இயற்பியல் - 5
அணு அமைப்பு
1. புரோட்டனைக் கண்டுபிடித்தவர் - கோல்ட்ஸ்டீன்
2. நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் - சாட்விக்
3. எலெக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் - ஜே. ஜே. தாம்சன்
4. எலெக்ட்ரானை எதிர்மின்வாய் கதிர்கள் என அழைக்கிறோம்.
5. புரோட்டான்கள், கால்வாய் கதிர்கள் அல்லது நேர்மின்வாய் கதிர்கள் எனப்படும்.
6. எலெக்ட்ரான் - எதிர்மின்சுமை உடையவை. அணுவின் உட்கருவிற்கு வெளிப்பகுதியில் உள்ளன
7. புரோட்டான் -- நேர்மின்சுமை உடையவை.
8. நியூட்ரான் -- நடுநிலை தன்மை உடையவை.
9. உட்கருவில் புரோட்டானும் நியூட்ரானும் காணப்படும்
10. ஒரு அணுவின் மொத்த நிறையும் உள்ள இடம் -- உட்கரு
11. 1 அணுநிறை அலகு (amu) என்பது கார்பன் அணுநிறையில் 1 : 12 பகுதியாகும்
12. உட்கரு – நேர்மின்சுமையுடையது.
13. அணு எண். (Z) என்பது – ஒரு அணுவிலுள்ள புரோட்டான் அல்லது எலெக்ட்ரான் எண்ணிக்கையை குறிக்கும்
14. அணு நிறை (A) என்பது – புரொட்டான் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும்.
15. ஒரு அணுவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை = A - Z
16. ஒத்த அணு எண்ணையும், மாறுபட்ட நிறை எண்ணையும் பெற்றிருக்கும் ஒரு தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும். (அல்ல) ஒத்த வேதிப்பண்புகளையும், மாறுபட்ட
இயற்பியல் பண்புகளையும் கொண்டுள்ள தனிமங்கள் ஐசோடோப்புகள் எனப்படும்
17. ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள் - மூன்று வகைப்படும்
18. அவை: 1. புரோட்டியம் (1H1) 2. டியூட்டிரியம் (1H2) 3. டீரிடியம் (1H3)
19. நியூட்ரான் இல்லாத தனிமம் - ஹைட்ரஜன்
20. அணுக்கொள்கை வெளியிட்டவர் - ஜான் டால்டன்
21. எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள், x – கதிர்கள் ஆகியவற்றை மின் இறக்க குழாய்கள் கொண்டு தயாரிக்கலாம்.
22. எலெக்ட்ரான்களானது, மின் இறக்க குழாய்களின் சுவற்றைத் தாக்கி வெளிர்பச்சை நிற நின்றொளிர்தலை உருவாக்குகிறது.
23. ஜே. ஜே. தாம்சன் அணுமாதிரி கொள்கைப்படி, அணு என்பது சீரான நேர்மின்சுமை பெற்ற ஒரு கோளம் அதில் எலெக்ட்ரான்கள் பொருந்தியுள்ளன எனவும் கருதப்படுகிறது.
24. ஜே. ஜே. தாம்சனின் அணுமாதிரி – உலர்ந்த திராட்சை புட்டிங் மாதிரி என அழைக்கப்படுகிறது.
25. அணுவிலுள்ள உட்கருவைக் கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
26. ரூதர் போர்டின் அணு அமைப்பில் - நியூட்ரான் பற்றியும், அணுவின் நிலைப்புத்தன்மைப் பற்றியும் விளக்கப்படவில்லை.
27. அணுவின் ஆற்றல் மட்ட சமன்பாடு 2n2
28. நீல்ஸ்போர் அணு அமைப்பானது – பிளாங்கின் குவாண்டம் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
29. நீல்ஸ்போரின் அணு அமைப்பு – எலெக்ட்ரான்கள் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதையும், ஆற்றல் மட்டத்தையும் விளக்குகிறது.
30. ஹைட்ரஜனின் அணு நிறமாலையை விளக்கும் அணு அமைப்பு - நீல்ஸ்போர் அணு அமைப்பு ஆகும்
31. ஹைட்ரஜன் குவாண்டம் கொள்கையை வரையறுத்தவர் - நீல்ஸ்போர்
32. S - ஆர்பிட்டாலின் வடிவம் - கோள வடிவம்.
33. P - ஆர்பிட்டாலின் வடிவம் - நீண்ட மணி.
34. மாறுபடும் இணைதிறன் கொண்ட தனிமங்களுக்கு எ.கா. – காப்பர், இரும்பு, தங்கம், பாதரசம்.
35. இடைநிலைத் தனிமங்கள் மாறுபடும் இணைதிறன் கொண்டவை.
36. முதல் ஆற்றல் மட்டம் - K (அதிகபட்ச எலெக்ட்ரான்கள் எண்ணிக்கை 2)
37. 2 – ஆம் ஆற்றல் மட்டம் – L (அதிகபட்ச எலெக்ட்ரான்கள் எண்ணிக்கை 8)
38. 3 – ஆம் ஆற்றல் மட்டம் - M (அதிகபட்ச எலெக்ட்ரான்கள் எண்ணிக்கை 18)
39. 4 – ஆம் ஆற்றல் மட்டம் - N (அதிகபட்ச எலெக்ட்ரான்கள் எண்ணிக்கை 32)
40. உயர் ஆற்றல் மட்டத்திலிருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலெக்ட்ரான்கள்
செல்லும்போது ஆற்றல் உமிழப்படுகிறது.
41. குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு எலெக்ட்ரான்கள்
செல்லும்போது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது.
42. K - ஆற்றல் மட்டத்தின் துணை மட்டங்கள் - ஒன்று (s)
43. L - ஆற்றல் மட்டத்தின் துணை மட்டங்கள் - ஒன்று (s,p)
44. M - ஆற்றல் மட்டத்தின் துணை மட்டங்கள் - மூன்று (s,p,d)
45. N - ஆற்றல் மட்டத்தின் துணை மட்டங்கள் - நான்கு (s,p,d,f)
46. கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் - ஹென்றி பெக்கோரல்
47. இயற்கை கதிரியக்கத் தனிமங்களுக்கு எ.கா. – யுரெனியம், தோரியம், பொலோனியம், ரேடியம்.
48. கியூரி அம்மையார் கண்டறிந்த தனிமம் - பொலோனியம், ரேடியம்.
49. கதிரியக்கத்தில் வெளியிடப்படும் மின்சுமை உடைய துகள்களின் பாதை மற்றும் தன்மையை அறிய உதவுவது – மேகப்பட்டகம்.
50. கதிரியக்கத்தின் தன்மையை ஆராய பயன்படும் கருவி – அயனியாக்கல் எண்ணி.
51. செயற்கை கதிரியக்க தனிமங்கள் -- கதிரியக்க நியூக்ளியாய்டுகள் அல்லது ரேடியோ ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.
52. ஆல்பா கதிர்களின் முக்கிய மூலம் - யுரேனியம் 238
53. கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் துகள்களில் மிகப் பெரியது – ஆல்பா கதிர்கள்
அணுக்கரு இயற்பியல்
54. புரோட்டான்களும், நியூட்ரான்களும் - நியூக்ளியான்கள் எனப்படும்
மின்காந்த அலைகள்:
55. ஊடகத்தின் துணையின்றி பரவக்கூடிய அலைகள் - மின்காந்த அலைகள் எனப்படும்
56. மின்காந்த அலைகளுக்கு எ.கா. 1) காமாக் கதிர்கள் 2) x – கதிர்கள் 3) புறஊதா கதிர்கள் 4) அகச்சிவப்பு கதிர்கள் 5) கண்ணுறு கதிர்கள் 6) மைக்ரோ அலைகள் 7) ரேடியோ அலைகள்
57. மின்காந்த அலைகளின் வேகம் - 𝐶 = 𝑣𝜆
58. ஒளியின் திசைவேகத்திற்கான சமன்பாடு 𝐶 = 𝑣𝜆 அல்லது 𝑉 = 𝑛𝜆
59. அனைத்து மின்காந்த அலைகளும் -- குறுக்கலைகள் ஆகும்.
60. அலைகளின் அடிப்படை பண்புகளான எதிரொலித்தல், விலகல், குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு போன்றவற்றிற்கு அனைத்து மின்காந்த அலைகளும் உட்படுகின்றன.
61. மின்காந்த அலைகளுக்கு மின்னூட்டம் இல்லை.
X– கதிர்கள்:
62. அதிவேக எதிர்மின் வாய் கதிர்கள் ட ங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களை தாக்கும்போது உருவாகும் கதிர்கள் - x – கதிர்கள் ஆகும்.
63. தற்காலத்தில் பயன்படும் x கதிர் குழாயினை வடிவமைத்தவர் - கூலிட்ஜ்
64. எலும்பு, தங்கம், காரீயம் போன்ற பொருள்களின் வழியே x கதிர்கள் ஊடுருவாது.
65. பயன்கள்:
66. எலும்பு முறிவு சிகிச்சைக்கும், புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், சில தோல் நோய்களை குணப்படுத்தவும், X - கதிர்கள் பயன்படுகின்றன.
67. இரத்தினக்கல்லின் தரம் அறியவும், டென்னிஸ் பந்துகள் மற்றும் ரப்பர் பந்துகளின் குறைபாடுகளை கண்டறியவும், உலோக வார்ப்புகள் மற்றும் உலோக இணைப்புகளில் ஏற்படும் விரிசல்களை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது.
68. குற்றங்களை துப்பறியவும், படிகங்களின் உள்ளமைப்பு மற்றும் கரிம மூலக்கூறுகளின் அமைப்புகளையும் அறிய X கதிர்கள் பயன்படுகிறது.
69. கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டறியவும், போலிப்பத்திரங்கள் தயாரித்தலை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது
அகச்சிவப்புக் கதிர்கள்
70. மனித உடலிலிருந்து வெளியிடப்படும் அகச்சிவப்பு கதிர்களின் அளவு 1/10 மி.மீலிருந்து 1 / 100 மி. மீ.
71. இருட்டில் பாம்புகள், அகச்சிவப்புக் கதிர்களை பயன்படுத்தி தனது இரையை தேடிக் கொள்கின்றன.
பயன்கள்:
72. காற்று, மூடுபனி இவற்றை கடந்து படம் எடுக்கவும், இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசைகளிலும், எலும்பு இணைப்புகளிலும் ஏற்படும் வலியை நீக்கவும், மூலக்கூறுகளின் வடிவமைப்பை கண்டறியவும், அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகின்றன.
73. பெயிண்ட் பூச்சுகளை குறைந்த நேரத்தில் உலர வைக்கவும், புவியிலுள்ள நீர் மூலங்களை கண்டறியவும், செயற்கை கோள்களிலிருந்து புவியின் வானிலையை படம் பிடிக்கவும் நோய்வாய்ப்பட்ட பயிர்களை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள்
பயன்படுகின்றன.
மைக்ரோ அலைகள்:
74. மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் மூலகங்கள் - மைக்ரோ அலை அடுப்பு, மாக்னட்ரான், கிளிஸ்ட்ரான், இயங்கு அலைகுழாய்
பயன்கள்:
75. செயற்கைக்கோள் தொலைத் தொடர்பிலும், ராடார் சாதனங்களிலும் பயன்படுகிறது.
76. தானியக்கிடங்குகளில் பூச்சிகளை அழிக்கவும், உணவை பாக்டீரியங்களிலிருந்து
பாதுகாக்கவும், ரேடியோ வானியல் துறையிலும், அணு மூலக்கூறுகளின் கட்டமைப்பு அறியவும் பயன்படுகிறது
77. ரேடியோ அலைகள்:
78. பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் - ரேடியோ அலைகள் ஆகும்.
79. விண்மீன்களும், விண்மீன் திரள்களும் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன.
80. பயன்கள்:
81. ரேடியோ அலைகள் - ரேடியோ, தொலைக்காட்சி, செய்தி தொடர்பு சாதனங்களில் பயன்படுகின்றன.
காமா கதிர்கள்:
82. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 104
– 107
83. பயன்கள்:
1.
புற்றுநோய் சிகிச்சை,
2. உலோக குறைபாடு அறிய, 3. மருத்துவ கூடத்திலும், உணவுக் கூடத்திலும் நுண்கிருமிகளை அகற்ற
84. உணர்தல்:
ஒளிப்பட தகடு, கெய்கர் முல்லா குழாய் மூலம்
X - கதிர்கள்
85. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 103
– 105
86. 232. பயன்கள்:
1.
தோல் நோய் சிகிச்சை 2. எலும்பு முறிவை கண்டறிய
87. உணர்தல்:
ஒளிப்பட தகடு, ஒளித்திரை மூலம்
U – V கதிர்கள்
88. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 10 – 103
89. பயன்கள்:
1.
தோலில் ஏற்படும்
மாற்றங்களை குணப்படுத்த 2. துணி துவைத்தலில் வெண்மையாக்க
பயன்படுத்தும் தூள், 3. கள்ள நோட்டுகளை கண்டறிய
90. உணர்தல்:
ஒளிப்பட தகடு, ஓளிமின் கலன்கள், ஒளிரும் வேதிப்பொருள்
கண்ணுறு ஒளி
91. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 1 – 10
92. பயன்கள்:
1.
ஒளிப்படம், 2. ஓளிச் சேர்க்கை, தாவர வளர்ச்சி
93. உணர்தல்:
ஒளிப்படச்சுருள், ஓளிமின்கலம்
அகச்சிவப்பு கதிர்கள்
94. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 10-2
– 1
95. பயன்கள்:
1.
இரத்த ஓட்டத்தை
அதிகரிக்க
96. உணர்தல்:
தனிவகை போட்டோ பிலிம், தோல், குறைக்கடத்தி கருவிகள், 4. ஓளி சார்ந்த மின்தடை.
மைக்ரோ அலைகள்
97. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 10-5
– 10-3
98. பயன்கள்:
மைக்ரோ அலை அடுப்பு, மைக்ரோ அலை செய்தி தொடர்பு இணைப்புகள்.
99. உணர்தல்:
மைக்ரோ அலை ஏற்பிகள்
100. ரேடியோ
அலைகள்
101. ஆற்றல் நெடுக்கம் (எலெக்ட்ரான் வோல்ட்): 10-11
– 10-6
102. பயன்கள்:
1. ரேடியோ ஒலிபரப்பு 2. தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொடர்பு, கப்பல் விமானங்களைக் கண்டறியும் ராடார் அமைப்பு, ரேடியோ வானியல்
103. உணர்தல்:
உலோக ஏரியல்கள், 2. இசைவுறு எலெக்ட்ரானிக்
சுற்றுகள்
கதிரியக்கம்:
104. கதிரியகத்தைக் கண்டறிந்தவர் - ஹென்றி பெக்கொரல்
105. கதிரியக்க ஆய்வு மேற்கொண்டவர்கள் -- மேடம் கியூரி மற்றும் அவரது கணவர் பியரி கியூரி மற்றும் ரூதர்போர்டு ஆகியோர்
106. அணு எடை 206க்கு மேல் கொண்ட தனிமங்கள் - யுரேனியம், பொலோனியம், ரேடியம், தோரியம்
கதிரியக்க சோதனை:
107. கதிரியக்க சோதனையில் இடதுபுறம் விலகுவது – ஆல்பா கதிர்கள்
108. கதிரியக்க சோதனையில் வலதுபுறம் விலகுவது – பீட்டா கதிர்கள்
109. கதிரியக்க சோதனையில் நேராக செல்வது – காமா கதிர்கள்
110. தன்மை
111. α – கதிர்கள்
: ஹீலியத்தின் (2H4) உட்கருக்கள்
112. β – கதிர்கள்:
விரைந்து செல்லும் எலெக்ட்டரான்கள்
113. காமா கதிர்கள்: அதிக அதிர்வெண், குறைந்த அலைநீளம், கொண்ட மின்காந்த கதிர்வீச்சுகள்
மின்னூட்டம்
114. α – கதிர்கள்: நேர் மின்னூட்டம்
115. β – கதிர்கள்: எதிர் மின்னூட்டம்
116. காமா கதிர்கள்: மின்னூட்டமற்றவை
திசைவேகம்
117. α – கதிர்கள்
: 1.4 X 107
மீ/வி முதல்
2.2 X 107 மீ/வி
118. β – கதிர்கள் : 99% ஒளியின்
திசைவேகம்
119. காமா கதிர்கள்: ஓளியின் திசைவேகம் (3 x 108 மீ/வி)
அயனியாக்கும் ஆற்றல்
120. α – கதிர்கள்: பெரும்
121. β – கதிர்கள்: α - கதிரை விட குறைவு
122. காமா கதிர்கள்: சிறுமம்
ஊடுருவ திறன்
123. α – கதிர்கள்: சிறுமம்
124. β – கதிர்கள்: α - விட அதிகம்
125. காமா கதிர்கள்: பெருமம் X- ray ஐ விட அதிகம் ஏனெனில், X -கதிரை விட இதன் அலைநீளம் குறைவு.
மின்காந்தப் புல விளைவு
126. α – கதிர்கள்: விலகலடைகின்றன
127. β – கதிர்கள்: விலகலடைகின்றன
128. காமா கதிர்கள்: விலகலடைகின்றன
உணர்தல்
129. α – கதிர்கள்:
1.
போட்டோபிலிம், முகில் கலம், கெய்லர் - முல்லர்
130. β – கதிர்கள்:
போட்டோபிலிம், முகில் கலம், கெய்லர்-முல்லர்
131. காமா கதிர்கள்: போட்டோபிலிம், முகில் கலம், கெய்லர்-முல்லர்
132. செயற்கை கதிரியகத்தை கண்டறிந்தவர்கள் -- கியூரி, ஜோலியட்
133. தூண்டப்பட்ட கதிரியக்கம் -- ரேடியோ ஐசோடோப்புகள் எனப்படும்
134. ரேடியோ ஐசோடோப்புகள் பயன்கள்
135. ரேடியோ பாஸ்பரஸ்: தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை அறிய
136. காமா கதிர்கள்: மெல்லிய தாள்கள் அல்லது எக்கு தகடுகளின் தடிமனைக் காண.
137. சோடியம் - 24 (அ) புரோமின் – 82: குழாயில் செல்லும் பாய்பொருள் பாயும் வீதம் கணக்கிட.
138. ரேடியோ கார்பன் C14 : புதைபடிவங்கள், பாறைகள், புவியின் வயதறிய.
139. கோபால்ட் – 60: புற்றுநோய் சிகிச்சை
140. அயோடின் – 131: தைராய் சுரப்பி சிகிச்சை, மூளையில் தோன்றும் கட்டிகளின் இடத்தை கண்டறிய.
141. சோடியம் – 24: இதயம் செயல்படும் திறனறிய.
142. இரும்பு – 59: இரத்தசோகையை குணப்படுத்த.
143. பாஸ்பரஸ் - 32, ஸ்ரான்சியம் - 90 : தோல் புற்றுநோய் குணப்படுத்த
144. டீரிடியம், கார்பன் – 14: உயிரியல் மூலக்கூறுகளை கண்டறிய.
145. இதய பேஸ்மேக்கர் கருவிக்கு ஆற்றல் அளிக்க பயன்படும் மின்கலம் – அணுக்கரு மின்கலம்
146. கதிரியக்கத் தனிமம் α - துகள்களை உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அணு எண். 2 குறையும், நிறை எண். 4 குறையும்.
147. யுரேனிய அணுக்கரு பிளவின்போது 200 Mev ஆற்றல் வெளிப்படுகிறது.
148. 1 கிராம் யுரேனியம் அணுக்கரு பிளவிற்கு உட்படும் போது 5.128 x 1023 Mev ஆற்றல் வெளிப்படுகிறது. இது 2.26 X 104
கிலோ வாட் மணி ஆற்றலுக்குச் சமம்.
149. கதிரியக்கத் தனிமம் β - துகள் உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அணு எண் ஒன்று அதிகரிக்கும், நிறை எண் மாறுதல் ஏற்படுவதில்லை.
150. கதிரியக்கத்தனிமம் காமா கதிர்களை உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அதன் அணு எண்ணிலோ நிறை எண்ணிலோ மாற்றமில்லை. அணுக்கருவின் ஆற்றல் மட்டங்களில் மாற்றம் ஏற்படும்.
151. அணுக்கரு பிளவை கண்டறிந்தவர் - ஆட்டோஹான் ஸ்ட்ராஸ்மான்
152. அணுகுண்டு தாயாரிக்கப்படும் தத்துவம் - அணுக்கரு பிளவு
153. ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கப்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு
154. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு E = mc2
155. அணுநிறையின் அலகு = a.m.u.
156. 1 a.m.u.= 931 Mev
157. Mev என்பது மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆகும்
158. அணுக்கரு உலை:
159. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அதிகம் காணப்படுவது U238 (99.28%)
160. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என அழைக்கப்படுவது – U235 எனப்படும்.
161. அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான்கள் - கிராபைட், பெரிலியம், கனநீர்(D2O), பெரிலியம் ஆக்சைடு
162. அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் கழிகள் - காட்மியம், போரான், அல்லது ஹேப்னியம்.
163. அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்கள் - சாதாரணநீர், கனநீர் (D2O), காற்று, கார்பன்டை ஆக்சைடு, ஹீலியம், திரவ சோடியம்
அணுக்கரு இணைவு:
164. அணுக்கரு இணைவில் இரு டியூட்ரியம் அணுக்கருக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாக மாறும் போது வெளிப்படும் ஆற்றல் E = 23.84 Mev
165. அணுக்கரு இணைவு கொள்கையை வெளியிட்டவர் - பெத்தே
166. சூரியனிலும், விண்மீன்களிலும் ஏற்படும் ஆற்றலுக்கு காரணம் - அணுக்கரு இணைவு
167. சூரியனை விட அதிக வெப்பநிலையில் உள்ள விண்மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை கார்பன் - நைட்ரஜன் சுழற்சி மூலம் பெறுகின்றன.
168. சூரியனைவிட குறைந்த வெப்பநிலையிலுள்ள விண்மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை புரோட்டான் - புரோட்டான் சுழற்சி மூலம் பெறுகின்றன.
169. அணுக்கரு இணைவைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:
170. தேவையான எரிபொருள்களான ஹைட்ரஜன், டியூட்ரியம், லித்தியம் போன்ற அணுக்கருக்கள் மிகுந்த அளவில் கடலில் கிடைக்கின்றன
171. அணுக்கரு இணைவில் கழிவுப்பொருள்கள உருவாவதில்லை.
172. அணுக்கரு பிளவு மூலம் ஓர் அணுக்கரு துகளின் மூலம் கிடைக்கும் சராசரி ஆற்றல் --0.850 Mev.
173. அணுக்கரு இணைவு மூலம் ஓர் அணுக்கரு துகளின் மூலம் கிடைக்கும் சராசரி ஆற்றல் - 6.75 Mev.
174. கதிர்வீச்சின் அலகு – ராண்ட்ஜன் ஆகும்
175. ஒரு கிலோ கிராம் காற்றில் 1.61 X 1015
அயனி இணைகளை உண்டாக்கக்கூடிய
கதிர்வீச்சு ஓரலகு ராண்ட்ஜன் ஆகும்.
176. இந்தியாவில் முதல் அணுக்கரு ஆற்றல் திட்டத்தை உருவாக்கியவர் - ஹோமிபாபா
177. பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - டிராம்பே
178. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காணப்படும் ஆராய்ச்சி உலைகள் -- அப்சரா, சிரஸ், ஜெரிலினா, பூர்ணிமா, துருவா
179. X – கதிர்கள் கால்சியம் வழியே ஊடுருவாது.
180. கதிரியகத்தின் மூலம் ஒரு ரேடியே ஐசோடோப்பானது தனது தொடக்க நிறையிலிருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு “அரைஆயுட்காலம்” என்று பெயர்.
181. கார்பனின் அரை ஆயட்காலம் - 5730 ஆண்டுகள்
182. உலகில் மிகப்பழமையான பாறைகள் காணப்படும் இடம் - வட கனடா