விலங்கியல் - 4
வைட்டமின்கள்
1. நமது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையானவை – வைட்டமின்கள்
2. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - A, D, E, K
3. நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C
வைட்டமின் A (ரெட்டினால்)
4. இதன் குறைவினால் கண் கார்னியா உலர்ந்து „சிரோப்தால்மியா‟ என்ற நோய் உண்டாகும்.
5. நிக்டோலோபியா (மாலைக்கண்) என்ற நோய் ஏற்படும்
6. வைட்டமின் A காணப்படும் உணவு வகைகள் - மீன், காரட், பப்பாளி
வைட்டமின் D (கால்ஸிபெரால்)
7. இதன் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்நோய்
8. பெரியவர்களுக்கு ஏற்படும் நோய் - ஆஸ்டியோமலேசியா
9. வைட்டமின் D காணப்படும் உணவு வகைகள் -- சூரிய ஒளி, காட்மீன் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு
10. புறஊதாக்கதிர் தோலில் படும்போது தோலிலுள்ள எர்கோஸ்டிரால் இதனைத் தயாரிக்கிறது
வைட்டமின் E (டோகோபெரால்)
11. இயல்பான கருத்தரிப்புக்கு உதவுகிறது
12. வைட்டமின் E காணப்படும் உணவு வகைகள் -- கோதுமை முளையிலிருந்து பெறப்படும் எண்ணெய், பச்சைக்கீரைகள்
வைட்டமின் K (ஆண்டிஹெமராஜிக் வைட்டமின்)
13. இரத்த உறைதலுக்கு வைட்டமின் K அவசியம்
14. வைட்டமின் K காணப்படும் உணவு வகைகள் -- முட்டைக்கோஸ், காலிப்ளவர், புதினா
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
15. வைட்டமின் B1 (தயமின்)
16. இதன் குறைவினால் ஏற்படும் நோய் - பெரிபெரி
17. வைட்டமின் B1 காணப்படும் உணவு வகைகள் - முழுதானியங்கள், தவிடு, ஈஸ்ட், மஞ்சள் கரு
வைட்டமின் B2 (ரிபோபிளேவின்)
18. இது ஒரு சுவாசத்துக்கு தேவையான மஞ்சள் நிற ஒறி உணர்நிறமி
19. செல்லில் நடைபெறும் ஆக்ஸிகரண வளர்சிதை மாற்றத்திற்கு காரணம்.
20. குறைவினால் பெல்லக்ரா நோய்
21. வைட்டமின் B2 காணப்படும் உணவு வகைகள் - ஈஸ்ட், சோயாபீன்ஸ், இறைச்சி
வைட்டமின் B6 (பைரிடாக்ஸின்)
22. இதன் குறைவினால் தோல் வியாதி, அனீமியர், வீரிய நரம்புத்தளர்ச்சி ஏற்படும்
23. வைட்டமின் B6 காணப்படும் உணவு வகைகள் - மஞ்சள் கரு, கல்லீரல்
வைட்டமின் B12 (சையனோகோபலமின்)
24. இரத்த சிவப்பணுக்கள் உருவாக இது மிக அவசியம்
25. இதன் குறைவினால் ஏற்படுவது – பெர்சீனியஸ் இரத்தசோகை
26. இதிலுள்ள உலோகம் -- கோபால்ட்
27. விலங்குகளின் உடலில் மட்டும் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் B12
28. தாவரங்களில் காணப்படாத வைட்டமின் - வைட்டமின் B12
வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்)
29. இதன் குறைவினால் ஏற்படும் நோய் -- ஸ்கர்வி (ஈறுகளில் இரத்தக்கசிவு)
30. வைட்டமின் C காணப்படும் உணவு வகைகள் - புளிப்பான பழங்கள்
சூழ்நிலையியல்
31. சூழ்நிலையியல் என்ற சொல்லை உருவாக்கியவர் - ரெய்ட்டர், வரையறுத்தவர் - ஹெக்கல்
32. உயிர்காரணி மற்றும் உயிரற்ற காரணிக்கிடையேயுள்ள தொடர்பினை பற்றி படிப்பது - சூழ்நிலையியல்
33. ஒவ்வொரு உணவு நிலையும் உணவு மட்டம் எனப்படும்
34. முதல்நிலை உணவு மட்டம்: தாவரங்கள் (உற்பத்தியாளர்)
35. 2ம் நிலை உணவு மட்டம்: முதல் நிலை நுகர்வோர்
36. 3ம் நிலை உணவு மட்டம்: 2ம் நிலை நுகர்வோர்
37. 4ம் நிலை உணவு மட்டம்: 3ம் நிலை நுகர்வோர்
38. 5ம் நிலை உணவு மட்டம்: சிதைப்பன (அ) சிறு நுகர்வோர் (அ) இயற்கை துப்புரவு தொழிலாளி
39. உயிர்க் கோளமானது பாறை மண்டலம் (லித்தோஸ்பியர்) நீர் மற்றும் வளிமண்டலம் ஆகியவை சேர்ந்தது.
40. உயிர்க்கோளத்தின் பரப்பு கடலினுள் 10 கி.மீ தரைக்கு மேல் 6 கி.மீ வரை உள்ளது.
41. நன்னீர் மண்டலம் (லிம்னடிக் சூழ்நிலை) இருவகைப்படும்
42. சலனமற்ற சூழ்நிலை (லென்டிக்)
43. சலனமுள்ள சூழ்நிலை (லோடிக்)
44. உயிரினங்களில் ஆற்றல் மட்டத்தை விளக்கும் படம் ஆற்றலுக்கான முக்கோணம்
எனப்படும்
45. எண்ணற்ற குறிப்பிட்ட உயிரினங்களின், ஆற்றல் மாற்றத்தில் நிகழும் எண்ணற்ற வலை போன்ற அமைப்பு – உணவு வலை எனப்படும்.
46. ஒரு ஆற்றல் ஒருயிரிடமிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றப்படுவது – ஆற்றல் மாற்றம் எனப்படும்.
47. புல் சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் எண்ணிக்கை கோபுரமானது நேராக அமைந்த கோபுரமாகும்
48. ஓட்டுண்ணி உணர்வு கோர்வை பெற்ற ஒரு மரச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை கோபுரம் தலைகீழானது
49. உயிர்ப் பொருள்களின் உலர் எடை அடிப்படையில் அமைவது – உயிர்ப்புல கோபுரம்
50. உயிர்ப்புல கோபுரம் புல் மற்றும் காடு சூழ்நிலையில் நேராக அமைந்துள்ளது. குளம் குட்டை சூழலில் தலைகீழானது.
51. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு ஊட்டநிலைகளை காண்பிக்க உதவும் விளக்கப்படம் - சூழ்நிலை கோபுரம் எனப்படும்.
52. உயிர்ப்புல கோபுரத்தில் 10 சதவீத விதி பின்பற்றப்படுகிறது
53. 1000 கிலோ – தாவரம்
54. 100 கிலோ – எலி
55. 10 கிலோ – பாம்பு
56. 1 கிலோ – கழுகு
57. ஆற்றல் கோபுரம் எப்பொழுதும் நேரானவையே
58. உயிரினங்களில் அதிகமான ஆற்றலைக் கொண்டவை – உற்பத்தியாளர்கள்
59. ஓர் உணவுச் சங்கிலியில் காணப்படும் ஊட்டநிலைகளின் எண்ணிக்கை – 6
60. உயிர்க் கோளத்தின் உயிரினத் தொகுப்புகள் சூரியனையே ஆற்றல் ஆதாரமாக கொண்டுள்ளது.
61. தாவரங்களை சென்றடையும் சூரிய ஆற்றல் வெறும் 8 சதவீதம் மட்டுமே. இதில் தாவரங்கள், இலைப்பரப்பில் விழும் சூரிய கதிர்வீச்சு ஆற்றிலிருந்து 2 சதவீதம் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகிறது.
62. தாவர உண்ணிகள் உண்ணப்பட்ட உணவில் 10 சதவீதம் மட்டுமே தன்மயமாக்குகிறது, ஏனைய சதவீதம் வெப்பமாக வெளியிடப்படும்.
63. சூழ்நிலைமண்டலத்தில் ஆற்றல் முதலில் நுழையுமிடம் தாவரம் (உற்பத்தியாளர்)
64. காற்று பரப்பு செயல்மிகு தேக்கிடம் என்றும், பவளப்பாறைகள் சேமிப்பு தேக்கிடம் என்றும் அழைக்கப்படுகிறது.
65. புவி வெப்பமாதல் பத்து ஆண்டுக்கு 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது.
66. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் அளவு – 78%
67. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு – 21%
68. புரதங்களை தோற்றுவிக்க சல்பர், நைட்ரஜன் ஆகியவை தேவைப்படுகிறது.
69. மண்புழுவிற்கும், மண்ணிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்
70. சுவிட்ஸர்லாந்தில் “மார்க்கிஸில்” உலகளவில் விலங்கு மற்றும் இயற்கை வள பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு “அழிவுறும் விலங்குகளின் தகவல் புத்தகம்” (Red Data Book) உள்ளது.
71. வனவிலங்கு வாரம் 1955 முதல் கொண்டாடப்படுகிறது
72. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் உருவான ஆண்டு 1983-84
73. வன உயிரிகள் பாதுகாப்பு சட்டம் - 1972
74. புலி பாதுகாப்பு திட்டம் - 1973
75. யாணை பாதுகாப்பு திட்டம் - 1992
76. இந்திய நிலப்பரப்பில் காடுகள் 21.7 சதவீதம் (75 மெகா ஹெக்டேர்) உள்ளன
77. இந்திய தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை – 89
78. இந்திய பாதுகாக்கப்பட்ட வன உயிர் வாழிடங்கள் - 14
79. இந்தியாவின் பவளப்பாறை காணப்படும் இடங்கள் மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவு, கட்ச் வளைகுடா, லட்சத்தீவு
80. இந்தியாவிலுள்ள சரணாலயங்கள்
81. சரணாலயம் மாநிலம் விலங்குகள்
82. பந்திப்பூர் தேசிய பூங்கா: கர்நாடகம் (புலி பாதுகாப்பு பகுதி)
83. கார்பெட் தேசிய பூங்கா: உத்ரகண்ட் (புலி)
84. கிர் காடுகள்: குஜராத் (ஆசிய சிங்கம்)
85. கன்ஹா: மத்திய பிரதேசம் (புலி)
86. காசிரங்கா:
அஸ்ஸாம் (ஒற்றை கொம்பு காண்டாமிருகம்)
87. மானஸ்: அஸ்ஸாம் (புலி, தங்கவால் குரங்கு)
88. சுந்தரவனம்:
மேற்கு வங்காளம் (வங்க புலி)
89. பெரியார்:
கேரளா ( யானை)
90. முதுமலை:
தமிழ்நாடு (யானை)
91. ஹசாரிபார்க்:
பீகார் (விலங்குகள்)
92. ரங்கன்திட்டு:
கார்நாடகம் (பறவைகள்)
93. பரத்பூர்:
இராஜஸ்தான் (பறவைகள்)
94. வேடந்தாங்கல்:
தமிழ்நாடு (பறவைகள்)
தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்கள்
95. சரணாலயம் மாவட்டம் விலங்குகள்
96. இந்திராகாந்தி பாதுகாக்கப் பட்ட வன உயிர் வாழிடம்: மேற்கு தொடர்ச்சி மலை
97. முண்டந்துறை, களக்காடு: நெல்லை (சிங்கவால் குரங்கு)
98. வில்லிபுத்தூர்: விருதுநகர் (சாம்பல் நிற அணில்)
99. விராலிமலை:
திருச்சி (மயில்)
100. வல்லநாடு:
தூத்துக்குடி
101. வேடந்தாங்கல்:
காஞ்சி (பறவைகள்)
102. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா: வண்டலூர், சென்னை
103. முக்குருத்தி:
நீலகிரி (புலி)
104. கோடியக்கரை, பாயிண்ட் காலிமர்: நாகப்பட்டினம்
105. ஆனைமலை:
மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவு (யானை)
106. கிண்டி மான் பூங்கா: சென்னை
வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள்
107. நீலகிரி:
இந்திராகாந்தி பாதுகாப்பு மையம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எலலைக்குள் உள்ளது.
108. நந்ததேவி:
உத்திரபிரதேசம்
109. நொக்ரக்:
மேகலாயா
110. சிமிலிபால்:
ஓரிஸா
111. பச்மர்:
மத்தியபிரதேசம்
112. அகத்தியர் மலை: கேரளா
113. தேஸாங் தேபாங்: அருணாச்சல பிரதேசம்
114. திப்ருசைகோவா:
அசாம்
115. கஞ்சன்ஜங்கா:
சிக்கிம்
116. பறக்கும் பல்லியின் பெயர் - டிராக்கோ ஆகும்
117. காட்டுக் கழுதைகள் காணப்படும் இடம் - கட்ச் வளைகுடா
118. அண்மையில் அழிந்த உயிரினங்கள் - மலைக்குயில், சீட்டாபுலி, கத்தரிபூநிற தலைவாத்து
119. அழிந்து வருபவை – பிக்மிபன்றி, சிங்கவால் குரங்கு, ஹிஸ்கிட் முயல்
120. இந்தியாவில் அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் - 103 வகை
121. பம்பாய் இயற்கை வரலாறு நிறுவனம் துவக்கப்பட்ட ஆண்டு – 1883 இந்நிறுவனம்
வெளியிட்ட புத்தகம் - இந்திய செடிகளும், கொடிகளும், இந்திய இயற்கை வரலாறு.
122. இந்திய விலங்கியல் அளவீடு நிறுவனம் துவக்கப்பட்ட ஆண்டு – 1916 (கொல்கத்தா)
123. இந்திய வனவிலங்கு நிறுவனம் துவக்கப்பட்ட ஆண்டு 1982
124. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு துவக்கப்பட்ட ஆண்டு 1958
125. உலக வனஉயிரி அமைப்பு துவக்கப்பட்ட ஆண்டு 1961. இதன் தலைமையகம்: சுவிட்சர்லாந்து. இதன் வெற்றிகர திட்டம் - புலி பாதுகாப்புத் திட்டம்
126. கோபால்ட், தாமிரம், துத்தநாகம், ஈயம், யுரேனியம் ஆகிய உலோகங்களை அதன் தாதுவிலிருந்து பிரிக்க நுண்ணியிரிகள் பயன்படுகிறது.
127. டொமோகிராபி என்பது மக்கள் தொகையை புள்ளி விவரங்களுடன் வெளியிடுவது
128. 1980ல் உலக மக்கள் தொகை 4400 மில்லியன்
129. 2010ல் உலக மக்கள் தொகை 7500 மில்லியன்
130. உயிரிகள் உருப்பெருக்கம் (biological magnification) என்பது தாவரம் மற்றும் விலங்குகள் நீரினுள்ள DDT -ஐ தமது உடலில் சேமித்து கொள்ளும் நிலை ஆகும்.
131. சிதைவுறா நிலமாசுபடுத்திகளுக்கு எ-டு செராமிக்ஸ், PVC பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி (DDT, டிடர்ஜென்ட்
132. புதிய காடுகள் உருவாக்கம் என்பது மரமற்ற வறண்ட பகுதியில் காடுகளை வளர்ப்பதாகும். இதில் வளர்க்கப்படும் மரங்கள் - யூகலிப்டஸ், அகேசியா, பைனஸ்
133. நம்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இயற்றப்பட்ட திட்டங்கள்: சிப்கோ, அமைதிப்பள்ளத்தாக்கு திட்டம், அபிகோ, நர்மதாபச்சன் - அந்தோலன்
134. வருடம் ஒன்றிற்கு இந்தியா பெறும் சராசரி மழையளவு – 1140 மி.மீ
பயன்பாட்டு உயிரியல்
தேனீ வளர்ப்பு (எபிகல்சர்)
135. இராணித்தேனீயின் வேலை – முட்டையிடுதல்
136. வேலைக்காரத் தேனீயின் வேலைகள்: - லார்வாக்களை பாதுகாத்தல், தேன் சேகரித்தல்.
137. தேன் சேகரிப்பு கிராம குடிசைத் தொழிலாக நடைபெறும் இடம் – கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம்
138. சமூக உயிரி என அழைக்கப்படுவது – தேனீ
139. ஒரு தேன் கூட்டில் உள்ள இராணித் தேனீயின் எண்ணிக்கை – ஒன்று
140. மொத்த தேனீக்களின் எண்ணிக்கையில் வேலைக்காரத் தேனீக்களின் எண்ணிக்கை - 90%
141. தேனீயின் பின்னங்கால்களில் காணப்படுவது – மகரந்தத்தூள்கள் சேகரிக்கும்
மகரந்தப்பைகள்.
142. தேனீயின் தோலில் காணப்படுவது – மெழுகு சுரக்கும் சுரப்பிகள்
143. தேனீ லார்வாக்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவிற்கு பெயர் - ராயல்ஜெல்லி
144. வேலைக்கார தேனீக்களின் ஆயுட்காலம் - ஏழு வாரங்கள்
145. ஆண் தேனீயின் பணி -- இராணி தேனீயை கருவுறச் செய்வதேயாகும்
146. தேன் எனப்படுவது – அதிக சுவை மிகுந்த அடர்ந்த சர்க்கரை கரைசல் ஆகும்.
147. தேன்மெழுகு - இரகிசய உறைகளை மூடி முத்திரையிடுவதற்கு உதவுகிறது
மண்புழு வளர்ப்பு (வெர்மிகல்சர்)
148. மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரத்தின் பெயர் - வெர்மிகம்போஸ்ட்
149. கரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள் உரமாக மாற்றும் செயல் - வெர்மிகம்போஸ்டிங் எனப்படும்.
150. வெர்மிடெக் என்ற சொல்லை உருவாக்கியவர் - சுல்தான் இஸ்மாயில்
151. மண்புழு வளர்ப்பு குழிகளில் நீரைச் செலுத்தி சேகரிக்கப்படும் திரவம் – வெர்மிவாஸ்.
152. வெர்மிகாஸ்டிங்க்-ல் உள்ளவை – மண்புழு உணவு மற்றும் கழிவு நீர்.
153. எபிஜெயிக்ஸ் என்ற மண்புழு இனம் தாவர உண்ணியாகும்.
154. அனேகிக்ஸ் என்ற மண்புழு இனம் தாவர மண் உண்ணியாகும்.
155. எண்டேஜெயிக்ஸ் என்ற மண்புழு இனம் மண் உண்ணியாகும்.
156. எபிஜெயிக்ஷூம், அனேகிக்ஷூம் மண்புழு உரங்கள் தயாரிக்க உதவும் மண்புழு
இனங்களாகும்
பட்டுப்பூச்சி வளர்த்தல் (செரிகல்சர்):
157. பட்டுப்பூச்சி அதன் விருந்தோம்பி தாவரமான மல்பெரி தாவரத்தின் மீது ஒட்டுண்ணியாக வாழ்கிறது.
158. சாதாரண மல்பெரி பட்டுப்பூச்சி (பாம்பிக்ஸ் மோரி) வாழ்க்கை சுழற்சியில் நான்கு நிலைகளை கொண்டுள்ளது. அவை – முட்டை, லார்வா, கூட்டுப்புழு, முதிர் உயிரி ஆகும்.
159. லார்வா பருவத்தின் இறுதியில் உமிழ்நீர்ச் சுரப்பியால் சுரக்கப்படும் பொருள் - பட்டு நூல் எனப்படும்
160. பட்டுத்துணி துணிகளின் இராணி என அழைக்கப்படுகிறது
161. பட்டின் பருமனை அளக்க பயன்படும் அலகு டினையர் ஆகும்
162. டினையர் என்பது 9000 மீட்டர் நீளமுள்ள ஒரு தனியிழையின் எடையாகும்.
163. 22 – 24 டினையர் உள்ள பட்டு இழைகளை டயர் உற்பத்தியில் பயன்படுத்துகின்றனர்.
164. 13 – 15 டினையர் உள்ள பட்டு இழைகள் பாராகூட் செய்ய பயன்படுகிறது
165. பட்டுப் பூச்சியை தாக்கும் நோய்கள்:
166. புரோட்டோசோவன் நோய் -- பெப்ரைன்
167. பாக்டீரியாவால்
வரும் நோய் : ஃபிலாஸ்செரி
168. வைரஸால் வரும் நோய்கள்: கிராஸ்செரி
169. பூஞ்சைகளால் வரும் நோய்: மஸ்கார்டைன்
மீன் வளர்ப்பு: (பிஸிகல்சர்)
170. நன்னீர் வாழ் அலங்கார மீன்கள் : சாதாரண மீன், தங்கமீன், தேவதை மீன், ரோஸிபார்ப், புலிபார்ப், சன்னல்டெட்ரா
171. நன்னீர் வாழ் மீன்கள்: சாதாரண கெண்டை (சிப்ரினஸ் கார்ப்பியோ), புல்கெண்டை (ஐடெல்லா), கிலேப்பியா (ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ்)
172. குட்டிபோடும் மீன்கள்: மோலி, குப்பி, பிளேட்டி, வாள் மீன்
173. குளத்தில் விட்டு வளர்க்கப்படும் மீன்கள் - கட்லா, ரோரு, மிருகாலா, வெள்ளி கெண்டை
174. சங்கரா மீன் என அழைக்கப்படுவது – கௌராமி
175. உலகிலேயே மிக அதிக எடையுடைய பூச்சி – ஆப்பரிக்கன் கோலியத் பூச்சி
176. உலகிலேயே மிக பெரிய மீன் -- நீலத் திமிங்கலம்
177. ஆயிரங்கால் உடையவை – “மில்லிபெட்” என அழைக்கப்படுகின்றன
178. அலங்கார மீன் தொட்டி அமைக்க உகந்த நீர் - ஏரி நீர்
179. வளர்ப்பு
மீன்களுக்கு தரும் தீவனங்கள் தாவர மிதவைகள், ரோட்டிஃபர்கள், கொசுவின் லார்வாக்கள், நீலப்பச்சைப்பாசிகள், டேஃப்னியா, ஸ்பைருலினா
180. மீனில் உள்ள புளுரைடு – எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
181. கெண்டை மீன் தூண்டல் இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வளர்ப்பு மீன்களுக்கு ஏற்படும் நோய்கள்:
182. பாக்டீரியா – கண்நோய்
183. புரோட்டோசோவன்கள் - வெண்புள்ளி நோய்
184. புழுக்கள் - கைரோடேக் டைலோசிஸ்
185. பூஞ்சைகள் - சேப்ரோலெக்னியோசிஸ்
186. சார்டைன்ஸ், ஹெரிங்ஸ், மற்றும் சால்மன் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும்
எண்ணெய்கள் - சோப்பு, வர்ணம் தயாரிக்க பயன்படுகிறது.
187. சுறாமீனின் தோலிலிருந்து காலணிகள், கைப்பைகள், போன்றவை செய்யப்படுகின்றன.
188. இறால் வளர்ப்பு: (பிரான்கல்சர்)
189. இறால் வளர்ப்பில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது
190. இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
191. பிளேயஸ் இண்டிகஸ், பினேயஸ் மோனோடான் ஆகியவை இறால்களுக்கு உதாரணம்
192. நண்டு வளர்ப்பு
193. சில்லா செரேட்டா, சில்லா ட்ரங்கபாஸிகா ஆகியவை கடல்வாழ் நண்டுகளுக்கு உதாரணங்களாகும்
194. ஆளி வளர்ப்பு (ஆயிஸ்டிரிகல்சர்)
195. விலையுயர்ந்த முத்துக்களை உற்பத்தி செய்யும் இனம் - பிங்கட்டா ஆளி
196. இந்தியாவில் மிகுந்து காணப்படும் ஆளியினம் - பிங்கட்டா வல்கரிஸ்
197. முத்துச்சிப்பி வளர்ப்பு:
198. இதில் பயன்படுத்தப்படும் இனம் - பிங்டேடா ப்யூக்கேட்டா ஆகும்
199. இந்தியாவில் முத்துச் சிப்பி வளர்ப்பு நடைபெறும் இடம் - மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா
200. உலகில் மிக நீண்ட பவள அரண் தொடர்கள் காணப்படுமிடம் - ஆஸ்திரேலியாவின்வடக்கு கடற்கரை
201. இந்தியாவில் பவளப்பாறைகள் காணப்படுமிடங்கள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள், மன்னார் வளைகுடாவிலுள்ள இராமேஸ்வர தீவிலுள்ள பாம்பன் பகுதி
கடற்காய்கள் வளர்ப்பு:
202. இந்தியாவில் கடற்காய்கள் வளர்க்கப்படும் முறை – கம்பத்தில் வளர்த்தல் முறை
203. இந்தியாவில் வளர்க்கப்படும் கடற்காய்களுக்கு எ.கா பெர்னா விரிடிஸ், பெர்னா இண்டிகா
வெள்ளிப்புரட்சி:
204. முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி – வெள்ளிப்புரட்சி எனப்படும்
205. நமது நாட்டுக்கோழி – தேசி எனப்படுகிறது
206. ஆசீல், சிட்டகால், காகல், பாஸ்ரா ஆகியவை இந்திய இன கோழிகள் ஆகும்.
207. வெள்ளை லெகான், சூசெக்ஸ், மினோர்கர், ரோட் ஐலண்ட் ரெட், பிரம்மா, நியூஹாம், ஷயர், பிளைமவுத் ராக் ஆகியவை அயல்நாட்டு கோழி இனங்களாகும்.
208. 50 பாரன்ஹீட் என்பது முட்டையை பாதுகாக்க உகந்த வெப்பமாகும்
209. கோழித் தீவனம் 90% புரதச்சத்து கொண்டது
210. கோழிகளுக்கு வரக்கூடிய நோய் - பறவை காலரா. இது பாஸ்டிரெல்லா மல்டிசிடா எனும் நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது.
211. கோழிகளுக்கு ஏற்படும் பி நோய்கள் - ராணிகெட், கோழி அம்மை, மாரெக்ஸ்
212. பறவைகளுக்கு வரக்கூடிய காசநோய்: மைக்கோபாக்டீரியம் ஏவியன் என்ற பாக்டீரியாவினால் உண்டாகிறது.
213. பறவைக் காய்ச்சல், பறவை பிளேக், நியூகாஸில், ஆகியவை பறவைகளுக்கு வைரஸ்களால் ஏற்படும் நோய்களாகும்.
214. 1938ஆம் ஆண்டு இந்திய அரசு கோழி பண்ணை ஆராய்ச்சி பிரிவினை நிறுவியது.
215. தமிழ்நாட்டில் பெரிய கோழிப்பண்ணை நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் - சென்னையில் நந்தனம், நாமக்கல், பல்லடம்
216. மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தால் வளர்க்கப்படும்
நீலப்பச்சைப்பாசி - ஸ்பைருலினா
217. உயிரியியல் வாயு எனப்படுவது கோபர் வாயு. இதில் மீத்தேன் உள்ளது
கால்நடைகள்:
218. நாடாப்புழு போன்ற ஒட்டுண்ணிகள் கால்நடைகளின் உணவுப்பாதையைத் தாக்கி அங்கு வகிக்கின்றன.
219. அதிகம் பால் தரும் பசுக்கள் - தியோனி, கிர்சிவப்பு, சாகிவால் பசுக்கள்
220. வண்டிகளை இழுக்கவும், நிலத்தை உழவும் பயன்படும் காளைகள் - காங்கேயம், நாகோரி, ஹாலிகா
221. அதிக பால் தரும் பசுக்கள் - கிர், ரதி, ஓங்கோல், ஹரியானா மற்றும் கலப்பின பசுக்களான ஜெர்சி, பிரௌன் சுவிஸ்
222. மால்வி, ஹரியானா, ஓங்கோல், ரதி, காங்கேயம், போன்றவை ஒரு சில உள்நாட்டு வகை பசுக்களாகும்.
223. முர்ரா என்பது கலப்பினம் செய்யப்பட்ட அதிக பால் தரும் எருமையாகும்.
224. ஆசிய நீர் எருமை, கேப் எருமை, யாக் போன்றவை எருமையின் சில வகைகள்.
225. மனிதனால் பண்ணையில் வளர்க்கப்படும் விலங்கினங்களுள் இரண்டாவது இடத்தைப் பெறுவது – செம்மறியாடு
226. லிங்கான், ஹாங்யாங், மெரினோ, காரிடேல், போன்றவை செம்மறியாட்டின் சில வகைகளாகும்.
227. வெள்ளாட்டின் இனங்கள் - இமாலயன், காஷ்மீர், அங்கோரா, தெற்கத்திய சுருதி ஆகியவை.
228. பன்றியின் இனங்கள் - வெள்ளை யார்க்ஷயர், மத்திய வெள்ளை யார்க்ஷயர், பர்க்ஷயர்
229. வெண்மைப்புரட்சி:
230. பன்னீர் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்
231. வெண்மைப்புரட்சி என்பது – பால், பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்தியை
பெருக்குதலாகும்.
232. பாஸ்டியர் முறை: பாலிலுள்ள கிருமிகளை அழித்து பாலை பாதுகாக்கும் முறை.
233. பாஸ்டியர் முறை இரண்டு வகைப்படும். அவை:
234. குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருந்து கிருமிகளை கொல்லுதல் முறை (வெப்பநிலை – 600 செல்ஷியஸ், கால அளவு – 30 நிமிடங்கள்). அதிக வெப்பநிலையில் குறைந்த நேரம் வைத்திருந்து கிருமிகளை கொல்லும் முறை (வெப்பநிலை – 720 செல்ஷியஸ், கால அளவு – 15 நிமிடங்கள்)