இயற்பியல் - 4
நிலைமின்னியல்
1. கிரேக்கத்தில் ஆம்பர் என்ற சொல்லுக்கு எலக்ட்ரான் எனப்பெயர்
2. மின்கடத்திக்கு எ.கா. உலோகங்கள், மனித உடல், புவி, கிராபைட் மற்றும் கரித்துண்டு
3. மின்கடத்தாத பொருட்களுக்கு எ.கா. கண்ணாடி, மைக்கா, எபெனைட், பிளாஸ்டிக்.
4. மின்னூட்டம் செய்யப்படாத பொருட்களில் சம எண்ணிக்கையில் நேர் மின்னூட்டங்களும், எதிர் மின்னூட்டங்களும் இருக்கும்.
5. இரண்டு வேறுபட்ட மின்னூட்டங்களுக்கு இடையே ஈர்ப்பு விசை ஏற்படும். இரண்டு ஒத்த மின்னூட்டங்களுக்கிடையே விலக்கு விசை ஏற்படும்.
6. மின்னூட்டத்தின் அலகு -- கூலும்
7. அணுக்கரு விசையானது ஒரு கவர்ச்சிவிசை ஆகும்.
8. அணுக்கரு துகள்கள் 10-15 மீட்டர் தொலைவுக்குள் இருந்தால் மட்டுமே அணுக்கரு விசையானது வலிமை மிக்கதாக இருக்கும்.
9. பொருட்களை மின்னூட்டம் செய்ய பயன்படும் முறைகள் - உராய்வு முறை, தொடுதல் முறை, நிலைமின் தூண்டல் முறை.
10. கூர்முனை கொண்ட கடத்திக்கு மின்னூட்டம் அளிக்கப்பட்டால் முனைப்பகுதிகளில் மின்னூட்டம் அதிகமாக இருக்கும்.
11. மின்னூட்டம் பெற்ற கடத்திகளின் கூர்முனையிலிருந்து மின்னூட்டம் கசிகின்ற நிகழ்வு – கூர்முனை செயல்பாடு எனப்படும்.
12. இடிதாங்கியை வடிவமைத்தவர் - பெஞ்சமின் பிராங்களின்
13. இடிதாங்கியின் தத்துவம் - கூர்முனை செயல்பாடு
14. மின்னூட்டங்கள் இருப்பதையும் அவற்றின் வகை மற்றும் அளவு ஆகியவற்றையும் கண்டறிய உதவும் கருவி – மின்னூட்டங் காட்டி ஆகும்.
15. பட்டுத்துணியால் கண்ணாடித்துண்டு தேய்க்கப்பட்டால் எதிர் மின்னூட்டம் உருவாகும்.
16. எபெனைட் தண்டு ஒன்று கம்பளி மீது தேய்க்கப்பட்டால் எதிர் மின்னூட்டம் உருவாகும்.
காந்தவியலும் மின்னியலும்
17. காந்தப்பொருளுக்கு எ-டு. இரும்பு, நிக்கல், கோபால்ட்
18. காந்தங்களின் ஒரே முனைகள் விலக்கமடைதல் பண்பையும், வேறுபட்ட முனைகள் கவரும் பண்பையும் பெற்றுள்ளன.
19. ஒரு சட்டக்காந்தத்தை தொடர்ந்து சிறு சிறு துண்டுகளாக முறித்தால் ஒவ்வொரு துண்டும் வடதென் முனைகளுடன் ஒரே காந்தமாக செயல்படுகிறது.
20. காந்தப்புலம் எண்ணற்ற காந்தவிசைக்கோடுகளை கொண்டது.
காந்த விசைக்கோடுகளின் பண்புகள்:
21. காந்த விசைக்கோடுகள் வடமுனைகள் தொடங்கி தென் முனைகளில் முடிவடைகின்றன.
22. காந்த விசைக்கோடுகளின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் முனைகளில் அதிக செறிவுடன் இருக்கும்.
23. காந்தவிசைக்கோடுகள் மூடிய வளைகோடுகளாகும்.
24. ஒரே சீரான காந்தப்புலத்தில் காந்தவிசைக் கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
25. ஒரு சட்டக்காந்தத்தின் காந்தப்புலத்தில் உள்ள காந்த சைக்கோடுகளை அறிய பயன்படுவது – காந்த ஊசிப்
பெட்டி.
26. இரும்பு போன்ற பொருள்களின் மீது காந்தம், காந்தப்பண்புகளை தூண்டும் நிகழ்ச்சிக்கு காந்தத்தூண்டல் அல்லது துண்டுக்காந்தத்தன்மை எனப்படும்.
27. காந்தமாக்கும் முறைகள் இருவகைப்படும். அவை: 1. தொடுமுறை 2. மின்னூட்டமுறை
28. தொடுமுறை இருவகைப்படும். 1. ஓற்றைத்தொடுமுறை 2. இரட்டைத் தொடுமுறை.
29. நிலைக்காந்தங்கள்
செய்ய பயன்படுவது – எஃகு
30. தற்காலிக
காந்தங்கள் செய்ய பயன்படுவது – தேனிரும்பு
31. காந்தப் பொருள்களை அடித்தும், வெப்பப்படுத்தியும் அப்பொருளில் உள்ள காந்தத்தன்மையை நீக்கம் செய்யலாம்.
32. காந்தப்பொருள்கள் காந்தத் தன்மையை இழக்கும் வெப்பநிலை – கியூரி வெப்பநிலை.
33. இரும்பின் கியூரி வெப்பநிலை 7700C
34. புவிக்காந்தத்தின் வடமுனை புவியின் தெற்கு திசையிலும், புவிக்காந்தத்தின் தென்முனை வடக்கு திசையிலும் அமைந்துள்ளன
35. புவிக்காந்தத்தின் அச்சுக்கும் புவியியல் அச்சுக்கும் இடையே உள்ள கோணம் 170
36. ஒரு இடத்தில் புவிக் காந்தப்புலத்தின் திசைக்கும் அதனுடைய கிடைமட்டக் கூறுக்கும் இடைப்பட்ட கோணம் - சரிவுக்கோணம் அல்லது சாய்வுக்கோணம் எனப்படும்.
37. சரிவுக்கோணத்தின் மதிப்பு புவிகாந்த நிலநடுக்கோட்டில் 00, துருவங்களில் 900 ஆகும்.
38. ஓரிடத்தின் காந்தச்சரிவின் மதிப்பை அளக்க பயன்படும் கருவி – சரிவுவட்டம்
39. புவிதுருவதளத்திற்கும், காந்த தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் - காந்த ஒதுக்கம் ஆகும். காந்த ஒதுக்கத்தின் மதிப்பு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
40. காந்த மூலக்கூறு கொள்கையினை தோற்றுவித்தவர் - ஜேம்ஸ் ஈவிங்
41. காந்த மூலக்கூறு கொள்கைப்படி, ஒவ்வொரு காந்தப்பொருளிலும் உள்ள மூலக்கூறுகள் சிறிய காந்தங்களாக செயல்படுகின்றன. இவை காந்த மூலக்கூறுகள் எனப்படும்
42. மின்னோட்டத்தின் ஆதாரங்களுக்கு எ-டு டேனியல் மின்கலம், பசை மின்கலம், மின்கல அடுக்கு
43. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்கள் இணைச் சுற்றினை கொண்டு அமைக்கப்படுகின்றன.
44. மின்னோட்டத்தை தாங்கிய கடத்தி ஒன்றில் ஏற்படும் காந்தப்புலத்தின் திசையை அறிய உதவும் விதி – வலக்கை பெருவிரல் விதி.
45. மின்காந்தம் ஒரு தற்காலிக காந்தமாகும்.
46. மின்காந்தத்தின் வலிமையானது 1. கம்பிச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை, 2. மின்னோட்டத்தின் வலிமை 3. உள்ளக ஊடகத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது.
47. மின்னியற்றிகள், மின்சார எந்திரங்கள், தந்திக்கருவிகள், மின்சாரமணிகள், ஒலிநாடா பதிவு கருவிகள், ஒலிப்பெருக்கிகள், பளுதூக்கிகள், செவிப்பேசிகள் மற்றும் தொலைபேசிகள் ஆகியவைகளில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
48. புதிய காந்தங்களை தயாரிக்கவும் பழைய காந்தங்களை மீண்டும் புதிய காந்தகளாக மாற்றவும், மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
49. மின்சாரமணியில் தேனிரும்பு மின்காந்தமாக பயன்படுகிறது
50. மின்காந்தத்தூண்டலை கண்டறிந்தவர் - மைக்கேல் பாரடே
51. இயற்றிகள் செயல்படும் தத்துவம் – மின்காந்தத்தூண்டல்.
52. வணிக முறையில் அதிகளவு மின்உற்பத்தி செய்யும்முறை – மின்காந்தத்தூண்டல்
மின்ஆற்றலும் அதன் விளைவுகளும்:
53. கூலூம் விதி: இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட மின்விசையின் அளவு மின்னூட்டங்களின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவற்றின் இடைத்தொலைவின் இருமடிக்கு எதிர்தகவிலும் இருக்கும்.
54. மின்புலத்தின் அலகு – நியூட்டன்/ கூலும்
55. மின்அழுத்தத்தின் அலகு – வோல்ட்
56. மின்கலத்தை கண்டறிந்தவர் - வோல்டா
57. மின்புலத்திற்கும், மின்னழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பு E0 = v/d
58. மின்புல
வலிமை Vm-1 எனற அலகினால் குறிக்கப்படுகிறது.
59. மின்புலம் என்பது ஒரு வெக்டார் அலகு ஆகும்.
60. மின்அழுத்தம் என்பது ஒரு ஸ்கேலார் அலகு ஆகும்.
61. மின்னோட்டம் I = q/t (q – மின்னூட்டம் t – காலம்)
62. மின்னோட்டத்தின் அலகு – ஆம்பியர் (A).
ஓம்விதி:
63. மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியாக பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கிடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்த்தகவில் இருக்கும் – ஓம் விதி
64. V = IR (V – மின்னழுத்தம், I – மின்னோட்டம், R – மின்தடை)
65. மின்தடையின் அலகு – ஓம் (Ω)
66. மின்னோட்டத்தை அளக்க அம்மீட்டரும், மின்னழுத்த வேறுபாட்டை அளக்க வோல்ட் மீட்டரும் பயன்படுத்தப்படுகின்றன.
67. மின்தடை எண்ணின் அலகு – ஓம் மீட்டர்
68. தொடர்ச்சுற்றுக்கான சூத்திரம்: தொடர்சுற்றில் இணைக்கப்படும் மின்தடைகளின் தொகுப்பு தனித்தனி மின்தடைகளின் கூடுதலுக்குச் சமம் (R = R1 + R2 + R3)
69. இணைச்சுற்று: ஒரு இணைச்சுற்றில், விளைவுறு மின்தடையின் தலைகீழ் மதிப்பு தனித்தனி மின்தடைகளின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதலுக்குச் சமம் (1/R = 1/R1 + 1/R2 + 1/R3)
70. ஜூல் வெப்ப விளைவு விதி – H = I2Rt (H – வெப்பம், t – காலம்)
71. மின்சார கெட்டில், மின் தேய்ப்பான், மின் அடுப்பு ஆகியவற்றில் பயன்படும் உலோகக்கலவை – நிக்ரோம், இக்கலப்பு உலோகம் உயர்ந்த மின்தடைஎண் கொண்டவை.
72. மின்அடுப்பு, மின்தேய்ப்பான் ஆகியவை ஜூல் வெப்ப விதியின் தத்துவத்தை கொண்டு இயங்குகிறது.
73. கார்பன் இழை விளக்கு அமெரிக்காவில் எடிசனாலும், இங்கிலாந்தில் ஸ்வானாலும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
74. தற்போது ஆஸ்மியம், டாண்டாலம், டங்ஸ்டன் இழைகள் மின்னிழை விளக்கில் பயன்படுத்தப்படுகின்றன. வெற்றிட விளக்கில் டங்ஸ்டன் இழை சுருள் வடிவில் வைக்கப்பட்டுள்ளது.
75. மின்னிழை விளக்கினுள் உள்ள வாயுக்கள் -- ஆர்கான், நியான் (இவ்வாயுக்கள் நிரப்பப்பட காரணம்: உயர்ந்த வெப்பநிலைகளிலும் டங்ஸ்டன் இழை உருகி ஆவியாதல் தடுக்கப்படுவதால்)
76. ஒரு மின்விளக்கின் ஆயுள் 1000 மணிகள்.
77. மின்திறனின் அலகு வாட் (W) அல்லது ஜூல் / வினாடி
78. 1 குதிரைத்திறன் -- 746 வாட்
79. 1 கிலோவாட் என்பது 1.341 குதிரைத்திறன்
80. மின்னாற்றலுக்கான வணிகவியல் அலகு – கிலோவாட்மணி ஆகும்
மின்னாற்பகுப்புக்கான பாரடே விதிகள்:
81. முதல் விதி: மின்னாற் பகுப்பின்போது வெளியேறும் அல்லது கரையும் பொருளின் நிறை பாயும் மொத்த மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும் (M = Z I T)
82. M – பொருளின் நிறை, Z – மாறிலி (பொருளின் மின்வேதியில் இணைமாற்று)
83. இரண்டாம் விதி: ஒரே மின்னூட்டப்பாய்வால் வெளியேறும் அல்லது கரையும் பொருள்களின் நிறைகள் அவற்றின் மின் வேதியில் இணைமாற்று மதிப்புகளுக்கு நேர்த்தகவில் இருக்கும் (M1 / M2 = Z1 / Z2)
84. தாமிரம், தங்கம், துத்தநாகம், நிக்கல், காரீயம் ஆகியவை மின்னாற்பகுத்தல் முறையில்
தூய்மைப்படுத்தப்படுகின்றன.
85. இரும்பின் மீது துத்தநாகம், காட்மியம், நிக்கல் அல்லது குரோமியம் ஆகியவற்றைக் கொண்டு மின்முலாம் பூசப்படுகிறது.
86. இரும்பின் மீது முதலில் நிக்கல் முலாமும், பின்னர் வெள்ளி முலாமும் பூச எவர்சில்வர் பொருள்கள் கிடைக்கும். இவை மின்பூச்சு நிக்கல் வெள்ளிப்பொருள்கள் (E. P. N. S) எனப்படும்.
87. மாற்றியமைக்கப்பட்ட லெக்லாஞ்சி மின்கலம் என்பது – பசைமின்கலம் ஆகும்.
88. பசைமின்கலத்தில் நேர்மின்வாய் - கரிக்கட்டை, எதிர்மின்வாய் - துத்தநாக தகடு.
89. பசைமின்கலத்தில் மின்பகுபொருள் - அம்மோனியம் குளோரைடு, துத்தநாக குளோரைடு
90. கைவிளக்குகள், தொலைபேசி, டிரான்சிஸ்டர் ஏற்பி ஆகியவற்றில் பயன்படுவது - பசைமின்கலம்.
91. எதிர் நிகழா வேதியியல் வினைகளைப் பயன்படுத்தும் மின்கலங்கள் – முதன்மை
மின்கலங்கள் எனப்படும். எ.கா. உலர்மின்கலம், லெக்லாஞ்சி மின்கலம், டேனியல் மின்கலம்.
92. எதிர் நிகழ்வினைகளைப் பயன்படுத்தும் மின்கலங்கள் - துணை மின்கலங்கள் எனப்படும். எ.கா. காரீய அமில சேமக்கலம், நிக்கல் காட்மியம் மின்கலம்.
93. ஒலி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் - மைக்ரோபோன்
94. மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்றும் சாதனம் - ஒலிபெருக்கி
95. மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கியவர் - ஒயர்ஸ்டெட்
96. மின்னோட்டம் தாங்கிய கடத்தி உண்டாக்கும் காந்தப்புலத்தின் திசையை அறிய பயன்படும் முக்கிய விதிகள் 1. ஆம்பியர் நீச்சல் விதி 2. மாக்ஸ்வெல் திருகுவிதி
97. மின்னோட்டத்தின் காந்த விளைவின் தத்துவத்தில் இயங்கும் கருவிகள்: மைக்ரோபோன், ஒலிபெருக்கி
98. மின்னோட்டதின் எந்திரவிளைவை விளக்கும் விதிகள்: 1. பிளம்மிங் இடக்கை விதி 2. பார்லோ சக்கரம்
99. மின்னோட்டத்தின் எந்திரவிளைவை தத்துவத்தில் இயங்கும் கருவிகள் - இயங்கு சுருள், கால்வனாமீட்டர், மின்மோட்டார்.
100. பிளம்மிங் இடக்கை விதியின்படி சுட்டுவிரல் குறிப்பது - காந்தப்புலவிசை, நடுவிரல்
குறிப்பது – மின்னோட்டத்திசை, கட்டைவிரல் குறிப்பது – கடத்தி நகரும் திசை.
101. காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டம் தாங்கிய ஒரு கடத்தி மீது செயல்படும் விசை கோட்பாட்டின் படி கால்வனா மீட்டர் செயல்படுகிறது.
102. குறைந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பதன் மூலம் கால்வனாமீட்டரை அம்மீட்டராக மாற்றலாம்.
103. உயர்மின்தடை ஒன்றை தொடர் சுற்றில் இணைப்பதன் மூலம் கால்வனாமீட்டரை வோல்ட் மீட்டராக மாற்றலாம்.
104. இயங்கு சுருள் கால்வனா மீட்டரின் சீரமைக்கப்பட்ட வடிவம் -- மல்டி மீட்டர்.
105. இயங்கு சுருள் கால்வனா மீட்டரில், விலகல் கம்பிச்சுருள் வழியே பாயும்.
106. மின்னோட்டத்திற்கு நேர்தகவில் இருக்கும் (I = G𝜃). (G– கால்வனோ மீட்டர் மாறிலி 𝜃 – விலகல்
107. இயங்கு சுருள் கால்வனா மீட்டரில் ஏற்படும் விலகலிலிருந்து மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் அளக்கப்படுகிறது.
108. மின்காந்தத்தூண்டலை விளக்கும் விதிகள் -- 1) பாரடே விதிகள் 2) லென்ஸ் விதி 3) பிளமிங்கின் வலக்கை விதி.
109. விசையின் திசை அறிய பயன்படும் விதி – பிளமிங்கின் இடக்கை விதி
110. தூண்டப்படும் மின்னோட்டத்தின் திசையறிய பயன்படும் விதி – பிளமிங்கின் வலக்கை விதி.
111. பிளமிங்கின் வலக்கை விதியின்படி, சுட்டுவிரல் குறிப்பது – காந்தப்புலத்தின் திசை, நடுவிரல் குறிப்பது – தூண்டப்படும் மின்னோட்டம் திசை, கட்டைவிரல் குறிப்பது – கடத்தி நகரும் திசை.
112. லென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்குவிசை மற்றும் மின்னோடத்தின் திசைகள்
அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையம்.
மின்காந்த தூண்டல் பயன்பாடுகள்:
113. மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்கும் இயந்திரம் – AC மின்னியற்றி எனப்படும். இதில் நழுவு வளையங்கள் இருக்கும்.
114. தொடர்ச்சியான மாறா மதிப்புடைய ஒரு திசை மின்னோட்டத்தை உருவாக்கும் இயந்திரம் DC மின்னியற்றி பயன்படும். இதில் பிளவு வளையங்கள் இருக்கும்.
115. ஒரு மின்சுற்றிலுள்ள தாழ்ந்த மின்னழுத்தத்தை அண்மைச்சுற்று ஒன்றில் உயர் மின்னழுத்தமாகவோ அல்லது உயர்மின் அழுத்தத்தை தாழ்ந்த மின்னழுத்தமாக மாற்றும்
கருவி – மின்மாற்றி எனப்படும்.
116. மின்மாற்றி இருவகைப்படும். அசை: 1) ஏற்று மின்மாற்றி 2) இறக்கு மின்மாற்றி
117. ஏற்றுமின்மாற்றியில் முதன்மைச்சுருளின் தாமிரகம்பிகளின் சுற்றுகளின் எண்ணிக்கையை விட துணைச்சுருளின் தாமிரகம்பிகளின் சுற்றுகள் அதிகம் (ns > np)
118. ns - முதன்மைச்சுருளின் தாமிரகம்பிகளின் (தடித்தது) சுற்றுகளின் எண்ணிக்கை.
119. np - துணைச்சுருளின் தாமிரகம்பிகளின் (மெல்லியது) சுற்றுகளின் எண்ணிக்கை.
120. இறக்கு மின்மாற்றியில் முதன்மைச்சுருளின் தாமிரகம்பிகளின் சுற்றுகளின்
எண்ணிக்கையைவிட துணைச்சுருளின் தாமிரகம்பிகளின் சுற்றுகள் குறைவு (ns < np).
121. ns - முதன்மைச்சுருளின் தாமிரகம்பிகளின் (தடித்தது) சுற்றுகளின் எண்ணிக்கை.
122. np - துணைச்சுருளின் தாமிரகம்பிகளின் (மெல்லியது) சுற்றுகளின் எண்ணிக்கை.
123. பொதுவாக ஏற்றுமின்மாற்றியானது மின்னழுத்தத்தை அதிகரிப்பதற்கும், இறக்கு மின்மாற்றி மின்னழுத்தத்தை குறைப்பதற்கும் பயன்படுகின்றன.
124. ஓர் இலட்சிய மின்மாற்றியில் உள்ளீடு திறன் மற்றும் வெளியீடு திறன் ஆகிவவை சமம்.
125. ஏற்று மின்மாற்றி – நீண்ட தூரங்களுக்கு மின்திறனை அனுப்பப் பயன்படுகிறது
126. இறக்கு மின்மாற்றி – வானொலி, ஒலிப்பெருக்கி, எக்ஸ் கதிர்க் குழாய்கள், நியான் விளக்குகள், மின்சாரமணிகளில் பயன்படுகின்றன.
127. 3 கட்ட AC யில் 120 டிகிரியில் 3 சுருள் சுற்றப்பட்டிருக்கும்.
128. மின்கசிவால் உண்டாகும் மின்கசியைத் தடுக்க புவிப்படுத்துதல் செய்யவேண்டும்.
129. மின் உருகி (FUSE) என்பது குறைந்த உருகுநிலை கொண்ட ஒரு சிறிய உலோகத்துண்டாகும்.
130. வீடுகளில் பயன்படும் உருகி காரீயத்தாலும், உயர்மின்னோட்டங்களில் பயன்படுத்தப்படும் மின் உருக்கி தாமிரத்தாலும் செய்யப்படுகிறது.
131. காரீய மின் உருக்கி 5A மின்சாரத்தையும், தாமிர மின்உருக்கி 35A மின்சாரத்தையும் தாங்கும்.
132. வீட்டு மின்சுற்றிகளில் பயன்படுத்தப்படும் உருகி – பகுதி மூடப்பட்ட உருகி.
133. எலக்ட்ரானியல் கருவிகளில் பயன்படும் உருகி – முற்றிலும் மூடப்பட்ட உருகி.
134. உருக்கி காரணி என்பது – கம்பியின் சிறும உருகு மின்னோட்டத்திற்கும், பாதுகாப்பு வரம்புக்கும், இடையே உள்ள தகவு ஆகும். இதன் மதிப்பு எப்போதும் 1 – ஐ விட அதிகம்
135. மின்னோட்டம் மனிதனைக் கொல்வதில்லை. உயர்மின் அழுத்தமே கொல்லும்.
136. மின்விசைக்கோடுகளுக்கு செங்குத்தாக ஓரலகு பரப்பில் உள்ள விசைக்கோடுகள் எண்ணிக்கை – மின்புல வலிமைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
137. கடத்தி ஒன்றின் மின்தடை சார்ந்துள்ள காரணி – கடத்திப்பொருள் மற்றும் பரிமாணங்கள்.
138. ஒரு கடத்தியில் ஏற்படும் வெப்பம் -- மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்.
139. ஒரு குதிரைத்திறன் 746 வாட்
140. மின்பகு பொருள்கள் பொதுவாக இருக்கும் நிலை – திரவங்கள்
141. மின்பூச்சு செய்யப்படவேண்டிய பொருள் வைக்கப்படும் இடம் – கேத்தோடு.
142. பரவலாகப் பயன்படுத்தப்படும் முதன்மை மின்கலம் -- பசை மின்கலம்
143. மின்காந்தங்களின் அடிப்படைக்கோட்பாடு – மின்னோட்டத்தின் காந்த விளைவு.
144. கால்வனா மீட்டரில் ஏற்படும் விலகல் இதற்கு நேர்தகவிலிருக்கும் – மின்னோட்டம்.
145. ஒரு மின்சுற்றில் தூண்டப்படும் மின்னியக்குவிசை காந்தப்பாய மாற்று வீதத்துக்கு நேர்த்தவில் இருக்கும்.
146. மின்புலம் ஒரு வெக்டார் அளவுரு ஆகும். மின்னழுத்தம் ஸ்கேலார் அளவுரு ஆகும்.
147. நிக்கல் - குரோமிய உலோக கலவை – நிக்ரோம் எனப்படும்
148. ஒரு கால்வனா மீட்டர் அம்மீட்டராக மாற்றப்பட குறைந்த மின்தடையை பக்க இணைப்பில் மாற்ற வேண்டும்.
149. தூண்டு மின்னோட்டத்தின் திசை அதைத் தோற்றுவிக்கும் மின்னோட்டத்தின் எதிர் திசையில் இருக்கும்