விலங்கியல் - 1
மனித உடற்செயலியல்
1. உடற் செயலியலை விளக்கியவர் - ஆண்டிரியாஸ் வெசாலியஸ்
2. இவர் மனித உடல் அமைப்பு எனும் நூலை பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார்
வாய்:
3. உமிழ்நீரிலுள்ள சுரப்பிகள் மொத்தம் மூன்று. அவை மேல் அன்னச் சுரப்பி (பரோட்டிட்) – பெரியது, கீழ்த்தாடைச் சுரப்பி (சப்மாக்சிலரி), நாவடிச் சுரப்பி (சப்லிங்குவல்) சிறியது
4. உமிழ்நீரில் லைசோசோம் உள்ளது. இது பாக்டீரியாவை அழிக்கிறது
5. உமிழ்நீரில் உள்ள நொதி – டயலின்
6. டயலின் ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுகிறது
7. குழந்தைகளின் பால்பற்கள் எண்ணிக்கை 20 (இருபது)
8. பற்சூத்திரம் : 2123/2123
X 2
9. நமது உடலில் மின கடினமான பகுதி – பல்லிலுள்ள எனாமல்
10. தொண்டைப் பகுதி ஏழு துவரங்களுடன் தொடர்புடையது
11. உணவுக்குழலின் நீளம் 22 செமீ
12. வாய்க்குழியில் உணவு அரைக்கப்பட்டு உணவு கவளங்களாக மாற்றப்படுவதற்கு – மேஸ்டிகேசன் என்று பெயர்
13. வாய்க்குழியிலிருந்து இரைப்பைக்கு உணவு விழுங்கப்படுவது – டிகுளுட்டிஷன் என்று பெயர்
14. உணவு உண்ணும் போது மூச்சுக்குழலை மூடும் உறுப்பு – எப்பிகிளாட்டிஸ்
15. பறவைகளின் குரல்வளை „சிரிங்ஸ்‟ எனப்படும்
இரைப்பை:
16. இரைப்பையின் சுவர் 4 அடுக்குகளால் ஆனது
17. இரைப்பை முன்சிறுகுடலுடன் இணையுமிடம் - பைலோரஸ்
18. இரைப்பையின் மையப்பகுதி – பன்ட்ஸ்
19. இதயத்துக்கருகே உள்ள பகுதி – கார்டியாக் இரைப்பை
20. இரைப்பையில் சுரப்பவை ஹைட்ரோகுளோரிக் அமிலம் (உணவிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க) மற்றும் இரைப்பை ஜீரண நீர்.
21. இரைப்பை ஜீரண நீரில் உள்ளவை – பெப்சின், ரெனின், லிப்பேஸ்
22. இரைப்பையின் சுவர்கள் சுரப்பது மியூகஸ். இது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் இரைப்பை சுவர் அரிப்பதை குறைக்கிறது. இதன் குறைவினால் அல்சர் ஏற்படும்.
23. இரைப்பையிலுள்ள அரைக்கப்பட்ட உணவின் பெயர் - ஸைம்
சிறுகுடல்:
24. முன்சிறுகுடல் - டியோடினம்
25. நடுசிறுகுடல் - ஜிஜீனம்
26. பின்சிறுகுடல் - இலியம்
27. கணையம் மற்றும் கல்லீரல் சுரப்பிகள் இணையுமிடம் - டியோடினம்
28. உடலின் மிகப்பெரிய சுரப்பி – கல்லீரல்
29. கல்லீரல் சுரப்பது – பித்தநீர்
30. பித்தநீர் சேகரிக்கப்படுவது – பித்தப்பையில்
31. பித்தநீர் மஞ்சள் நிறமுடையது. கசப்பு சுவையுடையது
32. பித்தநீரிலுள்ள பித்த உப்புகள் கொழுப்புகளை எளிய துகள்களாக்கி நீரில் பரப்பு இடுவிசையினை குறைத்து பால்மமாக்குகின்றன.
33. ஹீமோகுளோபின் சிதைவதன் மூலம் கிடைக்கும் நிறமிகள் - பிலிரூபின், பிலிவெர்டின் என்னும் புரதங்கள் ஆகும்.
34. கிளைகோஜன் கல்லீரலிலும், கொழுப்பு அடிப்போஸ் திசுவிலும் சேமிக்கப்படுகிறது.
கணையம்
35. இரைப்பையின் கீழே உள்ள இலை வடிவ சுரப்பி – கணையம்
36. இது சுரப்பது கணைய நீர். இதன் PH மதிப்பு 8-9
37. இதன் மேல் லாங்கர்ஹான் திட்டுக்கள் உள்ளது. இது இன்சுலினைச் சுரக்கிறது.
38. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி இரண்டும் கணையம் காணப்படுவதால் கணையமானது „இரட்டைப்பண்பு சுரப்பி‟ எனப்படுகிறது.
கணைய நீரிலுள்ள நொதிகள்
39. சோடியம் பை கார்பனேட் - ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்குகிறது
40. கணைய அமிலேஸ் - கார்போஹைட்ரேட்டைச் செரிக்கிறது.
41. கணைய லிப்பேஸ் - கொழுப்பை செரிக்கிறது.
42. கணைய டிரிபிசின் - பெப்டோனை பாலிபெப்டைடு ஆக்குகிறது.
43. கைமோ டிரிப்சின் - பால் புரதங்களைச் செரிக்கிறது.
சிறுகுடல் சுரப்பு:
44. டியோடினத்தில் சுரக்கிறது
45. 6 நொதிகள் இதிலுள்ளன
46. எரிப்சின்: பெப்டோன் மற்றும் பாலிபெப்டைடுகளை அமினோ அமிலமாக்குகிறது
47. மால்டேஸ்: மால்டோஸை குளுக்கோஸாக்குகிறது
48. சுக்ரோஸ் (இன்வர்டேஸ்): சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக்குகிறது
49. லாக்டோஸ்: லாக்டோஸை குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸாக்குகிறது
50. குடல் லிப்பேஸ்: கொழுப்பை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரலாக்குகிறது
51. இலியத்தில் காணப்படுபவை – குடலுறுஞ்சிகள்
52. குடலுறுஞ்சிகள் உட்கிரகித்தலின் இறுதி அலகுகள் ஆகும். இது ரத்த தந்துகிகள் மற்றும் நிணநீர் குழாய்களால் ஆனது
53. ரத்த தந்துகிகள் கொழுப்பை தவிர பிற அனைத்தையும் உறிஞ்சுகிறது
54. நிணநீர் குழாய்கள் கொழுப்பை மட்டும் உறிஞ்சும்
பெருங்குடல்:
55. இங்கு செரிக்கப்படாத உணவு மலமாக்கப்படுகிறது.
56. எஸஸெரிசியா கோலை என்ற பாக்டீரியா மூலம் மலம் உருவாகிறது
57. சிறுகுடல் பெருங்குடலில் திறக்குமிடத்தில் சீக்கம் உள்ளது. இதில் குடல்வால் உள்ளது.
58. குடல்வால் கிருமி அல்லது மாசுகளால் பாதிக்கப்பட்ட குடல்வால் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்.
59. பெருங்குடல் சீக்கம், கோலான் (குடல்பகுதி), மலக்குடல் என மூன்று பகுதிகளாக உள்ளது
60. மலக்குடலில்
உள்ள செரிக்கப்படாத பொருட்கள் - ராஃபேஜ் னப்படும்
இரத்தச் சுழற்சி மண்டலம்:
இரத்தம்:
61. திரவ நிலையிலுள்ள ஒரே திசு (பாய்ம திசு) – ரத்தம்
62. ரத்தச் சுழற்சியை கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி
63. மனித உடல் எடையில் 6 – 8 % ரத்தம் உள்ளது
64. இரத்தம் ஒரு தாங்கல் கரைசல்
இரத்தத்திலுள்ளவை:
65. சிவப்பணு (எரித்ரோசைட்டுகள்)
66. வெள்ளையணு (லியுகோசைட்டுகள்)
67. இரத்தத்தட்டுக்கள் (த்ராம்போசைட்டுகள்)
68. பிளாஸ்மா
சிவப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்)
69. ஆயுட்காலம் 100 – 120 நாட்கள்
70. எலும்பு மஜ்ஜையில் (விலா முள்ளெலும்பு) உருவாகிறது
71. மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றில் அழிக்கப்படுகிறது
72. இதில் உட்கரு இல்லை
73. இவை இருபுறம் குழிந்த வட்டமான மற்றும் தட்டையான செல்கள் ஆகும்
74. இதிலுள்ள „ஹீமோகுளோபின்‟ எனும் நிறமி சுவாசித்தலில் பங்கு பெறுவதால் „ஆக்ஸிஜன் படகு‟ எனப்படும். இது ஒரு புரதம் ஆகும்
75. இதன் குறைவினால் இரத்தசோகை (அனீமியா) உண்டாகிறது
76. இதன் அதிகரிப்பினால் பாலிசைத்தீமியா
77. ஒரு கனமல்லி லிட்டர் ரத்தத்தில் 5,000,000 – 5,500,000 இரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன.
வெள்ளையணு (லியுகோசைட்டுகள்)
78. எலும்பு மஜ்ஜை, நிணநீர் முடிச்சுகளில் உருவாகிறது
79. ஒரு கனமில்லி லிட்டர் இரத்தத்தில் 5000 – 10000 அணுக்கள் உள்ளன
80. ஆயட்காலம் 2-3 வாரங்கள்
81. வெள்ளையணு குறைவினால் ஏற்படும் நோய் - லியுக்கோபினியா
82. வெள்ளையணு அதிகரிப்பினால் ஏற்படும் நோய் - லுக்கீமியா இரத்தப்புற்று நோய்)
83. ஆண்டிஜெனை (எதிர்ப்பொருள்) உருவாக்குவது – லிம்போசைட்டுகள்
84. நுண்கிருமிகளை விழுங்குபவை – மோனோசைட்டுகள்
85. வெள்ளையணுக்களின் விகிதாச்சார எண்ணிக்கை
86. நியூட்ரோபில் - 60 – 70 %
87. ஈசினோபில் - 0.5 – 3.0
%
88. பேசோபில் - 0.1 %
89. லிம்போசைட்டு – 20 – 30 %
90. மோனோசைட்டு – 1 – 4 %
91. இரத்தம் உறைதலை தடுக்கும் பொருள் – ஹெபாரின். இதனை சுரப்பது – மாஸ்ட்
92. செல்கள். பொதுவாக சுத்த இரத்தம் செல்வது – தமனிகளில். அசுத்த இரத்தம் செல்வது சிரைகளில்.
93. இரத்ததானம் செய்ய வயது வரம்பு 16 – 60 வயது
த்ராம்போசைட்டுகள் (இரத்த தட்டுக்கள்)
94. எலும்பின் சிவப்பு மஜ்ஜையிலுள்ள மெகாகேரியோசைட்டுகள் எனும் பெரிய செல்கள் அழிவதால் உருவாகின்றன.
95. பிளாஸ்மா புரதமாக புரோத்ராம்பின் - கல்லீரலில் உருவாகிறது
96. இயல்பான இரத்தம் உறைதல் நேரம் 5 – 8 நிமிடம்
97. பைப்ரின் இழைகளான வலை இரத்தம் வெளியேறுவதை தடுத்து இரத்த இழப்பை குறைக்கிறது.
98. இரத்த குழாயில் ஏற்படும் ரத்தக்கட்டி (திராம்பஸ்) உருவாகும் முறைக்கு த்ராம்போசிஸ் என்று பெயர்.
99. மாரடைப்பு ஏற்பட காரணம் - கரோனரி திராம்போசிஸ்
100. பக்கவாதம் ஏற்பட காரணம் - செரிப்ரல் திராம்போசிஸ்
101. இரத்தக்கட்டியின் ஒரு பகுதி விடுபட்டு ரத்தகுழாய்களில் நுழைந்தால் அதற்கு எம்போலஸ் என்று பெயர்.
இதயம்:
102. ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் 70 மி. லி. இரத்தம் வெளித் தள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லிட்டர் ரத்தம் இதயத்திலிருந்து வெளியேறுகிறது.
103. இதயம் அமைந்துள்ள இடம் - மீடியோஸ்டினம்
104. இதயத்துடிப்பு – நிமிடத்திற்கு 72 முறை
105. இதயத்தைச் சுற்றியுள்ள உறை பெரிகார்டியம். இதய உறைகளுக்கு இடையேயுள்ள திரவம் பெரிகார்டியல் திரவம்.
106. மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது: 1. வலது ஏட்ரியம் (ஆரிக்கிள்) 2. இடது ஏட்ரியம் வலது வெண்டிரிக்கிள் 4. இடது வெண்டிரிக்கிள்
107. சுத்திகரிக்கப்படாத இரத்தம் நுழையுமிடம் - வலது ஆரிக்கிள். இதில் கீழ்பெருஞ்சிரை மேல் பெருஞ்சிரை , கரோனரி சைனஸ் ஆகியவை இணைகின்றன.
108. நான்கு நுரையீரல் சிரைகளின் மூலமாக சுத்த இரத்தத்தை இடது ஆரிக்கிள் பெறுகிறது. வலது வெண்டிரிக்கிள், வலது ஆரிக்கிளிலிருந்து அசுத்த இரத்தம் பெற்று நுரையீரல் தமணி மூலம் நுரையீரலுக்கு செலுத்துகிறது.
109. இடது வெண்டிரிக்கிள், இடது ஆரிக்களிலிருந்து சுத்த இரத்தம் பெற்று அதனை மகாதமனிக்குள் அனுப்புகிறது.
110. வலது ஆரிக்கிளுக்கும் வலது வெண்டிரிக்கிளுக்கும் இடையேயுள்ள வால்வு – மூவிதழ் வால்வு.
111. இடது ஆரிக்கிளுக்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையேயுள்ள வால்வு – ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு
112. வலது வெண்டிரிக்கிள் நுரையீரல் தமனியுடன் சேருமிடத்தில் உள்ள வால்வு – பல்மோனரி வால்வு
113. சராசரி மனிதனின் இரத்த அழுத்தம் 120/ 80 மி. மீ மெர்குரி
114. ஏட்ரியம் (ஆரிக்கிள்) விரிவடைந்த நிலை டையஸ்டோல் (80 mm Hg)
115. ஏட்ரியம் (ஆரிக்கிள்) சுருங்கும் நிலை சிஸ்டோல் (120 mm Hg)
116. இடது வெண்டிரிக்கிளில் துவங்கி வலது ஏட்ரியத்தில் முடிவடைவது – சிஸ்டமிக் இரத்த சுழற்சி மண்டலம்.
117. வலது வெண்டிரிக்கிளில் துவங்கி இடது ஆரிக்கிளில் முடிவடைவது – பல்மோனரி ரத்தசுழற்சி மண்டலம்.
118. ஆரிக்கிளோ – வெண்டிரிக்குலார் முடிச்சிலிருந்து தோன்றும் சிறப்பு தசை நார்களாலான கற்றை – „ஹிஸ்ஸின் கற்றை‟ எனப்படும்.
119. ஸிஸ்ஸின் கற்றை மிக மெல்லிய இழைகளான ஓர் அடர்ந்த அமைப்பாகி, வெண்டிரிக்கிள் உட்பகுதி முழுவதும் படர்ந்துள்ள அமைப்பின் பெயர் - பர்கின்ஜி அமைப்பு.
120. இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் கருவி - ஸ்பிக்மோனோமீட்டர்
121. நமது தோலில் காணப்படும் நிறமி – மெலனின்
122. இரத்தக்குழாய் நோய் என்பது – கரோனரி இதய நோய்
123. இரத்தக்குழாயின் உட்புறம் கொழுப்பு ஒட்டிக்கொள்வதால் ஏற்படும் அடைப்பினால் ரத்த ஓட்டம் தடைப்படுவதற்கு ஆர்த்தோகிளிரோஸஸ் என்று பெயர்.
124. இதயத் தசைக்கு தேவையான இரத்தம் செல்லாததால் ஏற்படும் இதய வலிக்கு – ஆஞ்சினா என்று பெயர்.
125. இதய வால்வு பழுதாவதால் ஏற்படும் முடக்குநோய் ருமேட்டிக் இதயநோய். இதற்கு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா ஏற்படுத்தும் தொண்டைப்புண்ணே காரணம்.
126. ஆஞ்சியோகிராம்: எக்ஸ்ரேயை பயன்படுத்தி இரத்த நாளங்களை பரிசோதித்தல்.
127. ஆஞ்சியோபிளாஸ்டி: இரத்தநாளத்திலுள்ள அடைப்பினை நீக்க உதவுகிறது.
சிறுநீரகம்:
128. அவரை விதை வடிவமுடையது
129. சிறுநீரகத்தின் செயல் அலகு – நெப்ரான்
130. சிறுநீரகத்தை சூழ்ந்துள்ள தடித்த, ஒளி ஊடுருவும் படலம் - கேப்சூயூல்
131. சிறுநீரகத்தின் குழிந்த உட்புறப்பகுதி - ஹைலஸ்
132. சிறுநீரகத்தின் சிவந்த வெளிப்பகுதி – கார்டெக்ஸ்
133. சிறுநீரகத்தின் வெளிறிய உட்பகுதி – மெடுல்லா
134. ஹைலஸ் வழியே புகும் சிறுநீர்நாளம் அகன்ற புனல் போன்றுள்ளது. இது பெல்விஸ் எனப்படும்.
135. மெடுல்லாவிலுள்ள கூம்பு வடிவ அமைப்புகள் - ரீனல் பிரமிடுகள் எனப்படும்
136. பிரமிடுகளுக்கிடையில் பெல்விஸ் மடிப்பாக காணப்படுகிறது. இந்த அமைப்பின் பெயர் - கேலிசஸ் எனப்படும்.
137. பிரமிடுகளுக்கிடயில் கார்டெக்ஸ் திசு நீண்டுள்ளது. இது பெர்டினின் ரீனல் தூண்கள் எனப்படுகிறது.
138. நெப்ரானில் தட்டையன எபிதீலிய செல்கள் - பௌமேனின் கேப்சூயூலில் காணப்படுகிறது
139. பௌமேனின் கேப்சூயூலில் உட்செல்லிலும், வெளி செல்லிலும் கிளைத்தமனிகள் கொத்தாக காணப்படும் அமைப்பிற்கு – குளொமுருலஸ் எனப்பெயர்.
140. குளோமுருலஸ், பௌமேனின் கேப்சூயூல் இரண்டும் சேர்ந்த பகுதி – மால்பீஜியன் கேப்சூயூல் எனப்படுகிறது. இது இரத்தத்தை வடிகட்ட உதவுகிறது.
141. வடிகட்டப்பட்ட நீரிலுள்ள குளுகோஸ் அண்மை சுருண்ட சூழலில் உறிஞ்சப்படுகிறது.
142. ஏனைய அயனிகள் நெப்ரான் மூலம் உறிஞ்சப்படுகிறது
143. குளோமுருலார் தமனியில் ரத்த அழுத்தம் - 75 மி. மீ. மெர்குரி
144. மற்ற பகுதியில் தமனியில் ரத்த அழுத்தம் - 25 மி. மீ. மெர்குரி
145. டயாலஸிஸ் என்பது செயற்கை முறையில் கழிவு பொருட்களை அகற்றும் முறை ஆகும்
நுரையீரல்.
146. உணவானது சுவாச பாதையில் சென்றுவிடாமல் தடுப்பது – எபிக்ளாட்டிஸ்
147. உடற்குழியை மார்பறை, வயிற்றறை என பிரிப்பது – உதரவிதானம்
148. நுரையீரலை சுற்றியுள்ள இரு அடுக்கு – ப்ளுரா. இவ்விரு அடுக்குகளுக்கிடையே ப்ளுரல்
திரவம் உள்ளது.
149. இரு நுரையீரல்களுக்கிடையே உள்ள இடைவெளி – மீடியாஸ்டினம்
150. மனித நுரையீரல் உள்ள நுண்காற்றுப்பைகளின் எண்ணிக்கை – 300 மில்லியன்.
151. நுரையீரலின் முன்புறமுள்ள மார்பெலும்பின் பெயர் - ஸ்டெர்னம்
152. சுவாசம் இருவகைப்படும். அவை 1. உட்சுவாசம் 2. வெளிசுவாசம்
153. மூச்சுக்குழலின் பெயர் - ட்ரக்கியா. இதன் உட்சுவற்றில் எபிதீலியம் மற்றும் கோழை சுரப்பிகள் உள்ளன.
154. ஒரு நிமிட சுவாசத்தில் மனித நுரையீரல் 6 லிட்டர் காற்றை கொண்டிருக்கும்.
155. சுவாச மண்டலத்தை பாதிக்கும் நோய் ஆஸ்த்துமா.
156. 100 மி. லி. இரத்தத்தில் சுமார் 15 கிராம் ஹீமோகுளோபின்கள் உள்ளது