History in Tamil | Part - 21
ஐரோப்பியர்கள் இந்திய வருகை
1. 1453ல் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபின் பகுதியைக் கைப்பற்றினார். எனவே ஐரோப்பியர்கள் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
2. எனவே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளின் அரசர்கள் மாலுமிகளை ஊக்குவித்தனர்.
3. பார்த்தலோமியா டயஸ் கி. பி. 1489ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் தென்முனையை அடைந்தார்.
4. புயல் காரணமாக மேற்கொண்டு பயணம் தொடர இயலவில்லை. எனவே இம்முனையை புயல்முனை என்று அழைத்தார்.
போர்த்துகீசியர்
5. இந்தியாவிற்குக் கடல் வழி காண்பதில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு போர்ச்சுகல்
6. ஹென்றிமோர் என்ற போர்ச்சுக்கீசிய அரசரின் உதவி பெற்று, வாஸ்கோடகாமா ஆப்ரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக 1498, மே மாதம் 27ம் நாள் இந்தியாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்து அடைந்தார்.
7. கள்ளிக்கோட்டை மன்னரான சாமரினிடம் வணிக உரிமையைப் பெற்றார்.
8. 1501ல் கப்ரால் என்பவர் வாணிகம் செய்ய இந்தியா வந்தார்.
9. 1502ல் வாஸ்கோடகாமா மீண்டும கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
10. 1501ல் செப்டம்பர் மாதம் Pedro Alvarez Cabral என்பவர் கள்ளிக்கோட்டையில் பண்டக சாலை நிறுவினார். இதுவே முதல் ஐரோப்பியா பண்டகசாலை ஆகும்.
11. கள்ளிக்கோட்டை, கொச்சின், கண்ணனூர் ஆகிய இடங்களில் போர்த்துக்கீசியர் பண்டக சாலைகள் நிறுவினர்.
12. இந்தியாவில் நிறுவப்பட்ட போர்த்துக்கீசியப் பற்றிடங்களை நிருவகிக்க அரசப்பிரதிநிதி (Viceroy) யை நியமிக்கப்பட்டார்.
13. 1507ல் போர்ச்சுக்கீசியர்கள் சென்னை வந்தனர். அவர்களின் தலைவர் Madra. எனவே இதனை Madra என்று அழைத்தனர்.
14. போர்த்துக்கீசியர்களின் வருகையை அரபி நாட்டவர்கள் விரும்பவில்லை.
15. அரபியர்களின் தூண்டுதலால் 1508ல் கள்ளிக்கோட்டை சமேரின், குஜராத் சுல்தான் முகமது பெகரா ஆகியோர் சவுல் என்னுமிடத்தில் போர்ச்சுக்கீசியரை தோற்கடித்தார்.
16. 1509ல் மீண்டும் போர்ச்சுக்கீசியர்கள் டையு என்னுமிடத்தில் வெற்றி பெற்றனர். டையுல் பண்டக சாலை கட்டப்பட்டது.
பிரான்சிஸ்-டி-அல்மைடா (1505-1509)
17. 1505ல் பிரான்சிஸ்-டி-அல்மைடா முதல் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
18. கடற்படையின் வலிமையைப் பெருக்கினார். அவர் பின்பற்றிய கொள்கை „நீல நீர்க் கொள்ளை‟ என அழைக்கப்பட்டது.
19. அல்மைடா மற்றும் அவரது மகன் இருவரும் 1509ல் எகிப்தியர்களால் கொல்லப்பட்டார்.
அல்போன்சா-டி-அல்புகர்க் (1509-1515)
20. இவரைப் போர்த்துக்கீசியர்கள் „மாமனிதர்‟ எனப் போற்றுகின்றனர். இவரே இந்தியாவில் போர்த்துக்கீசிய ஆட்சியை நிறுவியர்.
21. 1510ல் கோவாவை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார்.
பின்னர் அவர்களின் தலைநகராயிற்று.
22. 1511ல் மலாக்காவைக் கைப்பற்றினார்.
23. கொச்சியில் அரசர் அனுமதியுடன் இரு கோட்டையைக் கட்டினார்.
24. விஜயநகர அரசுடன் தன் உறவை பலப்படுத்தியவர் இவரே.
25. சதி ஒழிப்பில் வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு முன்னோடியாக அல்போன்சா-டி-அல்புகர்க்கு திகழ்ந்தார்.
26. 1515ல் பாரசீக வளைகுடாவில் ஆர்முஸ் துறைமுகத்தை அமைத்தார்.
இவரின் முக்கிய ஆட்சி முறைகள்:
27. சில பகுதிகளை நேரடியாக கைப்பற்றி அவற்றை ஆட்சி செய்தல்.
28. சில பகுதிகளை காலணியாக்குதல்.
29. கைப்பற்ற இயலாத பகுதிகளில் பண்டகசாலை நிறுவுதல்.
30. பெரும் வணிகர்களை போர்ச்சுகல் நாட்டின் வல்லமையை ஏற்றுக்கொள்ளச் செய்தல்.
31. இந்திய உயர்குடி பெண்மணிகளை போர்ச்சுகீசியர்களுக்கு திருமணம் செய்தல்.
நினா டி குன்கா:
32. 1528ல் போர்ச்சுக்கீசிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.
33. 1531ல் குஜராத் கடற்கரையில் சவுல் என்னுமிடத்தில் கோட்டை கட்டினார்.
34. 1534ல் பசீன் கைப்பற்றுதல்.
35. 1537ல் டையு கைப்பற்றுதல்.
36. 1559ல் டாமன் கைப்பற்றுதல்.
37. 1572ல் அக்பர் குஜராத்தை கைப்பற்றுதல்.
38. 1640ல் டச்சுக்காரர்கள் மலாக்காவை கைப்பற்றுதல்.
39. 1739ல் மராத்தியர்கள் பசீனை கைப்பற்றுதல்.
40. 1961 வரை கோவா, டையு, டாமன் இந்தியாவுடன் இணைப்பு.
தோல்விக்கான காரணங்கள்:
41. 1580ல் போர்ச்சுகீசியர் நாடு ஸ்பெயின் ஆட்சியின் கீழ் வந்தது.
42. திறமையற்ற வைஸ்ராய்கள்.
43. விசயநகர வீழ்ச்சி.
44. டச்சு, ஆங்கிலேயர் எழுச்சி, வலிமையற்ற கடற்படை, பேராசை மற்றும் பிரேசில் நாட்டை போர்ச்சுக்கீசியர்கள் கண்டறிதல்.
45. 1601ல் நெதர்லாந்து கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது.
46. 1616ல் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கரின் அனுமதிப் பெற்று டேனியர்கள் தென்னிந்தியாவில் 1620ல் தரங்கம்பாடி என்னுமிடத்தில் வணிகத் தலங்களை அமைத்தனர்.
47. தரங்கம்பாடியில் Fort – Bonusberg (Dansborg) என்ற கோட்டையை அட்மிரல் Ove Gedde கட்டினார்.
48. சேராம்பூர் என்னுமிடத்தில் டேனியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்.
டச்சுக்காரர்
49. 1592ல் ஆம்ஸ்டர்டாம் வணிகர்களால் டச்சுக் கம்பெனி துவங்கப்பட்டது.
50. 1597ல் இந்தியாவில் இருந்து திரும்பிய காரணிலியஸ் ஹட்மேன் என்ற டச்சு வியாபாரி பெரும் செல்வத்துட்ன திரும்பினார் பின் 1602ல் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கப்பட்டது.
51. 1641ல் டச்சுக்காரர்கள் போர்த்துக்கீரியர்களிடமிருந்து மலாக்காவைக் கைப்பற்றினர்.
52. 1609 ஆம் ஆண்டு பழவேற்காடு என்னுமிடத்தில் டச்சுக்காரர்களின் முதல் கோட்டை கட்டப்பட்டது
53. 1623ல் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரை அம்பாயினா என்னுமிடத்தில் படுகொலை செய்தார். இதுவே அம்பாயினா படுகொலை எனப்பட்டது
54. 1658ல் இலங்கையையும், பின்னர் நாகப்பட்டினத்தையும் போர்ச்சுக் கீசியர்களிடமிருந்து கைப்பற்றினார்.
55. நாகப்பட்டினம் அருகேயுள்ள தரங்கம்பாடியில் கோட்டை எழுப்பினார்.
முக்கிய டச்சு வணிக நிறுவனங்கள்:
56. மசூலிப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், புலிகாட், சூரத், நாகப்பட்டினம், கொல்லம், கொச்சி, கண்ணனூர்.
57. 1845ல் தங்களது வணிக நிறுவனங்களை ஆங்கிலேயருக்கு விற்றனர்.
ஆங்கிலேயர்
58. 31-12-1600ல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இலண்டன் கிழக்கிந்திய வாணிக நிறுவனத்திற்கு, இந்தியா கீழை நாடுகளுடன் வாணிகம் செய்யும் சிறப்புரிமையை The Governor and
Company of merchants of London என்ற வியாபார குழுமத்திற்கு வழங்கினார்.
59. 1601ல் சூரத் பண்டக சாலை துவக்கம்.
60. 1608ல் வில்லியம் ஹாக்கின்சு, ஜஹாங்கீரைச் சந்தித்து சூரத் நகரில் வணிக உரிமையைப் பெற்றார்.
61. ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் அதனை ஏற்கவில்லை. எனவே இந்த உரிமை பின் முகலாயர்களால் ரத்து செய்யப்பட்டது.
62. 1615ல் சர் தாமசு ரோ என்பவர் முதலாம் ஜேம்ஸ் ஒப்புதலுடன் ஜஹாங்கீரைச் சந்தித்து வாணிக உரிமைகளைப் பெற்றார். சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச் நகரில் பண்டக சாலை ஆங்கிலேயர் ஆரம்கான், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் வணிக மையங்களை ஏற்படுத்தினார்.
63. சர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் 22.8.1639ல் சென்னையை சந்திரகிரி அரசன் சென்னப்ப நாயக்கரிடமிருந்து விலைக்கு வாங்கி 23.4.1640 ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிக்கொண்டனர். பின்னர், பாலசூர், அரிஹரபூர், ஹூக்ளி முதலான இடங்களில் பண்டக சாலைகளை நிறுவினர்.
64. ஆங்கில மருத்துவரான வில்லியம் ஹமில்டன் வங்காள ஆட்சியர் உறவினர் ஒருவரை நோயில் குணப்படுத்தியதற்காக 1651ஆம் ஆண்டு ஹூக்ளியில் வணிகத் தலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
65. 1661ல் பிரான்சு நாட்டு இளவரசி காதரினை இரண்டாம் சார்லஸ் மணம் செய்து, பம்பாய் நகரினை பெற்றார்.
66. 1661ல் மும்பையை இரண்டாம் சார்லசிடமிருந்து இரண்டன் வாணிக நிறுவனம் வருட குத்தகை 10 பௌண்டு செலுத்தி பெற்றுக்கொண்டது
67. கல்கத்தாவில் பண்டக சாலை நிறுவ 1669ல் அவுரங்கசீப்பிடம் இசைவுப் பெற்றனர்.
பிரெஞ்சுக்காரர்கள்
68. 1664ல் பதினான்காம் லூயி அரசரும், அவரது அமைச்சர் கால்பர்ட் ஆகியோரின் ஆலோசனைப்படி பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் “பிரான்சிஸ் கரோன்” என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது.
69. 1666ல் பிரான்சின் தூதுவர்கள், அவுரங்கசீப்பை சந்தித்து இந்தியாவில் கோட்டைகள் அமைக்கவும், வணிகம் செய்யவும் இசைவு பெற்றனர்.
70. 1667ல் பிரெஞ்சுப் பண்டகசாலை சூரத்தில் பிரான்சுவா கரோன் என்பவரால் துவக்கப்பட்டது. இதுவே பிரெஞ்சுக்காரர்களின் முதல் பண்டகசாலை ஆகும்.
71. 1669ல் மசூலிப்பட்டினத்தில் பண்டகசாலை.
72. 1673ல் பாண்டிச்சேரியில் பண்டகசாலை.
73. பிற வணிக தலங்கள்: சந்திரநாகூர், மாகி, ஏனாம், காரைக்கால்.
74. 1672ல் சாந்தோம் பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்.
75. 1673ல் கோல்கொண்டா சுல்தான் மற்றும் டச்சுப்படைகளால் சாந்தோம் கைப்பற்றப்பட்டது.
மார்ட்டின் 1672 - 1706
76. 1672ல் பிரெஞ்சு - இந்தியப் பகுதிகளின் தலைமை இயக்குநராக மார்டின் நியமிக்கப்பட்டார்.
77. இவரே இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சியை நிறுவியவராவர். இவர் பீஜப்பூர் அரசரிடம் பாண்டிச்சேரியைப் பெற்றார்.
78. வங்காளத்தில் செயிஷ்டகான் என்ற நவாப்பிடமிருந்து சந்திரநாகூரை 1675ல் பெற்றனர். அந்நகரே வாணிகத்திற்குத் தலைமை இடமாயிற்று.
79. பின்னர் சந்திரநாகூர், பாலாசூர், காசிம்பஜார், மாஹி, காரைக்கால் ஆகிய இடங்களில் பண்டகச் சாலைகள் ஏற்படுத்தினர்
80. 1693ல் பாண்டிச்சேரி டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின் Ryswick ஒப்பந்தப்படி பாண்டிச்சேரி 1697ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் வழங்கப்பட்டது.
81. 1707ல் அவுரங்கசீப் இறந்தவுடன் ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் - அரசர்கள் - நவாப்புகள் தொடர்ந்து போர் செய்தனர்.
82. மார்டினுக்குப் பின் வந்த திறமையான தலைமை இயக்குநர்கள்: Lenoir, 2 Dumas (1735 – 1741).
83. 1721ல் மெரிஹியஸ் கைப்பற்றப்பட்டது.
84. 1725ல் மாகி கைப்பற்றப்பட்டது.
85. 1739ல் காரைக்கால் கைப்பற்றப்பட்டது.
இராபர்ட் கிளைவ்:
86. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில், சென்னையில் ஒரு எழுத்தராக தனது பதவியை இந்தியாவில் துவக்கியவர்.
87. 1751ல் ஆற்காட்டை சந்தாசாகிப்மிடமிருந்து கைப்பற்றினார்.
88. 1774ல் இங்கிலாந்திற்கு திரும்பி சென்றார். அங்கு தற்கொலை செய்து கொண்டார்.
முதல் கர்நாடகப் போர் 1746 – 1748
89. காரணம்: ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
90. கர்நாடக நிலைமை:
91. கர்நாடகம் என்பது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் அதன் பின்னிலத்தை குறிக்கும் பகுதியாகும்
92. இது ஆற்க்காட்டை தலைநகராக கொண்டு தக்காண சுபேதாரின் கீழ் ஒரு மாகாணமாக நவாபு என்ற பட்டத்துடைய கவர்னரால் ஆளப்பட்டது.
சென்னை நிலைமை:
93. 1734ல் மராட்டியர்கள் கர்நாடகத்தில் நுழைந்து அதன் கவர்னர் தோஸ்து அலி என்பவரை கொன்று அவரது மருமகன் சந்தா சாகிப்பை சிறைபிடித்து சத்ரா என்ற இடத்திற்கு கொண்டு சென்றார்.
94. தோஸ்து அலியின் மகன் சப்தார் அலி ஒரு கோடி ரூபாய் கொடுத்து தமது உயிரை காப்பாற்றிக் கொண்டார். பின் சப்தார் அலி கொலை செய்யப்பட்டார்.
95. பின் சப்தார் அலியின் மகன் நவாப்பாக நியமிக்கப்பட்டார். இது கர்நாடக அரசியலில் அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்வச்சத்தைப் போக்க தக்காண சுபேதார் அன்வர் உத்தீன் என்பவரை கர்நாடக நவாப்பாக நியமித்தார். தோஸ்து அலி உறவினர்கள் அன்வர் உத்தீனை ஏற்கவில்லை.
ஐரோப்பிய நிலைமை:
96. ஐரோப்பியாவில் 1740ல் நடந்த ஆஸ்திரிய வாரிசு உரிமைப் போரில் இங்கிலாந்தும் பங்கேற்றது.
97. இதில் இங்கிலாந்தும், பிரான்சும் எட்டு ஆண்டுக்காலம் நெதர்லாண்டில் போரிட்டது.
98. எனவே இந்தியாவில் உள்ள இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டவர்களிடம் போர்மோகம் சூழ்ந்தது.
99. சென்னையில் உள்ள ஆங்கிலேயரை காக்கும் பொருட்டு ஒரு படை வந்தது. பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே (பாண்டிச்சேரி கவர்னர்) கர்நாடக நவாப் அன்வாருத்தீனை துணைக்கு அழைத்தார். அன்வாருத்தீன் ஆங்கிலேயருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆங்கிலேயருக்கு வந்த படை திரும்ப சென்று விட்டது. இருப்பினும் டியூப்ளே மொரிஷியஸ் தீவின் பிரெஞ்சு ஆளுநர் லா பொர்டனேயை பெரும் கடற்படைப் பிரிவுடன் வரச் செய்தார்.
100. சென்னையை கைப்பற்றிய லா போர்டனே சென்னையை 40000 பவுன்களுக்காக ஆங்கிலேயரிடமிருந்து சென்னையைக் கைப்பற்றினார்.
அடையார் போர் 1746
101. ஆங்கிலேயர் வசமிருந்த சென்னையை டியூப்ளே மீண்டும் கைப்பற்றினார்.
102. சென்னையை இழந்த ஆங்கிலேயர்கள் அன்வாருத்தீனிடம் நியாயம் கேட்டனர். மேலும் டியூப்ளே சென்னையைக் கைப்பற்றியவுடன் அன்வாருத்தீனிடம் தருவதாக வாக்களித்தார். வாக்களித்தபடி அவர் செய்யவில்லை. எனவே அன்வாருத்தீன் பெரும் படையை பிரெஞ்சுகாரர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தார். அப்படை தோல்வியுற்றது. இப்போர் அடையார் போர் எனப்பட்டது.
103. ஆங்கிலேயர் பாண்டிச்சேரி மீது போர் தொடுத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் நன்கு பாதுகாத்தமையால் பாண்டிச்சேரியை வெல்ல இயலவில்லை.
அய்லாஷாபெல் உடன்பாடு 1748
104. ஆஸ்தீரிய வாரிசு உரிமைப்போர் அய்லாஷபெல் உடன்பாட்டுடன் முடிவடைந்தது. அதன்படி சென்னையை மீண்டும் ஆங்கிலேயருக்கு தர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக வட அமெரிக்காவில் இருந்த லூயிஸ்பார்க்கை பிரான்சிற்கு தந்தனர்.