிபிகேஷன் எனப்படும்)

122. சலவைப்பொருட்கள் என்பதுசோடியம் உப்புகள் அடங்கிய சல்போனிக் அமிலங்கள் ஆகும்.

123. சந்தையில் கிடைக்கும் சலவைத்தூளில் 15% - 30% சலவைப் பொருட்கள் உள்ளன.

124. சலவைத்தூள் உலர்ந்த நிலையில் இருப்பதற்கு சேர்க்கப்படும் சேர்மம்சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் சிலிகேட்.

125. நீரிலுள்ள மாசுக்களை அகற்றவும், நீரின் காரத்தன்மையை நிலைநிறுத்தவும் சலவைத்தூளில் சேர்க்கப்படும் பொருள் - சோடியம் கார்பனேட்

126. நீரில் மிதக்கும் மாசுக்களை படிய வைக்க சலவைத்தூளில் சேர்க்கப்படும் பொருள் - (CMC) (கார்பாக்சிலிக் மெத்தில் செல்லுலோஸ்)

127. துணிகளை வெண்மையாக்க சலவைத்தூளுடன் சேர்க்கப்படும் பொருள்சோடியம் பெர்போரெட்.

 

சோப்பு நீருடன் வினைபுரியும் போது கிடைப்பது

a. நீண்ட கார்பன் சங்கிலி (நீரை வெறுக்கும் முனையற்ற வால் பகுதி)

b. கார்பாக்சிலேட் தொகுதி (நீரை ஏற்கும் முனையுள்ள தலைப்பகுதி)

128. சலவைப் பொருள் நீரில் கரைக்கப்படும் போது தோன்றும் கொத்து மூலக்கூறுகளின் பெயர் - மிசல்ஸ்

129. சலவைப் பொருள்களை பயன்படுத்தும்போது நீர் மாசுபடுவதைத் தவிர்க்க குறைந்த கிளையுடைய ஹைட்ரோ கார்பன்கள் உள்ள சேர்மங்களைக் கொண்டு சலவைப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.