Type Here to Get Search Results !

விலங்கியல் - 3 | 165 Questions

விலங்கியல் - 3

கருவியல்

1. கரு உணவின் அடிப்படையில் கருமுட்டையின் வகைகள்:

2. எலேசிதல் : கரு உணவு அற்றது (-டு) பாலூட்டி

3. மைக்ரோலெசிதல் () ஆலிகோ லெசிதல்: சிறிதளவு கருஉணவு உடையது (-டு) ஆம்பியாக்ஸிஸ்

4. மீசோலெசிதல்: நடுத்தரமான கரு உணவுடையது - இருவாழ்விகள்

5. மேக்ரோலெசிதல்: அதிகளவு கரு உணவுடையது – (பறவைகள்)

6. கரு உணவு பரவியிருக்கும் விதம் பற்றி பிரிவுகள்:

7. ஐசோலெசிதல் () ஹேமோலெசிதல்: கருஉணவு ஒரே சீராக பரவியருத்தல்(ஆம்பியாக்ஸிஸ்).

8. டீலோலெசிதல்: ஒருபுறம் மட்டும் கருஉணவு அதிகமுள்ளது அதிலும் தாவர அரைக்கோளத்தில் அதிகமுள்ளது (இரு வாழ்விகள்)

9. சென்ட்ரோலெசிதல்: நடுப்பகுதியில் கரு உணவு அதிகமுள்ளது (பூச்சியினம்).

10. டிஸ்காய்டஸ் () பிளாஸ்டோடிஸ்க்: பெரும்பகுதி கரு உணவு பரவியுள்ளது.

11. மீதமுள்ள தட்டுப்பகுதியில் உட்கரு உள்ளது (பறவை)

12. ஓடுடைய முட்டைகிளிடாய்க்

13. ஓடில்லாத முட்டைநான் கிளிடாய்க்

14. வளர்ச்சி நிர்ணயிக்கப்பட்டவைமொசைக் முட்டை (-டு) மெல்லுடலி, வளைதசைபுழு

15. வளர்ச்சி நிர்ணயிக்கப்படாதவைரெகுலேட்டிவ் முட்டை (-டு) முட்தோலி, முதுகெலும்பி

16. கடற்பஞ்சு, குழியுடலி ஆகிய உயிரினங்களில் பிளாஸ்மா சவ்வு இல்லை

முட்டைப் படலங்கள்:

17. பூச்சி, மெல்லுடலி, இருவாழ்வி ஆகியவற்றின் முட்டையில் உள்ள முதல்நிலை படலத்தின் பெயர் - வைட்டலின் சவ்வு () அசிடியன்கள்

18. மீனின் முட்டையில் உள்ள முதல்நிலை படலத்தின் பெயர் - கோரியான் படலம்.

19. பாலூட்டிகளின் முட்டையில் உள்ள முதல்நிலை படலத்தின் பெயர் - சோனா பெலிசுடா.

20. கடல் அர்ச்சிகளின் முட்டையில் உள்ள முதல்நிலை படலத்தின் பெயர்ஜெல்லி உறை.

21. முட்டையில் உள்ள முதல்நிலை படலம் மியுக்கோ பாலிசாக்ரைடுகளால் ஆனது.

22. இரண்டாம்நிலை படலம் ஆல்புமின் புரதத்தால் ஆனது

23. பறவை முட்டையின் வெள்ளைக்கரு ஆல்புமின்களால் ஆனது

24. புறவை முட்டையின் கரு உணவிலுள்ள புரதங்கள் - பாஸ்விடின், லிப்போவிட்டலின்.

25. கரு உணவில் உள்ளவைபாஸ்போலிப்பிடு, கொழுப்புகள், புரதம்

26. புறக்கருவுறுதலுக்கு உதாரணம் - தவளை

27. விந்துவின் ஊடுருவும் தன்மைக்கு காரணம் - அக்ரோசோம்

28. அக்ரோசோமிலுள்ள நொதி ஹையாலுரானிடேஸ் என்ற அமிலத்தால் ஆனது.

29. விந்துவின் உட்கரு கருவுறுதல் கூம்பின் வழியே அண்டசெல்லினுள் சென்றவுடன் 180 டிகிரி சுழற்சி மேற்கொள்கிறது.

30. ஆண்முன் உட்கருவும், பெண்முன் உட்கருவும் இணையும் செயல் - ஆம்பிமிக்ஸிஸ்

31. கருவுற்ற முட்டை தொடர்ச்சியான மறைமுக செல் பிரிதல் மூலம் அதிக எண்ணிக்கையில் உண்டாகும் நிகழ்ச்சிபிளவிபெருகல் எனப்படும்

32. பிளவிப் பெருக்கலின் இறுதியில் உருவாக்கப்படும் செல்கள்பிளாஸ்டோமியர் எனப்படும்.

33. பிளவிப்பெருக்கலின் முடிவில் பல பிளாஸ்டோமியர்களை உள்ளீடற்ற கருவை கொண்ட செல்களுக்கு கருக்கோள செல் என்று பெயர்.

34. இரு அடுக்குகள் கொண்ட இருபடை கருக்கோளம் - பிளாஸ்டுலா எனப்படும்.

35. மூன்று அடுக்குகள் கொண்ட முப்படை கருக்கோளம் - கேஸ்ட்ரூலா எனப்படும்.

36. முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்த இடம் - இங்கிலாந்து (1978)

37. செயற்கை முறையில் ஊடகத்தில் வளர்க்கப்படும் பல செல்கள் அடங்கிய தொகுப்பு காலஸ் எனப்படும்

38. 1997ல் டாலி என்ற வெள்ளாடு, அயன்வில்மட் என்பவரால் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

39. மூல செல்கள் மாற்றுருப்பு அறுவை சிகிச்சை செய்ய பயன்படுகிறது.

வகைப்பாட்டியல்

40. செயற்கை வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - கரோலஸ் லின்னேயஸ்

41. பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - அடால்ப் எங்ளர் மற்றும் கிளான்டல் பிரான்ட்

42. அண்மைக்கால வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - ஆர்தர் க்ராங்விஸ்ட்

43. ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - விட்டேக்கர்

44. இரு பெயரிடு முறையைஅறிமுகப்படுத்தியவர் - வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரோலஸ் லின்னேயஸ் என்பவர் ஆவார்

45. உயிரினங்களின் தோற்றம் எனும் நூலை எழுதியவர் - டார்வின்

46. தாவர வகைப்பாட்டியலின் மிகச்சிறிய அலகுசிற்றினம்

47. கார்ல் லின்னேயஸ் எழுதிய நூல்கள்:  ஸ்பீசிஸ் பிளாண்ட்ரம் சிஸ்டமா நேச்சுரே (இது பெயரிடு முறை அறிமுகம்)

தொகுதி: புரோட்டோசோவா

48. இவை திசு நிலையற்ற ஒரு செல் நுண்ணியிரிகள் ஆகும். .கா. அமீபா, பாக்டீரியா

தொகுதி: துளையுடலிகள்

49. (-டு) கடற்பஞ்சு. நன்னீர் மட்டி

50. பலசெல் உயிரி, திசுகளற்ற நிலை, கழிவு நீக்க உறுப்பு, நரம்புகள் இல்லை

51. இடப்பெயர்ச்சி உறுப்பு இல்லை

52. இவ்வுயிரினங்களின் சிறப்பு அம்சம் - இழப்பு மீட்டல் பண்பு ஆகும்

53. சி உயிரிகள் அலங்கார பொருள்களாக உள்ளன. (-டு) ஒலியாந்தஸ், ஸ்பான்ஜில்லா, லியுகோசெலினியா

குழியுடலிகள் (சீலன்டிரேட்டா)

54. -டு கடல் சாமந்தி, ஜெல்லிமீன், ஹைடிரா, பவளபாறை

55. திசு நிலையுடைய பல செல் உயிரி

56. உடல் சுவர் இரு அடுக்கு உடையது

57. நெமட்டோசிஸ் என்னும் கொட்டும் செல்கள் இதிலுள்ளன

தட்டைப்புழுவினம் (பிளாட்ஹெல்மின்தஸ்)

58. -டு பிளானேரியா, கல்லீரல் புழு, நாடா புழு, ரத்தப்புழு

59. கழிவு நீக்க உறுப்பு உண்டு

60. இருபால் உயிரிகளாக உள்ளது

61. சுடர் செல் () சொலினோ சைட்டுகள் இதிலுள்ளன

உருளைப்புழுவினம்: (ஆஸ்ஹெல்மின்தஸ்) நெமட்டோடா

62. -டு ஆஸ்காரிஸ் லும்பிரிகாய்டஸ்

63. உடற்சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது

64. உடலில் கண்டங்கள் இல்லை

வளைதசைபுழு: (அன்னலிடா)

65. -டு மண்புழு, அட்டை, நீரிஸ்

66. மூடிய ரத்த ஓட்ட மண்டலம் உள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்கள் உள்ளது

67. மண்புழு

68. மண்புழு உழவனின் நண்பன் எனப்படுகிறது

69. இதன் உடல் பல கண்டங்களால் ஆனது

70. உடலிலுள்ள பல வகை நீட்சிகள் - சீட்டா எனப்படும். இது மண்புழு இடப்பெயர்ச்சி செய்ய உதவுகிறது

71. கழிவு நீக்கம் நெப்ரிடியாங்களால் நடைபெறுகிறது

72. சுவாசம் தோல் () செவுள் மூலம் நடைபெறுகிறது

73. அட்டையின் உமிழ்நீரிலுள்ள ஹிரூடின் எனும் வேதிப்பொருள் ரத்தம் உறைதலை தடுக்கிறது

கணுக்காலிகள் (ஆர்த்ரேபாபோடா)

74. -டு கரப்பான் பூச்சி, மரவட்டை, , கொசு, பூரான்

75. இவ்வுயிரினங்களில் புறச்சட்டகம் காணப்படுகிறது. இது கைட்டின் எனும் பொருளால் ஆனது

76. இவ்வுயிரினங்களில் உணர்நீட்சி, கூட்டுகண்கள் ஆகியவை உள்ளன.

77. இவை ஒரு பால் உயிரிகளாகும்

78. இதன் ஒவ்வொரு கூட்டுக்கண்ணும்ஒமட்டிடியம்எனும் தனிக்கண்களால் ஆனது.

79. கழிவுநீக்க உறுப்புகள் - காக்கஸ் சுரப்பி, பச்சைசுரப்பி, மால்பீஜியன் குழல்

மெல்லுடலி (மொலாஸ்கா)

80. -டு ஆப்பிள் நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, நன்னீர் மட்டி

81. உடலை சுற்றியுள்ள தோலிலான போர்வையின் பெயர் - மேன்டில் எனப்படும்.  இது இவ்வுயிரினங்களின் ஓட்டினை சுரக்கிறது

82. சுவாச உறுப்புசெவுள்

முட்தோலிகள் (எக்னோ டெர்மோட்டா)

83. -டு நட்சத்திரமீன், கடல் லில்லி, கடல்குப்பி, கடல்வெள்ளரி

84. இடப்பெயர்ச்சி மற்றும் உணவூட்டம் ஆகியவை குழல் கால்கள் மூலம் நடைபெறகிறது.

85. சுவாசம் நுண்ணிய தோல் செவுள்கள் கிளைத்த மரம் மூலம் நடைபெறும்

முதுகெலும்பிகள்

86. மீனின் இதய அறைகள் - இரண்டு

87. இருவாழ்விகளின் இதய அறைகள் மூன்று

88. ஊர்வனவற்றின் இதய அறைகள் மூன்று

89. பறவை, பாலூட்டி இதய அறைகள் நான்கு

90. உயிரின அமைப்பு நிலை:

கெண்டை மீன்:

91. எலும்பு மீன் என அழைக்கப்படுகிறது

92. உடற்குழியடையவை

93. இதிலுள்ள செதில்கள்டீனாய்டுசெதில்கள் எனப்படும்.

94. மீனின் வயதை தீர்மானிக்க அதன் மேலுள்ள வளைவுகோடு உதவுகிறது.

95. மீனுக்கு பண் இமைகள் இல்லை.

96. மார்பு மற்றும் இடுப்பு துடுப்புகள் இணை தடுப்புகள் எனப்படும்.

97. மீனின் வேகத்தை கட்டுப்படுத்தவும், முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல உதவிடவும் மார்பு மற்றும் இடுப்பு துடுப்புகள் உதவுகிறது

98. இணையற்ற துடுப்பு () முதுகு துடுப்பானது மீனின் உடல் கீழே சாயாமல் இருப்பதற்கு உதவுகிறது.

99. மீனின் வால்துடுப்பானது வலது, இடது புறம் (திசைமாற்ற) திரும்ப உதவுகிறது.

100. மீனின் உடற்தசைகளின் பெயர் - மையோடோம்

101. மீன் நீந்தும் பொது அதன் மேற்புறம் உள்ள நீரினால் ஏற்படும் அழுத்தத்தினை உணர மீனுக்கு அதன் பக்கவாட்டு உணர்வுகோடுகள் உதவுகிறது.

102. மீனின் கல்லீரல் 3 கதுப்புகள் உடையது

103. மீனில் உள்ள செவுள்களின் எண்ணிக்கை – 4 இணை

104. மீனில் உடலிலுள்ள தசை நார்கள் நூற்புகதிர் வடிவம் பெற்றுள்ளன

105. நீரிலுள்ள பொருட்களை உணர்ந்தறிய பயன்படும் மீனின் பக்கவாட்டு உணர்வு நரம்புகளின் பெயர் - நீர்ப்புற உணர்வாங்கிகள்

106. மீன்களின் செதில்கள் மூன்று வகைப்படும்: பிளாக்காயிடு (சுறாமீன்), சைக்கிளாயிடு, டீனாயிடு (கெண்டை மீன்)

107. முதலையின் உடலிலுள்ள தோலானது எலும்பு செதில்களால் ஆனது

108. முள்ளம் பன்றியின் உடலிலுள்ள முள் -- அதன் ரோமத்தின் மாற்றமாகும்.

கரப்பான் பூச்சி:

109. விலங்கியல் பெயர்: பெரிப்ளனேட்டா அமெரிக்கானா

110. இது ஒரு புறச்சட்டகம் (எக்சோஸ்கெலிடன்) உடைய உயிரினம்

111. உடலின் மேற்பகுதிடெர்கம் எனப்படும்

112. உடலின் கீழ்ப்பகுதி ஸ்டெர்னம் எனப்படும். இவ்விரண்டு பகுதிகளையும் இணைப்பது ப்ளுரா சவ்வு

113. கரப்பான் பூச்சியின் சுவாசம் ட்ரக்கியா மூலம் நடைபெறும்

114. பத்து இணை சுவாச துளைகள் உள்ளன

115. சுவாச துளைஸ்பைரக்கிள்எனப்படும்

116. கரப்பான் பூச்சியின் உடலில் திறந்த ரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது

117. கரப்பான் பூச்சியின் மேலுதட்டின் பெயர் - லேப்ரம், கீழுதட்டின் பெயர் - லேபியம்

118. இரத்த உடற்குழி உள்ளது

119. கழிவு நீக்க வேலைகளைச் செய்வதுமால்பீஜியன் குழல்கள்

120. இது அனைத்துண்ணி, பாலின வேறுபாடு உண்டு

121. ஆண் இனப்பெருக்க சுரப்புகாங்குலோபேட் சுரப்பி எனப்படும்

122. பெண் இனப்பெருக்க சுரப்புகொல்லேட்டரல் சுரப்பி எனப்படும்

123. இதன் இளம் உயிரியின் பெயர் - நிம்ப். இது ஏடு முறை தோலுரித்து முழு உயிரியாக மாறுகிறது.

124. இதன் இதயம் 13 அறைகளை உடையது.

125. இரத்த ஓட்டம், ஏலரித் தசைகள் சுருங்கி விரிவதால் நடைபெறுகிறது.

126. இரத்தத்தில் ஹிமோகுளோபின் இல்லாததால் ரத்தம் நிறமற்றது.

127. கரப்பான் பூச்சி இரவு நேரங்களில் உணவு தேடும் தன்மையுடைய பூச்சியாகும்.

128. இப்பண்பின் பெயர் - “நாக்டானல் டீரியாடிசிடிஎனப்படுகிறது

தவளை (ரானா ஹெக்ஸாடேக்டைலா)

129. இதற்கு கழுத்து இல்லை

130. கண்ணிமைகளில் ஒளி ஊடுருவக் கூடிய நிக்டிடேட்டிங் சவ்வு உள்ளது

131. மலம், சிறுநீர், வெளியேற பொதுப்புழை (குளோயக்கா) உள்ளது.

132. ஆண் தவளையின் முன்னங்கால்களில் உள்ள தடித்த உள் விரல் நீட்சியின் பெயர் - நாப்சியல் மேடு (கலவித்திண்டு) எனப்படும்.

133. தவளையின் இனப்பெருக்க நிகழ்வுஆம்பிலெக்ஸஸ்எனப்படும்

134. இரைப்பையின் சுவரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் சுரக்கப்படுகிறது.

135. தவளை நீரினுள் இருக்கும்போது தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

136. தவளையின் இதயம் 3 அளைறகால் ஆனது. ஆரிக்கிள் 2, வெண்டிரிக்கிள் 1.

137. வெண்டிரிக்கிளிலிருந்து ட்ரங்கஸ் ஆர்டியோசஸ் மூலமாக இரத்தம் வெளி செல்கிறது.

138. தலைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகேரோட்டிட் எனப்படும்

139. செரிமான மண்டலத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் தமனிசிலியகோமிசென்ட்ரிக்.

140. தவளையின் மூளையில் 10 இணை மூளை நரம்புகளும், 10 இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.

141. தவளையின் இனப்பெருக்க சுழற்சியில் வெளிக் கருவுறுதல் நடைபெறுகிறது.

142. கருவுறுதலுக்கு பின் வளர்சிதை மாற்றம் நடைபெற்று முழு உயிரியாக மாறுகிறது.

143. தவளையின் மேல்தாடை விளிம்பில் உள்ள பற்கள் - மாக்ஸில்லரி பற்கள் எனப்படும்.

144. கீழ்த்தாடையில் பற்கள் இல்லை

145. சிறுநீரக மற்றும் இனப்பெருக்க மண்டலங்கள் ஒருங்கிணைந்த தொகுப்பாக உள்ளது

பிளாஸ்மோடியம்:

146. இது ஒரு ஒட்டுண்ணி

147. மனிதனில் இரத்த சிவப்பணுக்களில் இவை உயிர் வாழும்

148. மலேரியா நோயை உருவாக்கும்

149. ஒரு செல் உயிரி. இருப்பினும் பல உட்கருக்களை உடையது

150. ஓம்புயிரிமனிதன், அனோபிலஸ் கொசு

151. மனிதனின் சிறுகுடலில் காணப்படும் ஒட்டுண்னி புழுஅஸ்காரிஸ் லுமரிகாய்டஸ்.

152. கூட்டுயிரிகளுக்கு (.கா) துறவி நண்டின் ஓட்டின் மேற்புறத்தில் கடல் சாமந்தி வாழுதல்.

153. வேர்க்கடலை தாவரம் - ரைசோபியம் பாக்டீரியா

154. லைக்கன்கள் - ஆல்கா மற்றும் பூஞ்சை

155. பைனஸ், ஓக், பிர்ச் தாவரங்களில் கூட்டுயிரியாக கருதப்படுவது மைக்கோரைசா எனும் பூஞ்சை.

கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள்:

156. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் 4.1 கலோரி சக்தியைக் கொடுக்கிறது

157. ஒரு கிராம் புரதம் 4.0 கலோரி சக்தியைக் கொடுக்கிறது

158. ஒரு கிராம் கொழுப்பு 9.3 கலோரி சக்தியைக் கொடுக்கிறது

159. கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் -- நமது உடலுக்கு சக்தி அளிப்பவை

160. புரதங்கள் -- நமது உடல் வளர்ச்சிக்கு தேவையானவை

161. புரதம் எனப் பெயரிட்டவர் - முல்டர்

162. எளிய புரதத்திற்கு .கா. ஆல்புமின், குளோபுலின்

163. இணைவு புரதத்திற்கு .கா - ஹீமோகுளோபின்

164. வருவிய புரதத்திற்கு .கா. பெப்டோன்கள்

165. புரத சத்து குறைவினால் ஏற்படும் நோய்கள் - மராஸ்மஸ், குவாஷியார்கர் (சலை நோய்)