History in Tamil | Part - 25
ரௌலட் சட்டம் 1919
1. இந்தியச் சட்டம் 1919ல் இந்தியர்கள் தொடர்ந்து எதிர்த்தனர். மேலும் தீவிரவாத இயக்கங்கள் வளர்ச்சியடைந்தன.
2. இதனை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு யாரையும் விசாரணை இன்றி சிறையில் அடைத்தல் போன்றவை குறித்து இரு சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
3. இதற்கு ரௌலட் சட்டம் என்று பெயர்.
4. இதனை இந்திய மக்கள் கருப்புச் சட்டம் என அழைத்தனர்.
5. முதல் சட்டம் 10 மார்ச் 1919லும், இரண்டாவது சட்டம் 21 மார்ச் 1919லும் அறிமுகப்படுத்தியது.
6. இந்தியாவில் தீவிரவாதம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இச்செயல் சுதந்திரதாகத்தை மேலும் தீவிரமாக்கியது.
7. இதனை மத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். முகமது அலி ஜின்னா, மதன் மோகன் மாளவியா மற்றும் மசார் - உல் - ஹர் ஆகிய 3 உறுப்பினர்கள் பதவி விலகினர்.
8. காந்தியடிகள் இச்சட்டத்தை எதிர்த்து
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்.
9. அவர் சத்தியாகிரக சபாவினை துவக்கினார்.
10. அதன்படி இந்தியா முழுவதும் 1919ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6ம் தேதி சத்தியாகிரக நாள் (National Day) நடைபெற்றது.
11. இது தொடர்பாக அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை, அன்னிய பொருட்களை பகிஷ்கரித்தல், பள்ளிக்கூடங்களை தவிர்த்தல், தீவிரவாதச் செயல்கள் நாடெங்கும் நடைபெற்றது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1. சுதந்திர எழுச்சியின் காரணமாக பஞ்சாப்பில் உள்ள சைபுதீன் கிட்ச்லு மற்றும் டாக்டர் சத்தியபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2. மக்கள் இவர்களை விடுதலை செய்ய மாவட்ட நீதிபதி முன் போராட்டம் நடத்தினர், வங்கி கொளுத்தப்பட்டது.
3. இதன் விளைவாக அமிர்தசரஸ் நகரில் வன்முறை நடைபெற்றது. ஆங்கிலேய அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.
4. இந்நிகழ்ச்சிக்கு மறுநாள் பஞ்சாப்பியரின் பைசாகி விழா அரசியல் கூட்டம் நடைபெற்றது. அன்று 13 ஏப்ரல் 1919 லெப்டினன்ட் - ஜெனரல் மைக்கேல் ஓ டயர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் நூற்றுக்காணக்கான இராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் அக்கூட்டத்திற்கு வந்த மக்களை சுட்டனர்.
5. இதில் 1650 ரவுண்டு குண்டுகள் பயன்படுத்தப்பட்டது.
6. இந்நிகழ்ச்சியே ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்பட்டது
7. காந்தியடிகள் ஆங்கிலேயர்கள் மீது கொண்டு இருந்த நம்பிக்கையை இழந்தார்.
8. தமக்கு அளிக்கப்பட்ட கேசர் - இ - ஹிந்த் என்ற பட்டத்தை திருப்பி அளித்தார்.
9. 1940ஆம் ஆண்டு உத்தம் சிங் என்பவர் இந்நிகழ்ச்சிக்கு காரணமான ஜெனரல் டயரை இங்கிலாந்தில் சுட்டுக் கொன்றார்.
கிலாபத் இயக்கம் 1919-20
1. முதல் உலகப் போர் 1914 – 1918
வரை நடைபெற்றது. இப்போருக்குப் பின் செவர்ஸ் உடன்படிக்கையின் (28.6.1919)
அடிப்படையில் துருக்கி நாட்டின் மீது ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நிபந்தனைகளை எதிர்த்து கிலாபத் இயக்கம் தோன்றியது.
2. துருக்கி ஒரு வலிமையான முஸ்லீம் நாடாக இருந்தமையாலும், கலிபா எனப்படும் தலைவருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செயல்பட்டதாலும், இவ்வியக்கம் தோன்றியது.
3. இந்தியாவில் இவ்வியகத்தை அலி சகோதரர்கள் எனப்படும் முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோரால் தொடங்கப்பட்டது
4. இந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் போது ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் குறித்த அறிக்கை வெளியானது. இதனையும் கிலாபத் இயக்கம் எதிர்த்தது
5. 17.10.1919 கிலாபத் தினமாக கொண்டாடப்பட்டது.
6. இரண்டாவது கிலாபத் மாநாடு 23.11.1919ல் டில்லியில் கூடியது.
7. அலகாபாத்தில் நடைபெற்ற மத்திய கிலாபாத் கமிட்டி (1920) பட்டங்களை துறத்தல், வரிகொடா இயக்கம் போன்ற நான்கு கட்ட போராட்டங்களை நடத்தியது.
8. இவ்வியக்கம் காந்தியடிகளின் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு தந்தது.
9. காந்தியடிகள்,
இந்துக்கள் இப்போராட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.
10. இதனால் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டது. அரசியல் மத சார்புடைமை நிலை ஏற்பட்டது.
11. 1919க்குப் பின் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக (Mass
Movement) மாறத் துவங்கியது.
கிளாபத் இயக்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்
12. இப்போராட்டம் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்தது
13. துருக்கியை கமால்பாட்ஷா கைப்பற்றியது.
காந்தியடிகளின் காலம்: 1919 – 1947 வரை
1. 1919 முதல் 1947 ஆம் ஆண்டு வரை காந்தியடிகள் சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
2. இக்காலகட்டங்களில் வன்முறைக்கு பதிலாக சத்தியாகிரகம், அகிம்சை ஆகிய முறையை பயன்படுத்தினர். எனவே இக்காலம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியடிகளின் காலம் என பேசப்படுகிறது.
ஓத்துழையாமை இயக்கம் - 1919 - 1922
1. காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கம்
1921
– 22ல் துவக்கப்பட்டது.
2. இதன் நோக்கம் இந்தியச் சட்டம் 1919ன் படி நடக்க இருக்கும் தேர்தலை புறக்கணித்தல்.
3. இதுவே அகில இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்ட முதல் போராட்டமாகும்.
4. இந்திய மக்களைப் பற்றி ஆங்கிலேயர் அச்சம் இதன் மூலம் ஏற்பட்டது.
5. சௌரி சௌரா இயக்கத்தால் இதனை தன்னிச்சையாக காந்தியடிகள் நிறுத்தி விட்டார்.
1919ஆம் ஆண்டு இலட்சுமணபுரி மாநாடு
1. 1919ல் காங்கிரஸ் மாநாட்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அறிக்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
2. இவ்வறிக்கை காந்தியடிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
3. எனவே தேசிய போராட்டத்தை துவக்க முடிவு செய்தார்.
1920 ஆம் ஆண்டு கல்கத்தா மாநாடு:
லாலா லஜபதி ராய் அவர்களின் தலைமையில் செப்டம்பர் 20ல் கல்கத்தாவில் கூடிய சிறப்பு மாநாட்டில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது வரி கொடா இயக்கம், பட்டங்கள், பாராட்டு பத்திரங்களை திருப்பி அளித்தல், அரசு பணிகளை துறத்தல், நீதி மன்றம், கல்லூரிகளுக்கு செல்லாது இருத்தல் போன்றவை நடைபெற்றது.
1920 ஆம் ஆண்டு நாகபுரி மாநாடு:
1. 1920ல் நாகபுரியில் நடைபெற்ற மாநாட்டில் சேலம் சி. விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் முடிவு செய்யப்பட்டது.
2. 1921ல் ரெஸ்வடாவில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு கோடி நபர்களை உறுப்பினராக சேர்த்தது. திலகர் சுயராஜ்ஜிய நிதியாக 1 கோடி ரூபாய் திரட்டப்பட்டு கைராட்டைகள் போன்றவை வாங்கித் தரப்பட்டது.
3. ஓத்துழையாமை இயக்கம் படிப்படியாக வரிகொடா இயக்கம், கிசான் (விவசாயிகள்) இயக்கம், அகாலி இயக்கம் போன்ற இயக்கங்களாக பிரிந்து உச்ச கட்டத்தை அடைந்தது.
4. 17-11-1921ல் பம்பாய் வந்து இறங்கிய வேல்ஸ் இளவரசருக்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு மற்றும் கருப்புக் கொடி காட்டப்பட்டது.
5. பார்சி, கிருத்துவர்கள், ஆங்கிலோ - இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.
சௌரி சௌரா சம்பவம்
1. உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே உள்ள சௌரி சௌரா கிராமத்தில் ஒத்துடையாமை இயக்கத்தினால் ஏற்பட்ட கலவரமே சௌரி சௌரா சம்பவம் எனப்படும்.
2. இச்சம்பவத்தில் ஒரு கும்பல், 1922 பிப்ரவரி 5ம் தேதி வன்முறையில் காவல் நிலையத்தை தாக்கியதால் பலர் உயிர் இழக்க நேரிட்டது.
3. ஆங்கிலேயர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்சிகளுக்கும், இந்த ஒத்துழையாமை போராட்ட வன்முறையில் வெகுவாக பாதிக்கப்பட்டமையால், காந்தியடிகள் இப்போராட்டத்தை தன்னிச்சையாக 12 பிப்ரவரி 1922ல் நிறுத்தி விட்டார்.
சுயராஜ்ஜிய கட்சி
1. காந்தியடிகள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற பொழுது சட்டமன்றத்தில் இந்தியர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அதன் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
2. காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தை தன்னிச்சையாக நிறுத்தி விட்டமையால் சில தலைவர்கள் அதிருப்தி அடைந்தார்.
3. 1922ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வெளியேறிய முக்கிய தலைவர்கள் சுயராஜ்ஜிய கட்சியை துவக்கினார்கள்.
4. இதன் தலைவர் C.R. தாஸ், செயலாளர் மோதிலால் நேரு.
5. சுயராஜ்ஜிய கட்சியின் முதல் கூட்டம் மோதிலால் நேருவின் ஆனந்தபவன் இல்லத்தில் நடைபெற்றது. ஆனந்தபவனிற்கு சுயராஜ்ஜிய பவன் என்ற பெயரும் உண்டு.
6. சட்டமன்றத்தில் பெருவாரியான இடங்களை பெற்று, வல்லபாய் பட்டேலை சட்டமன்ற தலைவர் ஆக்கினார்கள்.
7. இருப்பினும் சுயராஜ்ஜிய கட்சி தனது குறிக்கோளை அடைய முடியவில்லை.
8. சுயராஜ்ஜிய கட்சி வென்ற மாகாணங்கள்: 1. மத்திய மாகாணம், 2. பீகார் 3. வங்காளம் 4. பம்பாய் 5. ஐக்கிய மாகாணம்
9. சுயராஜ்ஜிய கட்சி தோல்வியடைந்த மாகாணங்கள்: 1. பஞ்சாப் 2. சென்னை 3. ஓரிசா
1924 பெல்ஹாம் காங்கிரஸ் மாநாடு
1. 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் காந்தியடிகள் ஆவார். அவர் தலைமை ஏற்று நடத்திய ஒரே காங்கிரஸ் மாநாடு இதுவே ஆகும்.
2. இம் மாநாட்டில் காந்தி – தாஸ் - நேரு ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
3. வைக்கம் சத்தியாகிரகம், அலிகார் இயக்கம் போன்ற இயக்கங்கள் வரவேற்கப்பட்டது. காங்கிரஸ் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
முடிமன் குழு
சர் அலெக்சாண்டர் தலைமையில் ஒரு குழு 1919 ஆம் ஆண்டைய இந்தியச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய இங்கிலாந்து அரசாங்கம் அனுப்பியது.
சைமன் குழு - 1927
1. 1927ஆம் ஆண்டு இர்வின் பிரபு காந்தியடிகள், சீனிவாச அய்யங்கார் மற்றும் அன்சாரி ஆகியோரை டில்லியில் சந்தித்து சைமன் குழு வருகை பற்றி தெரிவித்தார்.
2. இக்குழு 3-2-1928ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தது.
3. Statutory Commission எனப்படும் இக்கமிஷனுக்கு சர்.ஜான் சைமன் தலைமை ஏற்றதால் சைமன் கமிஷன் எனப்பட்டது.
4. இக்குழுவில் மொத்தம் ஏழு உறுப்பினர்கள் இருந்தனர்
5. இக்கமிஷன் நியமிக்கப்பட்ட போது Conservative கட்சி ஆட்சி செய்தது.
6. இக்குழு இந்தியர்களின் செயல்முறையைக் கண்டு இந்தியாவிற்கு பொறுப்பாட்சி அளித்தல், இந்திய பிரிட்டிஷ் உறவுகளை வளர்த்தல் போன்ற காரணங்களுக்காக நியமிக்கப்பட்டது.
1927 சென்னை காங்கிரஸ் மாநாடு
1. இம்மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிப்பது மற்றும் முழுமையான சுதந்திரம் கேட்டல் என்பது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன
2. சைமன் குழு முதன்முதலில் பம்பாயில் இறங்கிய நாளன்று நகர் எங்கும் கடையடைப்பு நடந்தது
3. சைமனே திரும்பிப்போ என்ற முழக்கம் முழங்கப்பட்டது.
4. இக்குழுவில் இந்தியர்கள் ஒருவரும் இல்லை என்பதாலும் இந்தியாவின் சுதந்திரம் குறித்து இந்தியர்களே முடிவு செய்ய வேண்டும் என்பதாலும் இக்குழு புறக்கணிக்கப்பட்டது.
5. சைமன் குழு வருகையை இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களும் எதிர்த்தன.
6. நீதிக்கட்சி எனப்படும் ஜஸ்டிஸ் பார்ட்டி மற்றும் பஞ்சாப் யூனியனிஸ்ட் ஆகிய இரண்டும் எதிர்க்கவில்லை.
7. சைமன் குழு வருகையின் போது அதனை எதிர்த்து லாகூரில் லாலாலஜபதிராய் 30-10-1928ல் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டார்.
8. சைமன் குழுவின் முக்கிய பரிந்துரைகள்:
a. இரட்டையாட்சி நீக்கப்பட்டு மாநில சுயாட்சி உருவாக்குதல்.
b. அமைச்சர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்குதல்.
c. நியமன உறுப்பினர்களை தடை செய்தல்.
d. உயர்நீதி மன்றங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருத்தல்.
e. மத்தியில் கூட்டாட்சி அமைத்தல்.
f. பர்மாவை தனி நாடாக பிரித்தல்.
g. முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குதல்.
h. வடமேற்கு எல்லைபுறத்தில் சட்டமன்றம் அமைத்தல்.
நேரு அறிக்கை - 1927
1. சைமன் குழு புறக்கணித்தலை தொடர்ந்து இந்திய மக்களுக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், 1928ஆம் ஆண்டு மே மாதம் பம்பாயில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
2. இக்குழுவின் அறிக்கைகளை ஜின்னா எதிர்த்தார்.
நேரு அறிக்கை
3. இவ்வறிக்கை டி.பி. சப்ரூ உதவியுடன் உருவாக்கப்பட்டது
4. உடனடி டொமினியன் அந்தஸ்து.
5. பூரண சுயராஜ்ஜியம் இறுதி இலட்சியம்.
6. மத்தியில் கூட்டாட்சி அமைத்தல்.
7. அடிப்படை உரிமைகளை அங்கீகரித்தல்.
8. இந்தியாவிலுள்ள உச்சநீதிமன்றமே இறுதி மேல்முறையீட்டு மன்றமாக இருக்கவேண்டும்.
9. சிந்து மாநிலம் தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும்.
10. மத்திய சட்ட மன்றம் இரு அவை கொண்டதாக இருக்க வேண்டும்.
11. இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு குழு அமைத்தல் வேண்டும்.
12. வாக்குரிமை.
13. நேரு அறிக்கை ஏற்றவர்கள்:
a. மௌலானா அப்துல்கலாம் ஆஸாத்
b. டாக்டர். அன்சாரி
14. நேரு அறிக்கை எதிர்த்தவர்கள்:
a. சர் முகமது ஷபி
b. முகமது அலி ஜின்னா
ஜின்னாவின் 14 அம்ச திட்டம்:
1. கூட்டாட்சி அளித்தல்.
2. மாநிலங்களுகு அதிகாரம் அளித்தல்.
3. முஸ்லீம்களுக்கு அரசுப்பணியில் போதிய இடம் கொடுக்க வேண்டும்.
4. சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களில் போதிய அளவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.
5. மத்திய சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
6. மாநிலங்களில் எல்லை பிரிக்கும் போது பஞ்சாப், வடமேற்கு எல்லைபுற மாகாணம் ஆகியவற்றில் உள்ள எண்ணிக்கை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
7. பலுஸிஸ்தானம், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவற்றில் வேறுபாடு காட்டக் கூடாது.
8. மத்திய மாநில அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு வழங்க வெண்டும்.
9. சிந்து மாநிலம் பிரிக்க வேண்டும்.
10. டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம்கள் (1923) மாநாட்டில் நேருவின் அறிக்கை முஸ்லீம்களின் இறப்பு ஆணை எனப்பட்டது.
11. 1929ல் முஸ்லீம் லீக்கில் சில தலைவர்கள் பிரிந்து தேசிய லீக் முக்கிய கட்சிகள் தொடங்கின.
லாகூர் காங்கிரஸ் மாநாடு:
1. இம்மாநாடு இராவி நதிக்கரையில் உள்ள லாகூரில் 31-12-1929 அன்று நடைபெற்றது.
2. பூரண சுயராஜ்ஜியம் காங்கிரசின் இலட்சியம் என அறிவிக்கப்பட்டது. 26-1-1930 நாளினை முதல் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் எனப்பட்டது. இம்மாநாட்டில் மூவண்ண கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றி வைத்தார்.
3. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
4. காந்தியடிகள் பிரிட்டிஷ் ஆட்சியை A Crime Against the man and the God என்று கூறினார். மேலும் காந்தியடிகள் தலைமையில் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
சட்ட மறுப்பு இயக்கம்:
1. சட்டமறுப்பு இயக்கத்தின் முக்கிய நோக்கம் முழுச் சுதந்திரம் பெறுவதாகும். அதாவது சட்டத்தை மீறியாவது அச்சுதந்திரத்தை அடைய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
2. மதுவிலக்கு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்த்துதல், அரசின் செலவு மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் குறைப்பு, உப்புவரி நீக்கம், நிலவரி குறைப்பு, படைச் செலவு குறைப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக் சீட்டு போன்றவை குறித்த 11 அம்ச கோரிக்கையை காந்தியடிகள் 31-1-1930ல் இர்வின் பிரபுவிற்கு தெரிவித்தார்.
3. “ரொட்டி வேண்டுமென்று முழந்தாளிட்டு கேட்டதற்கு கல்லே கிடைத்தது” என காந்தியடிகள் குறிப்பிட்டு உப்புச் சத்தியாகிரகத்தை துவக்கினார்.
4. இதனை Storm in a
Tea cup என இர்வீன் கருதினார்.
5. காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகம் 12.3.1930 –
6.4.1930
6. காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 12-3-1930 அன்று 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 240 மைல் அல்லது 385 கி.மீ. தொலைவில் குஜராத்தில் உள்ள தண்டி எனற இடத்தை 24 நாட்கள் நடை பயணத்திற்கு பின் அடைந்து 6-4-1930 அன்று உப்பு எடுத்தார். இதன் மூலம் உப்பு விதிகள் போன்றவை மீறப்பட்டது.
7. காந்தியடிகள் ஏரவடா சிறையில் அடைக்கப்பட்டார். நேரு நைனிடாலில் சிறைவைக்கப்பட்டார். இதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தின் போது காந்தியடிகளும் பிற காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
8. காந்தியடிகள் கைதுக்கு பிறகு பம்பாயின் தேசிய முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்த அபாஸ் தயாப்ஜி தலைமை பொறுப்பை ஏற்றார். அவரது கைதுக்குப்பின் சரோஜினி நாயுடு தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
9. சரோஜினி நாயுடு மற்றும் மாணிக்லால் காந்தி தலைமையில் சூரத் மாநிலத்தில் உள்ள தார்சனா உப்பு கிடங்கை சூறையாடும் போராட்டம் நடைபெற்றது.
10. இதனை வெப் மில்லர் என்ற ஆங்கிலேயே பத்திரிக்கையாளர் கண்ணுற்றார்.
11. தமிழகத்தில் சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்யாகிரகம் நடைபெற்றது.
12. சென்னையில் மெரினா கடற்கரையில் பிரகாசமும், நாகேஸ்வரராவும் உப்புக் காய்ச்சினர்
13. கர்னாடகத்தில் சானிக்கட்டா என்ற இடத்தில் உப்பு மண்டி தாக்கப்பட்டது.
14. கேரளாவில் கேளப்பன் என்பவர் கள்ளிக்கோட்டையில் இருந்து சத்தியாகிரகம் துவக்கினார்.
15. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் எல்லைக் காந்தி எனப்படும் கான் அப்துல் கபர் கான் தலைமையில் அவரின் சிவப்புச் சட்டை இயக்கமான Khudaikhidmatgars சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
முதல் வட்ட மேசை மாநாடு
1. இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்ற பெற்றது. இக்கட்சி 1929ல் இந்தியாவின் சுய ஆட்சி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.
2. சைமன் கமிஷன் அடிப்படையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொன்டு ஒரு மாநாட்டு கூட்டத்தினை அறிவித்தார்.
3. முதல் வட்டமேசை மாநாடு இர்வின் பிரபு காலத்தில் அறிவிக்கப்பட்டது.
4. இது அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டதால் தீபாவளி அறிவிப்பு எனப்படும்.
5. மாநாடு லண்டன் மாநகரில் 16-11-1930 முதல் 19-01-1931 வரை நடைபெற்றது.
6. காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்தமையால் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
7. சட்ட மறுப்பு இயக்கத்தின் காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்தனர்.
8. இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டாலும் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாத காரணத்தால் இம்மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.
9. இம்மாநாட்டிற்கு இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டோனால்டு தலைமை வகித்தார்.
10. இதில் பிரிட்டிஷ் இந்திய பிரதிநிதிகளாக கலந்து கொண்டவர்கள் 57 பேர். 16 பேர்கள் இந்திய சுதேசி அரசுகளில் இருந்து கலந்துகொண்டனர். இங்கிலாந்து அரசியல் கட்சி சார்பில் கலந்து கொண்டவர்கள் 13 பேர்.
கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்:
11. தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக: பீமாராவ் அம்பேத்கார்
12. முஸ்லீம் லீக்: ஆசர்கான், முகமது ஷா, பசுல்ஹக், ஆலி ஜின்னா, கர்முகமது.
13. இந்தியன் லிபரல்: தேஜ் பகர்சப்ரு, சீனிவாச சாஸ்திரி
14. பெடரேஷன்: C. Y. சிந்தாமணி
15. இந்தியன் ஸ்டோக்கர்: மீர்சா இஸ்மாயில், சர் அக்பர் ஹைதரி, பீகானி மகாராஜ்
16. பிறதலைவர்கள்: சர். எம். ஆர். ஜெயகர்
டெல்லி ஒப்பந்தம் (அல்லது) காந்தி - இர்வின் ஒப்பந்தம்
1. இவ்வொப்பந்தம் 5-3-1931ல் ஏற்பட்டது. மிதவாதிகளான வி. எஸ். சீனிவாச சாஸ்திரி, ஜெயகர், சாப்ரு ஆகியோரின் முயற்சியின் பேரில் காந்தியடிகளுக்கும், இர்வின் பிரபுவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
2. இவ்வொப்பந்தத்தின்படி சிறப்பு சட்டங்கள் விலக்கிக் கொள்ள அரசு இசைந்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தவிர அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
3. குறிப்பிட்ட இடங்களில் மறியல் செய்ய அனுமதிக்கப்பட்டது.
4. உப்பு காய்ச்சிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
5. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர்.
6. அடுத்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ள இசைவு தெரிவிக்கப்பட்டது.
7. இவ்வொப்பந்தம் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், இராஜகுரு ஆகியோரின் விடுதலைக்கு வழிவகை செய்யவில்லை.
கராச்சி காங்கிரஸ் மாநாடு
1. இம்மாநாடு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் 29-3-1931ல் கூடியது
2. பகத்சிங், சுக்தேவ் மற்றும் இராசகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டு 6 நாட்கள் கழித்து கூடியது.
3. இம்மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை மேலொப்பம் செய்தது.
4. இம்மாநாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார கொள்கைகள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
இரண்டாம் வட்டமேசை மாநாடு
1. 1931ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 3 மாதங்கள் இம்மாநாடு நடைபெற்றது.
2. இம்மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் காந்தியடிகள் கலந்து கொண்டார். அவருடன் மதன்மோகன் மாளவியாவும் உடன் சென்றார்.
3. S.S. ராசபுதனா என்ற கப்பலில் காந்தியடிகள் இலண்டன் சென்றார்.
இம்மாநாட்டில்
கலந்து
கொண்ட
முக்கியமானவர்கள்:
4. காங்கிரஸ் சார்பில் - டி. டி. கிருஷ்ணமாச்சாரி
5. தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் - அம்பேத்கார், இரட்டைமலை ஆர். சீனிவாசன்
6. கிருத்தவர்கள் சார்பில் - ஏ. டி. பன்னீர் செல்வம்
7. ஆங்கிலோ இந்தியர்கள் சார்பில்-சர். கிளாடி
8. முகமதியர்கள் சார்பில் - ஆசார்கான் இக்பால்
9. சீக்கியர்கள் சார்பில் - தாராசிங்
10. இந்தியப் பெண்களின் சார்பாக – சரோஜினி நாயுடு
11. இம்மாநாட்டில் இந்தியாவின் எதிர்கால அமைச்ச சட்டம், சிறுபான்மையோர் நலன் போன்றவை விவாதிக்கப்பட்டது.
12. காந்தியடிகள் கோரிக்கை நிறைவேற்றவில்லை.
13. இம்மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.
14. இந்நிலையில் இங்கிலாந்தில் தேசிய ஆட்சி ஏற்பட்டது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அதிக பலம் பெற்றனர்.
15. காந்தியடிகள் 28 டிசம்பர் 1931ல் இந்தியா (மும்பை) திரும்பினார். அச்சமயம் இந்தியாவில் அரசியல் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. காந்தியடிகளை வரவேற்கச் சென்ற நேரு கைது செய்யப்பட்டார். 4-1-1932ல் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
16. அம்பேத்கார் 5-11-1931ல் இங்கிலாந்து அரசரை சந்தித்து தாழத்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை விவரித்தார். பின் 14-1-1931ல் இலண்டனில் இருந்து புறப்பட்டு 29-1-1932ல் மும்பை வந்து சேர்ந்தார். எனவே வகுப்புவாத தீர்வினை ராம்சே மெக்டோனல்டு வெளியிட்டார்.
17. காந்தியடிகளின் எளிமையை கண்டு சர்ச்சில் அவரை அரைநிர்வாண பககிரி என்று கூறினார்.