Type Here to Get Search Results !

வரலாறு | Part - 24 | 102 Questions

History in Tamil | Part - 24 

இந்திய தேசிய காங்கிரஸ்

1. இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம் - 1885

2. இக்கூட்டம் முதலில் பூனாவில் துவங்க இருந்தது. அந்நகரில் காலரா நோய் பதவி இருந்தமையால் 1885ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-31 ஆம் தேதி வரை மும்பையில் கூட்டப்பட்டது.

3. 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்

4. தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர் A.O ஹியூம்.

5. கலந்து கொண்ட முக்கியமானவர்கள்:

a. தாதாபாய் நௌரோஜி

b. K.D  திலாங்

c. ரானடே

d. சுப்பிபரமணிய அய்யர் (Hindu)

e. பெரோஸ் ஷா

f. தீன்ஷா வச்சா

g. பிரோஷ்ஷா மேத்தா

6. இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

a. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருத்தல்

b. இந்திய கவுன்சில் சபை நீக்கம்

c. நடைமுறை பற்றி ஆய்வு செய்ய அரசு ஆணைக்குழு நியமித்தல்

d. பஞ்சாப், அயோத்தி மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் சட்டமன்றங்களை உருவாக்குதல்

e. இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை இந்தியாவில் நடத்துதல் மற்றும் வயது அதிகரித்தல்

7. இதே நேரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜியின் இரண்டாம் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது.

8. பிற்காலத்தில் இரு அமைப்புகளும் ஒன்றாயிற்று

1886 இரண்டாவது காங்கிரஸ் மாநாடு

9. கல்கத்தாவில் நடைபெற்றது

10. டஃபிரின் பிரபு காலத்தில் நடைபெற்றது

11. 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்

12. பொதுமக்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்

13. நிர்வாகத்தில் இருந்து நீதித்துறை பிரித்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1887 மூன்றாவது காங்கிரஸ் மாநாடு

14. சென்னையில் நடைபெற்றது

15. முறையான அமைப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது.

16. கன்னிமரா பிரபு சென்னையில் மாகாண கவர்னர்.

17. 600க்கும் மேற்கட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

1888 நான்காவது காங்கிரஸ் மாநாடு

18. அலகாபாத்தில் நடைபெற்றது.

19. அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

20. தர்பங்கா மகாராசாவின் உதவியுடன் நடைபெற்றது.

21. ஆண்ட்ருயூல் என்பவரின் தலைமையில் நடைபெற்றது.

22. இங்கிலாந்தைச் சார்ந்த சார்லஸ் பிராட்லா என்பவர் கலந்து கொண்டார்.

23. நிலவரிக் கொள்கை குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

24. நாளடைவில் காங்கிரஸ் உள்ளவர்கள் படித்தவர்களே என்றும் இவர்கள் இந்திய மக்கள் தொகையில் சிறியவர்கள் என அரசு கருதியது. எனவே காங்கிரசின் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை.

25. எனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து பொதுக்கூட்டங்களும் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன

26. இதன் விளைவாக பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் பஜராட்லா என்பவர் 1889ல் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் விளைவாக 1892ல் இந்திய சட்டசபைச் சட்டம் ஏற்பட்டது. இது காங்கிரசின் மறைமுக சாதனை ஆகும்

1893 காங்கிரஸ் மாநாடு

27. லாகூரில் கூடியது

28. தாதாபாய் நௌரோஜி தலைமை ஏற்றார்

29. பருத்தி ஆடை மீதான கலால் வரியை நீக்குதல், நிர்வாக செலவினைக் குறைத்தல், கட்டாய வேலை வாங்குவதை தடை செய்தல் போன்றவை குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது

1894 – சென்னை காங்கிரஸ் மாநாடு

30. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்பிரட் வெப் தலைமை ஏற்றார்

1895 – பூனா காங்கிரஸ் மாநாடு

31. விவசாயிகளின் கடன் நிலை

32. புகை வண்டிகளில் மூன்றாம் வகுப்புகளுக்கு வசதி குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

1896 கல்கத்தா காங்கிரஸ் மாநாடு

33. ரகமத்துல்லா சயானி தலைமை

34. மாநிலங்களுக்கு நிதி பங்கீடு, கல்வித்துறை சீர்திருத்தம்.

முஸ்லீம்களின் நிலைமை

1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி மறைந்து போனதற்கு ஆங்கிலேயரே காணரம் என முஸ்லீம்கள் நினைத்தனர்.

2. எனவே 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப்போராட்டம், வாகாபி இயக்கம் ஆகியவற்றிற்கு முஸ்லீம்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

அலிகார் இயக்கம்

1. கிழக்கு இந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த சர் சையது அகமது என்பவர் முஸ்லீம்களின் நலனுக்காக 1875ல் அலிகாரில் ஒரு பள்ளியை நிறுவினார். பின்னர் இதுவே அலிகார் பல்கலைக்கழகமாக மாறியது.

2. அவர் இசுலாமியரின் பழைய பழக்க வழக்கங்களான பலதாரமணம், எளிய விவாகரத்து பெறும்முறை, பெண்கள் முகத்தை மறைத்து கொள்ளும் வழக்கம் போன்றவற்றை கண்டித்தார்.

3. மேலையர் கல்வியின் அவசியத்தை எழுத்துரைத்தார். மக்கள் நெறிமிக்க வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

4. இவர் Tahaibal Akhlaq என்ற உருது இதழை துவங்கினார்.

5. இவ்வியக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு எதிராயிற்று. இதற்குக் காரணம் தொடக்கத்திலிருந்தே  சையத் அகமதுகானும், அலிகார் இயக்கமும் ஆங்கிலேயரைச் சார்ந்து இருந்தன. இருப்பினும் இசுலாமியர்களிடையே சமுதாய, பண்பாட்டு உணர்வை ஊட்டியது இவ்வமைப்பே ஆகும்.

6. சர் சையது அகமது கல்விக் காங்கிரஸ் என்ற அமைப்பினையும், காங்கிரசை எதிர்க்க ஐக்கிய இந்தியத் தேசபக்தர் சங்கம் (United India Patriotic Association) என்ற அமைப்பை 1888ல் துவக்கினார். இதில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உறுப்பினர்கள் ஆவார்.

7. பின் இவர் முகம்மதியர் ஆங்கிலோ கீழ்த்திசையினர் பாதுகாப்புச் சங்கம் (Muhammadan Anglo Oriental Defence Assocaition) என்ற அமைப்பை 1893ல் நிறுவினர்.

8. இதில் இந்துக்கள் நீங்கலாக முஸ்லீம்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உறுப்பினர்கள் ஆவர்.

வங்கப்பிரிவினை - 1905

1. வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட நாள் : 20-7-1905

2. வங்கப் பிரிவினை எதிர்ப்பு நாள்: 7-8-1905

3. வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள்: 16-10-1905.

4. வங்காளம், பீகார், மற்றும் ஒரிசாவின் ஒரு பகுதியை உள்ளடக்கிய பெரிய மகாணமாக வங்காளம் இருந்தது. அப்பெரிய மாநிலத்தை நிர்வகிப்பது மிக கடினமாக இருந்தது. எனவே 16-10-1995ல் நிர்வாக சீரமைப்புக்காக வங்காளத்தை கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம் என இரு வகையாக கர்சன் பிரவு பிரித்தார்.

5. இதன்படி கிழக்கு வங்காளத்தின் தலைநகர் டாக்கா என்றும் மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தா என்றும் அறிவிக்கப்பட்டது.

6. இப்பிரிவினையை இந்திய தேசிய காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது

7. வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியவர்கள்

a. சுரேந்திர நாத் பானர்ஜி

b. விபின் சந்திரபால்

c. அஸ்வினி குமார் தத்தா

d. ரசூல்

e. அரவிந்த கோஷ் ஆகியோர் ஆவர்

8. 1911ல் இப்பிரிவினை கைவிடப்பட்டது.

9. 19ஆம் நூற்றாண்டில் இந்தியா சுதந்திர போராட்ட களமாக விளங்கியது. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு நிலையில் உள்ள மக்கள் தங்களின் குறுகிய சுய நலன்களை மறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

1906 கல்கத்தா மாநாடு

1. 1906 நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் காங்கிரஸ் சுதேசி இயக்கம், தேசிய கல்வி குறித்து தீவிரவாதிகளால் தீர்மானம் இயற்றப்பட்டது.

2. மிதவாதிகள் இதனை ஏற்கவில்லை

3. காங்கிரஸ் வரலாற்றிலேயே முதன் முறையாகப் பூரண சுதந்திரம் பெறுவதே தனது குறிக்கோள் என தீர்மானம் இயற்றப்பட்டது.

 

சுதேசிய இயக்கம்

1. கர்சனின் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சுதேசி இயக்கம் ஒன்றை ஆரம்பித்தது.

2. இதன்படி அன்னிய நாட்டு பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

3. இவ்வியக்கம் மீண்டும் காந்தியடிகளால் புத்துயிர் பெறப்பட்டது.

 

1906 சிம்லா தூதுக் குழு

1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 35 முஸ்லீம் அறிஞர்கள் ஆகாகான் தலைமையில் ஒன்று கூடி மிண்டோ பிரபுவை, சிம்லாவில் சந்தித்து பேசினர். முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி போன்றவற்றை அவர்கள் கோரிக்கையாக வைத்தனர்.

 

1906 முஸ்லீம் லீக் தோற்றம்

1. 1906 டாக்காவில் ஆகாகான் நவாப் சலி முல்லாகான்,  அகமது கான் ஆகியவர்களால் அகில இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது.

2. இக்கட்சி வங்கப் பிரிவினையை ஆதரித்தது.

3. முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி, தனி உரிமைகளை கேட்டது.

4. 1907ல் ராஷ்பீகாரி கோஷ் தலைமையில் நடைபெற்ற சூரத் மாநாட்டில் மிதவாதிகளின் போக்கினை தீவிரவாதிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக தீவிரவாதிகள் இம்மாநாட்டில் வெளியேறினார்கள். மக்கள் செல்வாக்கு தீவிரவாதிகளுக்கு கிடைத்தது.

5. தீவிரவாதிகள், மிதவாதிகள் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 1916ல் லக்னோ மாநாட்டில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்

6. மிதவாதிகள் நாளுக்கு நாள் தங்கள் செல்வாக்கினை இழந்தார்கள்

7. காங்கிரஸின் மிதவாதிகள்

a. கோபால கிருஷ்ண கோகலே

b. சுரேந்திர நாத் பானர்ஜி

c. பெரஸ் ஷா மேத்தா

தீவிரவாதிகள்

d. பாலகங்காதர திலகர்

e. விபின் சந்திர போஸ்

f. லாலா லஜபதி ராய்

g. அரவிந்தோகோஷ்

8. இந்திய விடுதலை போராட்டக்காலங்களில் 1906 ஆம் ஆண்டு முதல் 1910ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகளின் காலம் எனப்படும்.

9. வங்காளத்தில் தீவிரவாதிகளின் தலைவராக இருந்தவர்கள்: பி. கே. கோஷ், பி. என். தத்

10. லண்டனில் தீவிரவாதிகளின் தலைவராக இருந்தவர் -  எஸ்கே. வர்மா

11. பாரிஸ்ஸில் தீவிரவாதிகளின் தலைவராக இருந்தவர் - எஸ். ஆர். ராமா

12. தீவிரவாதியாக இருந்து பின் ஆன்மிகவாதியாக மாறியவர் அரபிந்தோ கோஷ்.

மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் - 1909

1. இது 1909ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது

2. கர்சனின் வங்க பிரிவினை, தீவிரவாதிகள் போக்கு போன்றவை இதற்கு காரணம்

சீர்திருத்தங்கள்

1. சட்டமன்றம் விரிவுப்படுத்தப்பட்டது.

2. இதன்படி முஸ்லீம் இன மக்களுக்கும் தனித்தொகுதி வழங்கப்பட்டது.

3. வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தை அறிமுகப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

4. வாக்குரிமை இன வேற்று முறையால் இருந்தது. இதனை யாரும் ஏற்கவில்லை.

5. மிண்டோ மார்லி சட்டத்தின்படி வைஸ்ராய் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக எஸ். பி. சின்ஹா நியமிக்கப்பட்டார்.

1911யில் கல்கத்தா மாநாடு:

1. கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதியஜன கண மனஎன்ற பாடல் 1911ல் பி. என். தார் தலைமையில் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் முதன் முறையாக பாடப்பெற்றது.

2. 1911 தலைநகர் கல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றம்.

3. 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது. 1912 ஆம் அண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற காரனேஷன் தர்பாரில் (Coronation Durbar) ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் அவரது மனைவியான இராணி மேரியாரும் கலந்து கொண்டனர்.

4. இந்தியாவிற்கு வருகை தந்த ஒரே King – emperor இவரே ஆவார்.

1913ல் முஸ்லீம் மாநாடு:

1. இம்மாநாட்டில் பேரரசுக்குள் அடங்கிய சுய ஆட்சியை முஸ்லீம்லீக் அறிவித்தது.

2. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மூன்றாம் நிலை.

3. காந்தியடிகள் 1915ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டார்.

4. இவர் 1915ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

5. முதல் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ததால் காந்தியடிகளுக்கு கேசர்--ஹிந்த் என்ற பட்டம் வழங்கப்பட்டது

சபர்மதி ஆசிரமம்

1. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,  இந்திய மக்களின் வறுமையை கண்டு வருந்தினார். எனவே இந்தியர்களின் கண்ணீரை துடைக்க விரும்பினார். (wiping of every tear from every eye). எனவே 1916 ல் அகமதபாத் நகரில் சபர்மதி ஆசிரமம் அமைத்தார்.

2. அவரின் ஆயுதங்கள் அகிம்சையும், உண்மையும் ஆகும்.

3. காந்தியடிகளின் போராட்டம் சத்யாகிரகம் என்பது ஆகும்.  சத்யா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு உண்மை என்றும்.  கிரஹா என்ற சொல்லிற்கு வலியுறுத்துதல் என்றும் எனவே சத்யாகிரகம் என்ற சொல்லிற்கு உண்மையை வலியுறுத்துதல் என்று பொருள்படும் (the firmness of truth, the force of truth)

1916 லக்னோ (இலட்சுமணபுரி) மாநாடு:

1. மிண்டோ மார்லியின் சில சீர்திருத்தங்களால் மிதவாதிகளுக்கும்,  அரசுக்கும் இடைவெளி அதிகமாகியது.

2. மேலும் சில தலைவர்கள் இறந்தனர்.

3. எனவே 1916ஆம் ஆண்டு இலட்சுமணபுரி மாநாடு தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே ஒற்றுமை உண்டாகியது.

லக்னோ உடன்படிக்கை - 1916

1. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.

2. எனவே இவ்விரு கட்சிகளும் லக்னோவில் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.

3. இதுவே லக்னோ உடன்படிக்கை அல்லது காங்கிரஸ் முஸ்லீம் லீக் உடன்படிக்கை எனப்படும்.

4. இவ்வுடன்படிக்கை 1916ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

5. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சம் Agreed to separate electrorates for the Muslism. மேலும் முஸ்லீம்களின் ஒரே பிரதிநிதியாக முஸ்லீம் லீக் என காங்கிரஸ் ஏற்று முஸ்லீம் லீக் கட்டிசியை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது.

சுய ஆட்சி கழகங்கள்:

1. 1916ல் ஏப்ரல் மாதம் மும்பையில் திலகரும், பின் 5 மாதங்கள் கழித்து செப்டம்பர் 1916ல் தமிழகத்தில் அன்னிப்பெசன்ட் அம்மையாரும் சுய ஆட்சி கழகங்களை (Home Rule Leadques) துவக்கினார்.

2. திலகரின் சுய ஆட்சிக் கழகம் மகாராஷ்டிரா மற்றும் மத்திய மாகாணத்திலும்,  அன்னிபெசன்ட் துவக்கிய சுய ஆட்சிக் கழகம் நாட்டின் பிற பகுதியிலும் இருந்தது. இது காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்றது.