History in Tamil | Part - 28
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியப் பத்திரிக்கைகள் மற்றும் அதன் நிறுவனர்கள்
1. அன்னி பெசண்ட்: காமன் வெல்த், தி மெட்ராஸ் ஸ்டான்டர்ட், நியு இந்தியா
2. மகாத்மா காந்தி: யங் இந்தியா: ஹரிஜன்
3. திலகர் மற்றும் அகர்கர்: கேசரி, மராத்தி
4. மோதிலால் நேரு: தி இன்டிபென்டன்ட்
5. லாலாலஜபதி ராய் : தி பீப்புள்
6. பெரோஷா மேத்தா: தி பாம்பே க்ரானிக்கல்
7. சிசிர் குமார் கோஷ்: அம்ரிதா பஜார் பத்திரிக்கா 1868
8. தயாள் சிங்: டிரிபியூன் 1878
9. சா.சார்லாஸ் மெட்டகேப் மற்றும் மெகாலே பிரபு: Liberatory
of Indian Press
10. தேவேந்திரநாத் தாகூர்: தவபோதினி பத்திரிக்கா
11. கிரிஷ் சந்திர கோஷ்: பெங்காலி, இந்து பேட்ரியாட்
12. கே. எம். பணிக்கர்: தி இந்துஸ்தான் டைம்ஸ்
13. ஜோகிந்தர் பாபு: வங்கபாசி
14. ஜி. பி. வர்மா: இந்துஸ்தானி அட்வகேட்
15. ராபர்ட் பென்னட்: பாம்பே டைம்ஸ்
16. ஹென்றி விவியன் டிசாரியோ: இஸ்ட் இந்தியன்
17. சியாம்ஜி கிருஷ் வர்மா: இந்தியன் சோசியாலஜிஸ்ட்
18. ராமானந்த சட்டர்ஜி: மாடர்ன் ரிவிய்யு
19. சுரேந்திரநாத் பானர்ஜி: தி பெங்காலி
20. தேவேந்திரநாத் தாகூர்: இந்தியன் மிரர் - 1862
21. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்: சோம் பிரகாஷ்
22. முகந்தராவ் பாடில்: தீன் மித்ரா, இன்டிபென்டன்ட் இந்தியா
23. பிரம்பந்தப் உபாத்தியா: சந்தியா
24. பிகாஜிகாமா: பந்தே மாதரம்
25. காதர் கட்சி: காதர்
26. பிபின் சந்திரபால்: நியு இந்தியா
27. அரவிந்த கோஷ்: வந்தே மாதரம்
28. எம். ஜி. தேசாய்: தி ஸ்பார்க்
29. அஜித் சிங்: பாரத மாதா
30. மௌலானா அபுல் கலம் ஆசாத்: அல் நாவத் வக்கீல், அல் இலால், அல் பலாக்
31. கிராந்தி: ஒர்க்கர்ஸ் அண்ட் டிசண்ட் பார்டி
32. பெகராம்ஜி பலபாரி: இந்தியன் ஸ்பெக்டேடர்
33. பக்கிம் சந்திர சட்டர்ஜி: கங்கதர்சனா – 1873
34. ராசாராம் மோகன் ராய்: பங்க தத்தா, மீரத் - உல் - அக்பர், சம்பத் கழுதி
35. சென்னையில் வெளியான முதல் பத்திரிக்கை: மெட்ராஸ் குரியர்- 1785 ரிச்சர்டு ஜான்ஸ்டன்
36. இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை: பெங்கால் கெஜட். இதனை துவக்கியவர் - ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி - இது கல்கத்தாவில் துவக்கப்பட்டது.
37. இந்தியாவின் இரண்டாவது செய்தி இதழ் - கல்கத்தா அட்வர்டைசர்
38. முதல் மும்பை செய்தித்தாள்: பம்பாய் ஹெராய்டு – 1789
39. முதல் உருது செய்தித்தாள்: பம்பாய் சமச்சர்
40. முதல் ஆங்கில தினசரி: இந்தியா மிரர்
41. முதல் இந்திய மொழி செய்தித்தாள் - திக்தர்ஷன் (அ) சமாச்சார் தர்பன்.
42. முதல் தமிழ் மொழி செய்தித்தாள்: சுதேசமித்திரன். இச்செய்தித்தாள்
1882ல் ஜி. சுப்பிரமணிய அய்யர் எனப்வரால் துவக்கப்பட்டு, 1899ல் தினசரி தமிழ்மொழி செயத்தித் தாளாக மாற்றப்பட்டது.
முக்கிய தலைவர்களும் அவர்கள் எழுதிய புத்தகங்களும்
1. காந்தி – சத்திய சோதனை
2. மௌலான அபுல்கலாம் ஆசாத் : இன்டியா வின்ஸ் பிரீடம்
3. லாலா லஜபதி: அன்ஆப்பி இந்தியா
4. டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இண்டியா டிவைடட்
5. ஜவஹர்லால் நேரு – டிஸ்கவரி ஆப் இந்தியா.
விடுதலைக்குப் பின் இந்தியா
1. விடுதலை பெற்ற இந்தியாவின் முதன் தலைமை ஆளுநராக மௌண்ட் பேட்டன் பிரிவு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளிலிருந்து 1948ஆம் ஆண்டு ஜீன் வரை பணியாற்றினார்.
2. அவருக்குப்பின் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் வரை சி. இராஜகோபலாச்சாரி முதல் இந்தியர் தலைமை ஆளுநராக இருந்தார்.
இந்தியச் சிற்றரசுகளின் இணைவு
3. இந்தியா சுதந்திரம் பெறும் முன்னர் 562 சிற்றரசுகள் இருந்தன. இந்தியாவின் இரும்பு மனிதர் அல்லது பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் மற்றும் வி. பி. மேனன் 1947 ஜீலை 15 ஆம் நாள் அனைத்துச் சிற்றரசர்களையும் அழைத்து இணைப்பு குறித்து பேசினார்.
4. மௌணட் பேட்டன் பிரபு இந்திய சிற்றரசர்களை இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ, இணைய அழைப்பு விடுத்தனர்.
5. ஒரிசாவுடன் 39 சிற்றரசர்களும், மும்பையுடன் 300க்கு மேற்பட்ட அரசுகளும், சென்னை, வங்காளம், அசாம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் சில அரசுகளும் இணைந்தன.
சூனாகாத் இணைவு
1. கத்தியவார் தீபகர்ப்பத்தில், சூனாகாத் என்ற அரசில் 80% இந்துக்களும், 20% பிற சமயத்தவரும், அரசர் இசுலாமியராகவும் இருந்தனர். அரசர் பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தார். இதனால் கலகம் ஏற்பட்டது.
2. சூனாகாத் திவான் இந்திய அரசின் உதவியை நாடினார். இந்திய அரசு கலகம் செய்தோரை அடக்கி அமைதி ஏற்படுத்தியது.
3. பின்னர் அங்கு பொதுமக்கள் வாக்கெடுப்பு முறையால் அப்பகுதி இந்தியாவுடன் இணைந்தது.
ஹைதராபாத் இணைவு
1. ஹைதராபாத் அரசராக நிசாம் இருந்தார். அவர் இசுலாமியராயினும், மக்களில் பெரும்பாலோர் இந்துக்கள் ஆவார். சுதந்திரமடைந்தவுடன் வல்லபபாய் படேல் அப்பகுதியை இந்தியாவோடு இணைய அழைப்பு விடுத்தார். நிசாம் அதனை ஏற்கவில்லை.
2. இருப்பினும் இந்திய அரசோடு தற்காலிக உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டார். அதன்படி ஒரு இந்திய முகவர் (Agent) அவர் நாட்டில் நியமிக்கப்பட்டார். அவரே நிசாமின் முக்கியப் பணிகளை மேற்கொளளலானார். கே. எம். முன்ஷி என்பவர் முகவரானார். அதனை ராசாக்கர்கள் என்ற இசுலாமியத் தீவிரவாதிகள் எதிர்த்தனர். அங்கு சட்டம், ஒழுங்கு நிலை கெடவே, வல்லபபாய் படேல் காவல் நடவடிக்கையை, தளபதி சௌத்திரி என்பவர் மூலம் மேற்கொண்டார்.
3. நிசாம் ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைக்க இசைவு தெரிவித்தார். 1948 செப்டம்பரில் இந்தியாவோடு இணைந்தது.
காஷ்மீர் இணைவு
1. காஷ்மீர் இந்து அரசர் ஆட்சி செய்தார். மக்களில் பலர் இசுலாமியர் ஆக இருந்தனர்.
2. பாகிஸ்தானின் தூண்டுதலால் இசுலாமியப் பழங்குடியினர் காஷ்மீரைத் தாக்கினர். அவர்களை அடக்க காஷ்மீர் அரசர் இந்திய அரசின் உதவியை நாடினார். இந்தியப்படை அங்கு அனுப்பப்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
மொழிவாரி மாநில அமைப்பு
இந்திய ஐக்கியம் சிதறிப் போகும் என இந்தியத் தலைவர்கள் கருதினர். அதனை ஆராய அரசு எஸ். கே. தார் என்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அது மொழிவாரியாக மாநிலங்கள் அமைவதற்கு பதிலாக, நிருவாகத்திற்கு உகந்த வகையில் மாநிலங்கள் அமைய விரும்பியது.
ஜே. வி. பி. குழு
1. எஸ். கே. தார் குழுவின் அறிக்கையை ஆராயக் காங்கிரசு ஜே. வி. பி. குழு என்ற மூவர் குழு அமைத்தது. ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீத்தாரமய்யா ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். அக்குழு மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தால் நாட்டு ஒற்றுமை சிதறிவிடும் எனக் கருதியது.
தெலுங்கு மாநிலம் உருவாகுதல்:
2. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது சென்னை மாகாணத்தில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளாவின் சில பகுதிகள் அடங்கியதாக இருந்தது.
3. தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனி மாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமுலு என்பார் இறக்கும் வரை பட்டினி மேற்கொண்டு இறுதியில் மரணமடைந்தார்.
4. இதனால் சென்னை மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை 1953ல் பிரித்து ஆந்திர மாநிலமாக, மத்திய அரசு அறிவித்தது. அதுவே மொழிவாரியாக மற்ற மாநிலங்கள் உருவாகவும் காரணமாக அமைந்தது.
5. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956ன் படி சென்னை மாநிலம் மேலும் பிரிக்கப்பட்டு சில பகுதிகள் கேரளா மற்றும் மைசூருடன் சேர்க்கப்பட்டது.
6. 1.4.1960ல் சத்தூர் மாவட்டத்தின் சில பகுதிகள் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டது. செங்கை மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
7. 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
போர்த்துக்கீசியர் பகுதிகள்:
இந்திய போர்த்துக்கீசியர்களிடையே நடைபெற்ற போரில் 19.12.1961ல் போர்த்துக்கீசிய கவர்னர் Manuel Antonio Vassalo Silva சரண் அடைந்தார். கோவா மற்றும் பிற போர்த்துக்கீசியர்களின் பகுதிகளை இந்தியா கைப்பற்றியது.
பிரெஞ்சுப் பகுதிகள்:
1. இந்தியப் பிரெஞ்சுப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு 12-3-1962
2. பாண்டிச்சேரி விடுதலைப் பெற்ற ஆண்டு 16-8-1962
பஞ்ச சீலக் கொள்கை:
1. இந்தியாவுடன் சீனா பஞ்ச சீல கொள்கை ஒப்பந்தத்தில் 29.4.1954ல் கையெழுத்திட்டது.
2. இவ்வொப்பந்தத்தில் சீனப் பிரதமர் சூ என் லாய் மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால்ல நேரு ஆகியோர் கையெழுத்திட்டனர்.