வேதியியல் – 1
தனிம வரிசை அட்டவணை
1. முதலில் தனிம அட்டவணையை கண்டறிந்தவர் - மெண்டலீப். இது தனிமங்களின் அணுநிறையை அடிப்படையாகக் கொண்டது.
2. நவீன ஆவர்த்தன அட்டவணை வரிசையை கண்டறிந்தவர் - மோஸ்லே. இது தனிமங்களின் அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டது.
3. தனிம வகைப்படுத்துதலில் மும்மை விதியை விளக்கியவர் - டொபரினியர்
4. தனிம வகைப்படுத்துதலில் எண்ம விதியை விளக்கியவர் - நியூலாண்ட்
5. மெண்டலீப் அட்டவணையில் பூஜ்யத் தொகுதி இடம் பெறவில்லை
6. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொகுதிகள் (செங்குத்தது பத்திகள்) எண்ணிக்கை – 18.
தொடர்கள் தனிமங்களின் எண்ணிக்கை
7. 1வது தொடர்: 2 (H2, He)
8. 2வது தொடர்: 8
9. 3வது தொடர்: 8
10. 4வது தொடர்: 18
11. 5வது தொடர்: 18
12. 6வது தொடர்: 32 (நீண்ட தொடர். இத்தொடர் லாந்தனைடு தனிமங்களை (La57 – Lu71) உள்ளடக்கியதாகும்
13. 7வது 19 முற்று பெறாத தொடராகும். ஆக்னைடு (Ac89 – Lr103) உள்ளடக்கியதாகும்.
தொகுதி தனிமங்கள்
14. I A: கார உலோகங்கள்
15. II A: கார மண் உலோகங்கள்
16. I A – VII A: பிரதிநிதித்துவ தனிமங்கள்
17. VII A: உப்பீனிகள் (அ) ஹாலஜன்கள்
18. I B – VII B & VIII: இடைநிலைத்தனிமங்கள்
19. “O‟ பூஜ்ஜியத் தொகுதி மந்த வாயுக்கள் (அ) அரிய வாயுக்கள்
20. தொகுதி I A & II A: S தொகுதி தனிமங்கள்
21. III A – VII A & ‘O’
(13-18): P – தொகுதி தனிமங்கள்
22. I B – VII B & VIII (3-10): d – தொகுதி தனிமங்கள்
23. yhe;jidL & Mf;bidL: f – தொகுதி தனிமங்கள்
24. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் (கிடைமட்டவரிசைகள்) எண்ணிக்கை – 7
25. நடுநிலை கரைசலில் [H+] = [OH-]
26. 0.1 M HCl ன் PH – மதிப்பு = 1
27. 0.1 M NaOH – ன் PH – மதிப்பு = 13
28. சமநிலையில் மீள் வினையில் முன்னோக்கு வினையின் வேகம் பின்னோக்கு வினையின் வேகத்திற்குச் சமம்.
29. வினைபடு பொருளின் சமநிலை மாறிலி – செறிவைச் சார்ந்தது அல்ல.
30. ஒரு வினையில் ஈடுபடும் வினைபடு பொருள்கள், வினை பொருட்கள் ஆகியவற்றின் மேல் விகிதத்தைப் பற்றி விளக்கம் - ஸ்டோக்கியோமேட்ரி எனப்படும்
31. எலக்ட்ரானை ஏற்கும் பொருள் - ஆக்ஸிஜனேற்றி எனப்படும்
32. எலக்ட்ரானை இழக்கும் பொருள் - ஆக்ஸிஜன் ஒடுக்கி எனப்படும்
33. SO4-2 ன் இணைதிறன் - 2
34. லேட் நைட்ரேட்டை சூடுபடுத்தும் போது கிடைக்கும் வாயுவின் நிறம் – செம்பழுப்பு.
35. குளோரின் குளோரைடாக ஒடுங்கும்போது குளோரின் ஏற்கும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை ஒன்று.
வேதிப்பிணைப்புகள்
36. ஹீலியத்தின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான் எண்ணிக்கை - 2.
37. பிற மந்த வாயுக்களின் (Cl2, F2, Br2, I2) வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை – 8.
38. வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்கள் இல்லாத தனிமங்கள் மந்த எலக்ட்ரான் அமைப்பை பெற முயலும் தன்மை – எண்ம விதி எனப்படும்.
39. ஓர் அணு எலக்ட்ரானை இழப்பின் அது நேர்மின் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்பின் அது அயனியாகவும் மாறுகிறது.
40. தனிம வரிசை அட்டவணையில் தொகுதி – I (கார உலோகங்கள்), தொகுதி – II (காரமண் உலோகங்கள்) – நேர்மின் தனிமங்கள் எனப்படும்
41. தனிம வரிசை அட்டவணையில் தொகுதி – 16 (சால்கோஜன்கள்) தொகுதி – 17 (ஹாலஜன்கள்) – எதிர்மின் தனிமங்கள் எனப்படும்.
42. வேதிப்பிணைப்புகள் மூன்று வகைப்படும்
a. அயனிப்பிணைப்பு (அ) முனைவு பிணைப்பு
b. சகப்பிணைப்பு
c. அணைவுப்பிணைப்பு (அ) ஈதல் சக பிணைப்பு
43. அயனிப்பிணைப்பு: (அ) முனைவு பிணைப்பு: நேர்மின் தனிமத்திற்கும், எதிர்மின் தனிமத்திற்கும் இடையே ஏற்படும் பிணைப்பு ஆகும். எ-டு: NaCl, CaCl2, MgCl2
44. சகப்பிணைப்பு: ஒரே தனிமம் (அ) பல்வேறு தனிமங்களுக்கிடையே எலக்ட்ரான்கள் சமமாக பங்கிடப்பட்டு மந்த வாயுக்கள் அமைப்பை பெறும் போது இப்பிணைப்பு உருவாகிறது. எ-டு: H2, Cl2, O2, N2, HCl, H2O, CH4,
NH3
45. அம்மோனியாவில் நைட்ரஜனின் இரு எலக்ட்ரான்கள் சகபிணைப்பின்போது பங்கேற்காது. அவை தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் எனப்படும்
அயனிச் சேர்மங்களின் பண்புகள்:
46. பெரும்பாலும் திண்மங்களாக உள்ளன
47. கரைக்கும்போது மின்பகுளிகளாக உள்ளன
48. உருகுநிலை அதிகம்
49. நீரில் கரையம்
50. முப்பரிமாண மாற்றியங்களை காட்டாது
கப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகள்:
51. பெரும்பாலும் திரவம் (அ) வாயுவாக உள்ளன
52. குறைந்த உருகுநிலை
53. மின் கடத்தும் தன்மையற்றது
54. கரிமச் சேர்மங்களில் கரையும்
55. மாற்றியங்கள் காட்டும்
ஈதல் சக பிணைப்பு:
56. பிணைப்பில் ஈடுபட்ட இணை எலக்ட்ரான்களும் ஒரு அணுவிலிருந்து மற்றோர் அணுவிற்கு இழுக்கப்படும் போது இப்பிணைப்பு உருவாகிறது. இப்பிணைப்பில் பங்கிடப்படும் இரண்டு எலக்ட்ரான்களுமே ஒரே அணுவால் வழங்கப்படுகிறது. எ-டு NH3, BF3
57. ஆர்கானின் எலக்ட்ரான் அமைப்பு – 2, 8
அமிலங்கள், காரங்கள், உப்புகள்
அமிலங்கள்
58. புளிப்பு சுவையுடையவை
59. நீரில் கரையும்போது ஹைட்ரஜன் அயனியை கொடுக்கும்
60. நீல லிட்ம்ஸ் தாளை சிவப்பு நிறமாக்கும்
61. பினால்ப்தலின் நிறங்காட்டியில் எவ்வித நிறமும் தருவதில்லை
62. மீத்தைல் ஆரஞ்சு நிறங்காட்டியுடன் இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்
காரங்கள்
63. கசப்பு சுவையுடையவை
64. நீரில் கரையும்போது ஹைட்ராக்ஸில் அயனியை கொடுக்கும்
65. சிவப்பு லிட்ம்ஸ் தாளை நீல நிறமாக்கும்
66. பினால்ப்தலின் நிறங்காட்டியில் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்
67. மீத்தைல் ஆரஞ்சு நிறங்காட்டியுடன் மஞ்சள் நிறத்தை கொடுக்கும்
68. கனிம அமிலங்களுக்கு எ-டு – ஹைட்ரோகுளோரிக் அமிலம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம்
69. கரிம அமிலங்களுக்கு எ-டு – சிட்ரிக் அமிலம், பார்மிக் அமிலம்
70. ஒரு கரைசல் அமிலத்தன்மையுடையதா (அ) காரத்தன்மையுடையதா என நிறமாற்றத்தின் மூலம் காட்டும் வேதிப்பொருள் நிறங்காட்டி எனப்படும்.
71. நிறங்காட்டிக்கு எ-டு – மீத்தைல் ஆரஞசு, பினால்ப்தலின்
72. தாவரங்களின் சாம்பலில் காணப்படுவது – சோடியம் கார்பனேட், பொட்டாசியம் கார்பனேட்.
73. ஆல்கலி எனப்படுவது – தாவரச் சாம்பல் ஆகும்
74. எல்லா ஆல்கலிகளும் காரங்கள், ஆனால் எல்லா காரங்களும் ஆல்கலி அல்ல.
75. சுட்ட சுண்ணாம்பு என்பது – கால்சியம் ஆக்ஸைடு ((CaO)ஆகும்
76. நீற்று சுண்ணாம்பு என்பது கால்சியம் ஹைட்ராக்ஸைடு [Ca (OH)2] ஆகும்
77. வீரியம் மிக்க அமிலம் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
78. வீரியம் மிக்க காரம் - சோடியம் ஹைட்ராக்ஸைடு
79. வீரியம் குறைந்த அமிலம் - அசிட்டிக் அமிலம்
80. வீரியம் குறைந்த காரம் - அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு
அமிலத்தின் பெயர் மூலத்தின் பெயர்
81. சிட்ரிக் அமிலம்: புளித்த பழங்கள் (எ-டு) ஆரஞ்சு, எலுமிச்சை
82. லாக்டிக் அமிலம்: புளித்த பால்
83. பார்மிக் அமிலம்: எறும்பின் கொடுக்கு, தேனியின் கொடுக்கு
84. பியூட்ரிக் அமிலம்: கெட்டுப்போன வெண்ணை
85. டார்டாரிக் அமிலம்: புளி, திராட்சை
86. அசிட்டிக் அமிலம்: வினிகர் (காடி)
87. மாலிக் அமிலம்: ஆப்பிள்
88. ஆக்ஸாலிக் அமிலம்: தக்காளி
89. ஸ்டியரிக் அமிலம்: கொழுப்புகள்
90. கோலிக் அமிலம்: பித்த நீர்
91. எளிய உப்புகள் - சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், பொட்டாசியம் குளோரைடு
92. அமில் உப்புகள் - சோடியம் பை சல்பேட், பொட்டாசியம் பை சல்பேட்
93. இரட்டை உப்புகள் - பொட்டாஷ் படிகாரம், மோர் உப்பு
94. கலப்பின உப்புகள் - சலவைத்தூள், சோடியம் ஜிங்க் சயனைடு
95. பொது வாய்ப்பாடு: அமிலம் + காரம் -à உப்பு+ நீர்
96. காப்பர் சல்பேட் (மயில் துத்தம்) உப்பின் நிறம் - நீலம்
97. பெரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம்பச்சை
98. பொட்டாசியம் டை குரோமைட் உப்பின் நிறம் - ஆரஞ்சு சிவப்பு
99. எப்சம் உப்பின் (MgSO4.7H2O) படிகமாக்கல் நீரின் மதிப்பு – 7
100. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட் --à நீரற்ற காப்பர் சல்பேட்
(CuSO4.5H2O) (நிறமுடையது) (CuSO4) (நிறமற்றது)
101. அமில உப்புகளில் குறைந்தது ஒரு ஹைட்ரஜன் அயனியாவது காணப்படும் (எ-டு) சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் (NaH2PO4) சோடியம் பை சல்பேட் (NaHSO4)
102. கார உப்புகள் குறைந்தது ஒரு ஹைட்ராக்ஸைடு அயனியாவது காணப்படும் (எ-டு) மெக்னீசியம் ஹைட்ராக்iஸி குளோரைடு [Mg(OH)Cl].
103. நிறமுன்றியாகவும், தோல்பதனிடவும், காகிதத்தின் தரம் உயர்த்தவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுவது – பொட்டாஷ் படிகாரம்
104. உணவை கெடாமல் பாதுகாப்பது – சோடியம் பென்சாயேட்
105. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது – சில்வர் நைட்ரேட்
106. போர்ட்டாக்ஸ் கலவையில் உள்ளவை – காப்பர் சல்பேட் + சுண்ணாம்பு நீர்
107. போர்ட்டாக்ஸ் கலவை – பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
108. NPK உரங்களின் உள்ள உப்புகள் - அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு
109. பூஞ்சைக் கொல்லிக்கு எ-டு காப்பர் சல்பேட், சல்பர்
110. மலச்சிக்கலை தீர்க்கும் உப்பு – எப்சம் உப்பு (MgSO4.7H2O).
111. •புகைப்படத் துறையில் பயன்படும் உப்புகள் - சில்வர் நைட்ரேட், சில்வர் புரோமைடு, சோடியம் தயோசல்பேட் (ஹைப்போ)
112. உரமாகவும், பட்டாசு தயாரிக்கவும் பயன்படுவது – பொட்டாசியம் நைட்ரேட் (நைட்டர்).
113. தீப்பெட்டி தொழிற்சாலையின் பயன்படுவது – பொட்டாசியம் குளோரைட்
உப்புகளின் பொதுப்பெயர் உப்புகளின் வேதிப்பெயர் வாய்ப்பாடு
114. சோடா சாம்பல்: நீரற்ற சோடியம் கார்பனேட் (Na2CO3)
115. சால் அம்மோனியாக்: அம்மோனியம் குளோரைடு (NH4Cl)
116. நைட்டர்: பொட்டாசியம் நைட்ரேட்
(KNO3)
117. சிலி சால்ட் பீட்டர்: சோடியம் நைட்ரேட் (NaNO3)
118. ஹைப்போ: சோடியம் தயோ சல்பேட் (Na2S2O3)
119. முகரும் உப்பு: அம்மோனியம் கார்பனேட் (NH4)2CO3
120. எப்சம்: நீரேற்றப்பட்ட மெக்னீசியம்
சல்பேட் (MgSO4.7H2O)
121. வெள்ளை விட்ரியால்: நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட் (ZnSO4.7H2O)
122. நீல விட்ரியால்: நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட் (CuSO4.5H2O)
123. பச்சை விட்ரியால்: நீரேற்றப்பட்ட பெரஸ் சல்பேட் FeSO4.7H2O
124. எரிசோடா: சோடியம் ஹைட்ராக்ஸைடு NaOH
பருப்பொருள்களின் தன்மைகள், கூழ்மங்கள்
125. திண்மங்களின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதன் காரணம் அவற்றிற்கு இடையேயுள்ள கவர்சி விசையே ஆகும்.
126. படிக திண்மங்களில் அணுக்கள் முப்பரிமாண கட்டமைப்புடன் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட உருகுநிலை கொண்டுள்ளன. எ-டு கண்ணாடி, கார்பன் தூள்.
127. தனிமங்களில் மிகவும் எளிமையானது – ஹைட்ரஜன்
128. தனிமங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது: ஹைட்ரஜன்
129. கனிம எரிபொருளுக்கு மாற்று என அழைக்கப்படுவது – ஹைட்ரஜன்
130. மனித உடலில் காணப்படும் தனிமங்கள்: ஆக்ஸிஜன் – 65%, கார்பன் – 18%, ஹைட்ரஜன் – 10%, நைட்ரஜன் – 2%, கால்சியம் – 2%
131. அணுக்கட்டு எண். – ஒன்று உள்ள தனிமங்களுக்கு எ-டு – சில்வர், பொட்டாசியம், கார்பன்.
132. அணுக்கட்டு எண். - இரண்டு உள்ள தனிமங்களுக்கு எ-டு – ஹைட்ரஜன், குளோரின்.
133. பல அணுக்கட்டு எண் உள்ள தனிமங்களுக்கு எ-டு – சல்பர், பாஸ்பரஸ்
134. ஒரு பிரிகை ஊடகத்தில் மிதந்து கொண்டிருக்கும் துகள்களைக் கொண்ட கலவை – தொங்கல் எனப்படும்.
135. தொங்கல் ஒரு பல படித்தான் கலவையாகும்
136. தொங்கலுக்கு எ-டு களிமண் கலந்த நீர்
137. மிகச் சிறிய துகள்கள் பெற்ற தொங்கல்கள் - கூழ்மங்கள் ஆகும்
138. தொங்கலில் உள்ள துகள்களின் அளவு – 1000 நானோமீட்டர் ஆகும்
139. கரைப்பாhன் விரும்பும் கூழ்மங்களுக்கு எ-டு நீரில் கோந்து
140. கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களுக்கு எ-டு நீரில் கந்தகத்தூள்