விலங்கியல் - 2
எலும்பு மண்டலம்:
1. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206.
2. மண்டையோட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 8.
3. முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14.
4. முதுகு முள்ளெலும்புகளின் எண்ணிக்கை 33.
5. மார்பு எலும்புகளின் எண்ணிக்கை 12.
6. இடுப்பு முள்ளெலும்புகளின் எண்ணிக்கை 5.
7. மார்பறையில் எலும்புகளின் எண்ணிக்கை 12 சோடி விலா எலும்புகள்.
8. காயாய்டு எலும்பு என்பது – கீழ்த்தாடைக்கும் குரல்வளைக்கும் இடையிலுள்ளது.
9. முதல் கழுத்து முள்ளெலும்பு – அட்லஸ் (மண்டையோட்டை தாங்குகிறது)
10. 2வது கழுத்து முள்ளெலும்பு – ஆக்ஸிஸ்
11. 11, 12வது மார்பெலும்புகள் „மிதக்கும் விலா எலும்புகள்‟ எனப்படும்.
12. இடுப்பெலும்பு வளையத்தின் பெயர் - பெல்விஸ்
13. உடம்பிலுள்ள எலும்புகளில் நீளமானது – பீமர் (தொடை எலும்பு)
தசை:
14. எலும்புத் தசையின் செயல் அலகு – சார்கோமியர்
15. சார்கோமியர் சுருங்கும் முறையினை விளக்கும் கோட்பாடு – சறுக்கும் இலை கோட்பாடு
16. சார்கோமியர் ஆர்பின் மற்றும் மையோசிஸ் புரதங்களாலானது
17. Z தட்டு, M தட்டு, ஆகியவை காணப்படுமிடம் - சார்கோமியர்
18. மனித உடலில் எலும்புத்தசைகள் எண்ணிக்கை – 600க்கும் மேல் உள்ளன
தசை அமைந்துள்ள இடம்
19. டீரப்பீஸீயஸ்:
முதுகின் மேற்புறம், கழுத்தின் இருபுறமும்
20. டெல்டாயிடு:
தோள்பட்டையில்
21. பெக்டோரல்:
மார்பு
22. லாட்டிமஸ்:
முதுகின் பின்புறம் உள்ள அகன்ற தசை
23. பை ஃசெப்ஸ்:
மேற்கையின் முன்பகுதி
24. டிரைசெப்ஸ்:
மேற்கையின் பின்பகுதி
25. காஃப்: கணுக்காலுக்கும்,
முழங்காலுக்கும் இடையே உள்ள பின்கால் தசை
கண்
26. இமையடிபடலத்தின் பெயர் – கன்ஜக்டிவா.
27. மேல்இமையின் உள் விளிம்பில் காணப்படும் கண்ணீர்சுரப்பி – லாக்ரிமல் சுரப்பி.
28. கண்கோளத்தின் ஒளிஊடுருவும் பகுதி கார்னியா (கருவிழி).
29. விழிக்கோளம் மூன்று அடுக்குகளை கொண்டது.
30. வெளி அடுக்கானது ஒளி ஊடுருவக் கூடிய விழிவெண்படலம் மற்றும் ஒளி ஊடுருவாத விழிவெளிப்படலம் என்ற பகுதியால் ஆனது.
31. மைய அடுக்கு விழியடிக் கரும்படலம், சிலியரித்தசைகள், ஐரிஸ் மற்றும் விழிலென்ஸ் ஆகியவற்றைக் கொண்டது.
32. உள் அடுக்கில் விழித்திரை காணப்படுகிறது.
33. விழிலென்சின் வடிவத்தையும், வளைவையும் கட்டுப்படுத்தும் பகுதி – சிலியரித்தசைகள்.
34. ஒளிபுகா வெளிப்புற வெண்மைப்பகுதி - ஸ்கிளிரா (விழிவெண்படலம்)
35. விழித்திரையில் பெயர் - ரெட்டினா
36. விழித்திரையில் காணப்படும் ஒளி உணர் செல்கள் கூம்பு வடிவம் மற்றும் குச்சி வடிவ செல்களாலானது.
37. குச்சி (உருளை) வடிவ செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவுகிறது.
38. கூம்பு செல்கள் வண்ணங்களை உணர உதவுகிறது.
39. விழித்திரையில் தண்டுகள் மற்றும் கூம்புகள் மிகுந்த பகுதி – மஞ்சள் புள்ளி எனப்படும்.
40. விழித்திரையில் தண்டுகள் மற்றும் கூம்புகள் காணப்படாத பகுதி – குருட்டுப்புள்ளி எனப்படும்.
41. விழித்திரையில் விழும் பிம்பம் தலைகீழானது.
42. ஒருவருக்கு கிட்டப்பார்வை (அ) தூரப்பார்வை இருப்பதன் காரணம் – விழித்திரையில் பிம்பங்கள் குவிக்கப்படாமல் இருப்தே காரணமாகும்.
43. ஒருவருக்கு கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரு குறைபாடுகளும் காணப்பட்டால் அதனை சரி செய்ய குவி மற்றும் குழி லென்சுகள் இணைந்த கண்ணாடியை பயன்படுத்தலாம்.
44. ஒளியாற்றல் கூம்பு, குச்சி செல்களால் மின்தூண்டலாக மாற்றப்பட்டு மூளைக்கு
கடத்தப்படுகிறது.
45. மாலைக்கண் நோயால் பாதிக்கப்படுவது – குச்சி (உருளை) செல்கள்
46. கண்குறைபாட்டை லேசர் அறுவைசிகிச்சை மூலம் குணமாக்கலாம்.
47. கண் உறையின் நடுப்பகுதி கோராய்டு. கண்ணின் முன்புறத்தில் இவ்வுறை „ஐரிஸ்‟ எனும் உறுப்பாக உள்ளது.
48. விழிலென்சை சுற்றியுள்ள தசைகளால் சூழப்பட்டப்பகுதி – கண்பாவை
49. கண்ணில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்தும் பகுதி – கண்பாவை
50. கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையேயுள்ள திரவம் - ஆக்குவாஸ் ஹியூமர்
51. லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையேயுள்ள திரவம் - விட்ரியஸ் ஹியூமர்
52. அக்குவாஸ் ஹியூமர், விட்ரியஸ் ஹியூமர் ஆகியவை கண்ணிற்கு வடிவத்தை அளிக்க பயன்படுகிறது
53. விழித்திரையின் மையத்தில் தெளிவான பார்வைக்கு காரணமான பகுதி – மாக்குலா
54. காட்டிராக்ட்‟ என்பது கண்புரைநோய்
55. விழிலென்சின் குவியதூரமதிப்பு – 2.5 செ.மீ
56. தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு – 25 செ.மீ
57. இரவில் காணப்படும் விலங்குகளில் கண்களின் விழித்திரைக்கு பின்னால் காணப்படும் ஒளி எதிரொலிப்பு ஏட்டின் பெயர் - டபீட்டம் எனப்படும். இது குவினைன் படிகங்களால் ஆனது. இக்குவினைன் படிகங்கள் தான் விலங்குகளின் கண்கள் இரவில் மின்னக் காரணமாகிறது
58. மனித கண்களால் கண்டுணரக்கூடிய மின்காந்த அலைகள் - கண்ணுறுஒளி
தோல்:
59. இரண்டு அடுக்கு கொண்டது. அவை 1. மேல் தோல் (எபிதீலிய திசு) 2. கீழ் தோல்
60. கீழ்தோல்:
61. வியர்வை சுரப்பி, எண்ணெய் சுரப்பி காணப்படுகிறது
62. அடிப்புறத் தோலின் மேலேடுக்கு – மால்பிஜிபியன் அடுக்கு எனப்படுகிறது. இவ்வடுக்கில்
மெலானின் நிறமிகள் காணப்படுகின்றன
63. நமது தோலுக்கு நிறத்தைக் கொடுப்பது – மெலானின் நிறமிகள்
64. தோல் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது
65. நகம், கொம்பு. குளம்பு ஆகியவை தோலின் மாற்றுருக்கள்
66. காண்டாமிருகத்தின் கொம்பு எலும்பினால் உண்டாகின்றன. ரோமக்கற்றைகளால் ஆனது
செவி:
67. ஒலி உணர்தல், உடல் சமநிலைப்படுத்தல் ஆகிய முக்கிய வேலைகளை செய்கிறது.
68. நடுச்செவியிலுள்ள சிற்றெலும்புகள்: சுத்தி (மேலியஸ்), பட்டடை (இன்கஸ்), அங்கவடி (ஸ்டேப்பிஸ்)
69. சுத்தி செவிப்பறையோடு தொடர்புடையது.
70. உட்செவியிலுள்ள யூட்ரிகுலேஸ் உடலை சமநிலைப்படுத்துகிறது.
71. உட்செவியிலுள்ள உறுப்புகள் - யூட்ரிகுலஸ், காக்லியா, சாக்குலஸ்
72. யூட்ரிகுலஸின் முனையிலுள்ள சுண்ணாம்பிலான சிறு படிமங்கள் - ஒட்டோலித் எனப்படும். இதை கொண்டு உடலின் சமநிலையை அறியலாம்.
நரம்பு மண்டலம்
73. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு – நியூரான் (நரம்பு செல்)
74. நியூரானின் புற எல்லையில் தோன்றும் கிளைகள் - டென்டிரைடு
75. டென்டிரைடு புற எல்லையில் தோன்றும் நீண்ட, கிளைகளற்ற அமைப்பு – ஆக்சான்
76. நரம்பு செல்களின் டென்ரைடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளுமிடம் - சைனாப்ஸிஸ்
77. ஆக்சான் வழியாக தூண்டுதல் கடத்தப்படும் நிகழ்வுக்கு “செயல் மின்னழுத்தம்” என்று பெயர்.
78. மூளைக்கு பல்வேறு உறுப்புகளிலிருந்து தகவல்களைக் கடத்துவது – நியூரான்கள்
79. உடல் உறுப்புகள் மூளையின் துணையற்று தண்டுவடம் மூலம் தகவல் பரிமாறும் முறை - அனிச்சை செயல்
80. தண்டுவடத்திலுள்ள இணை நரம்புகளின் எண்ணிக்கை 31
81. (மூளை) கபால நரம்புகளின் எண்ணிக்கை 12
மூளை:
82. மூளையின் எடை ஏறத்தாழ 1.36 கிலோ
83. மூளையிலுள்ள நரம்பு செல்களின் எண்ணிக்கை – ஏறத்தாழ 12,000
84. மூளையைச் சுற்றி „மெனின்ஜஸ்‟ எனும் மூன்று உறைகள் உள்ளன: டியூராமேட்டர் (வெளி உறை), அரக்னாய்டு (நடு உறை), பயாமேட்டர் (உள் உறை)
85. பயாமேட்டருக்கும் அரக்னாய்டு உறைக்கும் இடைப்பட்ட பகுதி – அரக்னாய்டு கீழ் உறை ஆகும். இப்பகுதியில் மூளை தண்டுவடத்திரவம் நிரம்பியுள்ளது.
86. மூளை மூன்று
பகுதிகளை உடையது. ஆவை: புரொசென்செஃபலான் (முன் மூளை), மீசென்செஃபலான் (நடு மூளை), ராம்பென்செஃபலான் (பின் மூளை)
87. மூளையில் பெருமூளை 2:3 பங்கு அளவு கொண்டது.
88. பெருமூளை இரு அரைவட்ட கோளங்களாக உள்ளது.
89. பெருமூளையின் அடிப்பகுதி „கார்பஸ் காலோஸம்‟ எனும் நரம்புத்திசுப் பட்டையினால்
பிரிக்கப்பட்டுள்ளது
90. கார்பஸ் காலோஸத்தின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும் நீள்வட்ட அமைப்பு – பைனியல் உறுப்பு
91. மனிதனின் நுண்ணறிவு திறன் பெருமூளை புறணியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நரம்புசெல்களைப் பொறுத்தது. சுருக்கங்களுக்கு இடையே உள்ள பள்ளங்கள் - சல்கஸ், மேடுகள் - கைரஸ் எனப்படும்
92. டையன்செபலானின் தரைப்பகுதியில் காணப்படும் புனல் போன்ற அமைப்பின் பெயர் இன்பன்டிபுலம். இது பிட்யூட்டரிக் சுரப்பியைத் தாங்குகிறது
93. தலாமஸின் முன்பும், பக்கவாட்டிலும் காணப்படும் சாம்பல் நிறப்பகுதி – கார்பஸ் ஸ்ட்ரேயேட்டம்.
94. ஹைப்போதலாமஸின் உச்சியில் காணப்படும் ரத்தக்குழாயின் பெயர் – கோராய்டு பிளக்சிஸ். இதில் மூளைத் தண்டு வடத்திரவம் உருவாகிறது
95. நடுமூளையில் உள்ள நான்கு வட்ட வடிவ பகுதிகள் கார்போரா குவாட்ரிஜெமீனா எனும் உறுப்புகளாம்
96. மூளையை தண்டுவடத்துடன் இணைப்பது – முகுளம்
97. தண்டுவடம், முதுகெலும்பு நரம்புக்குழியில் ஆரம்பித்து லம்பார் முள்ளெலும்பின் அடிப்பகுதி வரை நீண்டு கோனஸ் மெடுல்லாரிஸ் எனும் பகுதியாக முடிகிறது.
98. லம்பார், சேக்ரல், பகுதிகளில் தண்டுவடம் கற்றையாக நீண்டு உள்ளது. இதற்கு காடா இக்வினா (குதிரைவால்) எனப்பெயர்.
99. கழுத்து, இடுப்பு, பகுதிகளில் தண்டுவடம் விரிவடைந்துள்ளது. அதில் கழுத்து பகுதி விரிவு – செர்வைகல் விரிவு எனப்படும்
100. இடுப்புப் பகுதி விரிவு – லம்பார் விரிவு எனப்படும்
101. தண்டுவடத்தைச் சுற்றி மூன்று உறைகள் உள்ளன.
102. கோனஸ் மெடுல்லாரிஸில் பயாமேட்டர் மெல்லிய நீள் இழையாக உள்ளது. இது பைலம் டெர்மினேல் எனப்படும்
103. தண்டுவடத்திரவம் நிரம்பியுள்ள கால்வாய் - நியூரல் கால்வாய் எனப்படும.
மூளையின் பணிகள்:
104. பெருமூளை: நினைவாற்றல், உணர்தல் (பார்த்தல், கேட்டல்)
105. நடுமூளை: அனிச்சை செயலைக் கட்டுப்படுத்தல், உடலினைச் சமநிலைப்படுத்தல்
106. சிறுமூளை: உடல் சமநிலையைப் பேணுதல், நம் இச்சைக்குட்பட்ட அசைவுகளை
எலுமத்புத்தசைகளில் உருவாக்குதல்.
107. முகுளம்: சுவாசம், இரத்தச்சுழற்சி
108. மனிதனில் காணப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு – சுமர் 100 – 200 மி.லி
109. ஒரு மணி நேரத்தில் சுரக்க கூடிய மூளைதண்டுவடத்திரவத்தின் அளவு – 20 மி. லி இது இரத்த பிளாஸ்மாவின் வடிநீராகும்.
110. நாளமுள்ள சுரப்பிகள் -- எக்சோகிரைன் சுரப்பிகள் எனப்படும். இவை சுரப்பது நொதிகள் (என்ஸைம்)
111. நாளமில்லா சுரப்பிகள் - எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும். இவை சுரப்பது ஹார்மோன்கள்
நாளமில்லா சுரப்பிகள்:
பிட்யூட்டரி சுரப்பி
112. இது நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் எனப்படும்
113. அமைந்துள்ள இடம் - மூளையின் அடியில் ஹைப்போதலாமஸ்
114. பிட்யூட்டரி சுரப்பியில் காணப்படும் பகுதிகள் - அடினோஹைபோபைசிஸ், நியூரோஹைப்போபைசிஸ்
115. அடினோஹைபோபைசிஸ் சுரக்கும் ஹார்மோன்கள் - STH, TSH, ACTH, FSH, LH, LTH
116. நியூரோஹைப்போபைசிஸ் சுரக்கும் ஹார்மோன்கள் - வாஸோபிரெஸ்ஸின் ஆக்ஸிடோஸின்
சோமோடோட்ரோபிக் ஹார்மோன் ((STH))
117. குறைவினால் குள்ளத்தன்மை (மிட்ஜெட்) ஏற்படும்
118. அதிகரிப்பினால் இராட்சத்தன்மை (அக்ரோமெகலி) ஏற்படும்
119. பிட்யூட்டரியின் முன்பக்க கதுப்பின் பெயர் - அடினோஹைபோபைசிஸ்
120. பிட்யூட்டரியின் பின்பக்க கதுப்பின் பெயர் - நியூரோஹைப்போபைசிஸ் அல்லது பார்ஸ் நெர்வோஸா
வாஸோபிரஸ்ஸின்
121. இதற்கு ஆண்டிடையூரடிக் ஹார்மோன் என வேறு பெயர் உண்டு
122. இதன் குறைவினால் நீரழிவு நோய் ஏற்படுகிறது
ஆக்ஸிடோஸின்
123. மகப்பேறின்போது கருப்பையை சீராக சுருங்கச் செய்து குழந்தையை வெளியேற்ற உதவுகிறது.
124. பால் சுரப்பியிலிருந்து பால் வெளிவரத் தூண்டுகிறது
தைராய்டு சுரப்பி:
125. கழுத்துப் பகுதியின் குரல்வளையின் இருபக்கங்களிலும் காணப்படுகிறது.
126. தைராய்டு சுரப்பி குரல்வளையில் இணைக்கப்பட்டுள்ள பகுதியின் பெயர் - இஸ்த்மஸ்
127. தைராய்டு சுரப்பி சுரக்கும் திரவம் – தைராக்ஸின்.
128. தைராக்ஸினில் 65% அயோடின் அடங்கியுள்ளது.
129. தைராக்ஸின் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் - கிரினிடிசம்
130. தைராக்ஸின் குறைவினால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய் - மிக்சிடிமா
131. அயோடின் சத்து குறைவால் ஏற்படும் நோய் - காய்ட்டர் (முன் கழுத்து கழலை)
132. தைராய்டு அதிகரிப்பினால் கிரெவின் நோய் அல்லது எக்சோ / தால்மின் காய்ட்டர் ஏற்படுகிறது.
133. பாராதைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் - பாராதார்மோன் & கால்ஸிடோனின்
134. குடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை துரிதப்படுத்தும் ஹார்மோன் – பாராதார்மோன்.
135. •புhராதைராய்டு குறைவினால் உடலில் கால்சியம் அளவு குறைந்து விடுகிறது. இதனால்
136. ஏற்படும் நோய் - டெட்டனி அல்லது கிட்டிப்போதல்
137. புரதைராய்டு அதிகரிப்பினால் இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்
லாங்கர்ஹான் திட்டுக்கள்:
138. கணையத்தில் எபிதீலிய திட்டுக்களாகக் காணப்படுகிறது
139. இதில் ஆல்பா, பீட்டா என இரு வகை செல்கள் உள்ளன
140. ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன் - குளுகோகான் (ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன்)
141. பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன் - இன்சுலின் (ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன்)
142. இன்சுலின் 51 அமினோ அமிலங்கள் கொண்ட புரதமாகும்.
143. ஹைபர்கிளைசீமியாவினால் ஏற்படும் நோய் - நீரழிவு நோய் (டயாபிடிஸ்)
144. அதிக சிறுநீரை வெளியேற்றும் நிலை – பாலி யூரியா
145. அதிக நீர் அருந்தும் நிலை – பாலி டிப்சியா
146. அதிக பசியினால் அதிக உணவு உட்கொள்ளும் நிலை – பாலி பேஜியா
147. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி, அதன் விளைவாக கீட்டோன் பொருட்கள் உடலில் சேர்கின்ற நிலைக்கு கீடோசிஸ் எனப்பெயர்.
அட்ரீனல் சுரப்பி:
148. சிறுநீரகத்தின் மீது தொப்பி போல் காணப்படுகிறது
149. ஆபத்துக் கால சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது
150. இச்சுரப்பி சுரக்கும் ஹார்மோன்கள் - அட்ரீனலின் (எபிநெப்ரின்), நார்-அட்ரீனலின்
இனப்பெருக்க ஹார்மோன்கள்
151. விந்து நுண்குழல்களுக்கு இடையே உள்ள செல்கள் (லேடிக் செல்கள்) சுரக்கும் ஹார்மோன் - டெஸ்டோஸ்டீரான்
152. டெஸ்டோஸ்டீரானும், மற்ற ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களும், சேர்ந்து ஆண்டரோஜன்கள் என அழைக்கப்படுகின்றன.
153. பெண்ணின் அண்டகங்கள் சுரக்கும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன்
154. பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் “கார்பஸ் லூட்டியம்” சுரக்கும் ஹார்மோன் – புரொஜெஸ்டிரான்.
155. கருவுற்ற பெண்ணின் கார்பஸ் லூட்டியமும், புரொஜெஸ்டிரானும் சேர்ந்து சுரக்கும் ஹார்மோன் - ரிலாக்ஸின்
இனப்பெருக்கம்
பெண் இனப்பெருக்க மண்டலம்
156. பெண் இனப்பெருக்க உறுப்பின் பெயர் - அண்டகம்
157. கிராபியன் பாலிக்கிள் வெடித்து முழு வளர்ச்சியடைந்த அண்டம் வெளிப்படும் நிகழ்ச்சி – அண்டம் (அ) முட்டை விடுபடுதல்.
158. வெடித்த கிராபியன் பாலிக்கிளை சூழ்ந்துள்ள பாலிக்கிள் செல்கள் விரிவடைந்து கார்பஸ் லூட்டியாக மாறுகிறது.
159. ஒவ்வொரு
அண்டகத்தின் அருகில் காணப்படும் புனல் போன்ற அமைப்பு ஃபெலோபியன் குழாய்கள்
160. மாதவிடாய் சுழற்சி காலம் பொதுவாக 28 நாட்கள்
161. மாதவிடாய் சுழற்சி காலத்தில் 5 – 14 ம் நாள் வரை உள்ள நிலை ஃபாலிக்குலார் (பூரிப்பு) நிலை. 15 – 28ம் நாள் வரை உள்ள நிலை – மாதவிடாய் முன் நிலை அல்லது லூட்டியஸ் நிலை அல்லது புரொஜெஸ்டிரனல் நிலை
ஆண் இனப்பெருக்க மண்டலம்
162. ஆணின் இனப்பெருக்க உறுப்பின் பெயர் - விந்தகம்
163. விந்தணுக்கள் சேமிக்கப்படுமிடம் - எபிடிடிமிஸ்
164. விந்து செல்களை உருவாக்குவது – செர்டோலி செல்கள் மற்றும் மூல இனச்செல்கள்
165. மனிதனில் ஒரு ஸ்பெர்மட்டோகோனியம் முதிர்ந்த விந்தணுவாக உருவாகிட எடுத்துக்கொள்ளும் கால அளவு – 64 நாட்கள்
166. ஸ்பெர்மட்டோகோனியத்திலிருந்து விந்து உருவாகும் நிலை – ஸ்பெர்மட்டோஜெனிஸிஸ் எனப்படும்.
167. விந்தணுவின் தலைப்பகுதியில் காணப்படும் அமைப்பு – அக்ரோசோம் எனப்படும்.