Type Here to Get Search Results !

வரலாறு | Part - 26 | 125 Questions

 History in Tamil | Part - 26

சட்டமறுப்பு இயக்கம்

1. காந்தியடிகள் இந்தியா திரும்பிய போது அரசியல் நிலைமை முற்றிலும் மாறுபாடு கொண்டு இருந்தது.

2. சூரத் மாவட்டத்தில் நிலவரி வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளை விசாரணை செய்ய புலாபாய் தேசாய் மற்றும் வல்லபபாய் படேல் சென்றனர்.

3. வரிகொடா இயக்கம் காரணமாக ஜவஹர்லால் நேரு, புருஷோத்தம் தாஸ் தாண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

4. காங்கிரசின் நடவடிக்கையினை ஒடுக்க வெல்லிங்டன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டார்.

5. எனவே 4-1-1932ல் காந்தியடிகள் சட்ட மறுப்பு பேராட்டத்தை அறிவித்தார். காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.

6. ஆங்கிலேயர்களின் மிருகத் தனமான செயல்களைக் கண்டு பல புரட்சி இயக்கங்கள் தோன்றியது.

வகுப்புவாத தீர்வு

1. வட்டமேசை மாநாடுகளில் இடஒதுக்கீடு பிரச்சினைகளுக்கு தீர்பு காணாத நிலை ஏற்பட்டதால் ராம்சே டொனால்டு புகழ்பெற்ற வகுப்பு தீர்வினை 1932ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 16ம் நாள் கொண்டு வந்தார்.

2. இதன்படி முஸ்லீம்கள், சீக்கியர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் தனித் தொகுதி முறையைக் கொண்டு வரப்பட்டது.

3. இத் தீர்வு கொண்டு வரப்பட்ட பொழுது காந்தியடிகள் பூனாவில் உள்ள ஏர்வாடா சிறையில் இருந்தார்.

4. தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி இந்துகளிடமிருந்து பிரிக்கும் முயற்சியே இது என காந்தியடிகள் 20-9-1932 முதல் 21 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

5. காந்தியடிகள் உடல் நிலை மேசாமடைந்தது தொடர்ந்து காந்தியடிகள், அம்பேத்கார் இந்து மதத் தலைவர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

6. இதுவே பூனா ஒப்பந்தம் என்பார்கள். இதனை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது

7. இவ்வொப்பந்தம் ஏற்பட மதன் மோகன் மாளவியா அம்பேத்கார் மற்றும் எம்.வி. ராஜா ஆகியோர் காரணமாவார்கள்.

8. இவ்வொப்பந்தம் சட்டமறுப்பு போராட்டத்தை திசை மாற்றியது

9. காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

பூனா ஒப்பந்தம்

1. பூனா ஒப்பந்தம் 24-9-1932ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. காங்கிரஸ் சார்பில் காந்தி, ராஜாஜி, பட்டேல் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் என். சிவராஜ், கொய்க்வாட் மற்றும் அம்பேத்கார் கையெழுத்து இட்டனர்

2. பூனா ஒப்பந்தத்தின்படி தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய சட்டமன்றத்தின் இருக்கைகள் உயர்த்தப்பட்டது.

3. காந்தியடிகள் 7-11-1933 முதல் 20-7-1934 வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்

மூன்றாம் வட்ட மேசை மாநாடு

1. 1932ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கூடியது.

2.  இம்மாநாட்டில் தொழிற்கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

3.  46 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

4. வாக்குரிமை, நிதி, கூட்டாட்சி, சமஸ்தானங்கள் குறித்து ஏற்கனவே நடைபெற்ற குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்தது.

5.  பெண்களுக்கு வாக்குரிமை அளித்தல், மாநில சட்டமன்றங்களிலிருந்து கூட்டாட்சி, சட்டமன்ற மேலவைக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

6. இம்மாநாடு எவருக்கும் மனநிறைவு தராத வகையில் 1932ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி முடிவடைந்தது.

7. மூன்று வட்ட மேசை மாநாடுகளில் பங்கு கொண்டவர்கள்: பி. ஆர். அம்பேத்கார். ஜெயகர்

8. இம்மூன்று மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டு 1933ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது

வெள்ளை அறிக்கை

1. அரசின் கொள்கைக் குறிப்பிற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர். இவ்வெள்ளை அறிக்கையில் இந்திய அரசாங்கம் பற்றிய திட்டம் இடம் பெற்றது. இந்தியாவில் இது குறித்து எதிர்ப்புகள் இருந்தன.

2. வெள்ளை அறிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வு செய்வதற்காக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு நியமிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம்

1. இந்திய தலைவர்கள், சிற்றரசு பிரதிநிதிகள், இந்திய அமைச்சர் ஹோர் மற்றும் பலர் தெரிவித்த பரிந்துரையின் பேரில் ஒரு சட்ட முன் வரைவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்ட முன்வரைவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 2-8-1935ம் ஆண்டு மன்னரின் ஒப்புதல் பெற்று சட்டம் ஆகியது. இதுவே 1935 ஆம் ஆண்டு இந்திய இரசாங்க சட்டம் ஆகும்

2. இதனை அடிமை சாசனம் என்று சிலர் கூறுவர்

இதன் முக்கிய அம்சங்கள்:

3. ஓரிசா, சிந்து மாநிலம் உருவாக்குதல்.

4. மாகாணங்களில் தன்னாட்சி.

5. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை நீக்கம்.

6. மத்தியில் கூட்டாட்சி அரசு.

7. கூட்டாட்சி ரிசர்வ் வங்கி அமைத்தல்.

8. மத்திய மாகாணங்களை பிரச்சினைகளை தீர்க்க கூட்டாட்சி நீதிமன்றம் அமைத்தல்.

9. பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தல்.

10. வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய தேர்வுக்குழு அமைத்தல்.

11. மொத்தமுள்ள 11 மாநிலங்களில் ஆளும் மாநிலத்தில் மேலவை ஏற்படுத்துதல்.

12. இச்சட்டத்தின்படி 1937ல் தேர்தல்கள் 11 மாநிலத்தில் நடத்தப்பட்டது. இதில்

13. காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சி நடத்தின.

14. காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மாநிலங்கள்

a. உத்திரப்பிரதேசம்

b. மத்திய பிரரேசம்

c. வடமேற்கு எல்லைப்புற மாநிலங்கள்

d. பீகார்

e. ஒரிசா

f. பம்பாய்

g. சென்னை

15. 1937ல் இந்தியாவில் இருந்து பர்மா பிரிக்கப்பட்டது.

16. முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் கூட முஸ்லீம் லீக் தோல்வி அடைந்தது. கூட்டணி அமைச்சரவை என்ற போது The Muslims can expect neither justice nor fair play under Congress Government என கூறினார்.

இரண்டாம் உலகப்போர் துவக்கம் 1939

1. இரண்டாம் உலகப்போர் 1.9.1939 ஆம் ஆண்டு துவங்கி 2.9.1945ல் முடிவுற்றது. காங்கிரஸ் தலைவர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களையோ கலந்து ஆலோசிக்-காமல் இந்தியர்களை இங்கிலாந்து இப்போரில் பயன்படுத்தியது

2. 1939 வார்தா காங்கிரசின் செயற்குழு:

3. இரண்டாம் உலகப்போர் தோன்றியவுடன் 8.9.1939ல் வார்த்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடியது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது.

4. நாசிசம் மற்றும் பாசிசக் கொள்கைளை கண்டித்தது.

5. இந்திய மக்கள் போர் மற்றும் அமைதியில் கலந்து கொள்வரை தீர்மானிக்க எந்த வெளிநாட்டிற்கும் உரிமை இல்லை என்றும், இதனை இந்திய மக்களே தீர்மானிப்பர்.

6. போரின் காரணத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

7. பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். சுதந்திர இந்தியா தனது இராணுவ உதவிகளை பரஸ்பரத்தின் பேரில் அளிக்கும்.

8. போரின் நோக்கத்தினை உடன் அறிவிக்கவேண்டும். எனவே 8-8-1940ம் ஆண்டு லின்லித்தோ பிரபு அறிக்கை வெளியிடப்பட்டது

9. இதுவே ஆகஸ்ட் அறிக்கை: போர் ஆலோசனைக் குழு அமைத்தல், சிறுபான்மையினர் நலம், இந்தியாவிற்கு டொமினியின் அந்தஸ்து, முஸ்லீம்களுகு தனி அரசியலமைப்பு போன்றவை குறித்து கருத்துக்கள் இருந்தது.

10. இவ்வறிக்கை ஜின்னாவிற்கு ஆதரவாக இருப்பதாக காந்தியடிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

11. இதன் தொடர்ச்சியாக தனி நபர் சத்தியாகிரகத்தை காந்தியடிகள் துவக்கினார்.

பாகிஸ்தான்

1. 1940 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் தனி நாடாக வேண்டும் என்றார். இதற்கு பாகிஸ்தான் என பெயரிடப்பட்டது.

2. இத்தீர்மானம் லாகூர் மாநாட்டில் 23 மார்ச் 1940ல் நிறைவேற்றப்பட்டது. பிற்காலத்தில் இதனையே பாகிஸ்தான் நாள் என கொண்டாடப்படுகிறது.

தனிநபர் சத்தியாகிரகம் - 1940

1. இது 17-10-1940 அன்று காந்தியடிகளால் துவக்கப்பட்டது

2. முதன் முதலில் இதனை Anti-war Slogan மூலம் தொடங்கி வைத்தவர் ஆச்சாரியா வினோபா பாவே.

3.  இரண்டாவது சத்தியாகிரகம் ஜவஹர்லால் நேரு, இப்போராட்டம் 17-12-1940 முடிக்கப்பட்டது.

கிரிப்ஸ் தூதுக் குழு - 1942

1. சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், பிரிவிசில் பிரபு ஆகியோர் கொண்ட குழு 1942ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்தியாவிற்கு வந்தது.

2. வந்தவுடன் அக்குழு ஒரு பிரகடனம் கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவின் அரசியலமைப்பு, சிறுபான்மையோர் நலன், இந்தியாவின் பாதுகாப்பு ஆகியவை குறித்து அறிக்கை வெளியிட்டது

3. இது ஆகஸ்ட் திட்டத்தின் பிரதிபலிப்பே என்பதால் அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கட்சியும் எதிர்த்தது.

4. காந்தியடிகள் இதனை (Post Dated Cheque on a Crushing Bank) குறிப்பிட்டார்.

5. இக்குழு முழுமையாக தோல்வியடைந்து இங்கிலாந்து சென்றது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942

1. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் தீர்மானம் என்றும். பாரத் சோரா அண்டோலன் வார்தாவில் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் (14-7-1942) எந்தவிதமான நிபந்தனைகள் இன்றி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குதல் போன்றவை தொடர்பாக தீர்மானம் இயற்றியது.

2. வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை தயாரித்தவர் ஜவஹர்லால் நேரு.

3. இப்போராட்டத்தின் போது காந்தியடிகள் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை ஏற்படுத்தினார்.

4. இப்போராட்டத்தின் போது பீகாரில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது.

5. காந்தியடிகள் இப்போராட்டத்தின் போது 9-8-1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 6-5-1944 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

6. இதுவே காந்தியடிகள் கடைசியாக சிறையில் இருந்த காலம்

7. காந்தியுடன் கைது செய்யப்பட்ட கஸ்தூரிபாய் காந்தி 23-3-1944ல் சிறையில் உயிர் நீத்தார்.

8. காந்தியடிகள் இப்போராட்டத்தின் போது I want freedom immediately this very night எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் இப் போராட்டத்தில்  காமராஜ் கலந்துக் கொண்டார்.

வேவல் திட்டம் - சிம்லா மாநாடு – 1945

1. இந்நிலையில் இந்தியாவின் புதிய வைஸ்ராய்-ஆக 20.10.1943 அன்று வேவல் பதவி ஏற்றுக் கொண்டார்.

2. சிறையில் இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

3. 1945ல் வேவல் பிரபு இந்தியாவின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்தியா சென்றார்.

4. வைஸ்ராய் குழுவினை மறு நியமனம் செய்வது என்றும், அக்குழுவின் உறுப்பினர்களாக அரசியல் கட்சி பரிந்துரைக்கும் நபர்களை தேர்வு செய்வது என்றும் வேவல் பிரபு முடிவு செய்தார்.

5. இதன் அடிப்படையில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து வேவல் 1945ம் ஆண்டு ஜீன் மாதம் 24ம் தேதி சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாடு ஜீலை மாதம் 14ம் தேதி முடிய நடைபெற்றது

6. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மௌலான அபுல் கலாம் ஆசாத் தலைவராகவும் ஜவஹர்லால் நேரு, தீர் கான் சாகிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7. காந்தியடிகள் சிம்லா சென்றதால் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. வைஸ்ராய் தனியே அவரிடம் ஆலோசனை செய்தார். அம்மாநாட்டில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் இராணுவ இலாக்கா தவிர மற்ற இலாக்கக்களை இந்தியர்களுக்கு தர வேவல் பிரவு இசைவு தெரிவித்தார். முஸ்லீம் மக்களின் ஒரே பிரதிநிதயாக முஸ்லீம் லீக் கட்சி இருக்க விரும்பியதால் இம் மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.

8. முஸ்லீம்கள் வேவல் திட்டத்தை ஏற்க மறுத்தமையால் இத்திட்டம் தோல்வி அடைந்தது.  இம் மாநாட்டினால் தீமைகள் அதிகமாகியது

9. இந்தியாவில் பொதுத் தேர்தல் நடத்துவது என 21.8.1945 அன்று அறிவிக்கப்பட்டது.

10. 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து இங்கிலாந்தில் தொழில் கட்சி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அட்லி பிரதம அமைச்சர் ஆனார்.

11. 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.

12. முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ராஜாஜி திட்டம்

1. இந்து முஸ்லீம் சிக்கலைத் தீர்க்க ராஜாஜி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

2. இத்திட்டத்தின் படி பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு காரண சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதால் இது தற்கொலைக்கு சமம் என காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.

3. இதன்பின் வேவல் பிரபு 1945 ஜீன் 14ம் தேதி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்

4. இதுவே வேவல் திட்டம் எனப் பெயர் பெற்றது

கேபினட் தூதுக்குழு 1946

1. இந்துமுஸ்லீம் ஒற்றுமைக்கு வழியில்லை என்பதை உணர்ந்த ஆங்கில அரசு சுதந்திரம் வழங்குவது மற்றும் சுய நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச அமைச்சரவைத் தூதுக் குழு ஒன்று அனுப்புவது என அட்லி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

2. 15.3.1946ல் பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் அட்லி அவர்கள் ஒரு தூதுக் குழுவினை அமைத்தார்.

3. பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், . வி. அலெக்சாண்டர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

4. இக்குழு இந்தியாவிற்கு 24 மார்ச் 1946ல் புது தில்லிக்கு வந்தது.

5. இக்குழு இந்தியாவில் இருந்து 29 ஜீன் 1946ல் திரும்பிச் சென்றது.

6. இக்குழு காங்கிரஸ், முஸ்லீம் லீக், சீக்கியர்கள், ஆதி திராவிடர்கள், லிபரல் தலைவர் சர் தேஜ் பகதூர் சப்ரூ மற்றும் தனியார்கள் உள்ள 472 நபர்களை சந்தித்து பேசியது.

7. இக்குழு மீண்டும் சிம்லாவில் ஒரு கூட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் சார்பில் ஜவஹர்லால்நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத், சர்தார் வல்லபபாய் படேல் மற்றும் கான் அப்துல் கபார் கான் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

8. முஸ்லீம் லீக் சார்பில் முகமது அலி ஜின்னா, லியகத் அலிகான், இஸ்மாயில் கான் மற்றும் அதுர் ரப் நிஷதார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் தீர்வு ஏதும் ஏற்படவில்லை

9. இக்குழு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் தலைவர்களுடன் பேசி தனது அறிக்கை 16-5-1946 மாதம் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி அமைச்சரவை தூதுக்குழுவின் முடிவை ஏற்று சட்ட மன்றத்தில் நுழைவது என முடிவு செய்தது.

10. இதன்படி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 8 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது

11. ஓவ்வொருவருக்கும் இதில் ஆதாயம் கிடைத்ததால் அனைவரும் இதனை ஏற்றனர்.

12. இதன்படி இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இடைக்கால அரசு

1. 1946ம் ஆண்டு வேவல் பிரபு நேருவின் தலைமையில் அமைச்சரவை (இடைக்கால அரசு) அமைக்குமாறு அழைப்பு விடுத்ததின் பேரில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.

2. இதன்படி காங்கிரஸ் நேரு தலைமையில் 2-9-1946 பதவி ஏற்றனர்.

3. இதில் மொத்தம் 14 அமைச்சர்கள் பங்கேற்றனர். 6 இந்து அமைச்சர்கள், 3 முஸ்லீம் அமைச்சர்கள், 1 சீக்கியர், 1 பார்சி, 1 இந்திய கிருத்துவர் என்றும் 2 அமைச்சர்கள் முஸ்லீம் லீக்கிற்கும் என்றும் தெரிவித்தார்.

இடைக்கால அரசின் இந்து அமைச்சர்கள்:

4. ஜவஹர்லால் நேரு Vice President of Executive Council, வெளிவிவகாரம் மற்றும் காமன் வெல்த்.

5. வல்லபபாய் படேல் - உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு

6. இராசேந்திர பிரசாத் - உணவு மற்றும் வேளாண்மை

7. சரத் சந்திர போஸ்

8. சி. இராஜகோபாலாச்சாரிகல்வி

9. ஜெகஜீவன் ராம் - தொழிலாளர் நலன்

மூன்று முஸ்லீம் அமைச்சர்கள்

10. ஆசாப் அலி - இரயில்வே

11. சர் சபத் அகமது கான்

12. சையத் அலி ஜகீர்

ஒரு சீக்கிய அமைச்சர்

13. பல்தேவ் சிங் - இராணுவம்

ஒரு பார்சி அமைச்சர்

14. சி. எச். பாபா

ஒரு இந்திய கிருத்துவர்

15. டாக்டர் ஜான் மத்தயர் - தொழில் மற்றும் வழங்குதல்

இரு முஸ்லீம் லீக் அமைச்சர்கள்

16. லியாகத் அலிகான் - நிதி

17. கஜான்பர் அலிகான் - சுகாதாரம்

நேரடி நடவடிக்கை நாள்

18. இந்த இடைக்கால அரசில் பங்கு வகித்த நிதி அமைச்சர் இந்து வணிகர்களின் வணிகத்தை அழிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்பட்டது. மேலும் பஞ்சாப், வங்காளம் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் லீக் ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியது.

19. மேலும் அரசியல் நிர்ணய சபையில் முஸ்லீம் லீக் சேர மறுத்தது.

20. இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசை எதிர்த்து முஸ்லீம் லீக் ஜின்னாவின் தலைமையில் கல்கத்தாவில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாளை நேரடி நடவடிக்கை நாள் என அறிவித்தது.

21.  நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தது

22. இதனால் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது.

23. வங்காளம் மற்றும் பீகாரில் கலவரம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டது.

24. வைஸ்ராய் கவுன்சிலில் காங்கிரசின் செல்வாக்கை குறைப்பதற்காக முகமது அலி ஜின்னா,  வேவல் பிரபுவிடம் 5 நபர்களின் பெயரை பரிந்துரை செய்தார். அதன்படி சர் சபத் அகமது கான், சையத் அலி ஜகீர் மற்றும் சரத் சந்திர போஸ் ஆகியோர் வைஸ்ராய் கவுன்சிலில் இருந்து பதவி விலகினர். லியாகத் அலி கான், இஸ்மாயில் இப்ராகிம் சந்திரகார், அப்துல் ராப் நிஷ்டார், கஜான்பர் அலிகான் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் வைஸ்ராய் கவுன்சிலில் 26 அக்டோபர் பதவி ஏற்றன.ர்

25. ஆங்கில அரசு அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்காக ஜவஹர்லால் நேரு, சர்தார் பல்தேவ் சிங், முகமது அலி ஜின்னா மற்றும் லியகத் அலி கான் ஆகியோர்களை லண்டன் வரவழைத்தனர்.

26.  அங்கு இறுதி முடிவு ஏற்கப்படவில்லை. முஸ்லீம் லீக் சார்பில் நியமிக்கப்பட்ட 5 நபர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கவில்லை.

27. இந்நிலையில் வேவல் பிரபுவை பதவி விலகுமாறு பிரதமர் அட்லி கேட்டுக் கொண்டார்.

28. நிலைமைகளை கவனித்த பிரதமர் அட்லி 20, பிப்ரவரி 1947ல் அன்று அறிக்கை வெளியிட்டார். அதன்படி இங்கிலாந்து நாட்டவர்கள் ஜீன் 1948க்கு முன்பாகவே இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என அறிவித்தார்.

29. தலைவர்கள் இந்தியாவைப் பிரிப்பதுதான் ஒரே வழி என முடிவு எடுத்தனர்

பம்பாய் கலவரம்

1946ம் பம்பாய் கடற்படையில் கலவரம் ஏற்பட்டது.