Type Here to Get Search Results !

விலங்கியல் - 5 | 253 Questions

விலங்கியல் - 5

 நோய்களும் நோய் தடுப்பியலும்

புற்றுநோய் உயிரியல் (ஆங்காலஜி)

1. இயல்பான நிலையிலிருந்து மாறி மிக வேகமாக பகுப்படையும் செல்கள் புதிய அச்சு செல்கள் அல்லது கட்டி (டியூமர்) எனப்படும்.

2. நோய்க்கட்டி தன் தோற்றுவாயிலிருந்து இரத்தம், நிணநீர், மூலம் உடலின் பல இடங்களுக்கு பரவும் நிகழ்ச்சிமெட்டாஸ்டாசிஸ் எனப்படும்.

3. புற்றுநோய்க்கு காரணமான எல்லாவித இயற்பியல், வேதியியல் காரணிகள் கார்சினோஜன் எனப்படுகின்றன.

4. ஆன்டிபாடிகளாக உருவாகக்கூடிய செல்களில் ஏற்படும் புற்றுநோயின் பெயர் - மைலோமா

கார்சினோமா:

5. எபிதீலிய திசுக்களில் கட்டிகள் தோன்றுவதால் ஏற்படுகிறது

6. .கா: மார்பக  நுரையீரல் புற்றுநோய்

சார்கோமா:

7. இணைப்புத் திசுக்களில் தோன்றுவது

8. .கா. எலும்பு புற்றுநோய், தசைக்கட்டிகள்

லிம்போமா:

9. நிணநீர் திசுக்களிலும், அடிப்போஸ் திசுக்களிலும் தோன்றும்

10. .கா லிம்போசைட்டுகள் அதிகரிப்பால் ஏற்படும் தோல் புற்றுநோய்

11. பைரோமா: நார்த்திசுக்களில் தோன்றும் புற்றுநோய்

12. லுக்கீமியா: இரத்தத்தில் வெள்ளையணுக்கள் எண்ணிக்கை அதிகரித்தல். இது கதிரியக்கம் மூலமாகவும் பரவுகிறது

13. ஆஸ்டியோமா: எலும்பு புற்றுநோய்

14. ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது விழித்திரையில் ஏற்படும் மரவு வழி புற்றுநோய்

15. பிளாஸ்டிக் மூலம் கல்லீரலும், ஆஸ்பெஸ்டாஸ் மூலம் நுரையீரலும் பாதிக்கப்படுகிறது.

16. பென்சீன் மூலம் ரத்தப்புற்று நோய் ஏற்படும்

எய்ட்ஸ்:

17. HIV முதலில் தனிமைப்படுத்தியவர் - லுக் மர்ண்டக்னா மற்றும் இராபர்ட் கேலோ

18. எய்ட்ஸ் கண்டறியப்பட்ட ஆண்டு 1983

19. AIDS – Acquired Immunio Deficiency Syndrome. (பெறப்பட்ட நோய் எதிர்ப்புக் குறை நோய்)

20. தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (NARI) பூனா

21. HIV  மனிதனின் வெள்ளையணுக்களின் உள்ள T4 செல்கள் - ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

22. எலீசா பரிசோதனை HIV  எதிர்பபொருளை கண்டறிய உதவுகிறது.

23. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் மருந்துஅஸிட்டோதைமிடின் (AZT)

24. HIV - உறுதிப்படுத்தும் சோதனைவெஸ்டர்ன் பிளாட்

25. தமிழ்நாடு எய்டஸ் கட்டுப்பாடு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1980

மலேரியா:

26. இந்த நோய் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. பெண் அனாபிலஸ் கொசு நோய்பரப்பு காரணியாக செயல்படுகிறது

27. மனிதனில் ஏற்படும் இனச்சுழற்சிபாலிலா நிலை

28. கொசுவில் ஏற்படும் இனச்சுழற்சிபால்நிலை

29. ஸ்போரோசாய்டு நிலையில் மனிதனுள் கல்லீரலுக்கு செல்கிறது. இவை, வளர்ந்து இரத்தத்தினுள் நுழையும் போது கிரிப்டோமீரோசாய்டு என்றும், RBC ல்நுழையும் போது ட்ரோபோசாய்டு என்றும் அழைக்கப்படுகிறது.

30. ரத்த சிவப்பணுவில் இவை ஹீமோசாயின் எனும் நச்சுப்பொருளை உண்டாக்குகிறது.

31. மனித வாழ்க்கையில் இக்கிருமிகள் ஏற்படுத்தும் சுழற்சி முறைக்கு கோல்கை சுழற்சி எனப்பெயர்.

32. கொசுக்களில் இக்கிருமிகள் ஏற்படுத்தும் சுழற்சி முறைக்கு ராஸ் சுழற்சி

33. நீர்ததேக்கங்களில் கம்பூசியா மீன் வளர்ப்பதன் மூலம் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்

34. DEET – N, N டைமெத்தில் மெட்டாடொலுவமைட் என்ற மருந்து கொசு மற்றும் பூச்சிவிரட்டியாக பயன்படுகிறது.

35. தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் (NMEP) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1958

காசநோய்:

36. தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் (NTP) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1962

37. காசநோய்க்கான மருந்துகள் – BCG,  ஸ்ட்ரெப்டோமைசின், ரைபாம்சின், பைராஸினமைட்

பரவும் தன்மையற்ற நோய்கள்:

38. உடல் பருமன், நீரிழிவு நோய், பக்கவாதம், கரோனரி இதய நோய் (மாரடைப்பு), புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், ருமேட்டிக் இதய நோய், அனரெக்ஸியா நெர்வோஸா என்பது பசியின்மை நோய்

39. அதிக போதை தரும் பொருட்கள் அனைத்தும் - அல்கலாய்டுகள்

40. குறைவான போதை தரும் பொருட்கள் அனைத்தும் - டெர்பினாயிடுகள்

41. நோய்க்கிருமிகள் உடலினுள் நுழைந்து நோயின் அறிகுறிகள் தோன்றும் வரை உள்ள கால கட்டம் - இன்குபேஷன் காலம் அல்லது அடைவுகாலம் எனப்படும்.

இதர நோய்கள்:

42. பயோரியா என்பதுபற்சிதைவு நோய்

43. வாய்துர்நாற்றத்தின் பெயர் - ஹாலிடோஸிஸ்

44. உமிழ்நீர்ச் சுரப்பிகளை தாக்கும் வைரஸ் நோய் -- புட்டாளம்மை

45. விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் -- சூனோசஸ் எனப்படும்

46. ஆந்த்ராக்ஸ் நோய்ப்பரப்பும் காரணிபேசில்லஸ் ஆன்திராசிஸ் (பாக்டீரியா)

47. ஹைட்டாட்டிடோசிஸ் எனும் நோய் நாய்க்குடலில் வசிக்கும் நாடாப்புழுவின் மூலம் பரவுகிறது.

48. கல்லீரலைப் பாதிக்கும் நோய் - மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்), ஹெபாடைட்டிஸ்)

49. நிமோனியா தாக்கும் உடல் உறுப்புநுரையீரல்

50. உணவு நஞ்சாவதற்கு காரணமானவைமைக்கோடாக்சின் (பூஞ்சை), பொட்டுலிசம் (பாக்டீரியா)

51. எலியின் சிறுநீர் மூலம் பரவும் நோய் -- லெப்டோஸ் ஸ்பைரோஸிஸ். இதை உண்டாக்கும் பாக்டீரியா லெப்டோஸ்பைரா இன்டோகரன்ஸ்

52. சமூக நோய் அல்லது ஹேன்சனின் நோய் என்றழைக்கப்படுவதுதொழுநோய். இதை அழிக்க சிறந்த மருந்துரைபாம்சின்.

53. பால் குரோமோசோம் சார்ந்த ஜீன்கள் T. மார்கன் என்பவரால் பழப்பூச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

54. நிறக்குருடு என்னும் நோயை கண்டறிந்தவர் - வில்சன்

55. நிறக்குருடு நோயுள்ளவர்களால் சிவப்பு, பச்சை வேறுபாடு அறிய முடியாது.

56. ஹீமோபிலியா என்ற நோயை கண்டுபிடித்தவர் - ஜான் கோட்டோ

57. ரத்தக்குழாய் நோய் என்பதுகரோனரி இதயநோய்

58. ரத்தக்குழாயின் உட்புறம் கொழுப்பு ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் அடைப்பிற்கு காரணமாகி ரத்தம் ஓட்டம் தடைபடுவதற்கு ஆர்த்தோகிளிரோஸஸ் எனப்பெயர்.

59. இதயதசைக்கு தேவையான ரத்தம் செல்லாததால் ஏற்படும் இதயவலியின் பெயர் - ஆஞ்சினா

60. இதயவால்வு பழுதாவதால் ஏற்படும் முடக்கு நோய் ருமேட்டிக் இதய நோய். ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா ஏற்படுத்தும் தொண்டைப்புண் இதற்குக் காரணமாகிறது.

61. ஆஞ்சியோகிராம்: எக்ஸ்ரேயை பயன்படுத்தி ரத்தநாளங்களை பரிசோதித்தல்

62. ஆஞ்சியோப்ளாஸ்டி: ரத்த நாளத்திலுள்ள அடைப்பை நீக்க உதவுகிறது

63. டயாலிஸிஸ் என்பது செயற்கை முறையில் ரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றுதல்.

64. கொழுப்பு அடிப்போஸ் திசுவிலும், கிளைக்கோஜன் கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.

65. ஏடீஸ் கொசு, பிலேவி வைரஸ் மூலமாக மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களை ஏற்படுத்துகிறது.

66. இரு வெவ்வேறு சிற்றின விலங்குகளிடையே மேற்கொள்ளப்படும் மாற்று அறுவைசிகிச்சை ஜீனோகிராப்ட் எனப்படுகிறது.

67. ஒட்டு ஏற்க மறுத்தல் முக்கிய பங்கு வகிப்பவைசெல்களின் சுவர்களில் காணப்படும் ஆண்டிஜன்கள் (வெள்ளையணு ஆன்டிஜன் தொகுதிI, II, III)

68. இரட்டைப் பிறவிகளைத் தவிர எந்த இரு மனிதனுக்கும் ஒரே வகை ஆன்டிஜன் I வகுப்பை பெற்றிருக்க முடியாது.

69. இதுவரை கண்டறியப்பட்டுள்ள இரத்த ஆன்டிஜன் வகைகள் - 400

70. மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இரத்த ஆன்டிஜன்களுக்கு உதாரணம் - A, B, O மற்றும் ரீசஸ்-டி

71. ஆன்டிஜன் சோதனை செய்யப்படுவதன் காரணம் - நோயாளியின் சிவப்பணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதை தடுப்பதற்காக.

72. இரத்த ஈடுசெய்தல் 4 மணி நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டும்.

நிறுவனத்தின் பெயர் இருப்பிடம்

73. இந்திய மருந்து ஆராய்ச்சி அமைப்பு: டெல்லி

74. தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனம்: டெல்லி

75. இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம்: டெல்லி

76. தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்: டெல்லி

77. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்:  மும்பை

78. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்:  லக்னோ

79. தேசிய உணவூட்ட நிறுவனம்:  ஹைதராபாத்

80. போஸ் வவசாய ஆராய்ச்சி கழகம்:  கொல்கத்தா

நோய்கள் பரவும் வழிமுறைகள் காரணமானவை

81. நோய்கள்: காலரா

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: விப்ரியோ காலரா பாக்டீரியா

 

82. நோய்கள்: அமீபிக் சீதபேதி

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: எண்டமீபா ஹிஸ்டாலிக்கா என்றபாக்டீரியா

 

83. நோய்கள்: டைபாய்டு

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: சால்மோனெல்லா டைபி

 

84. நோய்கள்: போலியோமைலிடிஸ்

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: ஆர்.என்.. வகை போலியோ வைரஸ்

 

85. நோய்கள்: வயிற்றுப்போக்கு

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: ரோட்டா வைரஸ், .கோலி பாக்டீரியாடீனியம்சோலியம்(நாடாபுழு), டிரைகியரிஸ் டிரைகியரா (சாட்டைப்புழு)

 

86. நோய்கள்: மஞ்சள்காமாலை

பரவும் வழிமுறைகள்: நீர் மற்றும் உணவு

காரணமானவை: ஐந்து வகை வைரஸ்

 

87. நோய்கள்: தட்டம்மை(ரூபியோலா)

பரவும் வழிமுறைகள்: காற்று

காரணமானவை: பேராமிக்சோ இனத்தைச் சேர்ந்த ஆர்.என்.. உடைய மார்டிலி வைரஸ்

 

88. நோய்கள்: கக்குவான் இருமல்(பெர்டுசிஸ்)

பரவும் வழிமுறைகள்: காற்று மற்றும் நீர்த்துளி

காரணமானவை: போர்டிடெல்லா பெர்டுசிஸ் பாக்டீரியா

 

 

89. நோய்கள்: டீப்திரியா

பரவும் வழிமுறைகள்: நீர்த்துளி

காரணமானவை: காரினிபாக்டீரியம் டிப்தீரியே

 

90. நோய்கள்: சின்னம்மை

பரவும் வழிமுறைகள்: காற்று, நீர்த்துளி

காரணமானவை: வேரிசெல்லா ஜோஸ்டர்

 

 

91. நோய்கள்: இன்புளுயன்ஸா

பரவும் வழிமுறைகள்: காற்று, நீர்த்துளி

காரணமானவை: இன்புளுயன்ஸா வைரஸ்

 

92. நோய்கள்:  காசநோய் (டியூபர்குலோசிஸ்)

பரவும் வழிமுறைகள்: காற்று, நீர்த்துளி

காரணமானவை: மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்

 

93. நோய்கள்:  மலேரியா

பரவும் வழிமுறைகள்: பெண் அனாபிலஸ் கொசு மூலம்

காரணமானவை: பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி

 

94. நோய்கள்: பைலேரியா(யானைக்கால் நோய்)

பரவும் வழிமுறைகள்: கியூலக்ஸ் இன கொசு, பன்றி

காரணமானவை: உச்சரேரியா பான்கிராப்டி ஒட்டுண்ணி

 

95. நோய்கள்: ஜப்பானிய மூளைக் காய்ச்சல

பரவும் வழிமுறைகள்: கியூலக்ஸ் இன கொசு, பன்றி

காரணமானவை: டீ-ஆர்போ வைரஸ் அல்லது ஜப்பானிய என்செபலாட்டிஸ் வைரஸ்

 

96. நோய்கள்:  பிளேக்

பரவும் வழிமுறைகள்: பிளேக் எலி, சீனோப்சில்லா எனும் தள்ளுப்பூச்சி

காரணமானவை: எர்சீனியாபெஸ்டிஸ் பாக்டீரியா

 

97. நோய்கள்:  ரேபீஸ்

பரவும் வழிமுறைகள்: வேறி நாய்க்கடி

காரணமானவை: ரேப்டோ விரிடே குடும்ப வைரஸ்

 

98. நோய்கள்: டெட்டனஸ்(ரனஜன்னி)

பரவும் வழிமுறைகள்: மண் மூலம்

காரணமானவை: கிளாஸ்டிரிடியம் டெட்டனி பாக்டீரியா

 

99. நோய்கள்: சொறி சிரங்கு

பரவும் வழிமுறைகள்: நேரடித் தொடர்பு

காரணமானவை: மைட் எனும் கிருமி

 

100. நோய்கள்: தொழுநோய் (லெப்ரசி)

பரவும் வழிமுறைகள்: நேரடி, மண் மூலம்

காரணமானவை: மைக்கோபாக்டீரியம் லெப்ரே

 

101. நோய்கள்: எய்ட்ஸ்

பரவும் வழிமுறைகள்: நேரடி இரத்தம்

காரணமானவை: HIV  எனும் ரெட்ரோ வைரஸ்

 

தடுப்பூசிகள்:

102. தடுப்பு ஊசி என்பதுஆன்டிஜென் ஆகும். ஆன்டிஜென் என்பது இரத்தப் பிளாஸ்மாவில் குறிப்பிட்ட வகை எதிர்ப்பொருளின் (ஆன்டிபாடி) உற்பத்தியை தூண்டக்கூடிய ஒரு பொருளாகும்.

103. ஆன்டிபாடி என்பதுஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனின் தூண்டுதலால் இரத்தப் பிளாஸ்மாவால் தோற்றுவிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட புரதப்பொருளாகும்.

104. ஆன்டிஜெனுக்கு .கா. பாக்டீரியர். வைரஸ்

105. ஆன்டிபாடிகளுக்கு .கா. இரத்த வெள்ளயைணுக்கள்

106. நோய் தடுப்பாற்றலை அளிக்கும் இரத்த வெள்ளையணுக்களுக்கு .கா. B செல்கள் மற்றும் T செல்கள்

107. ஆண்டிஜன் என்பது பிளாஸ்மாவில் குறிப்பிட்ட வகை எதிர்ப்கொருளின் உற்பத்தியைத் தூண்டக்கூடியது.

108. ஆண்டிபாடி என்பது ஒரு குறிப்பிட்ட வகை ஆண்டிஜனின் தூண்டுதலால் இரத்த பிளாஸ்மாவில் தோற்றுவிக்கக்கூடிய குறிப்பிட்ட வகை புரதப் பொருள்.

109. பெறப்பட்ட நோய்த தடுப்பாற்றல் முறை, டெட்டனஸ், கக்குவான் இருமல் ஆகிய நோய்கள் மீண்டும் நமக்கு பரவாமல் தடுக்க உதவுகிறது.

110. சொரி சிரங்கு -- இட்ச் மைட் என்ற கிருமியால் பரவுகிறது

வயது தடுப்பூசி அளவு

111. பிறந்தவுடன்:  BCG

112. பிறந்த 15 நாட்களுக்குள்:  0 - போலியோ

113. 6 – வது வாரம்: DPT மற்றும் போலியோ (முதல் டோஸ்)

114. 10 – வது வாரம்: DPT மற்றும் போலியோ( இரண்டாவது டோஸ்)

115. 14 – வது வாரம்: DPT மற்றும் போலியோ (மூன்றாவது டோஸ்)

116. 9 – 12 வது மாதம்:  தட்டம்மை தடுப்பூசி (ஒரு டோஸ்)

117. 18-24 வயது:  DT kw;Wk; NghypNah (1 – வது ஊக்குவிப்பு)

118. 15- வது மாதம் (2 வயது):  தடுப்பூசி

119. 2 – 3 வயது:  டைபாய்டு ஊசி (இருமுறை ஒரு மாத இடைவெளியில்)

120. 4 – 6 வயது:  DT kw;Wk; NghypNah (2 – வது ஊக்குவிப்பு)

121. 10- வது வயது வுவு மற்றும் டைபாய்டு ---

122. 16 – வது வயது: TT kw;Wk; ilgha;L

123. NFCP என்பது தேசிய பைலேரியா (யானைக்கால் நோய்) கட்டுப்பாட்டு திட்டம்.

124. NMEP என்பது தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்.

125. NLEP தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம்.

126. உலகம் தழுவிய நோய் பாதுகாப்புத்திட்டமானது DTP  போலியோ, காசநோய், தட்டம்மை ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.

127. இயற்கையான தடுப்பாற்றல் தாயிலிருந்து சேய்க்கு தாய்-சேய் இணைப்புத்திசு (பிளசண்டா) மூலம் கிடைக்கறிது.

128. எல்லா ஆண்டிபாடிகளும்,  இம்யூனோகுளோபுலின்கள் ஆகும்

129. ஆனால் எல்லா இம்யூனோகுளோபுலின்களும், ஆண்டிபாடிகள் அல்ல

130. தாயிடமிருந்து சேய்க்கு நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்க பயன்படக்கூடிய திசுதாய்சேய் இணைப்புத்திசு.

131. OPV  என்பதுவாய்வழி போலியோ சொட்டுமருந்து ஆகும்.

132. மஞ்சள் காமாலைக்கான தடுப்பு மருந்துஹெப்பாடிடிஸ் B ஆகும்.

133. MMR என்பது தட்டம்மை, புட்டாளம்மை, ருபல்லா தட்டம்மைக்கான மருந்து ஆகும்.

134. DPT – (முத்தடுப்பு ஊசி) – டிப்தீரியா, கக்குவான் இருமல், இரணஜன்னி

135. DT (Dual Antigen) – (இரு தடுப்பூசி) – டிப்தீரியா, இரணஜன்னி

136. வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயிபாஸ்டியர்

137. சின்னம்மை தடுப்பூசி மருந்தைக் கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்

138. பசுவின் மடியிலிருந்து பெரியம்மை நோய்க்கான மருந்து எட்வர்டு ஜென்னரால் கண்டறியப்பட்டது.

139. போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டறிந்தவர் - எண்டர்ஸ், ராபின்ஸ் வெல்லர்.

140. ஒருமுறை பரவியபின் அடுத்தமுறை பரவாமல் இருக்கும் நோய் - சின்னம்மை

141. உயிருள்ள தடுப்பூசிகளுக்கு உதாரணம் - BCG, தட்டம்மை, போலியோ தடுப்பு மருந்து

142. கொல்லப்பட்ட தடுப்பூசிகளுக்கு உதாரணம் - காலரா தடுப்பூசிகள்

மரபு பொறியியல்

143. உடல் பண்புகளை கொண்டுள்ள குரோமோசோம்கள் -ஆட்டோசோம்கள் எனப்படும்.

144. இனப்பெருக்கப் பண்புகள் - அல்லோசோம்கள் அல்லது துணைக் குரோமோசோம்கள்.

145. பூச்சிகளின் ஆண் குரோமோசோம்  - XO

146. பறவைகளின் பெண் குரோமோசோம் – ZW

147. பறவைகளின் ஆண் குரோமோசோம் - ZZ

148. குரோமோசோம் நடுவிலுள்ள மணி போன்ற பொருளுக்கு சென்ட்ரோமியர் அல்லது கைனட்டோகோன் என்று பெயர்

149. ஹேலோசென்டிரிக் சென்ட்ரோமியருக்கு (.கா) அஸ்காரிஸ் மெகலோசெப்பலோ

150. பூதகுரோமோசோம்கள் இரு வகைப்படும். அவை 1. பாலிடீன் குரோமோசோம் 2. தூரிகை குரோமோசோம்

151. பாலிடீன் குரோமோசோம்களைக் கண்டறிந்தவர் - பால்பியானி

152. தூரிகை குரோமோசோம்களைக் கண்டறிந்தவர் - ராக்கெட்

153. பாலிடீன் குரோமோசோம் காணப்படுவதுடீப்டீரோ லார்வாக்களின் உமிழ்நீரில்.

154. தூரிகை குரோமோசோம் (லாம்ப்பிரஷ்) – விலங்குகளின் ஊசைட்டில் குன்றல்பிரிவில் டிப்ளோடீன் நிலையில் காணப்படுகிறது.

155. ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் இணையை அதன் பண்புகளைக் கொண்டு விளக்கிடும் முறைகேரியோடைப் எனப்படும்

குரோமோசோம்களின் எண்ணிக்கை:

156. உயிரியின் பெயர் (உயிரியல் பெயர்):  குரோமோசோம் எண்ணிக்கை

157. பழஈ (ட்ரோசோபில்லா):  9

158. வெங்காயம் (ஆலியம் சேபா):  16

159. மக்காசோளம் (சியா மைய்ஸ்): 20

160. ஆரிசி (ஓரைசா சட்டைவம்):  24

161. எலி (மஸ் மஸ்குலஸ்): 40

162. காபி (காபியா அரபிகா):  44

163. மனிதன் (ஹோமோ சேப்பியன்ஸ்): 46

164. உருளைக்கிழங்கு (செலோனம் ட்யூபரோசம்): 48

165. குரங்கு (கொரிலா கொரிலா):  48

166. கோழி (கேலஸ் மெடாமெஸ்டிகஸ்): 78

167. ஒரு குறிப்பிட்ட புரத சங்கிலியை குறிக்கும் டி.என். மூலக்கூறின் பகுதிஜீன் அல்லது சிஸ்ட்ரான் எனப்படும்.

168. ஜீன்களின் முழு தொகுதிக்கு ஜீனோம் என்று பெயர்

169. குறிப்பிட்ட சிற்றினத்தின் செல்களின் டி.என்.. அளவு C – மதிப்பு என அழைக்கப்படுகிறது

170. .கோலை பாக்டீரியாவின் ஹேப்பிளாய்டு ஜீனோமில் காணப்படும் காரமூல இணைப்புகளின் எண்ணிக்கை 3.4 X  106.

171. எலியின் ஹேப்பிளாய்டு ஜீனோமில் காணப்படும் காரமூல இணைப்புகளின் எண்ணிக்கை 2.7 X 109

172. மீண்டும் மீண்டும் காணப்படக்கூடிய ஜீன்களின் தொடர் வரிசைகள்சாட்டிலைட் டி.என்.ஏக்கள் எனப்படும்.

173. பொதுவாக யூக்கேரியாட்டுகளில் சாட்டிரைட் டி.என்.ஏக்கள் காணப்படுகின்றன.

நியூக்ளிக் அமிலங்கள்:

174. நியூக்ளிக் அமிலங்கள் இருவகைப்படும். 1. டீ.ஆக்ஸ் ரிபோ நியூக்ளிக் அமிலம் (டி.என்..), ரிபோ நியூக்ளிக் அமிலம் (ஆர்.என்.)

175. பொதுவாக டி.என்.ஏக்கள் மரபு பொருளாக செயல்படுகிறது.

176. ஆர்.என்.ஏக்கள் புரத உற்பத்தியில் பங்கு பெறுகிறது

டி.என்.

177. டி.என்.ஏவில் காணப்படும் பொருட்கள் -- சர்க்கரை, புரத கார மூல இணைகள், பாஸ்பாரிக் அமிலங்கள்

178. டி.என்.ஏவில் காணப்படும் சர்க்கரை டி ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை ஆகும். இது ஒரு பென்டோஸ் சர்க்கரை ஆகும்.

179. ஒரு புரத கார மூலமும், ஒரு பென்டோசர்க்கரையும், சேர்ந்து உண்டாக்கும் அமைப்பு = நியூக்ளியோசைடு ஆகும்

180. பாஸ்பேட்டு தொகுதி, நியூக்ளியோசைடுடன் சேர்ந்து உண்டாக்கும் அமைப்பு - நியூக்ளியோடைடு ஆகும்

181. டி.என். என்பது பல நியூக்ளியோடைடுகள் அடங்கிள நீண்ட அமைப்பு ஆகும்.

182. . கோலை பாக்டீரியாவில் காணப்படும் டி.என்.ஏவின் வடிவம் - வட்டம்

183. மனிதனில் காணப்படும் டி.என்.ஏக்களின் நீளம் - 2 மீட்டர்

184. மனிதனில் காணப்படும் டி.என்.ஏவின் வடிவம் - இரட்டைச்சுருள்

185. டி.என்.ஏவின் இரட்டைச்சுருள் மாதிரியை உருவாக்கியவர்கள் - வாட்சன் மற்றும் கிரிக்

186. வாட்சன் மற்றும் கிரிக் டி.என். மாதிரியில் அடினைன் மற்றும் தையமின் ஆகியவற்றிற்கு இடையில் காணப்படும் இணைப்பு - மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகள் கொண்டது.

187. அனைத்து உயிரிகளிலும் அடினைனும், தையமினும், சமமாக உள்ளது என்றும், குவானைனும், சைட்டோசைனும் சமமாக உள்ளது என விளக்கியவர் -- சார்க்ஆப். இவ்விதியின் பெயர் -- சார்காப் விதி எனப்படும்

188. சார்காப் விதியின்படி பியூரின் மூலக்கூறும், பிரிமிடின் மூலக்கூறும் சமமாக இருக்கும்.

189. டி.என். மூலக்கூறு சுருளின் விட்டம் 20A0

190. பாக்டீரியா மற்றும் புரோகேரியாட்டுகளில் காணப்படும் டி.என். அமைப்புபி வடிவ டி.என். இவை வாட்சன் மற்றும் கிரிக் டி.என். என்றும் அழைக்கப்படுகிறது.

191. வாட்சன் மற்றும் கிரிக் டி.என். மாதிரியில் காணப்படும் பாதி தாராள தன்மையை விளக்கியவர்கள் - லாசல்சன் மற்றும் ஸ்டால்

192. பாதி தாராள தன்மை என்பதுபெற்றோர் டி.என்.ஏவில் உள்ள ஒரே ஒரு இழை

193. டி.என்.ஏவானது புதிதாக உண்டாக்கப்படும் டி.என்.ஏவில் தங்கிவிடும் நிலையாகும்.

ஆர்.என்.

194. ஆர்.என்.ஓரிழை அமைப்பு கொண்டது

195. ஆர்.என்.ஏவில் தயமினுக்கு பதிலாக யூரசில் காணப்படுகிறது. இதர அடினைன், குவானைன், சைட்டோசைன் ஆகியவை டி.என். போல் காணப்படுகின்றன.

196. ஆர்.என். என்பதுபாலி நியூக்ளியோடைடு சங்கிலியால் ஆன கிளையற்ற பெரிய மூலக்கூறு ஆகும்.

197. ஆர்.என். அமைப்பிற்கு சார்காப் விதி பொருந்தாது.

198. ஆர்.என். மூன்று வகைப்படும். அவை 1. தூது ஆர்.என். (mRNA) 2. மாற்றும் ஆர்.என். (tRNA) 3. ரைபோசோம் ஆர்.என். (rRNA)

தூது ஆர்.என்.

199. மொத்த ஆர்.என். அளவில் 5% மட்டுமே தூது ஆர்.என். காணப்படுகிறது

200. இவை மரபுத் தகவல்களை சுமந்து செல்கின்றன

201. இவை குரோமோசோம் டி.என். அமைப்பை ஒத்துள்ளது

202. இவை நியூக்ளியஸில் உருவாக்கப்பட்டு, சைட்டோபிளாசத்திற்கு அனுப்பப்படுகிறது.

203. பாக்டீரியாவில் காணப்படும் தூது ஆர்.என்.ஏக்கள் பல புரதங்களை குறியீடு செய்வதால் பாலிசிஸ்ட்ரானிக் தூது ஆர்.என்.ஏக்கள் என்றும், யூகேரியாட்டுகளில் காணப்படும் தூது ஆர்.என்.ஏக்கள் ஒரு புரதத்தை மட்டும் குறியீடு செய்வதால் மோனோசிஸ்ட்ரானிக் தூது ஆர்.என்.ஏக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன

மாற்றும் ஆர்.என்.

204. மொத்த ஆர்.என். அளவில் 15% மட்டுமே மாற்றும் ஆர்.என். காணப்படுகிறது.

205. இதன் வடிவம் -- கிளாவ் இலை (இலவங்க இலை)

206. இவை அமினோ அமிலங்களுடன் இணைந்து அவற்றை புரத உற்பத்தி நடைபெறும் இடத்திற்கு அனுப்ப உதவுகின்றன

ரைபோசோம் ஆர்.என்.

207. மொத்த ஆர்.என். அளவில் 80%  ரைபோசோமத் ஆர்.என். காணப்படுகிறது.

208. இவை பெரும்பாலும் ரைபோசோமில் காணப்படுகின்றன.

209. புரோகேரியாட்டிக் ரைபோசோம்களில் காணப்படும் ஆர்.என். மூலக்கூறுகள் 3 வகைப்படும். அவை 16S, 23S, 5S (Sஸ்வெட்பெர்க் அலகு)

மரபு குறியீடு

210. டி.என். மூலமாக நடத்தப்படும் மரபு செய்தியின் அலகுகோடான்கள் எனப்படும்

211. மரபுச் செய்திகளை கடத்தும் கோடான்களின் எண்ணிக்கை 64

212. நமது உடலில் காணப்படும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை 20

213. நமது உடலிலுள்ள 20 அமினோ அமிலங்களை குறியீடு செய்ய இயலக்கூடிய கோடான்களின் எண்ணிக்கை 61 நீளமுள்ள மூன்று கோடான்கள் சுட்டுக்குறி கோடான்கள் எனப்படும். அவைUAA, UAG, UGA

214. மரபுச் செய்தியானது டி.என்.ஏவிலிருந்து ஆர்.என்.ஏவிற்கும், ஆர்.என்.ஏவிலிருந்து புரதத்திற்கும் கடத்தப்படும்.

215. புரத உற்பத்தி மூன்று நிலைகளில் நடைபெறும். அவை 1. படியெடுத்தல் 2.மீள்படியெடுத்தல் 3. மொழிபெயர்தலுக்கு பின் வரும் மாற்றங்கள்.

216. புரோகேரியாட்டுகளில் படியெடுத்தல் நிலையில் ஜீன்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதை விளக்கியவர் - ஜேக்கப் மற்றும் மோனாடு

திடீர் மாற்றம்

217. திடீர் மாற்றம் என்பது ஒரு உயிரினத்தின் ஜீன் அமைப்பில் அல்லது குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் பரம்பரையாக தொடரக்கூடிய திடீர் மாற்றங்களாகும்.

218. குரோமோசோம்களில் ஏற்படும் திடீர்மாற்றத்தால் உயிரினங்களின் புறத்தோற்றத்தில் பாதிப்பு ஏற்படும்.

219. ஜீன் திடீர்மாற்றம் என்பதுபுள்ளி திடீர் மாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது.

220. திடீர் மாற்றக் கொள்கையை உருவாக்கியவர் -- ஹியூகோட்வரிஸ்

221. திடீர்மாற்றக் கொள்கையை உருவாக்குவதற்கு இவர் பயன்படுத்திய தாவரம் - ஈனோத்தீரா லெமாக்கியானா

222. ட்ரோசோபைலா என்ற பழ ஈயில் ஏற்படும் திடீர்மாற்றத்தை விளக்கியவர் - மார்கன்

223. இயற்பிய திடீர்மாற்றத்தை தோற்றுவிக்கும் கதிர்கள்புறஊதாக்கதிர்கள், X  கதிர்கள், ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள்.

224. வேதி திடீர்மாற்றத்தை கண்டறிந்தவர் - ஆயர்பாக் அம்மையார்

225. வேதி திடீர்மாற்றத்தை தூண்டும் காரணிகள் -- ஈத்தைல் மீத்தேன் சல்போனைமைடு, கெஃபெயின், ஃபீனால்கடுகு வாயு

226. மனிதர்களில் மச்சம் ஏற்படக் காரணம் - உடல் திடீர்மாற்றம்

227. இனச்செல் திடீர்மாற்றத்தை .கா. ஹீமோகுளோபியா என்ற குருதிப் பெருக்க நோய்

228. குரோமோசோமிலுள்ள ஜீனானது இயல்புக்கு புறம்பாக அடியோடு மாற்றமடையும் நிகழ்விற்குகொல்லி திடீர் மாற்றம் எனப் பெயர். இதன் மூலம் உயிரினங்கள் இறந்து விடுகின்றன.

229. மனிதரில் ஐந்தாவது குரோமோசோம்களில் ஒரு பகுதி நீக்கப்படுவதால் ஏற்படும் நோய் - கிரை டியூ சாட்

230. குரோமோசோமின் ஒரு பகுதி இரண்டு அல்லது மூன்று மடங்காக பெருகும் நிலை காணப்படுவதற்கு .கா. ட்ரோசோபைலாவில் காணப்படும் நீண்ட கோட்டுக் கண்கள்.

231. குரோமோசோம்கள் பிறழ்ச்சிகள் மூலம் இடம் பெயர்தல் நிகழ்ச்சி ஈனோத்தீரா. லெமார்க்கியானாவில் உள்ள 12 குரோமோசோம்களில் நடைபெறுகிறது

232. திடீர்மாற்றங்களின் மூலம் நடைபெறும் முக்கிய விளைவுபுதிய சிற்றினங்கள் தோன்றுதல்.

233. திடீர் மாற்றங்களின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட புதிய கோதுமை ரகம் - சர்பதி சோனாரா

மரபுப் பொறியியல் தொழில்நுட்பங்கள்

234. மரபுப் பொறியியலில் ஓர் உயிரினத்தின் டி.என். மூலக்கூறானது தேவையான இடத்தில் துண்டிக்கப்பட்டு, அந்த டி.என். துண்டு வேறொரு தேர்ந்தெடுக்கப்பட்ட டி.என்.ஏவில் நுழைக்கப்படுகிறது.

235. மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தில் பயன்படக்கூடிய நொதிகளுக்கு .கா. எக்சோநியூக்ளியேஸ், எண்டோநியூக்ளியேஸ், ரெஸ்டிரிக்சசன் எண்டோநியூக்ளியேஸ், லைக்கேஸ், ஆல்கலைன் பாஸ்படேஸ், எதிர்மறை டிரான்ஸ்கிரிப்டேஸ், டி.என்.ஏ பாலிமெரேஸ்

236. மரபுப் பொறியில் தொழில்நுட்பத்தில் வெட்டப்பட்ட டி.என். துண்டுகளை இணைக்க பயன்படும் பொருளின் பெயர் - லைக்கேஸ்கள்

237. அயல் டி.என்.ஏவை பிளாஸ்மிட் டி.என்.ஏவுடன் இணைப்பதில் பயன்படும் பொருளின் பெயர் ஆல்கலைன் பாஸ்படேஸ்

238. பயணிக்கும் டி.என். () வாகன டி.என்.ஏக்களுக்கு .கா. பாக்டீரியாபேஜ்கள், பாக்டீரியா, பிளாஸ்மிட்டுகள், காஸ்மிட் மற்றும் பாஸ்மிட் ஆகியவை

239. பாஸ்மிட்டுகள் என்பது -  ஒரு பிளாஸ்மிட்டுடன் லாம்டாபேஜ் வைரஸின் டி.என்.ஏவை இணைத்து உருவாக்கப்படும் கடத்தியாகும்.

240. மரபுப் பொறியியல்களில் ஓம்புயிரியாக அதிகளவில் பயன்படுத்தப்படும் உயிரினங்களில் முதன்மையானது - இகோலை பாக்டீரியா (அடுத்ததாக பயன்படுத்தக்கூடிய நுண்ணுயிரி ஈஸ்ட் - சக்காரோமைசெஸ் செரிவிசியே என்ற பூஞ்சை)

241. ஒரு ஜீனை ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு மரபு பொறியியலின் மூலம் மாற்றப்படுமேயானால் அது டிரான்ஸ் ஜீன் எனவும், அவ்வுயிரினம் டிரான்ஸ் ஜீனிக் உயிரினம் எனவும் அழைக்கப்படுகிறது.

242. மனித இன்சுலின் என அழைக்கப்படுவது - ஹீயூமுலின் ஆகும்

243. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் மரபுப்பொருளின் ஒரு பகுதி – நிஃ:ப் ஜீன்கள் ((nif Genes)) ஆகும்.

244. தொழிற்சாலையில் புரதங்களை உற்பத்தி செய்ய பயன்படும் நுண்ணுயிரிபேசில்லஸ் சப்டிலிஸ்

245. நோயைக் கண்டறியும் ஆய்வுக்கும், புற்றுநோய்க்கும், புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுவதுமோனோகுளோனல் ஆன்டிபாடிகள்

246. தேசிய உயிரியல் தொழில்நுட்பவியல் துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1986

247. உயிர் உணர்விகளின் (Biosensors) பயன்கள் 1. இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவு அறிதல், நோய் உண்டாக்கும் காரணியை அறிதல், குடிநீரில் பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பதை அறிதல்

248. உயிர்ச்சில்லுகள் (Biochips) பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள துறைகள் - பாதுகாப்புத்துறை, மருத்துவத்துறை

திசு வளர்ப்பு:

249. திசு வளர் ஊடகத்தில் பயன்படுவது – அகார் அகார்

250. வேறுபாடு அடையாத திசு – காலஸ்

251. குளோன்கள் பெறப்படும் முறை – திசு வளர்ப்பு முறை

252. ஒரு தாய் தாவரத்திலிருந்து அல்லது ஒரு செல்லிலிருந்து கலவி இல்லா இனப்பெருக்கத்தின் மூலம் உண்டான தாவரங்களின் ஒரு தொகுப்பு அல்லது செல்கள் குளோன் அல்லது நகல் தாவரம் எனப்படும்.

253. குளோனிங் முறையில் நகல் பெருக்கம் செய்யும் கடத்திகளாக (வெக்டார்) பயன்படுவது

254. எஸ்ஸெரிசியா கோலையின் பிளாஸ்மிட்.