Type Here to Get Search Results !

வரலாறு | Part - 27 | 150 Questions

History in Tamil | Part - 27

மவுன்ட்பேட்டன் திட்டம்

1. 24.3.1947ல் பதவி ஏற்ற மவுன்ட்பேட்டன் பிரபு 133 முறை இந்திய தலைவர்களை சந்தித்தார். வி. கே. கிருஷ்ண மேனன், சர்தார் வல்லபபாய் படேல், லியாகத் அலி கான், மௌலானா அபுல் கலாம் ஆசாத், ஜே. பி. கிருபாளனி ஆகியோர் அவர் சந்தித்த முக்கிய அரசியல் தலைவர்கள் ஆவார்.

2. ஏப்ரல், 1947ல் மவுன்ட் பேட்டன் பிரபு ஆட்சியை ஒப்படைப்பது தொடர்பாக மவுன்ட்பேட்டன் பிரபு, General Sir Hastings Ismay,  Sir Eric Mieville மற்றும் Sir George Able ஆகியோர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்தார். இக்குழுவின் திட்டத்தை (Plan Balkan) General Sir Hastings Ismay  லண்டன் கொண்டு சென்றார்.

3. இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட வழியில்லை என்பதை புரிந்து கொண்ட மவுண்ட்பேட்டன் இந்தியாவை இந்தியாபாகிஸ்தான் என பிரிப்பது, வங்காளம், பஞ்சாப் போன்ற எல்லைகளை நிர்ணயித்தல் போன்றவை தொடர்பாக தனது திட்டத்தை லண்டனின் அமைச்சரவையில் தெரிவித்தார்.

4. அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற அவர் மே மாதம் 30 தேதி இந்தியா வந்தார். 1947 ஜீன் மாதம் 2ம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசி இந்தியாபாகிஸ்தான் என தன் திட்டத்தை வெளியிட்டார். பிறகு 1947 ஜீன் 4ம் நாள் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் வழங்கப்படும் (Transfer of Power) என அறிவித்தார்.

5. இதுவே மவுண்ட் பேட்டன் திட்டமாகும்.

6. 25 ஏப்ரல் 1947ல் இராணுவ குழுவை மவுண்ட்பேட்டன் பிரபு கூட்டினார். அக் கூட்டத்தில் சர்தார் பல்தேவ் சிங், லியாகத் அலிகான் மற்றும் Field Marshal Sir Claude Achinlecl ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய இராணுவம் பிரிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.

7. 5 ஜீன் 1947ல் இரு காங்கிரஸ் மற்றும் இரு முஸ்லீம் லீக் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினை அமைத்தார். அக்குழு மேலும் பத்து துணைக் குழுக்களை ஏற்படுத்தியது. எந்த எந்த பகுதிகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்து இக்குழுக்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

8. முக்கியமான பிரச்சினைகளை களையும் பொருட்டு ஒரு Arbitral Tribunal இந்தியாவின் தலைமை நீதிபதியான Patrick Spens என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது.

9. 30 ஜீன் 1947ல் பஞ்சாப், வங்காளம் மற்றும் அசாம் ஆகிய பகுதிகள் பிரிப்பது குறித்து 3 குழுக்களை அமைத்தார். பின் அக்குழு இரண்டு குழுக்களாகவும்,  இரண்டு குழு ஒரு குழுவாகவும் அமைந்தது. இக்குழுக்களின் உறுப்பினராக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்,  இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயரை பரிந்துரைக்குமாறு கூறப்பட்டது. இக்குழுக்களின் தலைவராக சர் சிரில் ராடிகிளிப் நியமிக்கப்பட்டார்

10. இக்குழு பெருவாரியான மக்கள் வசிப்பது, நிர்வாக தலைமை, இயற்கை எல்லைகள், தொலைத் தொடர்பு,  நீர் மற்றும் பாசன வசதி ஆகியவற்றின் அடிப்படையில் பகுதியை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் இப்பணியை முடிக்குமாறு காலவரையறை நிர்ணயம் செய்யப்பட்டது.

11. காந்தியடிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இதனை ஏற்றதன் அடிப்படையில் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதனை ஜூலை 18, 1947 அன்று நிறைவேற்றியது.

12. இதன்படி சுதந்திரம் என நிர்ணயிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது.

13. பாகிஸ்தான் 14-8-1947ல் சுதந்திரம் அடைந்தது. பாகிஸ்தானில் முதல் கவர்னர் ஜெனரலாக முகமது அலி ஜின்னா பதவி ஏற்றார்.

14. மேற்கு பஞ்சாப், சிந்து வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளை கொண்ட பகுதி பாகிஸ்தான் எனப்பட்டது.

15. இந்தியத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன் பிரபு பதவி ஏற்றார். இவர்  21ம் தேதி புறப்பட்டு லண்டன் சென்றார்.

16.  பின் 1948 ஆம் ஆண்டு ஜீன் மாதம் இந்தியாவின் மாக்கியவல்லி எனப்பட்ட சி. ராஜகோபலாச்சாரி முதல் இந்திய கவர்னர் ஜெனரல் பதவி ஏற்றார்.

17. இந்திய சுதந்திரம் அடைந்த போது சென்னை மாகாணத்தின் கவர்னராக சர் ஆர்சிபாலிடு எட்வர்டு நை என்பவர் இருந்தார். இவரே சென்னை மாகாணத்தின் கடைசி கவர்னராவர்.

இடைக்கால சுதந்திர இந்தியாவின் அமைச்சரவை

18. ஜவஹர்லால் நேருபிரதம அமைச்சர், வெளி விகாரம் நாடுகளின் உறவுகள் மற்றும் அறிவியல் ஆய்வு

19. சர்தார் வல்லபபாய்படேல் - உள்துறை, செய்தி ஒளிபரப்பு மற்றும் மாநிலங்கள்

20. டாக்டர் இராசேந்திர பிரசாத் - உணவு மற்றும் வேளாண்மை

21. மௌலானா அபுல் கலாம் ஆசாத் - கல்வி

22. டாக்டர் ஜான் மத்தாய் - இரயில்வே மற்றும் போக்குவரத்து

23. சர்தார் பல்தேவ் சிங் -ராணுவம்

24. ஜகஜீவன்ராம் - தொழில்

25. சி. எச். பா பாவணிகம்

26. ரவி அகமது கித்வாய் - தொடர்புகள்

27. ராஜ்குமாரி அமிதித் கவுல் - சுகாதாரம்

28. டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் - சட்டம்

29. ஆர். கே. சண்முகம் செட்டியர் - நிதி

30. டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜிதொழில் மற்றும் வினியோகம்

31. என். வி. காட்சில் - சுரங்கம் மற்றும் சக்தி

ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கங்கள்

குகா இயக்கம்:

பஞ்சாப்பில் தோன்றியது.

மாப்ளா புரட்சி:

1921ல் கேரளாவில் ஏற்பட்டது.

சுதந்திரப் போரில் புரட்சி இயக்கங்கள்:

1. சுதந்திரப் போராட்டத்தில் புரட்சி தேசியபற்று இயக்கங்கள் எழுந்த காலம் 1903 முதல் 1913 வரை ஆகும். இக்காலம் புரட்சியாளர்கள் காலம் எனப்படும்

2. இதற்கு பிறகு 1932ல் புரட்சியாளர்கள் மீண்டும் உருவாயின.

ராண்ட் கொலை வழக்கு

1. இதுவே இந்தியாவில் நடந்த முதல் ஐரோப்பிய அரசியல் கொலையாகும்.

2. தாமோதிரன், பாலகிருஷ்ணன் என்ற இரு சித்பவ அந்தணர்கள் பிளேக் ஒழிப்பு கமிட்டியின் தலைவரான ராண்ட் என்பவரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் குறி தவறுதலா லெப்டினன்ட் அயர்ஸ்ட் என்பவரின் மேல் பாய்ந்தது.

3. இவ்விருவரையும் தமது எழுத்தின் மூலம் வன்முறைக்கு வித்திட்டதாக கூறி 18 மாத காலம் கடுஞ்சிறையில் இடப்பட்டார்

காதர் கட்சி - 1913

1. லாலாஹர்தயாள், சோகன் சிங் ஆகியோர்களால் இவ்வியக்கம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் துவக்கப்பட்டது.

2. தீவிரவாதத்தை வளர்த்தல், புரட்சிகரமான கருத்துக்களை கூறுதல், வெளியிடுதல், ஆயுதங்களை சேகரித்தல் போன்ற பணிகளை செய்தது.

3. இக்கட்சி காதர் எனப்படும் வார இதழை வெளியிட்டது.

லாகூர் கொலை வழக்கு எனப்படும் சாண்டார்ஸ் கொலை வழக்கு

1. சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தின் போது சாண்டார்ஸ் என்ற காவல் துறை அதிகாரியால் லாலா லஜபதிராய் கடுமையாக தாக்கப்பட்டு பின்பு இறந்தார். எனவே இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் எனப்படும் புரட்சி சங்கத்தைச் சேர்ந்த பகத் சிங் என்பவர் சாண்டார்ஸ் என்ற காவல் துறை அதிகாரியை 17-12-1928ல் சுட்டுக் கொன்றார்.

2. மேலும் சட்டமன்றத்தில் 8-8-1929ல் குண்டு வீச முயன்றதாகவும் பகத் சிங் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் தொடர்பாக பகத் சிங், ராஜ குரு, சுக்தேவ் ஆகியோர் 23-3-1931 அன்று தூக்கிலடப்பட்டனர். இந்த நாளை தியாகிகள் தினமாக (Political Sufferer’s day) என காங்கிரஸ் கொண்டாடியது

ஜெனரல் டயர் கொலை வழக்கு

மைக்கேல் ஓ டயர் என்ற காவல் துறை அதிகாரி 13-4-1919ல் பஞ்சாப்பில் ஜாலியன் வலாபாக் என்ற இடத்தில் பைசாகி திருவிழாவின் போது கண்முடித்தமாக துப்பாக்கி சூடு நடத்தினார். அப்போது இதனை கண்ட உதம் சிங் என்பவர் இந்நிகழ்ச்சிக்கு காரணமான டயர் என்பவரை இரண்டனில் சுட்டுக் கொன்றார்.  13-7-1940ல் உதம்சிங் தூக்கிலடப்பட்டார்.

சர் வில்லியம் கர்சன் வில்லி கொலை வழக்கு

1. இலண்டனில் படிக்க சென்ற மாணவர்கள் லண்டனில் இந்தியா அவுஸ் என்ற விடுதியில் தங்கிப் படித்தனர். சிலர் இங்கு தீவிரவாதியாக மாறினார்கள். இங்கு உளவு பார்த்த சர் கர்சன் வில்லி என்பவரை மதன்லால் திங்கரா என்ற புரட்சியாளர் சுட்டுக்கொன்றார். 13-8-1909ல் இவர் தூக்கிலிடப்பட்டார்.

கிங்ஸ்போர்டு கொலை வழக்கு அல்லது அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு

1. முசாபர் நகரத்தின் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த தண்டனையைக் கண்டு மனம் வெதும்பிய குதிராம்போஸ், நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிகுண்டு வீசினார். இதில் நீதிபதி கிங்ஸ்போர்டு தப்பி விட்டார். ஆனால் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.

2. குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லா காக்கி 11-8-1908ல் தூக்கிலிடப்பட்டார். இதில் அரவிந்த கோஷ் விடுதலை செய்யப்பட்டார். அரவிந்தரின் விடுதலைக்கு வாதிட்டவர் சித்தரஞ்சன் தாஸ் ஆவார்

நாசிக் சதி வழக்கு

1. 1909 ஆம் ஆண்டு நாசிக் நீதிபதி ஜாக்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2. இக்கொலைக்கு பீனா தாஸ் காரணமானவர்.

மிண்டோ பிரபு கொலை முயற்சி வழக்கு

1. ஐக்கிய மாகாணத்தில் புரட்சிச்காரர்களின் தலைவராக விளங்கியவர் ராம்பிரசாத் பிஸ்மில்.

2. இவர் இயக்கத்திற்கு தேவையான பணம் பெறுவதற்காக ககோரியில் இருந்து லேம் நகர் செல்லும் இரயிலில் கொள்ளையடித்தார்.

3. இவ்வழக்கில் பிஸ்மில் தூக்கிலடப்பட்டார்.

ஹார்டிஞ்ச் பிரபு கொலை முயற்சி வழக்கு

1. 1911ம் ஆண்டில் ஹார்டிஞ்ச் பிரபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் யானை மீது ஊர்வலமாக வந்த பொழுது குண்டு வீசி கொல்ல முயற்சிக்கப்பட்டது. இதில் அவரின் பணியாட்கள் உயிர் துறந்தனர். ராஷ் பிகாரி போஸ் இதற்கு காரணமானவர்.

புரட்சிவாத இயக்கங்கள்:

மித்திர மேளா:

1. இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம்.

2. துவக்கப்பட்ட ஆண்டு 1899.

3. துவக்கியவர்: வினாயக் தாமோதர் சவர்க்கார் மற்றும் கணேஷ் சவர்க்கார்.

4. இடம்: மகாராஷ்டிரா.

அனுசிலியன் சமிதி:

1. இந்தியாவின் முதல் இரசகசிய தீவிரவாத இயக்கம்.

2.  துவக்கப்பட்ட ஆண்டு – 1902

3. கல்கத்தாவில் துவக்கப்பட்டது.

4. துவக்கியவர்கள்: பரிந்திர குமார் கோஷ் மற்றும் பிரமோத்திர மித்திரா.

5. டாக்காவில் துவக்கியவர்: புலின் தாஸ்

6. இயக்கத்தின் பத்திரிக்கை: பவானி மந்திர், Bartaman Mandir, Mukti Kon Patha.

7. பிற தலைவர்கள்: குர்திக் சிங்.

அபிநவ பாரதம் (இளம் இந்தியா):

1. 1907ல் துவக்கப்பட்டது

2. துவக்கியவர்: சாவர்க்கர் சகோதரர்கள்

3. வினாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய புத்தகம்: India’s First war of Independence

ஜீகாந்தர்

1. அனுசிலியன் சமிதி துவக்கிய பத்திரிக்கை.

2.  ஜீகாந்தர் கல்கத்தாவில் தோன்றியது.

3. ஹேமசந்திர தாஸ் ரஷ்ய குண்டுகள் தயாரித்தார்.

4. இதன் போர்க் குழுவிற்கு மானிக்டோலா கார்டன் சொசைட்டி என்று பெயர்.

நவபாரத் சொசைட்டி

குவாலியரில் தோன்றியது

பாரிசார் சமிதி

கிழக்கு வங்காளத்தில் தோன்றியது.

ராஜா பஜார்

கல்கத்தாவில் தோன்றியது.

சந்திர சேகர் ஆசார்:

1. இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தினை இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு என பெயர் மாற்றியவர்.

2. ககோகி வழக்கில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர்.

3. 1931ல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சூர்யாசென்:

1. சிட்டகாங் மாநிலத்தின் புரட்சியாளர்.

2. இந்திய குடியரசுப் படையைச் சார்ந்தவர்.

இந்திய விடுதலைப் படை

1. ராஷ் பிகாரி போஸ் என்பவர் ஐப்பானில் இந்திய விடுதலைக் கழகத்தை துவக்கினார்.

2. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய அரசு இவ்விடுதலைக் கழகத்திற்கு ஆதரவு காட்டியது.

3. 1942ல் சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது.

4. ஜப்பான் பிரதமர் இந்தியா இந்தியருக்கே எனக் கூறி இந்திய சுதந்திர விடுதலைக்கு ஜப்பான் உதவி புரியும் எனக் கூறினார்

5. இந்திய விடுதலைக் கழகம் ஆங்காங்கு இளைஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளித்தது.

6. இதன் பிரிதிநிதிகள் மாநாடு பாங்காங்கில் கூட்டப்பட்டது.

7. சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியதும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய இராணுவ வீரர்கள் (போர்க் கைதிகள்) கேப்டன் மோகன் சிங் என்பவர் தலைமையில் இந்திய விடுதலைக் கழகத்தில் சேர்ந்தனர்.

8. பாங்காங்கின் இந்திய விடுதலைக் கழகத் தலைவர் பீதாம்பர் சிங், மோகன் சிங்கிற்கு உதவி புரிந்தார்.

9. 1-9-1942ல் இந்திய தேசிய படை முறையாக அமைக்கப்பட்டது.

10. இந்திய தேசிய படையின் மூன்று கொள்கைகள் ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம், இப்படையில் உள்ள ஒற்றுமையின்மை காரணமாக ராஷ் பிகாரி போஸ் அவர்களால் துவக்கப்படவில்லை.

11. சுபாஷ் சந்திர போஸ் 16 முதல் 17-1-1947 நள்ளிரவில் இந்தியாவில் இறுந்து தப்பினார். ஆவர் ஜெர்மனியில் இருந்து ஜப்பானுக்கு வந்தார்.

12. அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்து இந்திய விடுதலை பற்றிய கோரிக்கை வைத்தார்.

13. ஜப்பான் இந்திய விடுதலையை ஏற்றுக்கொண்டது.

14. சுபாஷ் சந்திர போஸ் சிஙகப்பூர் வந்தவுடன் ராஷ் பிகாரி போஸ் இந்திய தேசிய படையின் பொறுப்பை சுபாஷ் சந்திர போசுக்கு தந்தார்.

15. இந்திய விடுதலைப் படையை சற்று மாற்றி Azad Hind Fauj என பெயர் வைத்தார்.

16. ஜப்பான் இராணுவத்தில் சுபாஷ் பிரிகேட் என்ற புதிய படைப்பு பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையை ஷா நவாஸ் ஏற்றார்.

17. இந்திய தேசிய இராணுவத்தில்,  பெண்கள் அணிப்பிரிவு கேப்டன் லட்சுமி என்பவர் தலைமையில் இருந்தது.

18. இந்திய பர்மா எல்லையில் சுமார் 150 கி. மீ. தோலைவை இந்திய தேசிய படை கைப்பற்றியது.

19. டில்லி சலோ, ஜெய் இந்த் போன்ற முழக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

20. இந்திய தேசிய விடுதலைப் படை பிரிட்டிஷாரின் கலாங் கலாங் என்ற முக்கிய இடத்தை கைப்பற்றியது.

21. இந்திய எல்லைக்குள் ஜப்பான் துணையுடன் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

22. இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு வீச்சு போன்ற காரணத்தால் ஜப்பான் பின் வாங்க நேரிட்டது.

23. சிந்த்வின் ஆற்றங்கரையில் இந்திய தேசியப்படை தோல்வியடைந்தது. சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் இருந்து தப்பிச் சென்று மீண்டும் போரினை துவக்க எண்ணினார்.

24. பாங்காக்கிலிருந்து டோக்கியோ செல்ல ஜப்பான் படைத் தலைவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த நேதாஜி பார்மோசாவில் உணவு அருந்திய கடைசி தகவல் கிடைத்துள்ளது.

25. அதன்பின் அவர் சென்ற விமானம் தீப்பிடித்தது என்பர். சிலர் இதை பொய் என்று கூறுகின்றனர்.

26. இவ்விடுதலைப் போரில் சுமார் 4000 இந்திய தேசிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

27. கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து தில்லி செங்கோட்டையில் விசாரணை செய்தது. இவ்விசாரணை தில்லி செங்கோட்டை விசாரணை என்று கூறுவர்.

28. பி. கே. செனகல், ஷா நவாஸ் மற்றும் குர்பாகாஷ் சிங் தில்லான் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்றது.

29. இந்திய தேசிய படைவீரர்களுக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு, புலாபாய் தேசாய் மற்றும் தேஜ்பகதூர் சப்ரு ஆகியோர் விசாரணையில் வாதாடினார்கள்.

முக்கிய சமுதாய மற்றும் அரசியல் இயக்கங்கள்

1. சிகப்புச் சட்ட இயக்கம்: கான் அப்துல் காபர் கான்

2. தேவா சமாஜ்: சிவான்ரங்கள் அக்னிகோத்திரி

3. நில உரிமையாளர்கள் சங்கம்: துவராகநாத் தாகூர்

4. இந்தியன் அசோசியேஷன் 1876: சுரேந்திரநாத் பானர்ஜி

5. மதராஸ் அசோசியேஷன்: சி. எஸ். அய்யர்,  விஜயராகவ ஆச்சாரி

6. ஈஸ்ட் இந்தியா அசோசியேஷன்: 1866: தாதாபாய் நௌரோஜி: இது லண்டனில் துவக்கப்பட்டது.

7. இந்தியன் விடுதலைக் கழகம் - 1942: ராஷ் பிகாரி போஸ்

8. பிரம்ம சமாஜ் - 1828: ராஜாராம் மோகன்ராய்

9. பிரத்தனா சமாஜ்: டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்

10. ஆரிய சமாஜ்: சுவாமி தயானந்த சரஸ்வதி

11. ராமகிருஷ்ணா மிஷன்: சுவாமி விவேகானந்தர்

12. பிரம்ம ஞான சபை: மேடம் எச். பி. பிளாட்ஸ்கி

13. தற்கால இந்தியாவில் தோன்றிய முதல் பொதுச்சங்கமான,  தி லேண்ட் ஓல்டர்ஸ் சொசைட்டி 1837 மற்றும் பெங்கால் பிரிட்டிஷ் இந்தியா சொசைட்டி 1843. இவை இரண்டும் சேர்த்து 1851ல் பிரிட்டிஷ் இந்தியா அசோசியேஷன் என துவக்கப்பட்டது.

14. நேஷனல் இந்தியன் அசோசியேஷன் - 1867 மேரி கார்பென்டர்

15. ஆல் இந்தியா கிசான் சபா – 1936 சுவாமி சகஜனந்த சரஸ்வதி

16. வகாபி இயக்கம் - சையத் அகமது ப்ரோப்லி (இந்தியா), இபான் அப்துல் வகாப் (அரேபியா)

17. சந்வந்தி புரட்சி: பாண்ட் சரட்

18. பர்தோலி சத்யாகிரகம்: காந்தி, சர்தார் வல்லபபாய் படேல்

19. கீர்த்தி கிசான் பார்ட்டி: சி. எல். ஆண்ட்ரூஸ்

20. ஈகா இயக்கம்: மதன்பாசி

21. ஆண்டி சர்குலர் பார்ட்டி: கிருஷ்ணகுமார் மித்ரா

22. ஆரிய பந்தர் இந்தியன் சொசைட்டி: திலகர்

23. இந்தியன் நேஷனல் பார்ட்டி: சம்சிரமன் பிள்ளை

24. இளம் வங்காள இயக்கம்: ஹென்றி விவியன் டோசாரியோ

25. டேக்கான் எஜீகேஷனல் சொசைட்டி: எம். பி. ராணடேவ்

26. ஆல் இந்தியா டிப்ரஸ்டு கிளாசஸ் அசோசியேஷன் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார்

27. யங் இந்தியா: வி. டி. சவார்க்கர்

28. இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன்: சந்திர சேகர் ஆசாத்

29. இந்தியன் ரிபப்ளிக்கன் ஆர்மி: சச்சிந்திர சன்யால்

30. டிரான்சிலேசன் சொசைட்டி: 1864 – சையது அகமது கான்

31. பீகார் மாணவர்கள் மாநாடு: டாக்டர். ராஜேந்திர பிரசாத்,

32. மெட்ராஸ் சொந்த சங்கம் - 1852

33. மதராஸ் மகாசன சபா - 1884

34. ஜி. சுப்பிரமணிய அய்யர், பி. ஆனந்த ஆச்சார்யலு மற்றும் ரங்கைய்ய நாயுடு ஆகியோர்களால் இச் சங்கம் துவக்கப்பட்டது

35. பிரிட்டிஷ் இந்தியா அசோசியேஷன் - 1851

36. பாம்பே அசோசியேஷன் - 1852

37. பூனா சர்வஜனிக் சபா – 1870

38. பாம்பே பிரெசிடென்சி அசோசியேஷன் - 1884

39. பூமி தான இயக்கம் அல்லது பூதான இயக்கம்: ஆச்சார்ய வினோபாவால் 18.4.1951ல் தெலுங்கானாவில் துவக்கப்பட்டது. முதன் முதலில் ஆதி திராவிட மக்களுக்கு ராம சந்திர ரெட்டி என்பவர் 100 ஏக்கர் நிலத்தை இனாமாக அளித்தார்