வேதியியல் – 3
உலோகங்கள் மற்றும் அலோகங்கள்
1. புவியில் தனிமமாக கிடைக்கும் உலோகங்களுக்கு எ.கா: தங்கம், பிளாட்டினம்.
2. அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் - பாதரசம்
3. அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள அலோகம் - புரோமின்
4. மென்மையாக எளிதில் கத்தியால் வெட்டக்கூடிய உலோகங்கள் - சோடியம், பொட்டாசியம்.
5. வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
6. அதிக அளவில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் - காப்பர், அலுமினியம்
7. நமது உடலில் இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் – அனீமியா.
8. நமது உடலில் இரும்புச் சத்து அதிகரிப்பால் ஏற்படும் நோய் – ஸிடோரிஸிஸ்.
9. உலோகப்போலிகளுக்கு எ.கா. பிஸ்மத், டொல்லூரியம், சிலிகான், ஜெர்மானியம், ஆர்சானிக், ஆண்டிமணி, பொலோனியம்
10. கடினமான தன்மையுள்ள அலோகம் - வைரம்
11. அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்ட அலோகம் - கிராபைட்
12. குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்ட உலோகம் - சோடியம்
13. பொதுவாக உலோக ஆக்சைடுகள் - கார ஆக்சைடுகளாகவும், அலுமினியம் மற்றும் ஜிங்க் ஆக்சைடுகள் - ஈரியல்பு ஆக்சைடுகளாக உள்ளன.
14. பொதுவாக அலோக ஆக்சைடுகள் - அமிலம் (அ) நடுநிலை ஆக்சைடுகளாக உள்ளன
15. சோடியம், பொட்டாசியம் ஆகியவை குளிர்ந்த நீர் மற்றும் காற்றில் வினைபுரிந்து தீப்பற்றிக் கொள்வதால் மண்ணெண்ணெயில் பாதுகாக்கப்படுகிறது.
16. பொதுவாக உலோகங்கள் நீர் (அ) அமிலத்துடன் வினைபுரிந்து H2 வாயுவை தரும்.
17. நீர்த்த அமிலங்களுடன் வினைபுரியாத உலோகங்கள் - Au, Cu, Ag
18. பொதுவாக உலோகங்கள் ஒடுக்கு காரணியாகவும், அலோகங்கள் ஆக்ஸிஜனேற்ற காரணியாகவும் செயல்படுகிறது.
19. வல்கனைசிங் செய்யப்படும் போது ரப்பருடன் சேர்க்கப்படும் பொருள் - சல்பர்
20. அத்தியாவசிய தாவர சத்துப்பொருள்களுக்கு எ.கா. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ்
21. பூஞ்சைக்கொல்லியாக பயன்படும் அலோகம் - சல்பர்
22. குறை கடத்திக்கு எ.கா. சிலிகான், ஜெர்மானியம்
23. டிரான்சிஸ்டரில் பயன்படும் குறை கடத்தி – சிலிகான்
24. தங்கத்தின் தூய்மையை கண்டறிய உதவும் அலகு – காரட்
25. 100 % தூய தங்கம் 24 காரட் கொண்டது
26. ஆபரண தங்கத்தில் 22 காரட் தங்கமும் 2 காரட் காப்பரும் உள்ளன.
27. 22 காரட் ஆபரண தங்கத்தில் தூய தங்கத்தின் அளவு 91.6%
28. துருப்பிடித்தல் ஒரு மெதுவான ஆக்ஸிஜனேற்ற வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.
29. துருவின் வேதிப்பெயர் - நீரேற்றமடைந்த பெரிக் ஆக்சைடு (Fe2O3 X H2O)
30. இரும்பு துருப்பிடிக்க அவசியமானது – ஆக்ஸிஜன மற்றும் நீர்.
31. துரு என்பது பெரிக் ஹைட்ராக்சைடு மற்றும் பெரிக் ஆக்சைடின் கலவையாகும்.
துருப்பிடித்தலை தடுக்கும் முறைகள்:
a. வண்ணப்பூச்சுகள் பயன்படுத்துதல்
b. நாகமுலாம் பூசுதல்
c. மின்முலாம் பூசல்
d. உலோகக் கலவையாக்கல்
32. சபையர் மற்றும் மரகதக்கல் என்பது – மாசுகலந்த அலுமினிய ஆக்சைடுகளாகும்.
33. சபையரில் கோபால்ட் மற்றும் டைட்டானியும் ஆகியவற்றின் சேர்மங்கள் மாசுகளாகவும், மரகதகல்லில் குரோமியச் சேர்மங்கள் மாசுகளாகவும் கருதப்படுகிறது.
34. பாக்ஸைட் -Al2O3.2H2O - அலுமினிய தாது
35. களிமண் - Al2O3.2SiO2.2H2O
36. ஹேமடைட் - Fe2O3 - இரும்புத்தாது
37. அர்ஜென்டைட் - Ag2S - வெள்ளித்தாது
38. சின்னபார் – HgS - மெர்குரி தாது
39. கலீனா - PbS- லெட் தாது
40. காலமைன் - ZnCO3 - துத்தநாக தாது
41. சுண்ணாம்புக்கல் - CaCO3- கால்சிய தாது
42. பாறை உப்பு – NaCl - சோடியம் குளோரைடு
43. ப்ளுரஸ்பார் - CaF2 - கால்சிய தாது
44. தாதுக்களில் கலந்துள்ள மாசுப்பொருள்களின் பெயர் - கேங்கு
45. ஆக்சைடு தாதுக்களை பிரித்தெடுக்கும் முறை – புவியீர்ப்பு முறை
46. சல்பைடு தாதுக்களை பிரித்தெடுக்கும் முறை – நுரை மிதப்பு முறை
47. டின்ஸ்டோனில் கலந்துள்ள மாசுப்பொருள் - உல்ராமைட்
48. உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்கிட பயன்படுத்தும் முறை – மின்னாற்பகுத்தல் முறை, உருக்கி பிரித்தல் முறை
49. ஜிங்க், பாதரசம் ஆகிய உலோகங்களை தூய்மைப்படுத்த பயன்படும் முறை – காய்ச்சி வடித்தல் முறை
50. வெள்ளீயத்தை தூய்மைப்படுத்த பயன்படும் முறை – நீர்மமாக்கல் முறை
51. காப்பர், அலுமினியம் ஆகிய உலோகங்களை தூய்மைப்படுத்த பயன்படும் முறை – மின்னாற் தூய்மை படுத்துதல் முறை
இரும்பு
52. புவியினுள் காணப்படும் இரும்பின் அளவு 5%
53. உலோகங்களின் ராஜா - இரும்பு ஆகும்
54. இரும்பின் தாதுக்கள் - ஹேமடைட், மேக்னடைட்
55. இரும்பின் முக்கிய தாது – ஹேமடைட்
56. இரும்பை ஊது உலை கொண்டு பிரித்தெடுக்கையில் ஒடுக்கியாக பயன்ப டுவது – கார்பன் மோனாக்சைடு
57. ஊது உலை முறையில் இரும்பை பிரித்தெடுக்கையில் இறுதியாக கிடைப்பது – வார்ப்பிரும்பு
58. வார்ப்பிரும்பை தேனிரும்பாக மாற்றும் உலை – எதிர் அனல் உலை
59. எஃகு பெருமளவில் தயாரிக்கப்படும் முறை – பெசிமர் முறை
60. பெசிமர் முறையில் பெறப்படும் இரும்பு ஆக்ஸிஜனேற்ற முறையில் இரும்பு ஆக்சைடாக மாறாமல் தடுக்க உதவும் பொருள் - ஸ்பீகலிசன்
61. ஸ்பீபலிசனில் உள்ள தனிமங்கள் - இரும்பு, மாங்கனீசு, கார்பன்
62. ஸ்பீகல் என்பது பெர்ரோ மாங்கனீசு ஆகும்
இரும்பின் வகைகள் கார்பன் சதவீதம் பயன்கள்
63. வார்பிரும்பு: 2 – 5 ( கழிவுநீர் குழாய்கள், எடைக்கற்கள், தண்டவாளங்கள் தயாரித்தல்
64. தேனிரும்பு: 0.1 – 0.2 ( சங்கிலி, நங்கூரம், குதரைலாடம், மின்காந்தங்கள் செய்தல்)
65. எஃகு: 0.2 - 2 (மோட்டார் வண்டி, இயந்திரம், கப்பல் தயாரித்தல்)
66. மென் எஃகினை செஞ்சூட்டுக்கு வெப்பப்படுத்தி குளிர்ந்த நீரில் மூழ்கச் செய்தால் கடின எஃகு கிடைக்கிறது
67. கடின எஃகினை செஞ்சூட்டுக்கு வெப்பப்படுத்தி மெதுவாக குளிர வைத்து மென் எஃகு தயாரிக்கும் முறையின் பெயர் - கட்டுப்படுத்தி ஆற்றுதல் எனப்படும்.
68. இரும்பின் கொதிநிலை – 2108K, உருகுநிலை – 2648 K
69. நீர்த்த சல்பியூரிக் அமிலத்துடன் எஃகு வினைபுரிந்து ஹைட்ரஜனை தருகிறது.
70. அடர் சல்பியூரிக் அமிலத்துட்ன எஃகு வினைபுரிந்து சல்பர் டை ஆக்சைடை தருகிறது.
71. நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் எஃகு வினைபுரிந்து நைட்ரிக் ஆக்சைடை தருகிறது
அலுமினியம்:
72. அலுமினியம் பெருமளவில் தயாரிக்கும் முறையை கண்டறிந்தவர்கள் - ஹேர் ராவுல்ட் மற்றும் ஹால்
73. அலுமினிய தாதுக்கள் பாக்சைட் (Al2O3.2H2O)> கிரையோலைட் (Na3AlF6)> கோரண்டம் (Al2O3).
74. அலுமினியம் பெருமளவில் பிரித்தெடுக்கப்படும் தாது – பாக்சைட்
75. அலுமினியம் பிரித்தெடுக்கும் முறை – மின்னாற் பகுத்தல் முறை
76. தூய நீரற்ற அலுமினியம் ஆக்சைடு – அலுமினா எனப்படுகிறது
77. மின்னாற் பகுத்தல் முறையில் கிடைக்கக்கூடிய தூய்மையற்ற அலுமினியத்தை தூய்மையான அலுமினியமாக மாற்ற உதவும் உபகரணம் - ஹோப் செல்
78. அலுமினியத்தின் உருகுநிலை – 1933 K, கொதிநிலை 2323 K
79. ஈரக்காற்றில் அலுமினியம் வினைபுரிந்து அதன் மேல் பரப்பில் உருவாக்கும் படலம் - அலுமினிய ஆக்சைடு. இப்படலம் அலுமினியத்தினை அரிமானத்திலிருந்து தடுக்க உதவுகிறது.
80. நீர்த்த சல்ப்யூரிக் அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிந்து H2ஐ தருகிறது
81. அடர் சல்ப்யூரிக் அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிந்து SO2ஐ தருகிறது
82. நைட்ரிக் அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிவதில்லை. காரணம் மெல்லிய அலுமினிய ஆக்சைடு படலம் அதன் மேல் தோன்றுவதால்
உலோகக் கலவை:
83. உலோகக் கலவை: டியூராலுமின்
பகுதிப்பொருள்: அலுமினியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு
பயன்கள்: ஆகாய விமானம், சமையல் கலன், விண்வெளி துணைக்கோள், கப்பல் பாகங்கள்
84. உலோகக் கலவை: அலுமினிய வெண்கலம்
பகுதிப்பொருள்: காப்பர், அலுமினியம், டின்
பயன்கள்: நாணயம், விலை குறைந்த ஆபரணம், புகைப்பட தகடு
85. உலோகக் கலவை: மக்னாலியம்
பகுதிப்பொருள்: அலுமினியம், மெக்னீசியம், கால்சியம்
பயன்கள்: ஆய்வக உபகரணங்கள்
இரும்பின் கலவைகள்:
86. உலோகக் கலவை: மக்னாலியம்
பகுதிப்பொருள்: அலுமினியம், மெக்னீசியம், கால்சியம்
பயன்கள்: ஆய்வக உபகரணங்கள்
87. உலோகக் கலவை: மென்எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, கார்பன் - 0.1 – 0.4 %
பயன்கள்: தண்டவாளங்கள், திருகு ஆணிகள், கப்பல்கள், பாலங்கள்.
88. உலோகக் கலவை: கடின எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, கார்பன் - 0.5 – 1.5%
பயன்கள்: சவரக்கத்தி, துளையிடும் கருவிகள், வெட்டும் கருவிகள்
89. உலோகக் கலவை: துருப்பிடிக்காத எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, குரோமியம் 18%, நிக்கல் 8%
பயன்கள்: சுமையல் பாத்திரம், அறுவை சிகிச்சை உபகரணம், வாகன ஊர்தியின் பாகங்கள்
90. உலோகக் கலவை: டங்ஸ்டன் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, டங்ஸ்டன் 20%, குரோமியம் 5%
பயன்கள்: துளையிடும் கருவிகள், வெட்டும் கருவிகள்
91. உலோகக் கலவை: நிக்கல் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, டங்ஸ்டன் 20%, குரோமியம் 5%
பயன்கள்: துளையிடும் கருவிகள், வெட்டும் கருவிகள்
92. உலோகக் கலவை: நிக்கல் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, நிக்கல் 36%
பயன்கள்: அறிவியல் உபகரணங்கள்
93. உலோகக் கலவை: நிக்கல் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, நிக்கல் 46%
பயன்கள்: வானொலிப்பெட்டி வால்வுகள்
94. உலோகக் கலவை: மாங்கனீசு எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, மாங்கனீசு 7-20%
பயன்கள்: தலைக்காப்பான்கள், ரயில் தண்டவாளங்கள்
95. உலோகக் கலவை: சிலிகான் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, சிலிகான் 15%
பயன்கள்: அமிலக் குழாய்கள்
96. உலோகக் கலவை: கோபால்ட் எஃகு
பகுதிப்பொருள்: எஃகு, கோபால்ட் 35%
பயன்கள்: நிலைக்காந்தங்கள்
இதர உலோகக் கலவைகள்:
97. உலோகக் கலவை: மர உலோகம்
பகுதிப்பொருள்: காட்மியம், பிஸ்மத், லெட், டின்
பயன்கள்: காகித உற்பத்தி தொழிலில் அச்சு உலோகமாக பயன்படுகிறது
98. உலோகக் கலவை: அச்சு உலோகம்
பகுதிப்பொருள்: லெட், ஆண்டிமணி, டின்
பயன்கள்: அச்சு தொழிலுக்கான எழுத்துகள் செய்தல்
99. உலோகக் கலவை: பற்றாசு
பகுதிப்பொருள்: லெட், டின்
பயன்கள்: உருக்கி பிணைக்க
100. உலோகக் கலவை: பித்தளை
பகுதிப்பொருள்: காப்பர், துத்தநாகம்
பயன்கள்: பாத்திரம், மின்இணைப்பு
101. உலோகக் கலவை: வெண்கலம்
பகுதிப்பொருள்: காப்பர், டின்
பயன்கள்: சலை, நாணயம்
102. உலோகக் கலவை: சோடிய ரசக்கலவை
பகுதிப்பொருள்: சோடியம், பாதரசம்
பயன்கள்: மிதமான ஒடுக்கி
103. தங்கத்துடன் நிக்கல் (அ) பெல்லேடியம் சேர்க்கும் போது வெள்ளை நிறத் தங்கம் கிடைக்கிறது
104. வினைத்திறன் (அ) செயல்திறன் வரிசை:
105. K > Na > Ca > Mg
> Al > Zn > Fe > Sn > Pb > H > Cu > Hg > Ag > Au
106. வெர்டிகிரிஸ் என்பது காப்பர் கார்பனேட் மற்றும் காப்பர் சல்பேட் கலவையாகும்
107. திறந்த காற்றில் காப்பர் கூரைகள் பச்சை நிறமாக மாறுவதற்கு வெர்டிகிரிஸ் என்ற கலவை உருவாதலே காரணம்
ஹைட்ரஜன்:
108. தனிம வரிசையில் முதல் தனிமம் - ஹைட்ரஜன்
109. தனிம வரிசையில் இரண்டாவது தனிமம் - ஹீலியம்
110. தனிம வரிசையில் மூன்றாவது தனிமம் - லித்தியம்
111. ஹைட்ரஜன் தயாரிக்கும் உபகரணங்களுக்கருகே நெருப்பு இருக்க கூடாது – ஏனெனில் ஹைட்ரஜன் காற்றுடன் வினைபுரிந்து வெடிக்கும் தன்மையை உண்டாக்கும். இத்தன்மையே ஹைட்ரஜன் விண்வெளி சாதனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தக் காரணமாகிறது
112. வனஸ்பதி தயாரிப்பதற்கு ஹைட்ரஜன் பயன்படுகிறது
113. வனஸ்பதி தயாரிப்பில் நிக்கல் வினையூக்கியாக செயல்படுகிறது
114. நீர்ம ஹைட்ரஜன் - ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது
115. எதிர்கால எரிபொருள் எனப்படுவது – ஹைட்ரஜன் ஆகும்
116. ஹைட்ரஜன் காற்றைவிட லேசானது
அம்மோனியா:
117. அம்மோனியாவை முதன் முதலில் தயாரித்தவர் - ஜோசப் பிரீஸ்ட்லி
118. அம்மோனியா பெருமளவில் தயாரிக்கும் முறை – ஹேபர் முறை ஆகும்
119. அம்மோனியா தயாரித்தல்:
120. N2 + 3H2 ----------- 2NH3
121. அம்மோனியா தயாரித்தலில் வினைவேக மாற்றியாக செயல்படுவது - இரும்பு
122. அம்மோனியா தயாரித்தலில் வினை உயர்த்தியாக செயல்படுவது – மாலிப்டினம்.
123. வினை நடைபெற தேவைப்படும் வெப்பநிலை – 773 K
124. வினை நடைபெற தேவைப்படும் அழுத்தம் - 250 வளிமண்டல அழுத்தம்
125. அம்மோனியா வாயு நீரில் கரையும் தன்மையை அறிய உதவும் சோதனை – ஊற்றுச்சோதனை
126. அம்மோனியா – காரத்தன்மை கொண்டது
127. அம்மோனியா – ஒரு சிறந்த ஒடுக்கும் காரணி
128. நெஸ்லர் காரணி என்பது – அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரி அயோடைடு கரைசல் ஆகும்.
129. அம்மோனியாவை கண்டறியும் சோதனை – நெலஸ்லர் காரணி சோதனை. இச்சோதனையில் அம்மோனியா நெஸ்லர் காரணியுடன் வினைபுரிந்து செம்பழுப்பு நிறத்தை
கொடுக்கிறது.
130. நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் முறை – ஆஸ்ட்வால்ட்முறை
131. அம்மோனியா – உரங்கள், சாயங்கள், மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
132. நீர்ம அம்மோனியா குளிரூட்டிகளில் குளிர்விப்பானாகவும், சமையல் அறையை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது
சல்பர்:
133. பிரைம் ஸ்டோன் என் அழைக்கப்படுவது – சல்பர் ஆகும்
134. சல்பர் பிரித்தெடுக்கும் முறை – பிராஸ் முறை
135. சல்பர் நீரில் கரையாது. ஆனால் CO2 மற்றும் டொலுவினில் கரையம்
136. சல்பர் ஒரு பூஞ்சைக்கொல்லியாகவும், பாக்டீரியா கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது
137. சங்கிலித் தொடர் அமைப்பை ஏற்படுத்தும் சல்பர் மூலக்கூறு - S8
138. சல்பர் டை ஆக்சைடின் மணம் - அழுகிய முட்டை மணம்.
139. சல்பர் - அயோடினைத் தவிர ஏனைய ஹாலஜன்களுடன் வினைபுரியும்.
140. சல்பர் - ஒரு ஒடுக்கும் காரணியாகும்
141. சல்பர் - வெடிமருந்துகள், காகிதங்கள், புகைப்படங்கள், தோல் களிம்புகள் தயாரிக்க பயன்படுகிறது.
142. சல்பர் மருந்துகளில் உள்ள வேதிப்பொருள் – சல்போனமைடு.
143. சல்பர் - அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் கொடுக்கவும், ரப்பரை வல்கனைசிங் செய்யவும் பயன்படுகிறது.
144. முட்டை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் காணப்படும் தனிமம் - சல்பர்
145. சல்பரின் அணு எண் – 16, அணு எடை – 32
146. சல்பர் - மாறுபடக்கூடிய இணைதிறன் கொண்டது (இணைதிறன் - 2, 4, 6)
147. புறவேற்றுமை வடிவம் கொண்ட ஒரே உலோகம் - டின்
148. சல்பரின் புறவேற்றுமை வடிவங்கள்: 1. சாய்சதுர சல்பர் 2. ஊசி வடிவ சல்பர்
149. சல்பரின் வடிவ மாற்ற வெப்பநிலை – 369 K
சல்பர் டை ஆக்சைடு
150. சல்பர் டை ஆக்சைடை கண்டறிந்தவர் - ஜோசப் பிரிஸ்ட்லி
151. எரிமலை வாய்களிலிருந்து வெளிவரும் வாயு – சல்பர்டை ஆக்சைடு
152. சல்பர் டை ஆக்சைடு மழை நீரில் கரைந்து அமில மழையை தருகிறது
153. சல்பர் டை ஆக்சைடு நீருடன் வினைபுரிந்து கிடைப்பது – சல்ப்யூரஸ் அமிலம்
154. சல்பர் டை ஆக்சைடு அமிலத்தன்மை வாய்ந்தது
155. சல்பர் டை ஆக்சைடு – ஆக்ஸிஜனேற்றி, ஒடுக்கும் காரணி, வெளுக்கும் காரணியாகும்
156. சல்பர் டை ஆக்சைடு – காகிதத்தூள், நீலப்பூக்கள், பட்டு, கம்பளி ஆகியவற்றை வெளுக்கவும், சர்க்கரையை தூய்மைப்படுத்தவும், பூஞ்சைக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும், குளிர் சாதனப் பெட்டிகளில் பிரியானுக்கு பதிலாக குளிரூட்டியாகவும், ஜாம் மற்றும் பழச்சாறுகளை பாதுகாக்கவும், குளோரின் அகற்றியாகவும் பயன்படுகிறது
சல்பியூரிக் அமிலம் (அ) கந்தக அமிலம்:
157. வேதிப்பொருள்களின் அரசன் எனப்படுவது – சல்பியூரிக் அமிலம்
158. கண்ணாடி எண்ணெய் எனப்படுவது – சல்பியூரிக் அமிலம்
159. மின்முலாம் பூசப்பட வேண்டிய எஃகு பொருட்களை நீர்த்த சல்பியூரிக் அமிலத்தில்
கழுவும் முறையின் பெயர் – ஊறவைத்தல்.
160. கார் பேட்டரியில் பயன்படும் அமிலம் - நீர்த்த சல்பியூரிக் அமிலம்
161. சல்பியூரிக் அமிலம் தயாரிக்கும் முறையின் பெயர் - தொடு முறை
162. ஒலியம் என்பது – புகை மூட்டமுள்ள அதி அடர் கந்தக அமிலமாகும்.
அடர் கந்தக அமிலம்:
163. அடர் கந்தக அமிலத்தில் உள்ளவை – 98% கந்தக அமிலம், 2% நீர்
164. அடர் கந்தக அமிலம் - ஒரு நீர் நீக்கியாகும். நமது தோலை சுருக்கி விடும்
165. அடர் கந்தக அமிலம் - ஒரு ஆக்சிஜனேற்றியாகும்
166. நீர்த்த கந்தக அமிலத்தில் உள்ளவை – 10% சல்பியூரிக் அமிலம் 90% நீர்
167. கந்தக அமிலம் ஒரு இரு காரத்துவ அமிலமாகும்
168. கந்தக அமிலத்தின் பயன்கள்: உரங்கள், செயற்கை இழைகள், பிளாஸ்டிக், கார்பேட்டரி, சாயம், மருந்துகள், கண்ணாடி, சோப்பு, சலவைப்பொருள்கள் ஆகியவை தயாரிக்கவும், பெட்ரோல் சுத்திகரிப்பில் உலோகங்களை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
169. சர்க்கரையுடன் அடர் சல்பியூரிக் அமிலம் வினைபுரிந்து நீர் நீக்கியாக செயல்பட்டு சர்க்கரை கரைசலை கருமை நிறமாக ஆக்குகிறது.
170. நீலநிற காப்பர் சல்பேட்டுடன் அடர் சல்பியூரிக் அமிலம் வினைபுரிந்து வெள்ளை நிற காப்பர் சல்பேட்டை தருகிறது.