Type Here to Get Search Results !

வரலாறு | Part - 32 | 188 Questions

History in Tamil | Part - 31

காலக் கடிகாரம்

1. 3200-2000 சிந்து சமவெளி நாகரிகம் காலம். நாகரிகம் 2350 முதல் 1750 வரை செழிப்படைந்தது

2. 1200 – 1000 ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலம்

3. 1000-50 காப்பியக் காலம் (623 – 543 புத்தரின் காலம்)

4. 540-468 மகா வீரரின் காலம்

5. 377 வைசாலியில் புத்த மாநாடு

6. 326 இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுப்பு

7. 324 மௌரிய வம்சம் சந்திரகுப்தரால் துவக்கம்

8. 273-232 அசோகர் ஆட்சி. சீனா மற்றும் கிழக்கு நாடுகளில் புத்த மதம் பரப்புதல்

9. 190 இந்தியாவின் வட மேற்கில் கிரேக்க நாடுகள்.

10. 187 மௌரியர்களின் ஆட்சி முடிவுற்றது.

11. 187-75 சங்கர்களின் ஆட்சி.

12. 58 விக்கிரம சகாப்தம் துவக்கம்

 

A. D. (Death of Jesus Christ)

13. 64-225 வடமேற்கு இந்தியாவில் குஷானர்களின் ஆட்சி, சேர, சோழ பாண்டியர்களின் ஆட்சி.

14. 320-475 குப்தர்கள் ஆட்சி துவக்கம். அஜந்தா மற்றும் எல்லோரா சிற்பங்கள்

15. 335-376 சமுத்திர குப்தர் ஆட்சி

16. 376-414 இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சி

17. 405-11 பாகியான் சீனாவில் இருந்து இந்தியா வருகை

18.  454 முதல் ஹூணர்களின் படையெடுப்பு

19. 480-90 குப்தர்களின் வீழ்ச்சி

20. 606-647 ஹர்ஷ வர்த்தனர் ஆட்சி

21. 636 பாதமி சாளுக்கியர் ஆட்சி. இரண்டாம் புலிகேசி நர்மதை நதிக்கரை வரை சென்று ஹர்ஷரை தோற்கடித்தல்.

22. 630-644 சீன பயணி யுவான் சுவாங் வருகை.

23. 600-700 மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஜெருசலேத்தில் இஸ்லாம் மதம் துவக்கம் மற்றும் பரவுதல்.

24. 712 சிந்துப் பகுதி மீது முகமது காசிம் அரோப்பியர் படையெடுப்பு.

25. 730 Accession of Yasovarman of Kanyakubja

26. 735 மகத ஆட்சி முதல் பார்சி குடியேற்றம்.

27. 750-1202 மகத ஆட்சிவங்காளத்தில் பாலத்தியர்கள் மற்றும் சேனார்களின் ஆட்சி.

28. 820 மகத ஆட்சி சங்கராச்சாரியார் மரணம்.

29. 800-900 மகத ஆட்சி காஷ்மீரில் இந்து மற்றும் புத்த மத கோவில்கள் அழிப்பு.

30. 960-1200 பண்டல் கண்டில் சாண்டியல்களின் ஆட்சி.

31. 1000-1026 முகமது கஜினி படையெடுப்பு.

32. 1030 அல்பெரூனி வருகை. முகமது கஜினி மரணம்.

33. 1191 முகமது கோரி படையெடுப்பு.

34. 1192 டில்லியை ஆண்டு கடைசி இராசபுத்திர மன்னர் பிரித்திவி ராஜ் இரண்டாம் தெரயின்போரில் தோல்வி மற்றும் மரணம்

35. 1206-1290 வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சி. அடிமை வம்சம்.

36. 1221 முதன் முதலில் மங்கோலிய வம்சம் செங்கிஸ்கான் படையெடுப்பு.

37. 1228 அஸ்ஸாமை வெல்லதுல்.

38. 1230 தெற்குப் பகுதியில் விஜய நகரப் பேரரசு

39. 1290-1316 டில்லியில் கில்ஜிகள் ஆட்சி

40. 1320-1412 டில்லியில் சுல்தான்கள் ஆட்சி

41. 1347 தக்காணத்தில் பாமினி ஆட்சி துவக்கம்

42. 1398 தைமூர் படையெடுப்பு

43. 1436 – 1533 வங்காளத்தில் சைதன்ய பிரபு காலம்

44. 1451 – 1526 டில்லியில் லோடி சுல்தான்கள் ஆட்சி

45. 1469 – 1545 டில்லியில் சுல்தான்கள் ஆட்சி.

46. 1494 சிக்கந்தர் லோடியால் ஆக்ரா உருவாக்கம்.

47. 1498 வாஸ்கோடகாமா கடல் வழியாக கள்ளிக்கோட்டை அடைதல்.

48. 1510 போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பு மற்றும் கோவா கைப்பற்றுதல்.

49. 1526 முதலாம் பானிப்பட் போர். பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவுதல்

50. 1539-45 ஷெர்ஷா ஆட்சி

51. 1556 – 1605 அக்பர் ஆட்சி 1556ல் இரண்டாம் பானிப்பட்டுப்போர்.

52. 1601 அசிகார் கோட்டை அக்பரால் கைப்பற்றப்படுதல்.

53. 1597 இராணா பிரதாப் மரணம்.

54. 1600 கிழக்கு இந்திய நிறுவனம் இராயல் சார்ட்டர் மூலம் நிறுவப்படுதல்.

55. 1605 அக்பர் மரணம்.

56. 1612 சூரத்தில் முதல் ஆங்கில தொழிற்சாலை நிறுவப்படுதல்.

57. 1615 சர் தாமஸ் மன்றோ வருகை. மோவார் முகலாயர்களுக்கு கட்டுப்படுதல்.

58. 1616 சர் தாமஸ் மன்றோ  ஜஹாங்கீர் சந்திப்பு.

59. 1627 சிவாஜி பிறப்பு.

60. 1627 – 57 ஷாஜஹான் ஆட்சி.

61. 1644 வங்காளத்தில் வாணிகம் செய்ய ஆங்கிலேய அனுமதி பெறுதல்.

62. 1658-1707 அவுரங்கசீப் காலம்.

63. 1668 சூரத்தில் முதல் பிரெஞ்சு பண்டக சாலை அமைத்தல்.

64. 1675 Sikh resistance tp Moghuls intensifies அவுரங்கசீப்பால் சீக்கியர்களின் 9வது குரு குருதேஜ் பகதூர் கொலை செய்யப்படுதல்.

65. 1680 கல்கத்தாவில் கிழக்கு இந்திய கம்பெனி வணிக நிறுவனத்தை நிறுவுதல்.

66. 1686-87 பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா அரசுகள் வீழ்ச்சி

67. 1698 The E. I. Co. obtained Zamindari of three villages of Sutanati, Kalikata and Gobindpur – nucleus of Calcutta

68. 1707 அவுரங்கசீப் மரணம்

69. 1734 டில்லியை நாதர் ஷா அழித்தல்.

70. 1757 பிளாசிப் போர்.

71. 1760 வந்தவாசிப் போர்.

72. 1761 மூன்றாம் பானிபட் போர்.

73. 1764 பக்சர் போர்.

74. 1765 வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு திவானி அதிகாரத்தை ஷா ஆலம் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வழங்குதல்.

75. 1770 வங்காளத்தில் பஞ்சம்

76. 1772 வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமனம்.

77. 1773 ஒழுங்கு முறைச் சட்டம்.

78. 1775 நந்தகுமார் தூக்கிலிடப்படுதல்.

79. 1781 இந்தியாவின் முதல் பத்திரிக்கை பெங்கால் கெஜசட் வெளியிடப்படுதல்.

80. 1784ல் பிட் இந்தியா சட்டம்.

81. 1786-90ல் காரன் வாலிஸ் சீர்திருத்தம்

82. 1790 மூன்றாம் மைசூர் போர்

83. 1793 வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டம்

84. 1799 திப்புச் சுல்தான் மரணம்

85. 1806 வேலூர் புரட்சி

86. 1828 – 35 வில்லியம் பெண்டிங் பிரபு (கவர்னர் ஜெனரல்)

87. 1829 பிரம்ம சமாஜத்தை இராஜா ராம் மோகன் ராய் நிறுவுதல். உடன் கட்டை ஏறும் சதி பழக்கத்தை ஒழித்தல்

88. 1835 பயிற்று மொழியாக ஆங்கிலம்.

89. 1839 ரஞ்சித் சிங் மரணம்.

90. 1839-42 ஆங்கிலோஆப்கான் போர்.

91. 1853 பம்பாய் - தாணா வரை முதல் இரயில்வே போக்குவரத்து மற்றும் கல்கத்தாஆக்ரா இடையே முதல் தந்தி.

92. 1854 முதல் அஞ்சல் தலை வெளியிடுதல்.

93. 1856ல் அயோத்தியை இணைத்தல். இந்து விதவை மறுமணச் சட்டம்.

94. 1857 முதல் சுதந்திரப் போர். கல்கத்தா, மும்பை, மற்றும் சென்னையில் பல்கலைக் கழகம்.

95. 1858 கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியா பிரிட்டிஷ் அரசிற்கு மாற்றப்படுதல்.

96. 1861 இரவீந்திரநாத் தாகூர் பிறப்பு.

97. 1869 மாகத்மா காந்தி பிறப்பு (அக்டோபர் 2).

98. 1874ல் வங்காளத்தில் கடும் பஞ்சம்.

99. 1875ல் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் ஆரிய சமாஜம் துவக்கம்.

100. 1881 தொழிற்சாலைகள் சட்டம்.

101. 1882 ஹண்டர் கமிஷன்.

102. 1883ல் இல்பர்ட் மசோதா.

103. 1885ல் மும்பையில் இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம். வங்காள குத்தகைச் சட்டம், ஆங்கிலேய பர்மா போர்.

104. 1889 வேல்ஸ் இளவரசர் இரண்டாவது முறையாக இந்தியா வருகை. ஜவஹர்லால் நேரு பிறப்பு.

105. 1891 தொழிற்சாலைகள் சட்டம். மணிப்பூர் கலகம். திருமண வயது நிர்ணயம்.

106. 1892ல் சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ளுதல் இந்திய கவுன்சில் சட்டம்

107. 1897ல் சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பு. மும்பையில் பிளேக் நோய் பஞ்சக் கமிஷன் நியமனம்.

108. 1900 பஞ்சக் கமிஷன் நியமனம்.

109. 1903 டில்லி தர்பார்.

110. 1905 வங்கப் பிரிவினை. எதிர்ப்பு இயக்கம் தோன்றுதல்.

111. 1906 அனைத்திந்திய முஸ்லீம் லீக் உருவாக்கம்.

112. 1907 காங்கிரஸ் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பிரிதல்.

113. 1908 இந்திய பத்திரிக்கைகள் சட்டம்.

114. 1909 மின்டோ மார்லி சீர்திருத்தம். இதன் அடிப்படையில் S.B சின்கா கவர்னர் ஜெனரல் கவுன்சில் நியமனம்

115. 1911 இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றம். வங்கப் பிரிவினை கைவிடப்படுதல். இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகனமன பாடல் கல்கத்தா மாநாட்டில் பாடப்பட்டது.

116. தில்லி தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் சக்கரவர்த்தியாக முடி சூடல், முதல் ஏர் மெயில் சர்வீஸ் துவக்கம். மக்கள் தொகை கணக்கெடுப்பு.

117. 1913 இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு. 3.5.1913ல் இந்தியாவின் முதல் திரைப்படமான இராஜா ஹரிச்சந்திரா மும்பையில் காரனேஷன் சினிமா திரையரங்கில் கோவிந்த பல்கே (தாதா சாகிப் பல்கே) என்பவரால் திரையிடப்பட்டது.

118. 1913 கல்விக்கான தீர்மானங்கள்.

119. 1914 காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து  டிசம்பர் மாதம் புறப்பட்டு 1915ல் இந்தியா வருகை. முதல் உலகப்போர் துவக்கம்

120. 1915 இந்திய பாதுகாப்புச் சட்டம்.

121. 1916 சட்லர் கமிஷன். இந்திய தேசிய காங்கிரஸ் முஸ்லீம் லீக் லக்னோ உடன்படிக்கை. தல சுய ஆட்சி இயக்கங்கள் தோன்றுதல். காசி இந்து பல்கலைக் கழகம் தொடக்கம்

122. 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தரசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். மூன்றாவது ஆப்கான் போர். முதல் உலகப் போர் முடிவுறுதல். சீக்கியர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளுதல்.

123. 1920-22 காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்.

124. 1921 சுதேச அரசர்களின் சங்கம்,  மாப்பிள்ளைமார்களின் கலகம், வேல்ஸ் இளவரசர் இந்தியா வருகை

125. 1922 ஒத்துழையாமை இயக்கம். கிலாபத் இயக்கம்

126. 1922 பிப்ரவரி சௌரி சௌரா கலவரம்.

127. 1923 சுயராஜ்ய கட்சி துவக்கம். வங்காளத் தேர்தலில் சி. ஆர். தாஸ் வெற்றி.

128. 1924 லாகூர் முஸ்லீம் லீக் மாநாடு

129. 1924 கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கம்

130. 1927-1929ல் காந்தியடிகள் சத்திய சோதனை என்ற தன்னுடைய சுய சரிதையை குஜராத்தில் எழுதுதல். அதனை சர் முகமது இக்பால் உருது மற்றும் பெர்சிய மொழி பெயர்த்தல்.

131. 1930 சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் உப்பு சத்தியாகிரகம்.

132. 1931ல் முதலாம் வட்ட மேசை மாநாடு மற்றும் காந்தி இர்வின் ஒப்பந்தம்.

133. 1932 இந்திய விமானப் படை துவக்கம். ஜே. ஆர். டி. டாடா விமானம் மூலம் கராச்சியில் இருந்து மும்பைக்கு வருகை. இரண்டாவது சட்ட மறுப்பு இயக்கம்.

134. 1935 இந்திய அரசு சட்டம்

135. 1937ல் ஏப்ரல் 1 முதல் பர்மா இந்தியாவில் இருந்து பிரிதல்.

136. 1939 இரண்டாம் உலகப்போர் துவக்கம். 9 மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சர்கள் விலகல்.

137. 1941ல் சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவில் இருந்து தப்பி இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தல்.

138. 1941ல் ஜப்பான் போரில் Pearl Harbour தாக்குதல்.

139. 1942 சிங்கப்பூர் வீழ்ச்சி, கிரிப்ஸ் தூதுக் குழு மும்பையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்க ஒப்புதல்.

140. 1943 வங்காளத்தில் பஞ்சம்.

141. 18.2.1946ல் இந்திய கடற்படை கலகம், 19.2.1946ல் கேபினட் மிஷன் நியமனம். 16.5.1946ல் கேபினட் மிஷன் அறிவிப்பு. ஜவஹர்லால் நேரு தலைமையில் 2.9.1946ல் இடைக்கால அரசு.

142. 1947 – 8.6.1948ற்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என இங்கிலாந்து அறிவித்தல். 20.2.1947ல் மவுண்ட்பேட்டன் பிரபு நியமனம் செய்தல். இந்திய பிரிவினை திட்டத்தை 3.6.1947 அன்று மவுண்ட் பேட்டன் அறிவித்தல். உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்தல். இந்தியா மீது பாகிஸ்தான் காஷ்மீருக்காக போர் தொடுத்தல். இராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தல்

143. 1948 காந்தியடிகள் நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுதல். காஷ்மீர் மீது ஐக்கிய நாட்டு சபை தீர்மானம்.

144. 1950 இந்தியா குடியரசு நாடாக அறிவித்தல். சர்தார் வல்லபபாய் படேல் மரணம். டாக்டர் இராசேந்திரபிரசாத் முதல் குடியரசுத் தலைவராக தேர்வு

 

காலக் கடிகாரம் - 1950க்குப்பின்

1. 1951 முதல் 5 ஆண்டுத் திட்டம் நடைமுறை படுத்துதல்.

2. 1952 முதல் பொதுத் தேர்தல்.

3. 1953 எவரெஸ்ட் சிகரத்தின் மீது டென்சிங் மற்றும் ஹில்லாரி ஏறி சாதனை படைத்தல்.

4. 1954 இந்தியாவில் பிரெஞ்சு குடியேற்றங்கள் இணைதல், பஞ்ச சீலக் கொள்கை

5. 1956 இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாகுதல்,  இரண்டாவது 5 ஆண்டுத் திட்டம்,  பாகிஸ்தானில் புதிய அரசியலமைப்பு உருவாகுதல்.

6. 1957 இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தல்.

7. 1958 இந்தியாவில் எடை போன்றவற்றில் மெட்ரிக் நடைமுறை அமுல்படுத்துதல்.

8. 1960ல் பம்பாய் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என மாற்றதுல்.

9. 1961ல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து கோவா கைபற்றப்படுதல் மற்றும் அதனை இந்தியாவுடன் இணைத்தல்.

10. 1961ல் அணிசேரா நாடுகள் உருவாக்குதல்.

11. 1962ல் இந்தியா சீனா போர். மூன்றாவது பொதுத் தேர்தல்

12. 1963ல் தம்பா தளத்தில் முதல் ராக்கெட் ஏவுதல்.

13. 1964 ஜவஹர்லால் நேரு மரணம். லால் பகதூர் சாஸ்திரி இரண்டாவது பிரதம அமைச்சராக நியமனம்.

14. 1965-66ல் இந்தியா பாகிஸ்தான் போர்.

15. 1966ல் இந்தியா பாகிஸ்தான் தாஷ்கண்ட் ஒப்பந்தம்.

16. 1966ல் இந்திராகாந்தி பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுதல். பஞ்சாப் பஞ்சாபி பேசும் மாநிலமாக பஞ்சாப்பும்,  இந்தி பேசும் மாநிலமாக அரியானாவும் பிரிக்கப்படுதல்

17. 1967 இந்தியாவில் நான்காவது பொதுத் தேர்தல்.

18. 1968 காங்கிரஸ் இரண்டாவதாக உடைதல்.

19. 1969 காங்கிரஸ் கட்சி இரண்டாவதாக பிரிதல். வி.வி.கிரி இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்தல்.

20. 1970 மேகாலயா மாநிலம் உருவாகுதல்.

21. 1971 இமாச்சல பிரதேசம் உருவாகுதல். ஆமெரிக்கா ஜனாதிபதி நிக்சனுடன் இந்திரா காந்தி சந்திப்பு. இந்தியா சோவியத் இராஷ்யாவுடன் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் போர், வங்க தேசம் என்ற நாடு உருவாகுதல்

22. 1972 சிம்லா ஒப்பந்தம். வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களை சீரமைத்து திரிபுரா மற்றும் மணிப்பூர் உருவாகுதல். 5வது பொதுத் தேர்தல்

23. 1973 இந்தியா பாகிஸ்தான் டில்லி ஒப்பந்தம்.

24. 1974ல் பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை.

25. 1975ல் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக ஹாக்கி போட்டியில் வெற்றி. முதல் இந்தியாவின் விண்வெளிக் கலம் ஆரியபட்டா ஏவப்படுதல். சிக்கிம் இந்தியாவின் பகுதியாக அறிவித்தல். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம். ஜீன் 26, அவசர நிலை பிரகடனம் செய்தல்

26. 1976 திருமண வயது ஆண்களுக்கு 21 என்றும்,  பெண்களுக்கு 18 என்றும் நிர்ணயம் செய்தல்.

27. 1977-78 தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி, மெரார்ஜி தேசாய் ஆட்சி இழத்தல், சரண்சிங் பிரதம அமைச்சர் சூலை 28ல் பதவி ஏற்று ஆகஸ்ட் 28ல் ஆட்சி இழத்தல்.

28. 1980ல் ஏழாவது பொதுத் தேர்தல். இந்திரா காந்தி வெற்றி.

29. 1980 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஹாக்கி விளையாட்டில் தங்கம் வென்றது.

30. 1981 ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ரோகிணி ஏவப்படுதல். முதல் தொலைத் தொடர்பு விண்வெளிக் கலம் ஆப்பிள் ஏவப்படுதல்.

31. 1983 மூன்றாவது உலக கிரிக்கெட் கோப்பையை கபில் தேவ் தலைமையில் வெல்லுதல்.

32. 1982-84ல் சீக்கியர்கள் பிந்தரன் வாலோ தலைமையில் காலிஸ்தான் என தனி நாடு கோருதல். பொற்கோவிலில் இராணுவம் நுழைதல்.

33. 31.10.1984 இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுதல்.

34. 3.12.1984ல் போபால் யூனியன் கார்பைடு விஷ வாயு சம்பவம்.

35. 1985 The Narcotic Drugs and Psychotropic Substances Act.

36.   1985 சிறப்பு பாதுகாப்பு படை (Speical Protection Group) உருவாக்கப்பட்டது

37. 1985 இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம்.

38. 1985 தடா சட்டம் (Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA)

39. The National Consumer Disputes Redressal Commission is set up under the Consumer Protection Act of 1986

40. 1989ல் 9வது பொதுத் தேர்தல். இராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் தோல்வியடைதல். வி. பி. சிங் பிரதம அமைச்சர்

41. 1990ல் மண்டல் கமிஷன் அறிக்கை.

42. 1991 வி. பி. சிங் ஆட்சி நம்பிக்கை பெறுபான்மை இழத்தல். சந்திரசேகர் பிரதமராக பதவி ஏற்று சிறிது காலத்தில் நம்பிக்கை பெறும்பான்மை இழத்தல். ராஜீவ் காந்தி கொல்லப்படுதல். நரசிம்ம ராவ் பிரதம அமைச்சராக பதவி ஏற்றல்.

43. 1992-94ல் மன்மோகன் சிங் தலைமையில் நரசிம்மராவ் புதிய பொருளாதார கொள்கை பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளுதல். பாபர் மசூதி இடித்தல்.

44. 2000 மே மாதம் இந்தியாவின் மக்கள் தொகை 1 பில்லியன் அடைதல்.